Showing posts with label இலங்கை இனப்பிரச்சனை. Show all posts
Showing posts with label இலங்கை இனப்பிரச்சனை. Show all posts

Thursday, 9 July 2020

ஜே.வி.பி : “தமிழீழப் பிரச்சினைக்குத் தீர்வென்ன?” - என்.சரவணன்


1983 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசின் அனுசரணையுடன் நிகழ்ந்த இனப்படுகொலையை மூடிமறைக்க ஜே.வி.பி பலிக்கடா ஆக்கப்பட்டதை அறிவோம். ஜே.வி.பியின் மீது அத்தகைய பழியைப் போடுவதற்கு உடனடி, நேரடி ஆதாரங்கள் எதுவும் அரசாங்கத்துக்கு இருக்கவில்லை என்பது உண்மை. ஆனால் ஜே.வி.பி மீது அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு சாதகமான சித்தாந்தப் பின்னணியை ஜேவிபி கொண்டிருந்தது என்பது உண்மை.

இன்றைய ஜேவிபி தலைமையின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிகிற போதும் அம்மாற்றங்கள் அடிமட்டத் தொண்டர்கள் வரை கொண்டுசெல்லப்பட்டிருக்கிறதா என்கிற சந்தேகம் எலவே செய்யும். இது வரை ஜேவிபி இனப்பிரச்சினை தொடர்பில் தமது கடந்தகால நிலைப்பாடு பற்றிய சுயவிமர்சனம் பகிரங்கமாக வெளியிட்டதில்லை.

Monday, 15 June 2020

அரச தரப்பு புலிகள் தரப்புப் பெண் பிரதிநிதிகளுக்குமிடையேயான பேச்சு வார்த்தை:- 19


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 19
* “படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம்..

Friday, 12 June 2020

வரலாற்றில் ஜுன்_11

அரச ஆதரவுடன் கிழக்கில் மறைக்கப்பட்ட 600 முஸ்லிம் போலீசாரின் படுகொலை:
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள்.

Wednesday, 10 June 2020

இலங்கை தமிழர்களை காப்பாற்ற போய் படுகொலை செய்யப்பட ராஜீவ் காந்தி.


இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை தமிழ் வெள்ளாள சிங்கள கொவிகம மேட்டுக் குடியினர் அரசியல் இணக்கத்தோடு தான் இருந்தார்கள். 1915ல் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார் 2௦ சிங்கள தலைவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரை சென்று அவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் தமிழினத் தலைவர் பொன். ராமநாதன் அவர்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு பார்லிமெண்டில் 50/50 பங்கு கேட்டது முதலே இனப்பிரச்சனை ஆரம்பித்து விட்டது. சிங்கள் தேசியவாதமானது சிங்கள-பவுத்த தேசியவாதமாக பரிணாமம் அடைந்தது.

Sunday, 7 June 2020

அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் துண்டுப்பிரசுரம்


அம்பாறையில் வாழுகின்ற முஸ்லீம்களை வெளியேறச்சொல்லி புலிகள் துண்டுப்பிரசும் மூலம் அறிவித்துள்ளனர். இப்பிரசுரம் அம்பாறையில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் மூதூரில் இதுபோன்ற துண்டுப்பிரசுரம் வெளியிட்டபின் முஸ்லீம்கள் வெளியேறாததைத்தொடர்ந்து மூதூரில் இராணுவத்தாக்குதல்களை பலவந்தமாக மேற்கொண்ட புலிகள் அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக இடம்பெயர வைத்தனர்.

அரந்தலாவை - வீரமுனைப் படுகொலை!

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமம் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். அம்பாறை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீரமுனை மற்றும் அதன் அயல்கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதன் காரணமாக இந்தக் கிராம மக்களுக்கு புலிகளின் பாரிய பின்புலம் மற்றும் உடனடி உதவிகள் என்பன தாராளமாக கிடைத்து வந்தது.

காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்

அப்துல்லாஹ்-
 August 04, 2011

1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது.