Showing posts with label ஆறுமுகநாவலர். Show all posts
Showing posts with label ஆறுமுகநாவலர். Show all posts

Thursday, 16 July 2020

அருட்பா-மருட்பா வழக்கு எல்லாம் பொய்யப்பா :வி.இ.குகநாதன்

* அருட்பா எதிர் மருட்பா எனும் கருத்தியல் போர் வள்ளலாரிற்கும், ஆறுமுக நாவலரிற்குமிடையே இடம்பெற்றதாகவும், அப் பிணக்கு முற்றி நீதிமன்றம்வரைச் சென்றதாகவும் ஒரு செய்தி பலரும் அறிந்திருப்போம்.

* வள்ளலார் குழு,  நாவலர் குழு,  சிதம்பரம் தீட்சிதர் குழு போன்ற முத்தரப்பினரே இந்தப் பிணக்கில் ஈடுபட்டார்கள்.  மேலும் இப் பிணக்கானது வெறும் கருத்தியல் மோதல் என்பதனைக் கடந்து சாதி ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்கான ஒரு வசைபாடலாகவே ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக  தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. 

* முத்தரப்பு பிணக்கில் வெற்றிபெற்றது பார்பனியமே. வள்ளலாரைப் பொறுத்தவரை அவரது இறுதிக்காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். அத்துடன்  வள்ளலாரின் சன்மார்க்கம் இன்று நீர்த்திப்போய் வெறும் அன்னதான மடங்களாக சுருங்கிப்போய்விட்டது.  நாவலர் தரப்பினரைப் பொறுத்தவரையில் இன்று ஈழத்திலேயே பார்ப்பனியம் ஆகமங்களை எல்லாம் புறந்தள்ளி வேதங்களை முன்நிறுத்திவிட்டது. அண்மைக் காலத்தில் ஈழத்தில் இந்துத்துவா அமைப்புக்களின் ஊடுருவலிற்குப் பின்னர் `சைவம்`  என்ற சொல்லே `இந்து` என்ற சொல்லால் பதிலீடுசெய்யப்பட்டுவருகின்றது.

Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (1-10) - பாவை சந்திரன்

இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து.