Showing posts with label Home Guard. Show all posts
Showing posts with label Home Guard. Show all posts

Wednesday, 15 July 2020

இலங்கையில் முஸ்லீம்-விரோத சூனிய வேட்டையை தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கின்றனர் -


அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு சிறிசேன அழைப்பு விடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றி அவசரகால சட்டம் பிரகடனப்படுத்த தனது ஆதரவை வழங்கியது.

அவசரகால சட்டத்தின் பிரிவுகளில் 1978 இல் தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட இழிபுகழ் பெற்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் (PTA) இடம்பெற்றிருந்த பல பிரிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன.

* அவசரகால நிலைமையின் கீழ், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுகின்றது. 

கூட்டமைப்பின் முன்னிலை உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவரது மே தின உரையில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் இராணுவ மற்றும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். முன்பு அவர்கள் இங்கே இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம், இப்போது அவர்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

* இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக் கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி அறிவிப்பு 

* கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சரவணபவனுக்கு சொந்தமான பரவலாய் வாசிக்கப்படும் தமிழ் தினசரியான உதயன், யாழ்ப்பாண மசூதியில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தது கறுப்பு தேயிலைப் பொட்டலங்களையே என்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் அங்கு வெடிமருந்துகளைக் கண்டெடுத்ததாக குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டது

Tuesday, 14 July 2020

முஸ்லிம் மக்களை தேர்தலில் புறக்கணித்தனர்: புலிகள் குற்றச்சாட்டு


வடகிழக்கு மாகாணசபை மோசடித் தேர்தலினால் பதவியில் அமர்ந்தபின்னர் கூட இவர்கள் ஈழத் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை. இவர்கள் பதவியேற்றபின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்துக்களைக் கொண்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.

தமிழ்பேசும் மக்களில் ஒரு பெரும் பிரிவினரான முஸ்லிம் மக்களை தேர்தலில் புறக்கணித்ததுடன், அவர்களை வேட்டையாடி அவர்களின் உடமைகளை சூறையாடி தீவைத்து பெரும் அனர்த்தங்களை இவர்களும் இவர்களின் கூட்டாளி குழுக்களும் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர்.

தமிழீழம், குரல்18 - டிச 89 ஜன 90 

Monday, 13 July 2020

1986: காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ இயக்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக்கொலை


காத்தான்குடி முஸ்லிம்களிடம் கொள்ளையிட்ட டெலோ அங்கத்தினர் ஒன்பது பேர் சுட்டுக் கொலை:

தமிழீழ விடுதலைப் புலிகளே கொன்றனர்