Thursday, 18 June 2020

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், படுகொலைகளும்:- ஜான்ஸன்

முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில்தமிழ் குறுநல தேசியவாதமும்  இனவாத அரசியலும்  அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரையான காரியங்களைச் செய்தது. எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லிம்களை மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்திவன்முறையை கட்டமைத்தனர். முஸ்லிம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நாகத் தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போதுஅதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பல் தெய்வ வணக்க வழிபாடுகளைக் கொண்ட இந்துக்களால் ஏகதெய்வ கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.


இந்து மதத்தில் காணப்பட்ட உடன்கட்டையேறுதல் விதவைகள் மீள்திருமணம் செய்யமுடியாது போன்ற பல பிற்போக்கான மனிதவிரோத நடத்தைகள் மற்றும் சாதிப் பிளவுகளை எதிர் கொண்ட மக்களில் சிலர் இஸ்லாம் மதத்தை சென்றடைவது இயற்கையானதாகவும் இயல்பானதாகவும் இருந்தது. அத்துடன் சமூக பொருளாதார கூறுகளும்இதை உந்திச் செல்வதில் குறித்த பங்கை வகித்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சடங்குசம்பிரதாயத்துக்கும் வெவ்வேறு கடவுளர்களைக் கொண்டு அது தொடர்பாக பல்வேறு கதைகளையும் இயற்றி வாழ்ந்த அச்சமூகத்தின் பெரும்பாலானவர்கள் இஸ்லாமிய மனதளவில் ஏற்றுக்கொண்டாலும் செயலில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள அவர்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் இடம்கொடுக்கவில்லை.

இஸ்லாத்துக்கு சந்தர்ப்பம் வழங்கினால் அது ஆழவேர் பதித்து பெருவிருட்சமாக வளர்ந்து மக்களை ஆட்கொண்டுவிடுமென்பதை இந்த மக்களை வைத்து பிளைப்பு நடத்துபவர்கள் அறிவார்கள். இந்த நிலையில் இஸ்லாம்;, மார்க்கம் என்ற அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் காலூன்றிய  வரலாற்றுப் போக்கை தமிழர்கள்தமது கடந்தகால பிரதேச ஆதிக்க வடிவில் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை.

இந்த வளர்ச்சி கடந்த சில நூறு வருட வளர்ச்சியில் படிப்படியாக ஏற்பட்டவையே. சைவத்தில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட முஸ்லிம் மக்கள்முஸ்லிம் மத பண்பாடு கலாச்சாரம் சார்ந்து தனது தனித்துவமான  உற்பத்தி முறைக்கு இசைவாகதனக்குள் தன்னை மாற்றிக் கொள்ளத் தொடங்கியது. இவையெல்லாம் இஸ்லாத்துக்கெதிரான மனவெருப்பைக் கொண்ட குழுக்கள் உருவாக காரணமாக விளங்கியது.

காலணித்துவ ஆட்சிக்குள் யாழ்ப்பாணமிருந்த காலத்தில் கத்தோலிக்க மதத்தை தழுவிக் கொண்டவர்களும் தாம் தமிழர் என்ற அடிப்படையில் இஸ்லாமிய விரோதப் போக்கை கொண்டிருந்தனர். இதனால் காலகாலமாக தமிழ் ஆதிக்க சக்திகள் முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். 

இதன் கட்டங்களாகவே கீரமலை- சேத்தான்குளம் முஸ்லிம்கள் வெளியேற்றம்அராலி-மாதகல் பிரதேச வெளியேற்றம்பப்பரப்பிட்டி வெளியேற்றம்மீசாலை உசன் பிரதேச வெளியேற்றம்சாவகச்சேரி வெளியேற்றம்நல்லூர் வெளியேற்றம் என்பன முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கோட்டைப் பிரதேச வெளியேற்றம் போர்த்துக்கீஸரால் மேற்கொள்ளப்பட்டாலும் இந்தியாவிலிருந்த போர்த்துக்கீஸரை மன்னாருக்கும் பிறகு அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கும் அழைத்து வந்து முஸ்லிம்களை ஆதிக்கத்தை அழிக்க முயன்றதும் சில தமிழர்களே.

ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் வெளியேறிய முஸ்லிம்கள் ஆரம்பத்தில் சில பிரச்சினைகளை எதிர்நோக்கினாலும் நாளடைவில் விழுதாக முளைத்தெழுந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் விருட்சமாகி தோப்பாகினர். இவ்வாறு தமிழர் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகள் எல்லாம் தோல்வியடைந்தன.

நாட்டின் சட்டங்களும் ஆளுமையும் மாற்றான் கையில் இருக்கும் போது முஸ்லிம் விரோதப் போக்கு கொண்ட தமிழர் அடங்கிக் கிடந்தனர். இருந்தாலும் ஆங்காங்கே முஸ்லிம் விரோதக் கருத்துக்கள் விதைக்கப்பட்டன. 

இதனால் முஸ்லிம்கள் தமிழருடன் ஐக்கியமாக வாழ்ந்த காலங்களிலும் முஸ்லிம்களின் சொத்துக்கள் தமக்குரியன தாமே எதிர்காலத்தில் அவற்றை அனுபவிப்போம் என்றவாறான பேச்சுக்கள் ஆங்காங்கே முஸ்லிம்கள் காதில் விழும்படியாக வடக்கு கிழக்கில் பேசப்பட்டன. 

இவ்வாறான சிந்தனைகளை கொண்ட ஒரு சமூகம் ஆயுதங்களையேந்தி நாட்டின் பெரும்பாண்மைக்கெதிராக போராடத் தொடங்கிய காலத்தில் தமது சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க முயன்றதுடன் முஸ்லிம்களை அழித்து வேரருப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டனர். இவற்றின் காரணமாகவேற்பட்ட  தமிழ் ஆயுதக்குழுக்களின் பரந்த தன்மையற்ற வன்முறை கொண்ட செயற்பாடேமுஸ்லிம் மதவாத கட்டமைப்பை உருவாக்க துணையாக நின்றது. தமிழர்  சார்ந்த தமிழீழ ஆதிக்கக் கண்ணோட்டம் அடிப்படையில் தமிழ் ஆயுதக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. முஸ்லிம் மக்கள் மேலான தமிழர் ஆதிக்கம் மற்றும் புறக்கணிப்புடன் கூடிய அடக்குமுறைமுஸ்லிம் மக்களை தமிழீழ போராட்டம் இடம்பெற்ற காலத்தில் நடுநிலைமையாக வாழ வழிவகுத்தது.

இதை நாம் மேலும் ஆதாரமாக பார்க்கமுஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்களையும்முக்கிய மாற்றங்களையும் ஆராய்வோம்;.

முஸ்லிம் மக்கள் மேலான அனைத்து தாக்குதல்களும் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. இந்தப் படுகொலைகளை பல்வேறு இயக்கங்கள் செய்த போதும்இறுதியாக புலிகள் அதை ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே செய்தனர். இக்காலத்தில் புலிகளின் தாக்குதலில் இருந்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக அரசினால் உருவாக்கப்பட்ட ஊர்காவல் படையினர் மற்றும் சம்பவ இடத்தில் ஆத்திரத்தால் ஒன்றுசேர்ந்த முஸ்லிம்கள் புலிகள் மீதும் அவர்களின் ஆதரவாளர்கள் மீதும் மேலும் முஸ்லிம்களுக்கெதிராக செயற்பட்ட தமிழர்கள் மீதும் நடத்திய பதிலடித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட   தமிழர்களின் எண்ணிக்கை  இதற்குள் உள்ளடக்கவில்லை. அன்றைய நாளாந்த பத்திரிகையில் வெளியாகிய செய்தியை அடிப்படையாக கொண்டும்கிடைத்த பத்திரிகையை மட்டும் ஆதாரமாக கொண்டு இவை தொகுக்கப்பட்டது. இதில் காயம் அடைந்தவர்கள் மற்றும் காயம் அடைந்த பின் மருத்துவமனையில்  இறந்தவர்களையும் உள்ளடக்கவில்லை.

29.11.1986 இல் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்டது. முஸ்லிம் மக்களுக்காக கிழக்கில் உருவான முதல் தனிக் கட்சி என்று தகவல்கள் கூறுகின்றன. 1984 இல் இக் கட்சியை நிர்மாணம் செய்த போதுஅதில் எட்டுப் பேர் தான் இருந்தனர். 1987ல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முடிவு எடுத்த நிலையில்புலிகள் மரண தண்டனையை பிரகடனம் செய்திருந்தனர்.

1988இல் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17 ஆசனங்களை பெற்று பிரதான எதிர்க்கட்சியாகியது. அதே நேரம் தென் இலங்கையில் 12 ஆசனங்களைப் பெற்றிருந்தது.

1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து மூன்று  முஸ்லிமகளைக் கிரனைட் வீசிக் கொன்றனர்.

1986 ஜூலை 23 அன்று அப்துல் அஸீஸ் ஜலீல் மாஸ்ரர் மற்றும் இப்றாஹிம்  வெள்ளை  என்போர் யாழ்ப்பாணத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.

1988 ஜனவரி 22ம் நாள்மன்னாரில் அரசாங்க அதிபராக (புயு) கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  எம்.எம். மக்பூல் அவர்கள் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். முஸ்லிம் கல்விமான்களை அழிக்கும் திட்டத்துடன் இப்படுகொலை புரியப்பட்டது.

19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் 7 பேரை கடத்திச் சென்றனர்.

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1988 கார்த்திகை மாதம் ரெலோஈ.பி.ஆர்.எல்.எப்ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறைநிந்தவூர்சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில்இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள்தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று  முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.


89 பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்கில் 75 சதவீதத்தை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றிருந்தது. அதேநேரம் 4 தொகுதிகளை வென்றது.

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்துவீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். 
கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.
இதை அடுத்து காத்தான்குடியிலும்கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல்புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில்அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின்ஐவரை சுட்டுக் கொன்றதுடன்வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர்.

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்;கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள்  மற்றும்  ஏனைய இயக்கங்களால்  கொல்லப்பட்டனர்.

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர்

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

3.8.1990 திகதி  காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த  இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன்நியுட்டன்அலெக்ஸ்ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய 7 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  அக்கரைப்பற்றில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.

11.8.90 ஏறவூரில் 120  பேர் படுகொலை செய்யப்பட்டனர். நிராயுதபாணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட  இக்கோழைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன்நியூட்டன்ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் 4 முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர்.

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் 6 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் 5 பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன.

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் 7 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர்.

1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில்   யாழ்ப்பாணம்மன்னார்முல்லைத்தீவுகிளிநொச்சிவவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த  85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட  பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போதுபுலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர்.

1992.4.26 இல் அழிஞ்சிப் பொத்தனையிலும்ஆவணியில் பள்ளித்திடலிலுமாக மொத்தம் 300 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். 

தமிழ் ஆயுதக் குழுக்கள் பல்வேறு அட்டூழியங்கள் முஸ்லிம் சமூகத்துக்கெதராக 1983 முதல் புரிந்து வந்தார்கள். இது பூதாகாரமாகி 1987 முதல் படுகொலைகளாகத் தொடர்ந்தது. அடிக்கடி முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள்கடத்தப்பட்டார்கள்கொல்லப்பட்டார்கள்அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

முஸ்லிம்களுக்கெதிரான தமிழ் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் குறித்து றறற.வயஅடைளைடயஅ.உழஅ மேலும் கூறுகையில் இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் 1986-1987 க்கு பின்பாக அதிகரித்தது என்று புள்ளிவிபரங்களுடன் எடுத்துக்காட்டுகின்றது.

இந்திய இராணுவத்தின் வருகையின் பின்பு இது அகலமாகி விரிவடைந்தது. இந்தியா இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்பு உச்சத்தை அடைந்தது. 1985 க்கு பின்பாக விடுதலை இயக்கங்கள் ஆயுத ரீதியாக பலமடைந்ததன் காரணமாக பண்பு ரீதியாக மற்றத்தை சந்தித்ததை தொடர்ந்தேஇந்தப் புதிய நெருக்கடி பரிணமித்தது. 

தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஆயுதம் ஏந்த ஆயிரமாயிரமாக போராட வெளிக்கிட்டவர்கள்அந்நிய அரசுகளின் கைக்கூலியாகி ஆயுதப் பயிற்சி பெற்ற பின்புஅதன் சிதைவு அங்கிருந்து சகோதரப்படுகொலையாக  வழியெடுக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் காலத்தில் ஏனைய தமிழ் ஆயுதக்குழுக்களும் 1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் புலிகளும் முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.

முஸ்லிம்களை அழிப்பதில் ஓர் ஆயுதக்குழுவுக்கு இன்னொரு தமிழ் ஆயுதக்குழு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாகவே அவர்கள் ஆயுதமேந்தாத அப்பாவிகளை ஆண் பெண் வயோதிபர் சிறுவர் சிசு என்ற பாகுபாடில்லாமல் யுத்தப்பிரகடனம் செய்யாமல் அநியாயமாக படுகொலை செய்தனர். யுத்தத்தில் நேருக்கு நேர் மோத வேண்டுமென்பதும் புறமுதுகில் தாக்கக்கூடாது என்பதும் பண்டை தொட்டு காணப்பட்ட யுத்த மரபுகளாகும். ஆனால் ஆயுதமேந்தாத ஒரு கூட்டத்தின் மீது அதுவும் பெண்கள் பாலகர்களைக் கூட பின்னாலிருந்து கொன்றொழித்தனர் தமிழீழ மாவீரர்கள். 

 1990 ஜுன் 11 அன்று இரண்டாவது ஈழப் போர் ஆரம்பமானபோது முஸ்லிம்களுக்கெதிரான இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்தன.

1990 ஜுலை 16 அன்று ஹஜ் சென்று வந்த 68 முஸ்லிம்கள்   லொறியுடன் வைத்து எரிக்கப்பட்டனர். இது முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தையூட்டியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக 1900 ஆகஸ்ட் 3ஆம் திகதி காத்தான்குடியிலிருந்த மீராப்பள்ளி மற்றும் காட்டுப்பள்ளி ஆகிய பள்ளிவாசல்களில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 104 நிராயுதபாணியான முஸ்லிம்கள் பின்புறத்திலிருந்து கிரனைட் வீசியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஏராவூர் சதாமியாபுரம் போன்ற இடங்களில் தூக்கத்திலிருந்த முஸ்லிம்கள் ஒலிபெருக்கி மூலமாக பள்ளிவாசலுக்கு அழைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 122 பேர் துடிதுடித்து மாண்டனர்.

இதனைத் தொடர்ந்து பல படுகொலைகள் இடமபெற்றன. இவ்வாறான அடிக்கு மேல் அடி வாங்கி உயிரிழப்புகளைக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் புலிகளுக்கெதிராக ஆயுதமேந்தி பதில் தாக்குதல்களில் ஈடுபட்டனர். இதனால் புலிகளுக்கு  கிழக்கில் நிலைகொள்ள முடியாதளவு நிலமை மாறியது.


யாழ்முல்லைத்தீவு மற்றும் மன்னார் பகுதிகளில் வாழ்ந்த  முஸ்லிம்கள் சதிகள் மூலமும் ஆயுதம் மூலமும் தமிழர்கள் தம்மை ஏற்கனவே நான்கு தடவைகள் வெளியேற்றியிருந்த வரலாற்றை  தமது மூதாதையர் மூலம் அறிந்திருந்தனர். இதனால் தமிழ் ஆயுதக்குழுக்களை நம்பக்கூடாது என்ற கருத்து பரவலாக இருந்தது. மேலும் அவர்கள் பலமடைந்தால் தமக்கு கெடுதி செய்வார்கள் தம்மை மீண்டும் வெளியேற்றுவார்கள் என்ற சந்தேகமும் இருந்தது. அதே வேளை கிழக்கில் அந்த நிலை காணப்படவில்லை. மேலும் அங்கு ஓர் அன்னியோன்யமான ஒரு நிலமை காணப்பட்டது.  இதனால் தான்  வடபகுதியில் தமிழ் ஆயுதக்குழுக்களில் சேர்வதை முஸ்லிம்கள் தவிர்த்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள்  கூட தமிழ் ஆயுதக் குழுக்கள் பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக செயற்படப்;போகும் நிலமையை தூரநோக்குடன் சிந்திக்க தெரிந்திருந்தார்கள்.  அதேவேளை கிழக்கில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் இயக்கங்களில் சேர்ந்தனர். 

   ஆரம்பம் முதலே அரசியல் ரீதியாக தமிழ் தேசியத்தின் உட்கூறுகளை புரிந்து கொள்ள முடியாத தரகு கட்சிகளின்  அரசியல் வழியில் வாயிலாக உருவான இயக்கங்கள்மதம் மற்றும் பிரதேசவாத  கூறுகளை தனது அரசியல் அடிப்படையாக கொண்டே தன்னை வெளிப்படுத்தியது. இங்கு தேசியம் முதன்மை முரண்பாடாக நீடித்தமையால் இனமுரண்பாடு அடிப்படையாகஅதுவே அரசியலின் மையமான கோசமாகியது. இது தனக்கிடையிலான முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட அதே நேரம்மற்றையை இனங்களை அழிப்பதில் தன்னை அரசியல் மயமாக்கியது.

இந்த வரலாற்று வளர்ச்சியில் தான் முஸ்லிம் மக்கள் மேல் தாக்குதலை இயக்கங்கள் தொடங்கி வைத்தன. முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்த இயக்கங்கள்அவர்களையும் தனது உறுப்பினர் ஆக்கினர். புலிகளின் மாவீரர் பட்டியலில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் தம் உயிரை இழந்தே உருவாகியுள்ளது. இது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும்;. முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய அடிப்படை உள்ளடக்கத்தில்முஸ்லிம் மக்களை ஒன்றிணைத்த இயக்கங்கள் அவர்களின் ஆதரவை பெறுவதிலும் கணிசமான வெற்றி பெற்றனர். தமிழ்ப் பகுதி போல் ஆதரவு கொடுப்பதும்இணைவதும் ஒரு நிகழ்வாகவே இருந்தது. இயக்கங்கள் தமது குறுகிய குறுந்தேசிய இனவாத நலன்களில் வளர்ச்சி பெற்ற தன்மையானதுதமிழ் தேசியத்துக்கு முரண்பாடானதாக வளர்ச்சி பெற்றது.   

இந்த குறுந்தேசிய இன நலன்கள் படிப்படியாக சொந்த மக்களை விட்டே விலகிச் சென்றது. தமிழ் மக்களையே ஒடுக்குமளவுக்கு அது பரிணமித்தது. இதனால்  புலிகள் உள்ளிட்ட ஆயுதம் ஏந்திய அனைத்து இயக்கங்களும்மக்கள் விரோத சக்திகளாக வடக்கு கிழக்கு மக்களால் நோக்கப்பட்டன. மக்களின் தேசிய பொருளாதார நலன்களை வென்று எடுப்பதற்கு பதில்தனது குறுகிய தேசிய நலனை முதன்மைப் படுத்தி அதில் தனது நலனை அடைவதன் ஊடாக சீரழிந்தது. மக்கள் மேலான வரிகளாகவும்கட்டாய பணச் சேகரிப்பாகவும் மாறியபோதுஇதை அடைவதில் இயக்க மோதல் அவதாரமாகியது. இதில்  காட்டப்பட்ட போட்டி முயற்சி மேலும் மக்களுக்கு எதிரானதாக மாறியது.

தமிழ் மக்களுக்கு மேலானதாக பொதுவான தாக்குதலாக மாறியது என்பதுபின்பு குறிப்பாக முஸ்லிம் மக்கள் மேலானதாகவும் பரிணமித்தது. முஸ்லிம் மக்கள் மேலான வரிபணச் சேகரிப்புகள் முரண்பாடாக வளர்ச்சி பெற்ற போதுமுஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து அமைப்பாக்கப்பட்ட வடிவம் மூலம் இதை நியாயமாகவே எதிர்க்கத் தொடங்கினர். இந்த எதிர்ப்புகளை ஆயுத முனையில் அடக்க தமிழ் இயக்கங்கள் பின்நிற்கவில்லை. அமைப்பாக்கல் (கட்சி வடிவிலும் பள்ளிவாசல் வடிவிலும் எழுந்தன) இருந்தமையால் தமிழ் பகுதி போல்இந்த எதிர்ப்பை முறியடித்துவிடமுடியவில்லை. அதேநேரம் முஸ்லிம் தேசிய விழிப்புணர்ச்சி வெளிப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்முறையின் பரிணாமத்துடன் புத்துயிர்ப்படைந்தது. முஸ்லிம் மக்களின் தேசிய விழிப்புணர்வு மதத்துக்கு வெளியில்முஸ்லிம் மக்களை அணிதிரட்டுவதில் படிப்படியாக வெற்றி கண்டது. தமிழ் தேசியம் எப்படி சிங்கள இனவாத தாக்குதலால் விழிப்புற்றதோஅதே போன்று முஸ்லிம் சமூகமும் தமிழ் ஆயுத குழுக்களின் தாக்குதல்களால் விழிப்புற்றது. தமிழ் தேசியம் எப்படி தமது நிலப்பிரபுத்துவ அடிப்படையை உள்ளடங்கியதாக உருவானதோஅதே போன்று முஸ்லிம் காங்கிரசும் உருவானது.

முஸ்லிம் மக்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்முஸ்லிம் மக்களை தமிழ் தேசியத்தில் இருந்து தள்ளிச் சென்றது. தனியான தேசியத்தை கோருவது அதன் புதிய வடிவமாகியது. தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியம் மதத்தை தனது முதன்மைக் கூறாக கொண்டுதமது அணியைக்கட்டிவிடவில்லை. மாறாக தேசிய இனக் கூறை அடிப்படையாக கொண்டேதம்மை கட்டமைத்தன.

தொடர்ச்சியான தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத கண்ணோட்டம்முஸ்லிம் தேசிய உணர்வுகளை தட்டியெழுப்பிய நிலையில்மாகாண சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை எதிர்கட்சியாகவும் புதிய தேசியக் கட்சியாகவும் பரிணமிக்க வைத்தது. இது இயக்கங்களின் அதிகாரத்தை முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியதுடன்வரி மற்றும் பண சேகரிப்பை தடுத்தது. இந்த புதிய சூழ்நிலைக்கான காரணகாரியத்தை இயக்கங்கள் ஆய்வு செய்துதேசிய போராட்டத்தை சரியாக முன்னெடுப்பதற்கு பதில்பழைய குறுந்தேசிய இனவாதத் தாக்குதலை அதிகரித்தனர். முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை மூலம் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை வெற்றி கொண்ட காலம் தான்அந்த மக்கள் மேலான தாக்குதலின் உச்ச ஆண்டுகளாகும்;. இந்தியாவின் தயவில் ஆட்சி பீடம் எறிய கைக்கூலி பொம்மை அரசுகள்ஈவிரக்கமற்ற முஸ்லிம் படுகொலையை நடத்தத் தொடங்கினர். இதனால் ஏற்பட்ட எதிர் தாக்குதல்களுக்கு பதில் கொடுக்கும் வண்ணம் புலிகளும்இந்த கூலிக்குழுக்களின் வழியில் முஸ்லிம் மக்களை ஒடுக்குவதில் சமாந்தரமாகவே செயற்பட்டனர்.

ஒரு இனத்துக்கு எதிரான தாக்குதலில் புலியும் அதன்  எதிர் அணியான தமிழ் ஆயுதக் குழுக்களும்  அமைப்புகளும் ஒன்றுபட்டு கைகோர்த்து நின்றனர்.  இந்திய ஆக்கிரமிப்பாளனை இலங்கை அரசு கட்டாயப்படுத்தி வெளியேற்றிய போதுபுலிகள் இழந்து போன அதிகாரத்தை கைப்பற்ற தமிழ் ஆயதக்குழுக்களுக்கு எதிராக பாரிய தாக்குதலை சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து நடத்தினர். கட்டாயமாக தமிழர் இராணுவத்தில் இணைக்கப்பட்ட பல அப்பாவி தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள்பலர் அக்கால (1989-1990) செய்திப் பத்திரிகைகளிலே குறிப்பிடுமளவுக்கு ஒவ்வொரு நாளும் பல நூறு பேர் வீதிகளில் கொல்லப்பட்டனர். அதேநேரம் புலிகள் முஸ்லிம் பகுதியில் இழந்த அதிகாரத்தை கைப்பற்ற முஸ்லிம் மக்கள் மேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தினர்.

புகழ் பெற்ற பள்ளிவாசல் கொலைகள் உட்பட பல நூறு பேரை கொன்றதன் மூலம்இனப் பகைமை கூர்மையாக வளர்ச்சி பெற்றது. தமிழருக்கே அவமானமான நினைவுச் சின்னமாகியது. முஸ்லிம் மக்களை இனியும் தமது அதிகாரத்தின் கீழ் கொண்டு வர முடியாது என்பதைபுலிகளின்  இன அழிப்பு தொடர்ச்சியாக நிறுவிய நிலையில் தான்பழிவாங்கலாக வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை துரத்திவிடும் நிகழ்வு நிகழ்ந்தது. வடக்கில் வாழ்ந்த  முஸ்லிம் மக்களனைவரையும் சுட்டுக்கொலை செய்யுமாறு கிழக்குப்புலிகள் வலியுறுத்தினர். ஏற்கனவே கிழக்கு முஸ்லிம்களை  படுகொலை செய்தமையினால் புலிகளுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஒரு நெருக்கடியை கொடுத்திருந்தனர். தமது போராட்டம் மலிந்துவிடும் என்ற காரணத்தால் வடக்கு முஸ்லிம்களை புலிகள் கொலை செய்யவில்லை. 1990 ஆகஸ்ட் முதல் முன்வைக்கப்பட்ட இந்த வேண்டுகோள் பல்வேறு ஆய்வுகளுக்கு பின்னர் அடுத்த பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த வெளியேற்றிய நிகழ்வை கிழக்கில் இருந்து வந்த புலிகளின் தலைவர்  கரிகாலன் தலைமையிலான புலிகளேமுன்னின்று செய்தனர். அக்காலத்தில் இதை வெளிப்படையாக எந்த தமிழ் மகனும் எதிர்க்கவில்லை.  வடக்கில் இருந்த புலிகள் தாமாகவேகிழக்கில் இருந்து வந்த புலிகளே  செய்தனர் என்று கூறுமளவுக்குஅக்காலகட்ட செய்திகள் செய்திப் பத்திரிகைகளில் பதிவாகியுள்ளது.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகொழும்புத் தமிழர் பிணங்களின் மேல் தமிழீழத்தைக் உருவாக்கவும்,  கிழக்கில் அதிகாரத்தை கைப்பற்ற ஏற்பட்ட தோல்வியின் பிரதிபலிப்பாகவும் ஆயுதக்கொள்வனவுக்கு நிதி சேகரிக்கவுமே மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் தலைவர்  பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இது தெளிவாக வெளிப்பட்டது. புலிகள் முஸ்லிம் மக்கள் மேல் நடத்திய தாக்குதல்கள்மற்றும் வெளியேற்றம் என்பதுகிழக்கில் முஸ்லிம் மக்கள் மேலான அதிகாரத்தை இழந்ததனால் ஏற்பட்ட தோல்விக்கு பழிவாங்கும் நோக்கம் கொண்ட குறுந்தேசிய இனவாதத்தின் வெளிப்பாடாகும்.


கருப்பு ஒக்டோபரும் வடமாகாண  முஸ்லிம் மக்கள் சொந்த மண்ணில்
இருந்து  வெளியேற்றமும்

1983 ஆம் ஆண்டு தமிழீழத்துக்கான போர்  ஆயுத வடிவமெடுத்ததைத் தொடர்ந்து பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டது. அவர்களின் சொத்துக்கள் வாகனங்கள் என்பன சூறையாடப்பட்டன. 1990 இல் பள்ளிவாசல்களும் முஸ்லிம் கிராமங்களும் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகள் அமைப்பால் தாக்கப்பட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சுட்டும் வெட்டியும் குண்டுத் தாக்குதல்கள் மூலமும் அரக்கத் தனமாக கொல்லப்பட்டனர். இதையெல்லாவற்றையும் விட உலக வரலாற்றில் எக்காலத்திலும் இடம்பெற்றிராத ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அது தான் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றமாகும்.  75000 வடமாகாண முஸ்லிம்களின் ஓக்ரோபர் 16க்கும் 30ஆம் திகதிக்கும் இடையே வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்து சொத்துகள்பணம்நகைஉடை என்பன கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தமிழ் ஆயுதக்குழுவான விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இது சம்பந்தமான எந்த தகவலும் 1990 ஓக்ரோபர் முதல் வெளியிடப்பட்ட எந்த தமிழ் வரலாற்று நூல்களிலும் யாராலும் எழுதப்படவில்லை என்பதிலிருந்து முஸ்லிம்களின் முன்னைய வரலாறுகளை அவர்கள் எவ்வாறு இருட்டடிப்புச் செய்திருப்பார்கள் என்பதை அறியலாம்

வடக்கில் ஏற்கனவே ஐந்து இடப்பெயர்வுகளைச் சந்தித்த யாழ் முஸ்லிம்கள் ஆறாவது இடப்பெயர்வை முழு உலகமும் பார்த்துக்கொண்டிருக்க சந்தித்தனர். ஆனால் இம்முறை அவர்களுடன் ஏனைய ஐந்து வடமாநில மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் அனைத்து உடமைகளும் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். 

1990 ஐப்பசி மாதம் 16 முதல்  30 ம் திகதி வரையான காலப்பகுதியில் வடக்கில் இருந்து 85000 ககும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் அனைத்து பாரம்பரிய தலைமுறை உழைப்பையும் சொத்துக்களையும் பறித்தெடுத்த பின்புசொந்த மண்ணில் இருந்து ஈவிரக்கமின்றி புலிகளால் ஆயுதமுனையில் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் மக்கள் சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும்எந்தவிதமான அடிப்படை உரிமைகளும் இன்றி வாழ்விழந்து ஒடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தமிழ் அடிமையாக உயிர்வாழ்கின்றனர். முஸ்லிம் மக்களுக்கு இழைத்த துரோகம்தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணயத்துக்கான விடுதலைப் போராட்ட சீரழிவை மீண்டும் ஒரு முறை நிறுவியது. புலிகளின் குறுந் தேசிய இனவாதம் தமிழ் மக்களின் தேசியத்தையே மறைமுகமாக கேலி செய்து ஒடுக்கியதையே நிரூபித்தது.

சொந்த மண்ணில் இருந்து வேரோடு பிடுங்கப்பட்டுஎந்தவிதமான காரணத்தையும் முன்வைக்காது இரவோடு இரவாக ஆயுத முனையில் துரத்திய நிகழ்வுதமிழ் மக்களின் வரலாற்றிலும்உலக வரலாற்றிலும் ஒரு கறுப்புநாள்தான். இந்த நிகழ்வையிட்டு இலங்கையின் அனைத்து சமூகங்களும்ஆதரவாகவோ எதிராகவோ ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். புலிகளின் இந்த மனித விரோத நிலைப்பட்டை எதிர்க்காது மௌனம் சாதித்த அனைவரும்ஏதோ ஒரு விதத்தில் குற்றவாளிகளே.

திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு

வடபகுதியில் வாழ்ந்து வந்த குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றவேண்டுமென்பது பொறாமைகொண்ட வகுப்புவாத சிந்தனை கொண்ட பலரது கனவாகவிருந்தது. இவர்களில் பலர் ஆயுதமேந்தியதும் அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கமுயன்றனர். அதை செயல்படுத்தியதில் பாசிஸ புலிகள் மட்டும் பரிபூரண வெற்றிகண்டனர். இதற்கு சில வெளிநாட்டு சக்திகளும் துனைபோயுள்ளன.

இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இளைஞர்களும் செல்வந்தர்களும் 1990 செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கடத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னார் பகுதி முஸ்லிம்கள் மீது புலிகளுக்கு ஒரு பயமிருந்தது.  இதனால் வெளியேற்றத்தை கட்டம் கட்டமாக நிறைவேற்ற புலித்தலைமை திட்டம் தீட்டியது.

சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியேற்றம் (16.10.1990)

முஸ்லிம்களுடன் முருகல் நிலையை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் 1990 செப்டம்பர் நான்காம் திகதி சாவகச்சேரியிலிருந்த முஸ்லிம்களுடன் மோதல்களை உருவாக்கும் நோக்குடன் புலிகள் தமது ஒற்றர் படைகளை ஏவி விட்டனர். அவர்கள் முஸ்லிம்களுடன் வீணான வாக்குவாதங்களில் ஈடுபட்ட போதும் முஸ்லிம்கள்  பொறுமை காத்தனர். இருந்த போதிலும் முஸ்லிம் நபர் ஒருவர் கடத்தப்பட்டு மிரட்டி அனுப்பப்பட்டார். இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லிம்களுக்கு இராணுவத்தின் மூலமாக இழப்புகளை ஏற்படுத்த புலிகள் முயன்றுகொண்டிருந்த போது  கோட்டையிலிருந்து இராணுவம் வெளியேறியது அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடித்தது.

அதையடுத்து ஒக்ரோபர் 15ஆம் திகதி சாவகச்சேரியில் பிரபள்யாமான சுல்தான்ஸ் முதலாளி கலீல்,  அப்துல் ரஹீம் ஆகிய இரு வியாபாரிகள்  கடத்தப்பட்டனர். அவர்களிடம் ஆளுக்கு ஒரு கோடி ரூபாய் கப்பப் பணம் கேட்கப்பட்டது. வியாபாரங்கள் நான்கரை மாதங்களாக முடக்கப்பட்டிருந்த காலத்தில் அவ்வளவு பணத்துக்கு அந்தக் குடும்பங்கள் எங்கே செல்லும். இந்நிலையில் ஒக்ரோபர் 16ஆம் திகதி அவர்களின் கடைகளை உடைத்த புலிகள் அங்கிருந்து பொருட்களை ஏற்றிச் சென்றனர். பின்னர் அங்கிருந்த முஸ்லிம்களை அழைத்து அவர்களுடைய பிரதேசத்தில் வாள்கள்வயர்லஸ் கருவிகள் மீட்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் தமக்கெதிராக சதிசெய்வதாகவும் கூறி அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறி மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஒக்ரோபர் 18ஆம் திகதி எட்டு நூற்றாண்டுகள் சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்கள தமது சொத்துக்களை கைவிட்டு அகதிகளாக  வவுனியாவையடைந்தனர். ஆனால் மறுநாளே அங்கு வாழ்ந்த 165 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேறி புத்தளம் போன்ற பகுதிகளுக்குச் சென்றனர்.

மறுநாள் புலிகள் சார்பு பத்திரிகைகளில் வாள்கள் வயர்லஸ்கள் மீட்கப்பட்டதாகவும் அதனால் அங்கிருந்த முஸ்லிம்கள் பாதுகாப்பு நிமித்தம் வெளியேற்றப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.மின்சாரம்போக்குவரத்துகள் தடைப்பட்டிருந்த அந்தக்காலப்பகுதியில் வயர்லஸ் கருவிகளை தொடர்ச்சியாக பற்றரியின்றி எவ்வாறு இயக்குவது. அத்துடன் 75 வாள்களைக் கொண்டுஇயந்திரத் துப்பாக்கிகள்மோட்டார் செல்கள் மற்றும் ரொக்கட் லோன்ஞர்கள் போன்றவற்றை கொண்டிருந்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புலி இயக்க ஆறாயிரத்துக்கு மேற்பட்ட புலி இயக்க உறுப்பினர்களை எதிர்க்க யாராவது முனைவார்களாஅந்த வாள்கள் தான் பிரயோசனம் தருமாமுஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவும்  அதனை  தமிழ் மக்கள் நம்பவேண்டுமென்பதற்காகவும்   புலிகளால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதைகளாகும்.

  முஸ்லிம்களை வெளியேற்றியதற்கு காரணமாக முஸ்லிம்களிடம் வயர்லஸ் கருவிகளும் வாள்களும் இருந்ததாக புலிகள் தமது பத்திரிகையில் செய்தி வெளியிட்டிருந்தனர். புலிகளின் ஏ.கே 47க்கு முன்பு இந்த வாள்களால் முஸ்லிம்கள் என்ன செய்துவிட முடியும் என டி.பி.எஸ். ஜெயராஜ் ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதுமாத்திரமின்றி சாவகச்சேரி கடை உரிமையாளருக்கு ரேடியோவைக்கூட முறையாக இயக்கத்தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.  அங்கு வாளும் கைப்பற்றப்படவில்லைவயர்லஸ் கருவியும் இல்லை. முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தவே புலிகள் அவ்வாறு பொய்ப் பரப்புரைகளில் ஈடுபட்டனர்.

சாவகச்சேரி முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பற்றி யாழ்ப்பாண முஸ்லிம்கள் கேள்விப்பட்ட போது புலிகளிடம் அதைப்பற்றி கேள்வி கேட்டபோது உங்களை நாம் வெளியேற்ற மாட்டோம் என்று கூறியிருந்தனர். இதனாலும் யாழ்ப்பாணத் தமிழர் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றின்  மீது நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினாலும் தங்களை வெளியேற்றுவார்கள் என்ற எண்ணம்  யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை. மறுபுரத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கான திட்டங்கள் ரகசியமாக தீட்டப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் அத்தனை செல்வங்களும் எவ்வாறு பறிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் செய்திகள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு கிடைத்து விடாத வகையில் பசப்பு வார்த்தைகள் பேசப்பட்டு யாழ் முஸ்லிம்கள் வெளியேற வேண்டியதில்லை என்ற செய்தியை புலிகள் தமது முஸ்லிம் பெயர் தாங்கிய ஏஜண்டுகள் மூலமாக தெரிவித்திருந்தனர்.  ஆனால் மறுபுறம் மன்னார்முல்லைத்தீவுகிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் எவ்வாறு வெளியேற்றப்பட்டார்கள் என்பதை இனிப் பார்ப்போம்.


மன்னார் முஸ்லிம்களின் வெளியேற்றம் (21.10.1990 முதல் 28.10.1990 வரை)

1990இல் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்கள் 26 வீதமாகக் காணப்பட்டனர். 1990 ஒக்ரோபர் 21ஆம் திகதி முன்னூறுக்கும் மேற்பட்ட கனரக ஆயுதங்கள் தரித்த புலிகள் எருக்கலம்பிட்டி கிராமத்தை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் முஸ்லிம்களின் ஒவ்வொரு வீடுகளாகச் சென்று முஸ்லிம்களின் காசுநகை மற்றும் பெறுமதியான பொருட்களை பகல் கொள்ளையடித்துச் சென்றனர். இவ்வாறு எண்ணூற்றி ஐம்பது வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டது.

1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி மறிச்சுக்கட்டி கிராமத்தில் சில முஸ்லிம்கள் கடத்தப்பட்டு அவர்கள் அரச உளவாளிகள்  என்று முத்திரை குத்தப்பட்டனர். மீண்டும் வந்த புலிகள் உங்கள் கிராமத்திலிருந்து இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கப்படுகின்றனஎனவே  நீங்கள் உடனடியாக இந்த ஊரை விட்டு வெளியேறவேண்டுமென கூறப்பட்டதுடன் அம்மக்களின் பணம்நகைவாகனங்கள்அசையும் சொத்துகள் அனைத்தும் பறிக்கப்பட்டதுடன் அம்மக்களை புத்தளத்துக்கு வில்பத்து காட்டினூடாக நாற்பது மைல்கள் நடந்து செல்லுமாறு கூறி வெளியேற்றினர்.

இதையடுத்து ஒக்ரோபர் 24ஆம் திகதி முசலி உதவி அரச அதிபர் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.

ஒக்ரோபர் 24ஆம் திகதி மன்னார் தீவுப்பகுதியில் வாழ்;ந்த முஸ்லிம்களை 28ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.  முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதியிட்டுக் கொண்டிருக்கும் போது அவர்களை புலிகளின் காரியாலயத்துக்கு வருமாறு கூறப்பட்டு அவர்களின் பொதிகள் பறிக்கப்பட்டன. அத்துடன் பணம் நகை என்பனவும் பறிக்கப்பட்டன.

ஒக்ரோபர் 26ஆம் திகதி மீண்டும் எருக்கலம்பிட்டி பிரதேசத்தினுள் புலிகள் புகுந்தனர்.  அப்போது முஸ்லிம்கள் தமது பொருட்களை பொதி செய்து கொண்டுசெல்வதற்காக வைத்திருந்தனர். அவ்வாறு வைக்கப்பட்டிருந்த பொருட்களை டிராக்டர்களிலும் ஏனைய வாகனங்களிலும் ஏற்றிச் சென்றனர். 


ஒக்ரோபர் 28ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ ஆயுததாரிகள் எருக்கலம்பிட்டி மற்றும் ஏனைய முஸ்லிம் பிரதேசங்களைச்  சுற்றிவளைத்தனர். அதன் பிறகு எருக்கலம்பிட்டிதாராபுரம்புதுக்குடியிருப்புஉப்புக்குளம்கோந்தைப்பிட்டி போன்ற பிரதேசங்களிலிருந்து கடற்கரைக்கு அண்மையாக வௌ;வேறு இடங்களில் ஒன்று கூடுமாறு கூறப்பட்டனர். அங்கு வள்ளங்கள் வரும்வரை சில முஸ்லிம் குடும்பங்கள் குழந்தைகளுடன்  24 மணித்தியாளத்துக்கு மேலாக உணவு தண்ணீரின்றி காத்துக்கிடக்கவிடப்பட்டனர்.

மன்னார் தீவுப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் வள்ளங்கள் மூலமாக கற்பிட்டிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர். முழு ஊர்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் வெளியேற மூன்று நாட்கள் சென்றன. உணவு தண்ணீரின்றி மலசலம் கழிக்கவும் இடமின்றி ஆண்கள் பெண்கள்சிறுவர்சிறுமியர்பாலகர்கள் மற்றும் வயோதிபாகள் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காது. இந்நிலையில் மன்னாரிலிருந்து புத்தளம் கற்பிட்டிக்கான  30கிலோ மீற்றர் கடல்பிரயாணத்தில் சில வயோதிபரும் குழந்தைகளும் மரணித்தனர். கொட்டும் மழiயில் வள்ளமொன்றில்  பிரயாணித்த பெண்ணொருவர் கையிலிருந்த கைக்குழந்தை அப்பெண்ணின் கைமறத்துப் போனதால் கைநழுவி கடலுக்குள் விழுந்து இறந்து போனது. அகதிகள் வள்ளங்களில் வந்திறங்கியதை கண்ட கற்பிட்டி முஸ்லிம்கள் உடனடியாக தமது வள்ளங்களை மன்னாருக்கு கொண்டுபோய் அங்கிருந்து வெளியேற்றப்பட் முஸ்லிம்களை ஏற்றி வந்தனர். 

மன்னார் தீவுப்பகுதி மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கையில் மன்னாரின் விடத்தல்தீவுபெரியமடுசன்னார்முருங்கள்வட்டக்கந்தல்பரப்பக்கடந்தான்  போன்ற பிரதேசங்களில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் 1990 ஒக்ரோபர் 25 ஆம் திகதி தமது வாகனங்கள்சைக்கிள்கள்பெற்றோல்டீசல்இலத்திரணியல் பொருட்கள் மற்றும் பெருமதியான பொருட்களை பள்ளிவாசல்களுக்கு முன்பாகவும் பாடசாலைக் கட்டிடங்களிலும் அமைக்கப்பட்டிருந்த எல்.ரி.ரி.ஈ. அமைப்பின் திடீர் ஆலவலகங்களில் ஒப்படைக்குமாறு பணிக்கப்பட்டனர்.

26.10.1990 அன்று முஸ்லிம்கள் ஒவ்வொரு ஊர்களிலிருந்த பாடசாலை மைதானங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு வெளியேற் வேண்டுமென்ற கட்டளைகள் இடப்பட்டன. ஒரு குடும்பம் 2000 ரூபா பணத்தையும்ஒரு பவுண் நகையையும்,  ஐந்து உடுப்பு பேக்குகளையும்  மட்டும் எடுத்துச் செல்ல முடியும் என்று கூறப்பட்டதுடன் உடனடியாக வெளியேறுமாறும் கூறப்பட்டது.

முஸ்லிம்கள் வெளியேறிச் செல்லும் போது மடுபண்டிவிரிச்சான் மற்றும் வவுனிய மன்னார் எல்லைக் கிராமம் போன்ற இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு முஸ்லிம்கள் பரிசோதிக்கப்பட்டு  மேலதிக பேக்குகள் நகைகள் பணம் என்பன பறிக்கப்பட்டன. வவுனியா எல்லையில் வைத்து முஸ்லிம்களின் சுடுநீர் பிளாஸ்க் போத்தல்கள் கூட பறிக்கப்பட்டதுடன அதற்கான பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. பொருட்கள்பணம்நகை என்பவற்றை பறித்தெடுத்த புலியுறுப்பினர்கள் அவற்றை மோசடி செய்துவிடக்கூடாது என்பதற்காகவே பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால் முஸ்லிம்கள் திரும்பிவரும் போது அவர்களின் பொருட்கள் திருப்பிக் கொடுப்பதற்காகவே இவ்வாறு பற்றுச் சீட்டு வழங்குவதாக புலியுறுப்பினர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும் கூறப்பட்டது.  மன்னாரிலிருந்து இப்பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் வவுனியா வரை நடந்து செல்லுமாறே கூறப்பட்டிருந்தனர். 2008ஆம் ஆண்டு மன்னாரிலிருந்து பின்வாங்கிய புலியுறுப்பினர்கள் வெள்ளாமுள்ளிவாய்க்கால் வரை நடந்து சென்ற தூரத்தில் இது பாதித் தூரமாகினும பணம் நகை வீடுகள் சொத்துக்கள்  என்பன பறிக்கப்பட்ட நிலையில் சிறு குழந்தைகளையும் வயோதிபர்களைத் தோளில் சுமந்து கொண்டு சென்ற முஸ்லிம்கள் அனுபவித்த துன்பங்களை எழுத்தில் வடிக்க முடியாது. 

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் வெளியேற்றம் (23.10.1990 முதல் 29.10.1990 வரை)

1990 ஒக்ரோபர் 22ஆம் திகதி தண்ணீரூற்று மற்றும் நீராவிப்பிட்டியைச் சேர்ந்த சிலர் உளவாளிகள் எனக்கூறப்பட்டு புலியுறுப்பினர்களால் கடத்தப்பட்டனர். பொதுவாக தண்ணீரூற்று முஸ்லிம்கள் வெளியூர்களுடன் தொடர்புகள் குறைவானவர்கள் என்பதனால் புலிகளின் குற்றச்சாட்டில் எந்த உண்மையுமில்லை என்பதும் தமது வெளியேற்றத் திட்;டத்தை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பதற்காக சோடிக்கப்பட்ட விடயங்களாகும். அதனையடுத்து அதேநாள் முஸ்லிம்கள் ஒருவாரத்தினுள் வெளியேறவேண்டுமென்ற கட்டளையிடப்பட்டது. இந்த முஸ்லிம்களிடமிருந்தும் அனைத்து சொத்துக்கள் நகை பணம் என்பன பறிக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்களின் வெளியேற்றம் (23.10.1990)

1990 ஒக்ரோபர் 23ஆம் திகதி கிளிநொச்சிநாச்சிக்குடா பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஐந்து நாட்களுக்குள் வெளியேற வேண்டுமென கூறப்பட்டனர். அவர்களிடமும் பணம்நகைவாகனங்கள்வியாபாரப் பொருட்கள்டீசல்பெற்றொல் என்பன பறிக்கப்பட்டு டிராக்டர்களிலும் லாறிகளிலும் ஏற்றி ஓமந்தையில் கொண்டுவந்து இறக்கப்பட்டு அதற்கப்பால் நடந்து செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம்

1990 ஒக்டோபர் 30ஆம் நாள் கனரக ஆயுதங்கள் தரித்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த சோனகதெவைச்  சுற்றி வளைத்தனர். நாவாந்துறை பொம்மைவெளிஓட்டுமடம்-மானிப்பாய்வீதிவைத்தீஸ்வரா சந்திஅங்கிருந்து சீனிவாசன்வீதிச் சந்திசீனிவாசன் வீதிகொட்டடிச்சந்தியூடாக நாவாந்துறை வரைக்கும் ஆயுதம்தரித்த புலிகள் காலை 7.30 மணியளவில் சுற்றிவளைத்தனர். சுன்னாகம்மல்லாகம்நவாலிஅராலிஆனைக்கோட்டை போன்ற வெளியூர்களுக்கு சென்றிருந்த முஸ்லிம்கள் 10 மணியளவில் உடனடியாக சோனகதெருவுக்கு திரும்புமாறு கட்டளையிடப்பட்டனர். அறுத்த ஆடுகளையும் மாடுகளையும் மக்களுக்கு பங்கிட்டு விட்டு வியாபாரிகள் திரும்பினர். அதேவேளை சோனகதெருவில்   விபரீதத்தை அறியாத முஸ்லிம்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். காலை 10 மணியளவில் ஒலிபெருக்கிகளுடன் கூடிய வாகனங்களிலிருந்த ஆயுதம் தரித்த புலியுறுப்பினர்கள்  சோனகதெருவின் பெரிய வீதிகள்சிறிய வீதிகள் ஒழுங்கைகள் என்பவற்றுள் நுழைந்து உடனடியாக வீட்டுக்கொரு  முஸ்லிம் நபர் ஜின்னா மைதானத்துக்கு வரவேண்டுமென்ற கட்டளையை இட்டுக்கொண்டு சென்றனர்.

மக்கள் அவசரமாக மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே ஜின்னா மைதானத்தில் கூடிய ஆண்களையும் பெண்களையும் சிறுவர் சிறுமிகள் கைக்குழந்தைகள் என்போரையும் ஏ.கே 47, ரி56, எல்.எம்.ஜிகிரனைட் போன்ற ஆயுதங்களுடன் நின்ற புலிகள் சுற்றிவளைத்து நின்றனர். அப்போது ஆஞ்சநேயர் என்ற இளம்பருதி ஒலிபெருக்கி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதேறி நின்று கொண்டு ஒரு பேப்பரை பிரித்து வாசிக்கத் தொடங்கினான். கிழக்கிலே நாளாந்தம் 30 தமிழ்ப் பெண்கள் முஸ்லிம்களால் வல்லுறவுக்குட்படுத்தப்படுகிறார்கள், 20 தொடக்கம் முப்பது தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதே அளவிளவானவர்கள் காயமடைந்து கொண்டுள்ளனர். இதனால் வடக்கிலே தமிழர்கள் கொதிப்படைந்துள்ளனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக அவர்கள் காத்திருக்கின்றனர். எனவே அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள்ளே யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும். தமிழீழத்தில் உழைத்தவை எல்லாம் தமிழீழத்துக்கே சொந்தம். உங்கள் சொத்துக்களை அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள் என்று கூறப்பட்டது. அப்படியாயின் என்ன பொருட்களை கொண்டு செல்லலாம் எனக் கேட்ட போது உங்கள்பணம்நகைஉடுப்பு போன்றவற்றை கொண்டு செல்லலாம் என்று கூறப்பட்டது.

ஏன் எங்களை வெளியேற்றுகிறீர்கள் என்று கேட்டபோது கிழக்கு மாகாண நிகழ்வுகளாக கூறப்பட்ட பொய்கள் மீண்டும் கூறப்பட்டது. அப்போது ஒருவர் மழை எங்கோ பொழிய நீங்கள் எங்கோ குடை பிடிக்கிறீர்கள் என்று கூறினார். இன்னொருவர் என் நெஞ்சின் மீது சுட்டு எங்களை இங்கேயே சாகடி என்று கூறி தனது சேட்டை கழற்றினார். ஆனால் அவர்கள் மனமிறங்கவில்லை. இங்கிருந்து உடனடியாக செல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் எனக் கூறிக்கொண்டு வானத்தை நோக்கி இயந்திரத் துப்பாக்கியால் சுடத்தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து மைதானத்தில் சுற்றிலும் நின்ற சில புல உறுப்பினர்கள் வானத்தை நோக்கி சில வேட்டுக்களைத் தீர்த்தனர். மக்கள் பயந்தவர்களாக அங்கிருந்த வெளியேறி தமது வீடுகளுக்குச் சென்றனர். 

இந்தக் கட்டளையை மைதானத்திலிருந்த புலிகளின்பொறுப்பாளர் இளம்பருதிசொல்லிக் கொண்டிருக்க கிழக்கு மாகாண பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான குழுவினர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். பெண்கள்குடும்பஸ்தர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கி முனையில் அவர்களின் பணம் நகை என்பன பறிக்கப்பட்டன. சில ஆண் புலியுறுப்பினர்கள் பறிக்கப்பட்ட பணம் நகைகளை தமது பொக்கட்டுகளுக்குள் திணித்தனர். பெண் புலிகள் தமது மார்புச் கச்சைக்குள் நகைகளையும் பணங்களையும் பதுக்கிக் கொண்டனர். ஏற்கனவே புலிகள் சேகரித்து வைத்திருந்த தகவல்களுக்கு ஏற்ப நகைவியாபாரிகள் மற்றும் சில செல்வந்தர்களின் வீடுகளுக்குள் புகுந்து குறிப்பிட்ட நபர்களின் பெயர்களைச் சொல்லி அந்த நபர்களை அடையாளப்படுத்தி அவர்களை குடும்பத்தின் முன்னிலையில் தாக்கி அவர்களின் வியாபார நகைகள்வீட்டுப்பாவனை நகைகள்பணம் என்பன பறிக்கப்பட்டன.    தொடர்ந்து வீடுகளிலிருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.

வீதிகளுக்கு வந்த மக்கள் எல்லோரையும் ஐந்து சந்தியை சோக்கிச் செல்லுமாறு முழத்துக்கு முழம் நின்ற புலியுறுப்பினர்கள் கூறினர். ஆனால் புலிகளின் சோதனைச் சாவடிகள் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்தன. ஜின்னா விதியில் அப்துல் ரஹீம் (லண்டன்) அவர்களின் வீட்டின் முன்னால் ஆண் பெண்களின் உடல் பரிசோதிக்கப்பட்டு பணம் நகைகளெல்லாம் சூறையாடப்பட்டு அந்த வீட்டினுள் சேகரிக்ப்பட்டன.  ஆஸாத் வீதியில் அமீர் ரெக்ஸ் உரிமையாளர் வீட்டின் முன்னால் அவ்வாறு செய்யப்பட்டு ஆண்களிடம் பறிக்கப்பட்ட பொருட்கள் அந்த வீட்டினுள் சேர்க்கப்பட்டன. முஹ்மினுடைய வீட்டில்வைத்து பெண்கள் உடல்பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் உடமைகள் பறிக்கப்பட்டன. ஹாதி அபுபக்கர் வீதிகொட்டடி வீதி நாவாந்துறை ஓட்டுமடம் போன்ற வீதிகளூடாக வெளியேற முனைந்தவர்கள் எல்லோரும் ஐந்து சந்திக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.

ஐந்து சந்தியிலிருந்த ஒமேகா மோட்டர்ஸ் கடையும் எஸ்.எம். மீரான்சாஹிப் ரான்ஸ்போர்ட் கடையும் திறந்து வைக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் வயோதிபர்கள் சிறுவர் சிறுமியர் எல்லோரும் வரிசையாக நிற்பாட்டப்பட்டு முழு உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மாவடிவீதியில் ஒரு வரிசையும்நாவலர் வீதியில் ஒரு வரிசையும்மானிப்பாய் ஐந்து சந்தி வீதியில் ஒரு வரிசையுமாக மக்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் உடல்பரிசோதனை செய்து எதையும் கொண்டு செல்லாதவாறு பறித்து எடுத்தனர். பிற்பகல் இரண்ட மணியளவில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தைப் பார்த்து வானமே அழுதது போல் அடைமழை கொட்டிக் கொண்டிருந்தது. குடைகள் கூட பறித்தெடுக்கப்பட்டிருந்தது.
ஒரு டிரவுசர் போட்டிருந்தவருக்கு இன்னொரு டிரவுஸரும் ஒரு சேர்டும் மட்டும்கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிலர் இரண்டு மூன்று ஜோடிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஏனைய உடுப்புகள் பொருட்கள் எல்லாம் பறிக்கப்பட்டன. ஆஸாத் வீதி ஜின்னா வீதி வழியாக முதல் பரிசோதனை முடிந்து வந்தவர்களிம் ஐந்து சந்தியில் வைத்து சுடுதண்ணீர் பிளாஸ்குகளும் பறிக்கப்பட்டன. சிறு பிள்ளைகளுக்கு பால்மா கூட கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. காணி உறுதிகள்ஆவணங்கள்பிறப்பத்தாட்சிசப் பத்திரங்கள்  போன்றன கூட பறித்தெடுக்கப்பட்டன.   

மேலும் ஓவ்வொரு குடும்பமும் தலா 200 ரூபாய்களை மட்டும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும்  சோதனைச் சாவடிகளை நிறுவி அனைவரையும் உடல் பரிசோதனையிட்டு 200 ரூபாய்க்கு மேற்பட்ட பணம்நகைஉடுப்புஉடமைகள் என்பவற்றை அபகரித்து தமிழ் இனத்துக்கே வெட்கம் தேடித்தந்த ஒரு செயலைச் செய்தனர். கைப்பிள்ளைகளின் விரல்களில் அணிவிக்கப்பட்டிருந்த மோதிரங்கள் கூட இழுத்து எடுக்கப்பட்டனகத்தரிக்கோல்களால் வெட்டியெடுக்கப்பட்டன. இதனால் சிறுவர் சிலர் கைவிரல்களில் காயங்களோடு வவுனியாவையடைந்தனர்.  சில சிறுமிகளின் காது அணிகலன்களும்  இழுத்து அறுக்கப்பட்டன. இதனால் இரண்டு  சிறுமியரின் காதுகள் கிழிந்து இரத்தம் ஓடியவர்களாக காணப்பட்டனர்.

இந்நிலையில் சிலர் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி அங்கிருந்து கேரதீவு நோக்கிச் சென்றனர். இன்னும் சிலர் புலிகளால் ஏற்கனவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த லொறிகளில் ஏற்றி வவுனியா ஓமந்தைக்கு கொண்டு கொண்டுவந்து விட்டனர். ஆயிரம் பேருக்கு மேற்பட்டவர்களுக்கு வாகனம் எதுவும் கிடைக்காததால் யாழ் மனோகரா தியேட்டரில் தங்கவைக்கப்பட்டு இரவிரவாக அனுப்பப்பட்டனர். மேலும் சிலர் 31ஆம் திகதி காலையில் அங்கிருந்து ஏற்றப்பட்டனர்.

அந்தோ பரிதாபம். 6000 வருடங்களுக்கு மேல் நாவர்களாக வாழ்ந்த யாழ்ப்பாணத்தின் சுதேசிகளானவர்களும்  1400 வருடங்களாக முஸ்லிம்களாகி வாழ்ந்தவர்களும் இரண்டு மணித்தியாலத்துக்குள் அகதிகளாக்கப்பட்டு வெறும் 700 வருட வரலாற்றைக் கொண்ட தமிழர்களின் வீரமறவர்களால்  யாழ்ப்பாணத்தை விட்டு வேரறுக்கப்பட்டனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிடமிருந்து 2000 கிலோ தங்கம், 200 கோடிக்கு மேற்பட்ட பணம் என்பன லொறிகளில் மூட்டை மூட்டையாக ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டன. இதன் பின்னர் ஒக்ரோபர் 31 ஆம் திகதி  முஸ்லிம்களின் வீடுகள் எல்லாம் சோதனையிடப்பட்டு 2540 தொலைக்காட்சிப் பெட்டிகள், 3502 வானொலிப் பெட்டிகள், 1423 குளிர்சாதனப் பெட்டிகள், 7520 சைக்கிள்கள், 201 மோட்டார் சைக்கிள்கள், 20 கார்கள், 11 வேன்கள், 1 பஸ், 14 லொறிகள், 2000 காஸ் சிலிண்டர்கள், 2000 காஸ் அடுப்புகள், 20000இற்கும் மேற்பட்ட சமயலறைச் சாதனங்கள், 2500க்குமேற்பட்ட மேசைகள், 18000 கதிரைகள் மேசைகள் என்பனவும் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட உடைகளும் கொள்ளையிடப்பட்டன.   

1990 நவம்பர் டிசம்பர் காலப்பகுதியில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழ்ந்த பல்வேறு முகாம்களில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வடமாகாண முஸ்லிம்களின் அப்போதைய சனத்தொகை பின்வருமாறு. மன்னார் மாவட்டம்- 45000 பேர் யாழ்ப்பாணம்- 18000 பேர் முல்லைத்தீவு-7000 பேர்  வவுனியா- 4000 பேர் கிளிநொச்சி – 800 பேர். இன்று 2016இல்  இவர்களின் சனத்தொகை 120000 க்கும் அதிகமாகும்.

முஸ்லிம்களின் வெளியேற்றத்தை புலிகள் அத்துடன் நிறுத்தவில்லை. அனைத்து சொத்துக்களையும் பறித்து துரத்தப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் தொழிலின்றி இருந்தனர். வசதியாக வாழ்ந்த பலர் கூலித் தொழிலுக்கு சென்றனர். சிலருக்கு கையேந்தும் நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் வவுனியாவில் தாண்டிக்குளத்தின் ஒரு பகுதி இராணுவக்கட்டுப்பாட்டிலும் மறுபகுதி புலிகளின் கட்டுப்பாட்டிலுமிருந்தது. இவையிரண்டுக்குமிடைப்பட்ட இடத்தை தமிழ்மக்கள் கால்நடையாகவே கடக்க வேண்டியிருந்தது. அவர்களில் வயோதிபர்களையும் அவர்களின் பொருட்களையும் சைக்கிளில்  ஏற்றி மறுபக்கத்துக்கு கொண்டு சென்று விட்டுவரும் தொழிலை இடம்பெயர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செய்தனர். ஒரு வழிப்பயணத்துக்கு 20 ரூபாய் அவர்களுக்கு கிடைத்தது. மாதமொன்றுக்கு கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொண்டுவந்து புத்தளத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினரிடம் செலவுக்கு ஒப்படைத்து விட்டு இரண்டு நாட்களில் மீண்டும் வந்து அத்தொழிலை செய்வர். இவ்வாறு ஒருமாத காலம் பிழைப்பு நடாத்திய யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த 7  பேரும் மன்னாரைச் சேர்ந்த 2 பேரும் 1991 மே 23ம் நாள் புலிகளால் தாண்டிக்குளத்தில் வைத்து கடத்திச்செல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு மரங்களில் கண்கள் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்ததாக அப்பகுதியிலிருந்து வந்த தமிழர்கள் அப்போது தெரிவித்திருந்தனர். இவர்களைவரும் திருமணம் முடித்திருந்த குடும்பஸ்தர்கள் என்பதுடன் எல்லோருமே இரண்டுக்குமேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்.

இந்த தகவல்களையெல்லாம் இங்கு தரக்காரணம் இவை கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற உண்மையான  சம்பவங்களாகும். இனிவரும் சமுதாயம் தமது முன்னோர் செய்த அநீதிகளை அறிந்து அவ்வாறு தொடர்ந்தும் இடம்பெறாமல் பாதுகாப்பதிலேயே சமாதானம் சமத்துவம் ஐக்கியமான சந்தோஷமான எதிர்கால வாழ்க்கை இரு இனத்தவர்களுக்குமிருக்கிறது. மாறாக காலத்துக்கு காலம் தமது கொள்கைகளை மாற்றி கட்சி தாவிக்கொண்டு பொய்களை அவிழ்த்து விடுவோரின் பேச்சுக்களை நம்பி தற்காலிகத்தை நம்பி நிரந்தரமாக தேவைப்படும் நிம்மதியான வாழ்வை அழித்துவிடக்கூடாது


Saturday, October 29, 2016  www.jaffnamuslim.com   38

Courtesy jaffnamuslim

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.