தமது விமானப் படையைப் பயன்படுத்தி
புலிகள் நடத்திய முதல் தாக்குதல்
வடக்கு - கிழக்கில் பல பகுதிகளிலும்
போர்முனைகள் திறக்கப்பட்டுள்ளன. முழு
அளவில் போர் வெடித்துள்ளது. அரசின்
முப்படைகளும் களத்தில் குதித்துள்ளது
போல் விடுதலைப் புலிகளும் முப்படைகளை
களத்தில் இறக்கியுள்ளனர். கிழக்கில்
படையினர் போர் முனைகளைத் திறக்க
வடக்கில் புலிகள் போர் முனையை
திறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை வெருகல் பகுதியில் மாவில்
ஆறு அணைக்கட்டு விவகாரம் அரசியல்
மயப்படுத்தப்பட்டு இராணுவ
மயமாக்கப்பட்டதை இன்று முழு நாடும் உணர்கிறது. மாவில் ஆறு தங்கள்
முற்றுகைக்குள் இருப்பதாக அரசும் படைத்தரப்பும் கூறுகையில்
யாழ்.குடாநாடு புலிகளின் முற்றுகைக்குள் வந்துள்ளது.
யாழ்.குடாநாட்டு முற்றுகை, வடக்கில் மிகப்பெரும்
சமராக வெடித்துள்ளது. கிழக்கில் அடுத்தடுத்து பல போர்முனைகளைத் திறந்த படையினர்
அங்கு தங்கள் முழுப் பலத்தையும் பயன்படுத்துகின்றனர்.
முப்படைகளதும் ஆயுத பலம் இங்கு முழு
அளவில் பயன்படுத்தப்படுகிறது. வேறு
மாவட்டங்களிலிருந்தும் அவசர அவசரமாக
படையினர் திருகோணமலைக்கு வரவழைக்கப்பட்டு பாரிய படைநகர்வு நடைபெறுகிறது.
மாவில் ஆறு அணைக்கட்டை நோக்கி படை
நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னர்
புலிகள்,
மூதூர் முதற்கொண்டு பச்சனூர் வரையான
பெரும் பகுதிகளில் திடீர்
தாக்குதல்களைத் தொடுத்து
தம்வசப்படுத்தினர். சுமார் இருநாட்கள் இந்தப் பிரதேசங்களை அவர்கள் தம்வசப்படுத்தியிருந்ததை
அரசாலும், படைத் தரப்பாலும்
ஜீரணிக்க முடியவில்லை.
புலிகளின் இந்த முற்றுகையானது, கிழக்குப் பகுதி
தங்களிடமிருந்து பறிபோய்விடுமென்ற பெரும் அச்சத்தை அரசுக்கும், படையினருக்கும் ஏற்படுத்தியது.
இந்த நிலைமை திருகோணமலையின் கேந்திர
முக்கிய நிலைகளின் இழப்பிற்கு கூட
வழிகோலி விடலாமென்ற பெரும் அச்சம்
படையினருக்கு எழுந்தது. இதையடுத்தே
யாழ்.குடாநாடு, மன்னார் மற்றும்
மட்டக்களப்பிலிருந்து ஆயிரக்கணக்கான படைகள்
திருகோணமலைக்குக் கொண்டுவரப்பட்டன.
விடுதலைப் புலிகளும் இதனை
நன்கறிந்திருந்தனர். பெருமளவு படைகளை அரசு
திருகோணமலைக்கு அனுப்பிய நிலையில்
புலிகள், தங்களது மூதூர் முற்றுகையை கைவிட்டனர். மக்களின்
பாதுகாப்புக்கும் போர்நிறுத்த உடன்பாட்டின்
அமுலாக்கலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக
இருந்த படை முகாம்கள் மற்றும் படை
நிலைகள் மீதான மட்டுப்படுத்தப்பட்ட படை
நடவடிக்கையே இதுவெனப் புலிகள்
தெரிவித்தனர்.
புலிகளின் பிரதேசங்கள் மீது
அண்மைக்காலமாகப் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து வரும் அரசும்
படைத்தரப்பும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்க படையினர், புலிகளின்
தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகள் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை நடத்திவருவதாகக்
கூறி பாரிய தாக்குதல்களைத் தொடுத்து வந்தனர்.
வடக்கு - கிழக்கில் பாரிய யுத்தம்
வெடிக்கும்போது படைமுகாம்களுக்கும்
முக்கிய சில பிரதேசங்களுக்கும்
புலிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்படலாமென
படைத்தரப்பு இனங்கண்டிருந்த பகுதிகள்
மீதே, போர்நிறுத்த உடன்பாட்டை
வாய்ப்பாகவும், தெற்கில் இடம்பெற்ற
ஓரிரு தாக்குதல் சம்பவங்களை சாட்டாகவும்
வைத்து படைத்தரப்பு பாரிய தாக்குதல்களை
நடத்தி வந்தது.
அரசினதும், படையினதும் இந்த
நடவடிக்கைகளானது, போர் நடவடிக்கை போன்று
காட்டப்படாது தற்பாதுகாப்பு நடவடிக்கை
என்ற பெயரில், மீண்டுமொரு போருக்கு
புலிகள் செல்லாதவாறு அவர்களது
வளங்களையும், பாதுகாப்பு நிலைகளையும்
அழிப்பதுடன், படை முகாம்களதும் பல
பிரதேசங்களினதும் பாதுகாப்பை அரசு உறுதி
செய்யும் நடவடிக்கைகளாகவேயிருந்தன.
இதில்,
குறிப்பாக விடுதலைப் புலிகள்
கட்டியெழுப்பி வந்த வான் படை குறித்து
அரசும் படைத்தரப்பும் பேரச்சம்
கொண்டிருந்தன. இதனால் புலிகளின் விமானத்
தளம் இருப்பதாகக் கூறப்படும் கிளிநொச்சி
இரணைமடு பகுதியில் தொடர்ச்சியாக
விமானப் படைகள் தாக்குதல்களை
நடத்திவந்தன.
புலிகள் பாரிய விமான ஓடுபாதையை
அமைத்திருந்ததால், அவர்கள் பாரிய போர்
விமானங்களை வைத்திருக்கலாமென அரசும்
படைத் தரப்பும் அஞ்சின. ஓடுபாதையில்
ஓடிச்சென்று பறக்கும் விமானங்கள்
புலிகளிடமிருப்பதென்பது இலங்கை விமானப்
படைக்கு மட்டுமன்றி, கடற்படைக்கும், தரைப்படைக்கும் பேராபத்தாகிவிடுமென்பதுடன் தென் பகுதியின் பாதுகாப்பும்
கேள்விக் குறியாகிவிடலாமென அச்சமடைந்தனர்.
இதனாலேயே வன்னியில் அடிக்கடி விடுதலைப்
புலிகளின் ஓடு தளம் மீது விமானப்படை
விமானங்கள் குண்டு வீச்சுக்களை
நடத்தியதுடன், அந்த ஓடு பாதை பெரிதும்
அழிக்கப்பட்டுள்ளதாகவும் படைத் தரப்பு
கூறிவந்தது.
ஒருபுறம் புலிகளின் விமானப்படைக்கு
அஞ்சி அதனை அழிக்க, மட்டுப்படுத்தப்பட்ட
படை நடவடிக்கை என்ற பெயரால் குண்டு
வீச்சுக்கள் நடைபெற்று வந்த அதேநேரம்,
கடற்படையினரைப் பாதுகாக்கும்
நடவடிக்கையிலும் அரசும் படைத்தரப்பும்
இறங்கின.
குறிப்பாக திருகோணமலை துறைமுகத்தினதும், கடற்படைத்
தளத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசர,
அவசிய நிலை படையினருக்கு ஏற்பட்டது.
திருகோணமலை கடற்படைத் தளத்தினது
பாதுகாப்பே யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பை
உறுதிப்படுத்தி வந்தது. திருகோணமலைக்
கடற்படைத் தளத்திலிருந்து
யாழ்.குடாநாட்டுக்கான படையினரின் கடல்
வழிப்போக்குவரத்து நடைபெற்று வந்தது.
விமானப்படையினர் வசம் பாரிய சரக்கு
விமானங்கள் இல்லாததால் குடாநாட்டுக்கும் வெளியிடங்களுக்குமான படையினரின் பெருமளவு
நடமாட்டங்கள் கடல் வழியாக கடற்படையினர் மூலம் நடைபெற்றது.
இதனால்,
வடக்கை காப்பாற்ற வேண்டுமெனின்
கிழக்கில் திருகோணமலைத் துறைமுகத்தையும்,
கடற்படைத் தளத்தையும் பாதுகாத்தே
ஆகவேண்டிய கட்டாய ிழ்நிலை அரசுக்கும்,
படைத் தரப்புக்கும் ஏற்பட்டது. ஆனால், இந்தத் துறைமுகத்திற்கும்,
கடற்படைத் தளத்திற்கும், சம்பூரில்
நிலைகொண்டுள்ள புலிகளால் எவ்வேளையிலும் பேராபத்து ஏற்படலாமென
எச்சரிக்கப்பட்டு வந்தது.
திருமலை கடற்படைத் தளத்தை
பாதுகாப்பதற்காக மூதூர் கிழக்கில் சம்பூர்
மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மீது
கடந்த பல மாதங்களாக முப்படைகளும்
தொடர்ச்சியாக கடும் தாக்குதலை நடத்தி
வந்தன. புலிகளின் நிலைகள் மற்றும்
வளங்களை அழிப்பதே இதன் நோக்கமாகும்.
இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்ட படை
நடவடிக்கை கூட படையினருக்கு மட்டுமென
மட்டுப்படுத்தப்பட்டதாகக் கருதி
படையினர் இந்தத் தாக்குதல்களை நடத்தி வந்த
நிலையில் தான், மனிதாபமான
அடிப்படையில் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய மாவில் ஆறு அணைக்கட்டுப்
பரச்சினை அரசியல் மயப்படுத்தப்பட்டு பன்னர் இராணுவ மயப்படுத்தப்பட்டது.
கிழக்கில் தங்கள் நிலையை பரீட்சித்துப்
பார்க்க படைகள் களமிறங்கவே பெரும்
போர் வெடித்து பன்னர் அது, புலிகளின் மூதூர்
முற்றுகை வரை சென்றது. இதனை
முறியடிக்க வேண்டிய அவசர நிலைமை
அரசுக்கு ஏற்படவே திருகோணமலையை பாதுகாக்க
அரசு அனைத்து நடிவடிக்கையிலும்
இறங்கியது.
இதற்காக யாழ். குடாநாட்டிலும், மன்னாரிலும் வேறு
பகுதிகளிலுமிருந்து ஆயிரக்கணக்கில் படைகள் திருமலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
முப்படையினரதும் அனைத்து வளங்களும் திருமலையில் மாவில் ஆறு மற்றும் மூதூர்
நோக்கி திருப்பப்பட்டன. மூதூரை மீட்டுவிடவேண்டுமென்பதுடன், மாவில் ஆறு அணைக்கட்டையும் கைப்பற்றி தனது கௌரவத்தை காக்க வேண்டிய
இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டது.
மூதூர் மற்றும் அதனை அண்டிய பல
பரதேசங்களை புலிகள் மிக இலகுவாக
தம்வசப்படுத்தியபோது, அரசும் படையினரும்
அதிர்ந்து போய்விட்டனர். மூதூர்
கிழக்கில் கடந்த பல மாதங்களாக புலிகளின்
நிலைகள் மீது முப்படைகளும்
தொடர்ச்சியாகத் தாக்குதலை நடத்தி
அவர்களது வளங்களையும், வலு நிலைகளையும்
அழித்து அங்கு புலிகளை
முடக்கிவிட்டதாகக் கருதிய போது அவர்கள் மிகச் சாதாரணமாக மூதூரை
முற்றுகையிட்டனர்.
அத்துடன்,
மூதூரை ஒரு பொறியாகவும் புலிகள்
பயன்படுத்தினர். யாழ். குடாவிலிருந்தும் ஏனைய பரதேசங்களிலிருந்தம் பெருமளவு படையினரை
இங்கு வரவழைக்க வைத்துவிட்டு திடீரெனப் புலிகள் தங்கள் முற்றுகையை
மூதூரிலிருந்து விலக்கிக் கொண்டனர்.
மூதூர் முற்றுகையை புலிகள் விலக்கினால்
உடனடியாகப் படை நடவடிக்கைகளை
நிறுத்துவதாகக் கூறிய அரசு, புலிகள் மூதூர்
முற்றுகையை விலக்கிய பன் கிழக்கில் மிகக் கொடூரமான தாக்குதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான
மக்களை கொன்று குவித்தது. மாவில் ஆற்றை நோக்கி பாரிய படை நகர்வை
ஆரம்பத்தது.
மூதூர் முற்றுகையை விலக்கிய புலிகள்
அணைக்கட்டையும் திறந்துவிட்டனர்.
ஆனால்,
தாங்களே அந்த அணைக் கட்டை திறந்ததாக
அரசும், படைத் தரப்பும்
திரும்பத் திரும்ப கூறியதால் அந்த
அணைக்கட்டிற்கு படையினர் எப்படியாவது
செல்லவேண்டியதொரு ிழ்நிலை ஏற்பட்டது.
அதேநேரம்,
திருகோணமலையிலும் பெருமளவு படையினர்
கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டிருந்ததால் பல்லாயிரக்கணக்கானோரைப் பயன்படுத்தி
பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டு இந்த அணைக்கட்டுப் பகுதிக்குச்
சென்றுவிட வேண்டுமென்பதிலும் அரசு முனைப்புக் காட்டியது.
புலிகளும் இதனை நன்குணர்ந்திருந்த போது
கடந்த வியாழக்கிழமை அதிகாலை பாரிய
படை நகர்வொன்று ஆரம்பக்கப்பட்டது.
மாவில் ஆறு அணைக்கட்டை நோக்கி
பல்லாயிரக்கணக்கான படையினர்
பெருமெடுப்பல் படை நகர்வை ஆரம்பத்துள்ளதாக
செய்திகள் வெளியானபோது அரசும் படைத்
தரப்பும் அதனை முற்றாக மறுத்தன.
மாவில் ஆறு அணைக்கட்டு தங்கள் வசமே
இருப்பதாகவும், புலிகளே அங்குள்ள
படையினர் மீது பாரிய தாக்குதல்களைத்
தொடுத்து வருவதாகவும் அரசு அப்பட்டமாக
பொய்கூறியது. இது தொடர்பான செய்திகளை
இருட்டடிப்பும் செய்தது. படையினருக்கு
எதிராக புலிகளே பாரிய தாக்குதலைத்
தொடுத்திருப்பது போன்றதொரு
தோற்றப்பாட்டையும் அரசு ஏற்படுத்த
முயன்றது.
இந்த நிலையில் அரசினதும், முப்படைகளதும் முழுக்
கவனமும் திருகோணமலையில் இருந்தபோது வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணக் குடாநாட்டில் புதிய
போர் முனையொன்று திறக்கப்பட்டது. பளை மற்றும் ஆனையிறவுப்
பிரதேசங்களை இலக்கு வைத்து முகமாலையிலிருந்து அரசு பாரிய படை நகர்வொன்றை
ஆரம்பித்துள்ளதாக புலிகள் அறிவித்தனர்.
கிழக்கில் தொடர்ச்சியாக
புலிகளுக்கெதிராக படையினர் பலபோர் முனைகளைத் திறந்ததால் யாழ்.
குடாநாட்டிலும் படைத்தரப்பே புதிய போர் முனையைத் திறந்துள்ளதாக
அனைத்துச் செய்தி நிறுவனங்களும் கூறி வருகின்றன. புலிகள் மிகக் கடுமையாக பதில்
தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவை
கூறியுள்ளன.
ஆனால்,
இதனை அரசும் படைத் தரப்பும் முற்று
முழுதாக மறுத்து வருவதுடன், புலிகளே இங்கும் போர் முனையைத் திறந்துள்ளதாக
கூறிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் தங்கள் மக்களை பாதுகாக்கவும்
ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தவும்
தாங்கள் முப்படைகளையும்
களமிறக்கியுள்ளதாக புலிகள் கூறிவருகின்றனர்.
புலிகள் அணைக் கட்டை திறந்து அதனைத்
தக்கவைத்திருந்த போது, தாங்களே அணைக்
கட்டை திறந்து அதனைத் தக்க
வைத்துள்ளதாகவும் அதனை முறியடிக்க புலிகள்
முயல்வதாகவும் கூறி அரசு அங்கு பாரிய
படைநகர்வொன்றை மேற்கொண்டு வரும்
நிலையில் யாழ். குடாவிலும் படைத்தரப்பே
தங்கள் மீது பாரிய தாக்குதலை
ஆரம்பித்துள்ளதாகக் கூறி புலிகள்
தாக்குதலை நடத்துகின்றனர்.
ஈழப் போரின் வரலாற்றில் முதல் தடவையாக
விடுதலைப் புலிகளின் விமானப்படையும்
களமிறங்கியுள்ளது. இதன் மூலம், புலிகளின்
முப்படைகளும் யாழ். குடாவில்
படையினருடன் பெரும் சமரில்
ஈடுபட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு பலாலி
இராணுவத் தளம் மீது புலிகளின்
விமானமொன்று தாக்குதலை நடத்தியுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
கடல் நீரேரியூடாகவும், கடற்புலிகள் தீவுப்
பகுதிக்குள் தங்கள் துருப்புக்களை தரையிறக்கியுள்ளன. இதனால் குடாநாட்டில் பரவலாகப்
பெரும் சமர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புலிகளின் வான் வழித் தாக்குதலை
படைத் தரப்பு முற்றாக நிராகரித்துள்ள போதிலும் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் நடைபெற்ற புலிகளின் வான் தாக்குதலில் இரு ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் இந்தத் தாக்குதலையடுத்து
பலாலி இராணுவத் தளத்திலிருந்து
மேற்கொள்ளப்பட்ட ஆட்லறித் தாக்குதல்கள்
முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.
எனினும்,
நேற்றுக் காலை முதல் மீண்டும் பலாலி
முகாமிலிருந்து ஆட்லறித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. குடாநாட்டில் எல்லைப்
பகுதிகளில் உக்கிர சமர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இதேநேரம்,
நேற்று அதிகாலை 2 மணி முதல் திருகோணமலை
கடற்படைத் தளம் மற்றும் சீனன்குடா விமானப் படைத் தளம் மீது புலிகள் மிகக் கடுமையான
ஆட்லறி ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆட்லறிகள்
வீழ்ந்து கடற்படைத் தளத்திற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மூதூர் கிழக்கு சம்பூரிலிருந்தே இந்தத்
தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
புலிகள் யாழ். குடா முற்றுகைச் சமரை
நடத்தி வருகையில் திருகோணமலை கடற்படைத்
தளத்திலிருந்து யாழ். குடாவுக்கான
விநியோகங்களை முடக்குவதே இதன்
நோக்கமாகும். இந்தத் தாக்குதல்களையும்
மீறி திருமலையிலிருந்து யாழ்.
குடாவுக்கான கடல் வழி விநியோகங்களை
படையினரால் மேற்கொள்ள முடியாது.
கொழும்பிலிருந்து யாழ். குடாவுக்கு
கடல்வழி விநியோகங்களை மேற்கொள்வதென்பது
சாத்தியமற்றது. இதனால் குடாநாட்டுக்கான
படையினரின் விநியோகங்கள் முற்றாக
முடக்கப்பட்டு விடும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
அத்துடன்,
இலங்கை விமானப்படை வலுவற்றிருப்பதால்
அதனால் கூட குடாநாட்டுக்கான
விநியோகங்களை மேற்கொள்ள முடியாதுள்ளது.
அத்துடன், விடுதலைப் புலிகள்
மண்டைதீவுக்குள் நுழைந்துவிட்டதாகவும்
அதனை தம்வசப்படுத்தி வருவதாகவும்
அரியாலையிலிருந்து மண்டைதீவை நோக்கி
ஷெல் தாக்குதல்களும் விமானத்
தாக்குதல்களும்
நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
மணலாறிலும் நேற்று நண்பகல் புதிய போர்
முனையொன்று திறக்கப்பட்டது. இது மேலும் பல பகுதிகளுக்கு பரவக் கூடும்.
மண்டைதீவு விடுதலைப் புலிகள் வசம்
வருமானால் யாழ். குடாநாட்டில் புலிகளின்
விமானப்படைக்கு வேலையிராது.
மண்டைதீவிலிருந்து பலாலி படைத்தளம் மீதும்,
காங்கேசன்துறை துறைமுகம் மீதும் ஆட்லறி
ஷெல் தாக்குதல்களை சுலபமாக
மேற்கொள்ள முடியும். காரைநகர் கடற்படைத்
தளமும் இங்கிருந்து இலகுவான
இலக்காகிவிடும்.
தற்போதைய நிலையில் புலிகள் குடாநாட்டு
முற்றுகையை இறுக்கி வருவதாகவே
செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த
முற்றுகைச் சமர் ஏதாவதொரு முடிவை எட்டும்
வரை நடைபெறும். எந்த அழுத்தத்தாலும்
இடைநடுவில் கைவிடப்படும் நிலைமைகள்
இல்லையென்றே தென்படுகிறது. இதற்கானதொரு
சூழ்நிலை தமிழகத்திலும் தோன்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவில் ஆறு அணைக்கட்டுப் பகுதி கேந்திர
முக்கியத்துவமற்றதொரு பகுதி. ஆனால்,
அதனைக் கௌரவப் பிரச்சினையாக்கிய அரசு
மனிதாபிமானப் பிரச்சினைகளை உதாசீனம்
செய்தது. அதன் விளைவு இன்று வடக்கு, கிழக்கில் பெரும்
போர் வெடித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இம்முறை முதல்
தடவையாக தங்கள் விமானப் படையை
களமிறக்கியதன் மூலம் ஈழப்போரில் புதிய
பரிமாணம் ஏற்பட்டுள்ளது. இதுவரை
காலமும் வான் வழித் தாக்குதலை
எதிர்கொண்டிராத படைத் தரப்பினருக்கு இனிமேல்,
தலைக்கு மேலும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஏனைய ஈழப்போர்களைப் போலன்றி இம்முறை
வெடிக்கும் ஈழப்போர் ஆயுத பலங்களிலேயே
பெரிதும் தங்கியிருக்கப்போகிறது. கடற்
சமர்கள் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தவைகளாயிருக்கப் போகின்றன.
புலிகளின் வானூர்திகளுக்காக படையினர்
விமான எதிர்ப்பு ஏவுகணைகளைப் பெற்றுள்ளது
போல் விமானப்படை விமானங்களுக்காக
விடுதலைப் புலிகளும் விமான எதிர்ப்பு
ஏவுகணைகளைப் பெற்றுள்ளனர்.
தற்போதைய போர், போர்நிறுத்த
உடன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரும் போராகக் கூட இருக்கலாம்.
இதற்குப் பின்னரும் இந்த உடன்பாடு,
கண்காணிப்புக் குழுவென்பது அர்த்தமற்றது.
தங்கள் பலத்தை நிரூபிக்கும்வரை இரு
தரப்பும் ஆயுதங்களை கைவிடப்போவதில்லை.
முன்னைய போர்களெல்லாவற்றையும்
பெரும்பாலானோர் மறந்து விட்டதால் தங்கள்
பேரம் பேசும் ஆற்றலை அதிகரித்துக்
கொள்வதற்காக இந்தப்போர் அவர்களுக்கு
இன்றியமையாததாகிவிட்டது.
நன்றி: தினக்குரல், Aug 13, 2006
http://www.tamilcanadian.com/article/tamil/52
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.