“உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன்.
என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்”
குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)
1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும் சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை.








