2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின்
பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது
சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில்
நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை
படுகொலை போல, ஒரு
குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும்
கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.