முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா? ஸ்டாலினியத் தத்துவத்துக்குட்பட்டு தேச வரையறைக்குட்பட்ட வரைவிலக்கணங்களுக்குள் தமிழர்களாக கருதப்பட வேண்டியவர்களா? என்ற ஒரு கேள்வி இருக்கின்றது. இது என்றுமே சர்ச்சைக்கு ரியதாக இருந்து வருகின்றது.
Showing posts with label தமிழ்தேசியம். Show all posts
Showing posts with label தமிழ்தேசியம். Show all posts
Monday, 3 August 2020
Friday, 31 July 2020
இலங்கை: சாதியும் தேசியமும்!!
''அநகாரிக தர்மபால,
‘சிங்கள – பௌத்த’ தேசியத்தை விதைக்கும் போது, சாதிகளைக் கடந்த இன-மத தேசியமாகவே அதைக்
கட்டமைத்திருந்தார். ஆனால், அநகாரிக
தர்மபாலவின் சமகால எதிரிணையாகக் கருதப்படும் ஆறுமுகநாவலரின் சுதேசிய மறுமலர்ச்சி, ‘யாழ்ப்பாணத் தமிழ், சைவ, வௌ்ளாள’ மறுமலர்ச்சியாக அமைந்திருந்தது
மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொரு ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை.''
மிஷனரி ஆதிக்கத்தின் கீழாக, கொலனித்துவத்துக்கு எதிரான சுதேசிய மறுமலர்ச்சி எழுச்சியின் போதுகூட, சிங்களவர்கள் சாதிகளைத் தாண்டியதொரு ‘சிங்கள-பௌத்த’ தேசியம் பற்றிய பிரக்ஞையை உருவாக்கிய போதும் கூட, இலங்கைத் தமிழர்களிடையேயான சாதிப் பிரக்ஞை கைவிடப்படவில்லை.''
Monday, 27 July 2020
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
* முஸ்லிம்களில்
ஏகப்பெரும்பாலானோரின் வீட்டு மொழி தமிழ் என்ற காரணத்தை முன்னிறுத்தி, அவர்கள்
தமிழர்கள் என்றும் முஸ்லிம்கட்குத் தனிப் பிரதிநிதித்துவம் தேவையில்லை என்றும்
இராமநாதன் முன்னர் வாதித்தமையும் நோக்கத்தக்கது.
முஸ்லிம்கள் கிழக்கிலங்கையிற்
கணிசமானளவு பிரதேசத்திற் செறிவாக வாழ்கின்றனர். வடக்கிலும் மேற்குக் கரையோரமாயும்
முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பிரதேசங்கள் உள்ளன. ஆயினும் ஏகப் பெரும்பாலோர் பல
இடங்களிற் சிங்கள மக்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க சிறுபான்மையாக உள்ளனர். எனவே
அவர்கள் தமிழருடன் ஒப்பிடத்தக்க மொழிப்பற்று உடையோராயினும், அவர்களின்
தனித்துவம்,
மொழியை
விட முக்கியமாக மதமும் பண்பாடும் சார்ந்திருந்தது.
அவர்களுடைய
தனித்துவத்தை இராமநாதன் நிராகரித்தார். முற்றிலும் யாழ், குடாநாட்டை
மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியலை அவருக்குப் பின் வந்த ஜி.ஜி. பொன்னம்பலம்
முன்னெடுத்தார்.
* விடுதலைப்
புலிகளின் ஆதிக்கம் வலுத்த போர்ச் சூழலில், முஸ்லிம்களும்
தமிழ் மக்களைப் போல தமக்குக் கீழ்ப்பட்டு நடக்க வேண்டுமென எதிர்பார்த்த விடுதலைப்
புலிகளின் அணுகுமுறையால் முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர். அதன் பயனாகக் கிழக்கில், குறிப்பாக
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், முஸ்லிம்களை
வலிந்து தாக்கலும் முஸ்லிம்களின் எதிர்த் தாக்கலும் சில முஸ்லிம்கள்
அரசாங்கத்துடன் நிற்பதுமாகத் தமிழ் ‒ முஸ்லிம்
நல்லுறவுக்குக் கேடு விளைந்தது.
Labels:
LTTE,
இனச்சுத்தீகரிப்பு,
ஐஎஸ்,
தமிழ்தேசியம்,
பொன் இராமநாதன்,
முஸ்லிம்கள்
குறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்: - எஸ்.எம்.எம் பஷீர்
உலகளாவிய ரீதியில் முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்காக செயற்படும் சர்வதேச
நெருக்கடிக் குழு (International Crisis Group) தனது
ஆசிய நாடு தொடர்பான ஆய்வறிக்கை இலக்கம் 134இல் இலங்கை இனப்பிரச்சினைக்காக நிகழும்
இருபுறச் சமரில் இடையில் சிக்குண்ட முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் அனைத்தையும்
உள்ளடக்கியதான ஒரு விரிவான அறிக்கையினை இவ்வருட மே மாதத்தில் வெளியிட்டுள்ளது.
தனது அறிக்கையின் முடிவில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருக்கும் இடையில் சிக்குண்ட
முஸ்லிம்களை மூன்றாவது தரப்பாகக் கண்டு சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. சர்வதேச
பிரதிநிதித்துவத்தினைக் கொண்ட இச்சிபாரிசுகள் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில்
முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
Labels:
எஸ்.எம்.எம்.பஷீர்,
கட்டுரைகள்,
த.ம.வி.பு,
தமிழ்தேசியம்,
முஸ்லிம்கள்
Saturday, 25 July 2020
புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள் -கிழக்கான் ஆதம்
''இந்தியாவும் சர்வதேசமும் புலிகளுக்கு காட்டிய கருணையை அவர்களின் பலம் என்று
நினைத்துக் கொண்டு தான்தோன்றித் தனமாக செயற்பட்டதால் இந்தியா என்ற பூதத்தை
பகைத்துக் கொண்டதுடன் அவர்களின் இராணுவத்தை தோற்கடித்தாக கதையும் விட்டுவிட்டு
இன்று தன்னிலை அரசால் உணர்த்தப்பட்டவுடன் “ஆதரவளிக்காவிட்டால் பரவாயில்லை இலங்கை
அரசுக்கு உதவிசெய்யவேண்டாம்” என்று இந்தியாவிடம் பிச்சை கேட்க வேண்டியுள்ளது''
Labels:
LTTE,
அயலகம்,
இந்தியா,
கட்டுரைகள்,
தமிழ்தேசியம்
Tuesday, 21 July 2020
பிரதேசவாதம் உண்மையும் கற்பனையும்: - எஸ்.எம்.எம் . பஷீர்
* பரீஸ்
கூட்டத்திற்குப் பின்பு முஸ்லீம்கள் சம்பந்தமாகக் கருணாவைக் கேட்டபொழுது
"அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் புலிகளே முஸ்லீம்களைப் பிரதிநிதித்துவப்
படுத்துவார்கள். அதன் பின்பு புலிகள் முஸ்லீம்களோடு பேசி அவர்களின் தேவைகளை
அறிவார்கள்" புலிகள் முஸ்லீம்கள் சம்பந்தமாகத் தசாப்தங்களாக வைத்திருந்த
நிலைப்பாடே கருணாவினது நிலைப்பாடாகும்.
* முஸ்லீம்கள் ஒரு
தேசிய இனக் குழு. அவர்களுக்கென்று ஒரு கலாச்சார அடையாளமுண்டு. அவர்களின்
கலாச்சார அடையாளத்தையும் காணி வைத்திருக்கும் உரிமையையும் பாதுகாக்கும் அதே வேளையில்
அவர்கள் தமிழ் மக்களோடு ஐக்கியப்பட்டு சேர்ந்துவாழ்வதன் மூலம் மாத்திரம்தான்
அவர்களது சமூக அரசியல் பொருளாதார நலன்கள் பாதுகாக்கப்படும். சிங்களவர்களும்
சுயநல முஸ்லீம் அரசியல்வாதிகளுமே தமிழ் முஸ்லீம் மக்களுக்கிடையே பிரச்சனையை
உருவாக்கப் பார்க்கிறார்கள்" -பிரபாகரன்
* கிழக்கு முஸ்லீம்களைப் பொறுத்தமட்டில்
கிழக்கிலே நடைபெற்ற முஸ்லீம்களின்
படுகொலைக்கு கருணாவும் கரிகாலனும் பொறுப்பாளிகள் என்ற
நிலைப்பாடே உள்ளது.
- எஸ்.எம்.எம் . பஷீர்
Labels:
இனச்சுத்தீகரிப்பு,
எஸ்.எம்.எம்.பஷீர்,
கட்டுரைகள்,
கருணா,
தமிழ்தேசியம்
Monday, 20 July 2020
மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் ( 11- !5)
* மன்னார் மாவட்ட அரச
அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர்
சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக
இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு
எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டா
* கூட்டணியினரின்
யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என
அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான
கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு
உள்ளானார்கள்.
* தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சூழலில்
தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ்
தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று
இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும்
அஷ்ரப்பும்
அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.
எஸ்.எம்.எம் பஷீர்
Labels:
அஷ்ரப்,
இனச்சுத்தீகரிப்பு,
எஸ்.எம்.எம்.பஷீர்,
தமிழ்தேசியம்,
முஸ்லிம்கள்
Thursday, 16 July 2020
The forced evacuation of Muslims in 1989: Some Reflections: - Nadesan Satyendra, 1996
The first matter is the whole question of the Muslim identity. In the 1880s, for instance, attempts were made by Tamil politicians, such as Sir Ponnambalam Ramanathan to show that Muslims were Tamils whose religion was Islam in the same way as other Tamils were Hindus or Christians.
In a paper entitled "The ethnology of the 'Moors' of Ceylon", read before the prestigious Ceylon Branch of the Royal Asiatic Society, Ramanathan contended, advancing physical, social and cultural evidence in his support, that the Muslims originated from South India and were of the same race as the one to which he belonged: in short, the Muslims were really a group of Tamils who had embraced a new religion, Islam. (Collective Identities, Nationalisms and Protest in modern Sri Lanka, edited Michael Roberts).
Labels:
1990,
LTTE,
இனச்சுத்தீகரிப்பு,
தமிழ்தேசியம்,
பொன் இராமநாதன்,
வடக்கு வெளியேற்றம்
THE EXPULSION AND EXPROPRIATION OF MUSLIMS IN THE NORTH: - UTHR(J)
The Muslims from Puthukudiruppu, Tharapuram,
Uppukulam and Erukkalampiddy were taken to the beach at a place near
Erukkalampiddy known as `Five Coconut Trees', and were left there until they
could find boats. They had to spend nights in the open in rainy weather with no
conveniences and no boutique to obtain food and water.
Labels:
LTTE,
UTHR(J),
இனச்சுத்தீகரிப்பு,
கரிகாலன்,
தமிழ்தேசியம்,
பேரினவாதம்,
முஸ்லிம்கள்
Wednesday, 15 July 2020
இலங்கையில் முஸ்லீம்-விரோத சூனிய வேட்டையை தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கின்றனர் -
* “அனைத்துக் கட்சிக் கூட்டம்” ஒன்றுக்கு சிறிசேன அழைப்பு விடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தக் கூட்டத்தில் பங்குபற்றி
அவசரகால சட்டம் பிரகடனப்படுத்த தனது ஆதரவை வழங்கியது.
அவசரகால
சட்டத்தின் பிரிவுகளில் 1978 இல்
தமிழ் தீவிரவாதத்திற்கு எதிராக அறிமுகம் செய்யப்பட்ட இழிபுகழ் பெற்ற பயங்கரவாத
தடுப்புச் சட்டத்தில் (PTA) இடம்பெற்றிருந்த பல பிரிவுகளும் இடம்பெற்றிருக்கின்றன.
*
அவசரகால நிலைமையின் கீழ், வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தின் நடவடிக்கைகளை
தீவிரப்படுத்துவதற்கு கூட்டமைப்பு அழைப்பு விடுகின்றது.
கூட்டமைப்பின்
முன்னிலை உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவரது மே தின உரையில் “மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில்
இராணுவ மற்றும் போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும். முன்பு அவர்கள் இங்கே
இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்பினோம், இப்போது அவர்கள் எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள்
விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.
* இலங்கை எதிர்நோக்கியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலை, முழுமையாக
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், தமது அனுபவங்களை இலங்கை படையினருடன் பகிர்ந்துக்
கொள்ள தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ராடா வான் காப்பு
படையணியின் போராளியாக கடமையாற்றிய முன்னாள் போராளியும், ஜனநாயக
போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான க.துளசி அறிவிப்பு
* கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரான சரவணபவனுக்கு சொந்தமான
பரவலாய் வாசிக்கப்படும் தமிழ் தினசரியான உதயன், யாழ்ப்பாண மசூதியில் பாதுகாப்புப் படையினர் கண்டெடுத்தது கறுப்பு
தேயிலைப் பொட்டலங்களையே என்பதை நன்கு அறிந்திருந்தும் அவர்கள் அங்கு
வெடிமருந்துகளைக் கண்டெடுத்ததாக குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டது
Labels:
Home Guard,
LTTE,
TNA,
இனப்பிரச்சனை,
ஈஸ்டர்,
தமிழ்தேசியம்,
முஸ்லிம்கள்
Subscribe to:
Posts (Atom)