ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
★ பிரபாகரனின் ஒப்புதலுடன் 2006 ஜூலை 21ம்
தேதி “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை
தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!
★ இறுதிப்
போரின் ஆரம்பத் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் தமது பலத்தைப் பரீட்சித்துப்
பார்ப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட களங்களாகவே அமைந்திருந்தன.
★ விடுதலைப்
புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இறுதி யுத்தத்தின் முதலாவது கட்டம் கிழக்கு
மாகாணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு
மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தையும்
இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.
இறுதியாக, 2007 ஜூலை
11இல் குடும்பிமலையும் (தொப்பிக்கல்)
இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது.
★ புலிகளின்
ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படையால் தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம்
கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்குத் தேவையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களைத்
தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாகப் பயன்படுத்துவதற்கான
சாத்தியம் இல்லாமல் போனது.
★
2007க்குப் பின்னரான காலப் பகுதியில் வன்னிப் பெருநிலப் பரப்பு
மட்டுமே புலிகளின் கைவசமிருந்த ஒரேயொரு தளமாக அமைந்திருந்தது.
★ எந்தச்
சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின்
சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.