காலத்தின் கன்னத்தில் நிற்கும்
கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை
வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல
கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத்
துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று
தானம் கொடுத்த மாட்டை
பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக
மீனவர்களின் எலும்பைப்
பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது
இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப்
பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை
கூடிக்கொண்டே போகிறது.