Showing posts with label சகோதர யுத்தம். Show all posts
Showing posts with label சகோதர யுத்தம். Show all posts

Wednesday, 10 June 2020

The LTTE were not destroyed in may 2009, they were destroyed in 1986; கந்தன் கருணை படுகொலை

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போல்தான் இந்த கந்தன் கருணையும், பெயரோ கந்தன் கருணை இல்லம், ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டுமொத்தக் கொலை .

Friday, 22 May 2020

புலிகளும் சமாதான வாய்ப்புகளும்


தமது கருத்துக்களோடு உடன்படாதவர்களை..தம்மை விமர்சித்தவர்களை. தமக்கு போட்டி பங்காளிகளாக கருதப்பட்டவர்களை ஈவு இறக்கம் இல்லாமல் கொன்றொழித்து வந்தவர் பிரபாகரன். தாமே ஏகப்பிரதிநிதிகள். தாமே தமிழரின் பாதுகாவலர்கள், என்ற மமதையில் ஏனைய இயக்க தலைவர்களையும், போராளிகளையும் மாத்திரமல்ல சமூகத்தில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் போன்றவர்களையும், தம்முடன் உடன்படாதவர்களையும் துரோகிகள் என்று கூறி கொலை செய்தவர் தான் பிரபாகரன்.

விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலை போராட்டம் ஏன் தோற்றது ?


கடந்த 50 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிவாகை சூடியிருக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம், உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை, 20 ஆண்டுகளில் தோற்கடித்தது. அதேபோல வெள்ளை நிறவெறிக்கெதிரான தென் ஆபிரிக்க, சிம்பாப்வே, அங்கோலா, மொசாம்பிக் மக்களின் ஆயதம் தாங்கிய போராட்ங்களும் வெற்றி பெற்றன.

Thursday, 21 May 2020

மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்

கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.
மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மே மாத நடுப்பகுதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. 
-Saturday, June 20th, 2009

கந்தன் கருணை படுகொலை


இந்தப் படுகொலை இடம்பெற்று முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தப் படுகொலை இடம்பெற்றது. அரை மணித்தியாலத்திற்குள் அதாவது 30 நிமிடங்களுக்குள் 63 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டே இரண்டு தமிழ் இளைஞர்கள் இந்த 63 பேரையும் சுட்டுக் கொன்றனர். 

பிரபாகரன் கொள்ளைக்காரனா ? கொலைகாரனா ? சர்வாதிகாரியா ? (பாகம் -1)

பிரபாகரன் செய்த கொள்ளைகள் மற்றும் ஈழத் தமிழர்கள் மீதான கொலைகள் பற்றிய தொடர் கட்டுரை!!

உலகிலேயே விடுதலை போராட்டம் என்ற பெயரில் சக இன மக்களை கொன்று குவித்த ஒரே தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் தான்.

பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள் !


இன்றைய தினத்தில் பிரபாகரனால் கொல்லப்பட்டு ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கின்றன. அவர்களில் ராஜனி திரணகம, செல்வி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம், ரேலங்கி செல்வராஜா....என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்களாயுள்ளோம்.

புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் நீதிகோரி ஐ.நா வில்!! -(வீடியோ)


தமிழ் மக்களுக்காக புலிகள் போராடினார்கள் என்பது வெறும் தப்புக்கணக்கு என ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் பங்குகொண்ட புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் கேட்டுக்கொண்டுள்ளான்.

Wednesday, 20 May 2020

சிவரமணி தற்கொலை - ஆறாத்துயரம்

மே 17 1991 அன்று யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவியான சிவரமணி; தற்கொலை செய்து கொண்டார். ஏகபிரதிநிதித்துவ மோகம் கொண்டலைந்த பாசிஸ வெறியர்கள் அந்நாளில் மனித உயிர்களின் சமாதான சகவாழ்வுக்காக தனது கவித்திறனூடாக மக்களை விழிப்படைய செய்ய முயன்ற சிவரமணியை எவ்வாறு தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதை அவரது நண்பரும் முன்னாள் போராளியுமாகிய போல் ஹரிஹரசர்மா என்பவர் 26 வருடங்களின் பின்னர் இவ்வாறு எழுதியுள்ளார்.

இன்று மே 17. நா ங்கள் யார் தெரியுமா ?

நாங்கள் யாரையும் கொல்வோம். அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம் வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம்.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம்.