(சுமந்திரனின் நாடாளுமன்ற உரையை முன்னிறுத்தி, ஒரு விவாதத்திற்கான அழைப்பு)
செல்வநாயகத்தால் 1976ல் வட்டுக்கோட்டையில் முன்மொழியப்பட்ட ‘சுதந்திர தனிநாடு’ என்னும், ஏட்டுச் சுரைக்காயை சுயபரீசீலனையற்று, காவித்திரிவதில் கர்வம் கொண்ட ஒருவராகவே, பிரபாகரனின் காலம் கழிந்தது…….அந்த கர்வத்திற்காக பிரபாகரன் தொடர்ச்சியாக செய்துவந்த தவறுகளின் விளைவுதான், முள்ளிவாய்க்கால் அவலம்..
எதிர்காலத்தை வரையறுக்க விரும்பினால் கடந்த காலத்தைப் படி – கன்பியுசியஸ்
2014ம் ஆண்டு
வரவு-செலவுத்திட்டத்தின் வெளியுறவு அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான சூழ்நிலை
விவாதத்தின்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய உரையின் மீதான ஒரு பிரதிபலிப்பாகவே, இக்கட்டுரை அமைகிறது.