புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின்
எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன்
அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம்
முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே
இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம்.
இவ்வொப்பந்தத்தின்மூலம்
புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை
ஆதரிப்பதென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும்
அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது
அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும்
சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது.
எஸ்.எம்.எம். பஷீர்