Showing posts with label சகோதரப் படுகொலை. Show all posts
Showing posts with label சகோதரப் படுகொலை. Show all posts

Friday, 28 August 2020

கபூர் - ரவீந்திரன் சகோதரப் படுகொலை

 இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகளின் பாசிச வெறிக்கு ஏனைய இயக்க உறுப்பினர்கள் பலியாகினர். கபூர் 83 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கில் வந்து வாழ்ந்தவர், கபூர் ஒரு உன்னதமான போராளி. முற்போக்கு சிந்தனை கொண்டவர். கபூரின் குடும்பமே அப்படித்தான். கபூரின் இயற்பெயர் பாலசுப்பிரமணியம். ஈ பி ஆர் எல் எஃப் தடை செய்யப்பட்ட வேளையில் தோழர் கபூர் புலிகள் இயக்கத்தால் கடத்திச் செல்லப்பட்டார்.

பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்:

 

எத்தனை நல்ல மனிதர்களை,எழுத்தாளர்களை, கல்விமான்களை . மனித நேயம் கொண்டவர்களை இழந்துவிட்டோம். போராட்டம் என்ற பெயரில் எல்லோரையும் புலிப் பாசிசம் அழித்துவிட்டது. துரோகிகள் பட்டம் சூட்டி அவர்களை அழித்த புலிப்பாசிசம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தது? யாராவது சொல்லுங்கள்? சின்னபாலாவை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும். தோழர் நக்கீரன் வீட்டில் பலதடவை அவரைச் சந்தித்திருக்கிறேன். பால நடராஜ ஐயர். ஊருக்குள் பாலா ஐயா என்றுதான் அவரை அழைப்பார்கள். அவருக்கு சின்ன பாலா என்று பெயர் வரக் காரணம் அவர் ஈரோஸ் இயக்க உறுப்பினராக இருந்தவர். பாலகுமாரும் இருந்த காரணத்தால் இவரைச் சின்னபாலா என்று அழைத்தனர்.

Friday, 14 August 2020

Oberoi Devan இன் கொலை!! அரசியல் பிண்ணணி!! 14ம் திகதி 1983

1983ம் ஆண்டு July கலவரத்தாலும், இலங்கையின் நடவடிக்கைகளாலும் அதிருப்பியடைந்த இந்திய அரசாங்கத்தின் பார்வை விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பக்கம் சாய்ந்தது.

 

இலங்கையை கட்டுபடுத்தி, தமக்கு சார்பாக மாற்றும் அதே நேரம் சர்வதேச பார்வையில் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை தவிர்க்க, அன்றய எமது சிறு எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு உதவியது. கலவரத்தின் பின்னர், இந்திய அரசு போராட்ட இயகங்களின் தலைவர்களை சந்திக்க முடிவு செய்து சந்திரகாசனூடாக செய்திகள் அன்றய TELO தலைவர் சிறீ அண்ணாவிடம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரபாகரன், உமா, பதமநாபா, பாலகுமாருக்கும் அறிவிக்கப்பட்டது.

 

Monday, 27 July 2020

LTTE இயக்கத்தின் தோல்விக்கு முக்கியக் காரணம் ” வெருகல் படுகொலை” !


2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.

Thursday, 23 July 2020

கிழக்கு பிளவும் வெருகல் படுகொலையும் விட்டுச்சென்றவை – (வெருகல் படுகொலை நினைவு தினம்.10.04.2004)


அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் வெல்லப்பட முடியாதவர் அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.

இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த கிழக்கு பிளவுஅவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது.

Thursday, 16 July 2020

புலிகள் தேசியத்திற்காகப் போராடினார்களா? : கோசலன்

* எண்பத்தாறாமாண்டு இரண்டு ரெலோ இயக்கப் போராளிகள் திருனெல்வேலியில் மக்கள் முன்னால் புலிகளால் உயிருடன் தீயிட்டுக் எரிக்கப்பட்டனர். பதின்நான்கு வயது மட்டுமே நிரம்பியிருந்த கிழக்கு மாகணத்திலிருந்து போராடுவதற்காகவே புறப்பட்டவர்கள் ஏன் கொலைசெய்யப்படுகிறோம் என்று தெரியாமலே தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்.

தொண்ணூறாம் ஆண்டு வட பகுதியில்ருந்து முஸ்லீம் மக்கள் இரவொடிரவாக வெளியேற்றப்பட்டனர். நூற்றாண்டுகளாக மதவழிபாடு தவிர்ந்த ஏனைய அனத்து சுக துக்கங்களிலும் தமிழ்ப் பேசும் ஏனைய பிரிவினரோடு இரண்டறக் கலந்திருந்த அவர்கள் துரோகிகளாகச் சித்தரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறுமாறு ஆயுத முனையில் கட்டளையிடப்பட்டனர். ... எங்கே போகிறோம் என்பது கூடத் தெரியாமல் மரண பயம் பின் தொடர் அவர்கள் தமது சொந்த மண்ணிடம் விடைபெற்ற சோக நிகழ்வு வன்னி முகாம்களில் மக்க்கள் அனுபவித்த துயருக்கு நிகரானது.

* ஆசிய, ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் என்று உலகத்தின் ஒவ்வொரு பிரதான சந்திகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களும் தேசிய இனங்களும் போராட்டங்களை நடத்துகின்றன. ஐரோப்பாவில் ஜனநாயகவாதிகள் உலகமக்களின் உரிமைக்காகக் குரலெழுப்புகிறார்கள்.
இவர்களில் எவரையுமே புலிகள் நண்பர்களகக் கருதியதில்லை. இந்தியாவில் சந்தர்ப்பவாத, மக்கள் விரோத அரசியல்வாதிகளோடும், உலக மாபியக் குழுக்களோடும், அதிகாரவர்க்கத்தோடும் தம்மை அடையாளப்படுத்திய புலிகள் ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட ம்க்களின் போராட்டம் என்பதை உலக மக்கள் நம்ப மறுக்கும் அளவில் தேசியப் போராட்டத்தைச் சிதைத்துச் சீரழித்துள்ளார்கள். இவையெல்லாம் தேசிய விடுதலையின் அடிப்படைப் பண்புகளுக்கு மாறானவை.
 
 இனியொரு..


Monday, 13 July 2020

1986: காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ இயக்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக்கொலை


காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ அங்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக் கொலை:

தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றனர் 

 

Monday, 15 June 2020

இயக்கத்தை நம்பிச் சரணடைந்திருந்த மட்டு-அம்பாறை மகளிர் தளபதிகளுக்கு மரணதண்டனை:- 20

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 20

தலைவர் பிரபாகரன், கருணா அம்மான் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்!: கருணா பிளவுக்கு பொட்டமன் காரணமா??
* ஒருவருக்கான தண்டனை இதுதான் என இயக்கம் தீர்மானித்துவிட்டால், அவர்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகள், தலைவருக்கெதிராகச் சதி செய்தார், இயக்கத்தின் நிதியை மோசடி செய்தார், பாலியல் குற்றமிழைத்தார் என்பவைகளே ஆகும்.

ஆரம்பத்தில் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்வதற்கும் இவ்வாறான குற்றச்செயல்களே அவர்கள் மீதும் சுமத்தப்பட்டிருந்தன என்பதையும் அறிந்திருக்கிறேன்.
• ‘கிழக்கு மாகாணப் போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள்என்ற பெயரில் இயக்கத்திற்குள்ளே ஒரு கொடூரமான சகோதர யுத்தம்முன்னெடுக்கப்பட்டது.
* இயக்கத்தை நம்பிச் சரணடைந்திருந்த மட்டு-அம்பாறை மகளிர் தளபதியாகவிருந்த சப்தகி (சாளி) உட்பட நான்கு பெண் போராளிகளும் பல ஆண் தளபதிகளும் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
முப்பது வருட காலப் போராட்டத்தின் எச்சங்களாகக் காயமடைந்த போராளிகளும், கடினப் பயிற்சிகளில் ஈடுபட முடியாத வயதடைந்த போராளிகளுமே எஞ்சியிருந்தனர்.
* தலைவர் எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வ குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது.
இந்தப் போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது.

யுத்தநிறுத்த காலத்தில் படை பலத்தை பெருக்கிய புலிகள்:- 18

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு- 18

* முஸ்லீம் மக்களுடன் அதிக அளவில் பழகுவதற்கான சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் தான் கிடைத்திருந்தது. அவர்கள் மிக இயல்பான பாசத்துடன் பழகினார்கள். என்னுடன் வந்திருந்த பல போராளிகளுக்கு அது புதிய அனுபவமாகவே அமைந்தது.
* ஒரு ஆயுதப் போராட்டத்தை பாதுகாப்பதற்காக எத்தனை அன்பு நிறைந்த வழிகளை மூடிக்கொண்டு நாம் தனித்து போயிருந்தோம் என்பதை முள்ளிவாய்க்காலின் இறுகிப்போன நாட்கள் எமக்கு உணர்த்தின.
* கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக் கொள்ளவில்லை:- 17


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 17 

ஒருநாள் உயிர் தப்பி வந்த குற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் துன்பத்தை அனுபவிக்க வேண்டியதாகவே இருக்கிறது.
கடைசிக்கட்ட போரில் காயப்பட்டிருந்த பெண் போராளிகள் பலர் பதுங்குக்குழிகளுக்குள் கிடந்தபடி சயனைட்டை அருந்தி மரணித்திருந்தனர்.
* பெண்கள் போராடப் போனது தவறல்ல, அவர்கள் உயிருடன் மீண்டு வந்ததுதான் தவறானது. இதுதான் முன்னாள் போராளிப் பெண்கள் சந்திக்கும் சமூகப் போர்க்களம். இதில் வெற்றி பெறுபவர்களையும் வீழ்ந்துபோவோர்களையும் கடந்து கொண்டு போகிறது காலம்.
நாம் கிழக்கு மாகாணத்தில் மக்களைச் சந்தித்தபோது, அவர்கள் கொட்டிய பாசஉணர்வுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
• “எங்கட புள்ளைகள் நாட்டுக்காக எண்டுதானே போராடப் போனதுகள். இயக்கத்தை நம்பிப்போன பிள்ளைகளை இயக்கமே சுட்டுக் கொன்னு போட்டுதேஎன்று அவர்கள் கதறினார்கள்.
* பல வருடங்களாக எம்முடன் ஒன்றாயிருந்து போரிட்டவர்களின் வாழ்க்கை, பின்பு எமது கரங்களாலேயே முடிவு கட்டப்பட்டபோது, வஞ்சகப் பொறியினுள் அகப்பட்ட பொறுப்பாளர்களின் பலவீனம் காரணமாகவும், முதுகில் குத்திய துரோகத்தை என்றும் மன்னிக்க முடியாது எனச் சூளுரைத்து,சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் தடம் மாறிய சாதாரண கீழ்நிலைப் போராளிகளுக்குச் சிறு மன்னிப்பேனும் வழங்குவது தமது மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்ட செயல் என்பதால் அப்போராளிகள் ஈவிரக்கமின்றி இயக்கத்தால் கொன்றழிக்கப்பட்ட போதும் நாம் மீண்டும் ஒரு கண்ணுக்குப் புலப்படாத வஞ்சகப் பொறியினுள் விழவே செய்தோம்.

1993: மாத்தையா கைது - பூநகரி தாக்குதல் - 14


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 14  

நவம்பர் 10, 1993 அன்று பூநகரியில் இருந்த சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கை தான் தவளைப் பாய்ச்சல்.!!!

பூநகரி தாக்குதலை ஆரம்பித்த முதல் மூன்று நாட்களிலும் ஐநூற்றுக்கும் அதிகமான போராளிகள் வீர மரணமடைந்திருந்தனர்.
* குறுகிய மனப்பாங்கும் வக்கிர குணங்களும் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும் அதிகாரமும் போய்ச் சேரும்போது எத்தகைய மோசமான அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப் பயிற்சி முகாமின் ஒரு சில ஆசியர்கள் உதாரணமாக இருந்தனர்.
சற்று நேரத்திற்கு முன்பு வரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது.
எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடமும் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை.
பூநகரி சமர் மக்கள் மத்தியில் புலிகளைப் பற்றிய பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை மாத்தையாவுடன் சதியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் பல திறமையான மூத்த போராளிகள் கைது செய்யப்பட்டனர்
* மக்கள் மத்தியிலும் மாத்தையா விவகாரம் பயங்கரமான உணர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் அவர் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவராகவும், இயக்கத்தின் மிக நெருக்கடியான காலகட்டங்களில் அதன் வளர்ச்சிக்காக மிகக் கடினமாக உழைத்தவராகவும் அறியப்பட்டிருந்தார்.