இலங்கையின் வரலாற்றில் சோபித்த தேரர் அளவுக்கு மக்கள் செல்வாக்கு
பெற்ற ஒரு மதத் தலைவர் இருந்ததில்லை என்றே கூறலாம். அதுவும் கடந்த ஒன்றரை
தசாப்தங்களாக சகல இனங்களின் நல்லெண்ணங்களையும் வென்றிருந்தார்.
இலங்கையில் தேர்ந்த வலதுசாரி தேசியவாதிகளில் பலர் ஒரு காலத்தில்
இடதுசாரிகளாக இருந்தவர்களே. ஆனால் ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி நாடு போற்றும்
ஜனநாயகத் தலைவராக ஆன அந்த மாற்ற இடைவெளியை ஆச்சரியமாகவே அனைவரும் பார்க்கின்றனர்.