Showing posts with label பேச்சுவார்த்தை. Show all posts
Showing posts with label பேச்சுவார்த்தை. Show all posts

Saturday, 25 July 2020

சாத்தியமே இல்லாதது தமிழீழம்: என்.ராம்

அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத் தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள், தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்; அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின் பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால், கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்; வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்; அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட இல்லை.

அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக, புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக, வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும் விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும் நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.

என்.ராம் 01 Jan 2014 

Tuesday, 16 June 2020

2006 ஜூலை 21- மாவிலாறை பூட்டி நான்காம் ஈழப்போரை தொடங்கி வைத்த சொர்ணம்: - 22

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 

பிரபாகரனின் ஒப்புதலுடன் 2006 ஜூலை 21ம் தேதி மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!
இறுதிப் போரின் ஆரம்பத் தாக்குதல்கள் அனைத்துமே புலிகள் தமது பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட களங்களாகவே அமைந்திருந்தன.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இறுதி யுத்தத்தின் முதலாவது கட்டம் கிழக்கு மாகாணத்தில் முடிவுக்கு வந்திருந்தது.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் அனைத்தையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.
இறுதியாக, 2007 ஜூலை 11இல் குடும்பிமலையும் (தொப்பிக்கல்) இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வீழ்ந்தது.
புலிகளின் ஆயுதக் கப்பல்கள் இலங்கை கடற்படையால் தாக்கியழிக்கப்பட்டதன் காரணமாக இயக்கத்திடம் கைவசமிருந்த ஆட்லறி பீரங்கிகளுக்குத் தேவையான எறிகணைகள் மற்றும் வெடிபொருட்களைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெற்று யுத்தத்தில் தாராளமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது.
2007க்குப் பின்னரான காலப் பகுதியில் வன்னிப் பெருநிலப் பரப்பு மட்டுமே புலிகளின் கைவசமிருந்த ஒரேயொரு தளமாக அமைந்திருந்தது.
எந்தச் சமூகத்தை வாழவைக்க வேண்டுமென்பதற்காக நாம் போராடப் போனோமோ அதே சமூகத்தின் சீரழிவு நிலைக்கும் நாமே காரணமாக இருந்தோம்.