இந்தியாவிலிருந்து "பரதேசியாய்" மலையகம் போனவர்களுக்கு வாக்குரிமையோ, குடியுரிமையோ கொடுக்கக்கூடாது என்று இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே வெள்ளைக்காரனிடம் முதன் முதலில் கோரியது சிங்களவனல்ல. யாழ்ப்பாணத்தமிழன்!
அதே யாழ்ப்பாண வெள்ளாள தமிழ்தேசியத்தலைமைதான் 10 லட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை நாடற்றவர்களாக்க ஆதரவளித்தது. காரணம் யாழ்ப்பாணத்தான் பார்வையில் மலயகத் தமிழன் மனிதனே அல்ல. அப்புறமெப்படி தமிழனாவான்?
"வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடினேன்", என்ற வள்ளலாரின் அதிஉயர் அருட்பாவை எதிர்த்து அது அருட்பாவல்ல மருட்பா என்று நீதிமன்றம் போய் வழக்காடியவன் அதே யாழ்ப்பாணத்தமிழன்!
தமிழ்நாட்டில் இருக்கும் பூணூலை களைந்து மனிதர் அனைவரையும் சமமாக்க பெரியார் தலைமையில் பெரும் போராட்டங்கள் நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் சைவத்தின் பேரால் ஜாதிய படிநிலையை காப்பதற்கு பூணூல் பொடுவது அவசியம் என்று பூணூல் கல்யாணங்கள் இயக்கமாக பரப்பப்பட்டன.
அதன் தொடர்ச்சியே பிரபாகரன் பிராண்ட் பேசும் இன்றைய தமிழ்த்தேசியங்கள்.
மானுடத்தை மேம்படுத்த போராடியது திராவிடம்!
மரபு என்கிற பெயரில் மனுவை காப்பாற்றத் துடித்தது யாழ்ப்பாண பிராண்ட் வெள்ளாள தமிழ்தேசியம்.
இந்த அடிப்படை மட்டும் சரியாக புரிந்தால் மற்ற அனைத்துமே முறையாக விளங்கும்.
அப்படி விளங்கினால் பெரியாரும் பிரபாகரனும் நேரெதிர் துருவங்கள் என்கிற அதி முக்கிய தெளிவு பிறக்கும்
அந்த தெளிவு மட்டும் பிறந்துவிட்டால் பலப்பல தோற்ற மயக்கங்கள் விலகும்!
தமிழர் அரசியல் மேம்படும். அவர்தம் வாழ்வும் வளப்படும்
நன்றி - ஊர்சுற்றி