அகரமுதல்வனின்
சாகாள் கதை மே 2009 இல் ஈழப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட பின்னரான
பெண்போராளிகளின் நிலையையும் அவர்கள் இராணுவத்தின் பிடியில் இருந்தபோது என்ன
நடந்தது என்பதையும் சித்திகரிப்பதாக அமைகின்றது. அந்தக் கதையினை அவர்
சிவகாமி என்கிற விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியமான பெண்தலைவர் ஒருவரை
மையமாகக்கொண்டு கதை எழுதுகின்றார். இந்தக்கதை பேசுவது முழுக்க
சிவகாமி பற்றியதே என்பதுடன் இது சிவகாமியைப் பற்றி எழுதுவதற்காகவே எழுதப்பட்ட கதை
என்பதே உண்மை. இந்த சிவகாமி என்பவர் அண்மையில் காலமான தமிழினி அவர்களே
என்பதை எந்த மேலதிகமான விளக்கங்களும் இல்லாமல் புரிந்துகொள்ளமுடிகின்றது. சிவகாமி பற்றிய இந்தக்கதை
எழுதப்பட்ட முறையாலும், இலக்கியம்
என்ற பெயரால் கதைமுழுவதும் நிறைந்திருக்கின்ற வக்கிரத்தாலும் பல்வேறு
தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்திருந்தன.
