Showing posts with label இறுதி யுத்தம். Show all posts
Showing posts with label இறுதி யுத்தம். Show all posts

Friday, 24 July 2020

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்

இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த 2006ம் ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது

-2006
ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

Tuesday, 21 July 2020

புகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலையால் வடிகிறது. - கலைச்செல்வி

யுத்தம், அழிவு, மானிட அவலங்கள், மனிதாபிமான பார்வைகள் என்கின்ற பிரக்ஞைகள் மயிரளவுகூட இவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் பொங்குதமிழ் நடத்தி தலைவருக்கு ஆணை கொடுத்தபோது அந்த ஞானம் எங்கே போயிற்று? அனுராதபுரத்திற்கு தலைவர் எல்லாளனை அனுப்பினார் என்று ஆரவாரம் பண்ணியபோது எங்கே போனது புத்தி? போதாக்குறைக்கு இறுதி யுத்தத்திற்கு பங்களிப்பு செய்து எக்காளம் உரைத்தபோது யுத்தமென்றால் என்ன செய்யும் என்று இவர்களுக்கு தெரியாது போனதேன்

- கலைச்செல்வி

Saturday, 13 June 2020

“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளின் விபரம்..!


வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநாவில் வைத்து தமிழர்கள் தரப்பால்வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை அரச தரப்பால், இந்த செய்தி பொய்யெனமறுக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு..:

Sunday, 24 May 2020

புலிகளின் யாழ்ப்பாண முற்றுகைக்கு வழி வகுத்த மாவிலாறு சமர்க்களம்

தமது விமானப் படையைப் பயன்படுத்தி புலிகள் நடத்திய முதல் தாக்குதல்

வடக்கு - கிழக்கில் பல பகுதிகளிலும் போர்முனைகள் திறக்கப்பட்டுள்ளன. முழு அளவில் போர் வெடித்துள்ளது. அரசின் முப்படைகளும் களத்தில் குதித்துள்ளது போல் விடுதலைப் புலிகளும் முப்படைகளை களத்தில் இறக்கியுள்ளனர். கிழக்கில் படையினர் போர் முனைகளைத் திறக்க வடக்கில் புலிகள் போர் முனையை திறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன ? -


இது இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் திட்டமிட்ட படுகொலைகள் நடந்துள்ளது. பல பத்து பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது. சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மிக மோசமான கொடூரமான நடத்தைகளால் பல பத்தாயிரம் மக்களின் புலம்பெயர்வுக்கே இது வித்திட்டுள்ளது. நடத்ததோ மறுபடியும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் மற்றொரு இனவழிப்புத் தாக்குதல் தான்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.
 எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

Friday, 22 May 2020

புலிகளும் சமாதான வாய்ப்புகளும்


தமது கருத்துக்களோடு உடன்படாதவர்களை..தம்மை விமர்சித்தவர்களை. தமக்கு போட்டி பங்காளிகளாக கருதப்பட்டவர்களை ஈவு இறக்கம் இல்லாமல் கொன்றொழித்து வந்தவர் பிரபாகரன். தாமே ஏகப்பிரதிநிதிகள். தாமே தமிழரின் பாதுகாவலர்கள், என்ற மமதையில் ஏனைய இயக்க தலைவர்களையும், போராளிகளையும் மாத்திரமல்ல சமூகத்தில் புத்தி ஜீவிகள், கல்விமான்கள் போன்றவர்களையும், தம்முடன் உடன்படாதவர்களையும் துரோகிகள் என்று கூறி கொலை செய்தவர் தான் பிரபாகரன்.

Thursday, 21 May 2020

மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்

கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.
மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மே மாத நடுப்பகுதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. 
-Saturday, June 20th, 2009