Showing posts with label ஓயாத அலைகள். Show all posts
Showing posts with label ஓயாத அலைகள். Show all posts

Sunday, 14 June 2020

2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டது - 8


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 8

இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.

• 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அப்பலத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில் புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித் திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.

ஓயாத அலைகள்-1: முல்லைப் படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டது - 3


 ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 3  

*1996 ஜூலை 17ஆம் திகதி அன்று புலிகள் தமது முழுப் பலத்தையும் திரட்டி முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது பாரிய தாக்குதலைத் தொடுத்திருந்தனர்.
ஓயாத அலைகள்-1′ எனப் பெயரிடப்பட்டிருந்த நடவடிக்கை மூலமாக முல்லைப் படைத்தளம் முழுமையாகப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.

அந்தச் சமரில் புலிகளும் படையினருமாக ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். 1996இல் வன்னிப் போர்க்களத்தின் முதலாவது பிரம்மாண்டமான வெற்றியைப் புலிகள் நந்திக் கடலோரத்தில்தான் பெற்றிருந்தனர்.