Showing posts with label விதுஷா. Show all posts
Showing posts with label விதுஷா. Show all posts

Tuesday, 16 June 2020

கட்டாய ஆட்சேர்ப்பினால் ஏற்பட்ட பாதிப்புகள்:- 23

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:

* புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!
தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு
பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.
பல்வேறு களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.
தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில் மரணத்தை தழுவியிருந்தார்.
* மிகவும் திறமையான ஆண் பெண் போராளிகள் உயர்நிலைகளுக்குத் முன்னேறி வந்தபோதும் அவர்கள் குறுகிய காலத்திற்குள்ளாகவே போர்க்களத்தில் உயிரிழந்துபோன சம்பவங்களே அதிகமாயிருந்தன.