* பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த
தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர்.
* ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின்
70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர்.
பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை
விடுதலையாக்கினர்.
* கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப்
பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம்
காங்கிரஸ்) கொல்லப்பட்டனர்.
* புலிகள் முஸ்லிம் காங்கிரசைத்
தடைசெய்தனர்.
* மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம்
மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம்
காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி
எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- எஸ்.எம்.எம்.பஷீர்