Showing posts with label எல்லைப்படை. Show all posts
Showing posts with label எல்லைப்படை. Show all posts

Sunday, 14 June 2020

2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டது - 8


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 8

இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் தமதுயிரை இழந்திருந்தனர்.

• 2000.04.22ஆம் திகதி ஆனையிறவு புலிகளால் கைப்பற்றப்பட்டபோது இயக்கத்தின் பல வருடக் கனவு அன்று நனவாகியது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் குருதியில் நனைந்த ஏ9 வீதி 2002 திறக்கப்பட்டபோது புலிகள் இயக்கம் இராணுவ பலத்தின் உச்சத்தில் இருந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

அப்பலத்தை அரசியல் மற்றும் ராஜதந்திர ரீதியான பலமாக மாற்றியமைக்கும் தந்திரோபாயத்தில் புலிகளின் தலைமைக்கு ஏற்பட்ட படுதோல்வி, பின்னொரு நாளில் முள்ளிவாய்க்கால் வீதியை மக்கள் தாமாகவே தள்ளித் திறந்துகொண்டு வெளியேறிச் செல்லக் காரணமாய் அமைந்தது.

மாவோவின் செஞ்சேனை போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்! - 6


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 6 

* தாய்நாட்டை விடுவித்து  விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.
அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. 
* தங்கச்சி, நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை.
போகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும்.
ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது, நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம்.