Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts
Showing posts with label யாழ்ப்பாணம். Show all posts

Sunday, 12 February 2023

யாழ்ப்பாணம் விசிட்- அண்ணாமலை

அண்ணாமலை IPS,  பலாலி என்ற இடப்பெயருக்கு கொடுத்த நகைக்கத்தக்க வேர்ச்சொல் ஆய்வு இவர் உண்மையிலேயே நியாயமான தேர்வு எழுதித்தானா IPS ஆனார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

ஆனால் இப்பிரச்சனையை
ஆழமாகப்பார்த்தால் மேலுஞ்சில கசப்பான உண்மைகள் வெளிவரும். 
ஈழம் சிங்களவர்களதோ தமிழர்களதோ நிலம் அல்ல. அதன் ஆதிக்குடிகள் இயக்கர் நாகர் முதலியோர். (தொல்காப்பிய ஆதாரம்: வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகு) ஆக இன்றைய பெரும்பாலான   யாழ்ப்பாண இடப்பெயர்களின் வேர் ஆதி இயக்கர் நாகர் மொழியிலிருந்தோ அம்மொழிகளிலிருந்தும் பிராகிருதம், சமஸ்கிருதம், பாளி, தமிழ்  முதலிய மொழிகளிலிருந்தும் பிறந்த சிங்கள மொழியிலிருந்தோ தான் தோன்றியது. இன்றைய சிங்களவர்களும் தமிழர்களைப்போல இந்தியாவிலிருந்து வந்தவர்களே. அவர்களது மொழியான சிங்களம் ஆதி இயக்கர் நாகர் மொழிகளிலிருந்தும் இந்திய  பிராகிருதம் சமஸ்கிருதம், பாளி, தமிழ் ஆகிய  மொழிகளிலிருந்தும் ஈழத்தில் பிறந்தது.
மனந்திறந்து பேசினால் யாழ்ப்பாணம் என்ற சொல்லுக்கு தமிழர்கள் இன்று வழங்குகிற யாழிசைக்கருவி, யாழ்ப்பாடி அடியொற்றிய வேர்ச்சொல் விளக்கமே வரலாற்று ஆதாரமற்ற கட்டுக்கதையே. யாப்பா பட்டுண என்ற சொற்களிலிருந்து வந்ததே
 யாழ்ப்பாணம். இச்சொற்கள் சிங்களமா? ஆதி இயக்கர் நாகர் மொழியா?  என்பதையறியும் திறமை எனக்கு கிடையாது. 

ஆனால் யாழ்ப்பாணத்தின் பல இடப்பெயர்கள் “சிங்களத்திலிருந்து” ( அதாவது இயக்கர் நாகர் மொழி+  பிராகிருதம்+ சமஸ்கிருதம் முதலியவற்றிலிருந்து)  வந்தது என்பது தமிழர்களுக்கு கசப்பான உண்மை. மிரிசுவில், கொற்றாவத்தை, வாதிரிவத்தை  முதலியன மிக எளிய உதாரணங்கள். 
சிங்களம் தமிழ்ச்சொற்களையும் உள்வாங்கி உருவான மொழி ஆனாலும் பெரும்பாலான  யாழ்ப்பாண இடப்பெயர்கள் தமிழ் வேர்ச்சொல் அடிப்படையிலிருந்து வந்தவை அல்ல . 

கடலூர், காரைக்கால், காநாடுகாத்தான் முதலிய அழகிய தூய தமிழ்  ஆதிப்பூர்வீக தமிழூர்கள் யாழ்ப்பாண ஈழத்திலில்லை.  ஆதி யாழ்ப்பாண ஊர்களான பலாலி, தெல்லிப்பளை, பளை, புலோப்பளை( கவனிக்க கொம்பு  “ள” . ழ அல்ல) ‘சிங்கள’ வாடை அடிக்கும்.  சிங்களமே ஒரு Hybrid மொழிதான். ஆகவே ஈழத்தமிழ் தேசிய வாதிகள் இவ்வரலாற்று உண்மையை “ ரேக் இற் ஈசியாக’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தேசியக் கோட்பாட்டுக்கு இது பாதகமாகாது. 

ஆனால் பிற்கால ஈழத்தமிழ் தேசியவாதிகள் அண்ணாமலை IPS அதிகாரிக்கு முதலே அவசரப்பட்டு வரலாற்றை திரித்தார்கள். ஈழப்போர் முடிந்ததும்  பழை, தெல்லிப்பழை, புலோப்பழை என்று மவ் ழ போட்டு வரலாற்றைத் திரித்தார்கள். 
அண்ணாமலை IPS அதிகாரி வந்தார்.  மோட்டு சிங்களவனே  எழுதிய  யாழ்ப்பாண வேர்ச்சொல் ஆய்வை ஆங்கிலத்தில்  பலாலி விமான நிலைய  Tourist Guide பிரசுரத்தில் படிச்சார். யாழ்ப்பாணம். யாழ். யாழ்பாடி.  அட நாம் புகுந்து விளையாடலாமே என்று அடிச்சு விட்டார். பாலாலாலயம். பலாலி.

Dear Sir Annamalai, IPS 
I am terribly Sorry. Palaly Mission Failed.
- Your Secret Agent 
(நட்சத்திரன் செவ்விந்தியன் 007)

Friday, 19 June 2020

யாழ்ப்பாண இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995

''அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் உலகம் என்ற ஒன்று பார்த்து உச்மட்டும் கொட்டியது.''