Showing posts with label கட்டாய ஆட்சேர்ப்பு. Show all posts
Showing posts with label கட்டாய ஆட்சேர்ப்பு. Show all posts

Tuesday, 16 June 2020

கட்டாய ஆட்சேர்ப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள்:- 23

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:

* புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!
தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு
பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.
பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.
தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியிருந்தார்.
* மிகவும் திறமையான ஆண் பெண் போராளிகள் உயர்நிலைகளுக்குத் முன்னேறி வந்தபோதும் அவர்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே போர்க்களத்தில் உயிரிழந்துபோன சம்பவங்களே அதிகமாயிருந்தன.

2005 ஆகஸ்ட் 12 அன்று லக்ஷ்மன் கதிர்காமர் கொலை- புலிகளுக்கு அமேரிக்கா தடை - 21

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 21

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: பிரபாகரன் கூறினார்!
இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் பாலசிங்கம் உள்ளக சுய நிர்ணய உரிமையுடன் அமைந்த சமஷ்டிஎன்ற தீர்வைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். ஆனால் அந்த விடயம் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.
இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்தியது புலிகளின் வரி வசூலிப்பு முறைகளும், இயக்கத்திற்கான கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கையாகும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழர்களின் அரசியல் பிரச்சனை மேற்குலக மத்தியஸ்தத்துடன் கையாளப்படும் நிலையை எட்டியிருந்ததனால் அந்த அரசியல் சூழலைக் கையாளக்கூடிய ராஜதந்திர துணிச்சல் புலிகளின் தலைமைக்கு அதிகம் தேவைப்பட்டது.
''அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எங்களுடைய ஆயுதங்களை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என் நினைக்கின்றன.... இனி ஏற்படப் போகும் யுத்தம் இலங்கை இராணுவத்தோடு மட்டும் நடக்கப் போகிற சண்டையில்லை. சர்வதேசத்தோடு நடைபெறப் போகும் போர்''
நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்கப்படும்போது அந்த யுத்தம் வடக்குக் கிழக்குக்கு வெளியேதான் நடைபெறும் என்ற நம்பிக்கை புலிகளின் தளபதிகளிடையே பெரிதாக நிலவியது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருடைய படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தபோது, '' இந்தப் பெரிய நாடுகள் எல்லாம் தடைசெய்கிற அளவுக்குச் சர்வதேச அளவில இராணுவ பலம் பொருந்திய இயக்கமாக நாங்கள் வளந்திருக்கிறம் எண்டு நினைச்சு சந்தோசப்படுங்கோஎண்டு பிரபாகரன் சிரித்துக் கொண்டே கூறினார்.