இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வரை தமிழ் வெள்ளாள
சிங்கள கொவிகம மேட்டுக் குடியினர் அரசியல் இணக்கத்தோடு தான் இருந்தார்கள். 1915ல் முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சுமார்
2௦ சிங்கள தலைவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரை சென்று
அவர்களுக்காக வாதாடி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் தமிழினத் தலைவர் பொன். ராமநாதன்
அவர்கள்.
இலங்கை
சுதந்திரம் அடைந்த பின்பு பார்லிமெண்டில் 50/50 பங்கு கேட்டது முதலே
இனப்பிரச்சனை ஆரம்பித்து விட்டது. சிங்கள் தேசியவாதமானது சிங்கள-பவுத்த
தேசியவாதமாக பரிணாமம் அடைந்தது.
அதுவரை
அரசு நிர்வாக மொழியாக இருந்த ஆங்கிலத்துக்கு பதிலாக 1956
ஜன
2 ல்
கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமும், அதைத் தொடர்ந்து 1956,
1958 களில்
சிங்களப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகளும் அரசின்
நடவடிக்கைகளும் தமிழர்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, மருத்துவம் பொறியியல்
மேற்படிப்புகளுக்கு 1971 ல் கொண்டுவரப்பட்ட இனவாரி தரப்படுத்துதல் முறையினால்
தமிழர்கள், குறிப்பாக
யாழ்ப்பாண மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இதைத்
தொடர்ந்து, தமிழர்
விடுதலை கூட்டணியினரின் ஜனநாயக போராட்டங்கள் மட்டுமல்லாமல், மாணவர் அமைப்புகளும்
இளைஞர் அமைப்புகளும் உருவாகி இவை படிப்படியாக ஆயுத போராட்டத்தை முன்னெடுத்தன.
ஆரம்பத்தில்
பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் யாசர் அராபத் உதவியுடன் லெபனானில் ஆயுதப் பயிற்சி
எடுத்த இளைஞர்கள் 1981 முதல் போலீஸ் ராணுவ நிலைகளை தாக்க ஆரம்பித்தார்கள்.
சிங்கள இனவாதிகளால் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூல்நிலையம் |
1981 மே 31 ம் தேதி யாழ்ப்பாணம்
நாச்சிமார் கோவிலடியில் தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்
பாதுகாப்பு பணியில் இருந்த இரு போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அறிவுக்
களஞ்சியமாக விளங்கிய யாழ் நூலகத்தை எரித்தாது சிங்கள பேரினவாத கும்பல்.
1983 ஜூலை 23 ம் தேதி யாழ்ப்பாணம்
திருநெல்வேலி பலாலி சாலையில் ராணுவ வாகனம் புலிகளால் தாக்கப்பட்டு 13 ராணுவத்தினர்
கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இறந்த வீரர்களின் உடலை வைத்து திட்டமிட்டு
தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனக்கலவரத்தில் சுமார் 3000
தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள். கொழும்பில் பாதிக்கப்பட்ட அகதி முகாம்களில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கப்பல் அனுப்பி மீட்டு அவர்களை வடக்கு காங்கேசன் துறைமுகத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்த்தார் இந்திரா காந்தி அம்மையார். ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளாக தமிழகம் வரத் தொடங்கினார்கள்.
தமிழகத்தில்
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக பெரும் போராட்டங்கள் நடந்தது.
ஜூலை
கலவரத்திற்கு பிறகு வடக்கில் மட்டும் நடந்த ஆயுதப் போராட்டம் கிழக்கிலும் பரவியது.
இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் இலங்கை தமிழ் குழுக்களுக்கு
ஆயுதப்பயிற்சி அளித்ததோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தார்.
பிரபாகரன் உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் தமிழகத்தில் தான் அடைக்கலமாக இருந்தனர்.
சீறி. சபாரத்தினம், பத்மநாபா, பிரபாகரன், பாலகுமாரன் |
தமிழ்நாடு திண்டுக்கல் சிறுமலை எஸ்டேட் பயிற்சி பாசறை |
இந்திரா
காந்தி அம்மையார் மறைவுக்கு பிறகு ராஜீவ் காந்தி அவர்களும் இலங்கை தமிழர்களுக்கும்
ஆயுதக் குழுக்களுக்கும் உதவிகள் செய்து வந்தார். அவர்களுக்கு அரசியல் அதிகாரங்கள்
கிடைக்க 1985 ல் திம்பு பேச்சுவார்த்தை போன்று பல முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டது.
திம்பு பேச்சுவார்த்தை 1985 |
ஆரம்பத்தில்
ஒற்றுமையாக செயல்பட்ட விடுதலைப்புலிகள் டெலோ புளொட் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் உள்ளிட்ட
இந்த ஆயுதக்குழுக்கள் ஈழத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்டு ஒருவரைகொருவர் சுட்டுச்
செத்தது தனிக்கதை. இதில் 1986க்கு பின்பு புலிகளின் கைதான் ஓங்கியது..
1986 சென்னையில் பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தபோது தங்கபாலு |
1987ல் ஜெயவர்தனே அரசு புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த
யாழ்ப்பாண பகுதிக்கு பொருளாதார தடை விதித்தது.
Tamil Times april 1987 |
Tamil Times april 1987 |
அமெரிக்க ஆயுதங்களுடன் இங்கிலாந்து
இஸ்ரேல் கூலிப்படையினர் உதவியுடன் கடுமையான விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்
நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்த
நிலையில் 1987 ஏப்ரல் 17 அன்று அனுராதபுரத்தில்
இருந்து திரிகோணமலை திரும்பிக் கொண்டிருந்த போது கித்துலுத்துவ’ என்னுமிடத்தில் வைத்து
பஸ் வண்டிகள் மறிக்கப்பட்டு பொதுமக்கள் மீது புலேந்திரன் தலைமையில் புலிகள்
நடத்திய தாக்குதலில் 127 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து 1987
ஏப்
21 ம்
தேதி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலைய குண்டுவெடிப்பில் 150 க்கும் மேற்பட்டவர்கள்
பலியானார்கள்.
இதனை
தொடர்ந்து வடமராச்சியில் இருந்த பிரபாகரனை குறிவைத்து 1987
மே
மாதம் ஆபரேஷன் லிபரேஷன் என்ற ராணுவ நடவடிக்கையை இலங்கை ராணுவம் ஆரம்பித்தது.
மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டார்கள். கோவில்களில் தஞ்சமடைந்தவர்களும்
தப்பவில்லை. புலிகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. வடமராச்சியில் இருந்த பிரபாகரன்
சுற்றி வளைகப்பட்டார். ஏற்கெனவே பொருளாதார தடையால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள்
உணவு கூட கிடைக்காமல் திண்டாடினர்.
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி செய்ய தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடந்தது.இந்திய ராணுவத்தை அனுப்பி இலங்கை தமிழ் மக்களைகாப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
பிரதமர் ராஜீவ் காந்தியின் வேண்டுகோளின் படி, தமிழ்நாடு மட்டுமல்ல, மகாராஷ்டிரா பஞ்சாப் உத்தரப்பிரதேசம் கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகள் இலங்கை தமிழ் மக்களின் நிவாரணத்துக்காக நிதி உதவி அளித்தார்கள்.
இதை தொடர்ந்து ஈழ
மக்கள் மீது பரிவு கொண்ட ராஜீவ் காந்தி அவர்கள் 1987 ஜூன் 3ம் தேதி படகுகளில்
உணவுப் பொருட்களை அனுப்பி போது அதை இலங்கை ராணுவம் தடுத்து திருப்பி அனுப்பியது.
அதை தொடர்ந்து அடுத்த நாள் ஜூன்4 தேதி போர் விமானங்களின்
துணையுடன் இலங்கை வானவெளிக்குள் நுழைந்து விமானங்கள் மூலம் பாராசூட்டில் உணவுப்
பொருட்களும் மருந்துக்களும் யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கினார்.
ராஜீவ்
காந்தியின் அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து புலிகளுக்கு எதிராக ராணுவத்தின்
நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. ஆபரேஷன் லிபரேஷன் தாக்குதலில் இருந்து
பிரபாகரனை காப்பாற்றினார் ராஜீவ் காந்தி.
அடுத்து, இலங்கையில் உள்ள
அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்திய-இலங்கை அரசு உடன்பாடு
ஏற்பட்டு, அரசியல்
சட்ட திருத்தம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு மாகாண சபைகள் உள்ளிட்ட அரசியல்
அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. 48 மணி நேர அவகாசத்தில்
இயக்கங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டு இதை கண்காணிக்க
இந்திய அமைதிப்படையும் அனுப்பப்பட்டது.
யாழ்ப்பாணத்தில்
உற்சாகமாக வரவேற்கப்பட்ட அமைதிப்படை, கண்ணிவெடி அகற்றும்
பணியில் கூட பல வீரர்களை இழந்தது, கடைசியில் வழக்கம் போல
புலிகள் சொதப்பியதால், இந்திய
அமைதிப்படைக்கும் புலிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.
1989 ஜனவரியில் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற பிரேமதாசா அவர்களுடன் புலிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. இலங்கை அரசிடம் ஆயுத உதவி பெற்று புலிகள் இந்திய ராணுவத்தை தாக்கினார்கள்.
காயம்பட்ட புலிகளுக்கு இதே தமிழகத்தில் மருத்துவ சிகிழ்ச்சை அளிக்கப்பட்டு வந்தது.. உதவி செய்யப்போன இடத்தில இந்தியா 1115 வீரர்களை பறிகொடுத்து அவமானப்பட்டு நின்றது. சுமார் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களும் கொல்லப்பட்டனர்.
இடையில்
இந்தியாவில் டிச 89ல்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வி.பி சிங் அவர்கள் பிரதமரானார். பிரபாகரனின் ஏற்பாட்டில் விடுதலைப்புலிகளின் பிரதநிதிகள் பாலசிங்கம் யோகி உள்ளிட்டவர்கள் அன்றைய தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்தனர்.
கலைஞரின் திமுக அங்கம் வகித்திருந்த வி.பி சிங் அவர்களின் தேசிய முன்னணி அரசு காலத்தில் 1990ம் ஆண்டு மார்ச்
வாக்கில் அமைதிப்படை முழுமையாக திரும்பியது.
அதைத் தொடர்ந்து.. 1990 ஜூன் 19ம் தேதி சென்னையில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபா உள்ளிட்ட சுமார் 14 பேரை படுகொலை செய்தார்கள் புலிகள்.. இதனை காரணமாக வைத்து அன்றைய சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசு திமுக ஆட்சியை கலைத்தது.
அதுமட்டுமல்ல வடமராச்சியில்
இலங்கை ராணுவத்தினரிடம் இருந்து உயிரை காப்பாற்றிய ராஜீவ் காந்தியையும், மணலாற்றில் இந்திய
அமைதிப் படையிடம் இருந்து உயிரை காப்பாற்றிய பிரேமா தாசவையும் தற்கொலைப்படை
தாக்குதல் நடத்தி கொன்றார் பிரபாகரன்.
இலங்கையில்
இருந்து ஒற்றைக்கண் சிவராசன் தலைமையில் வந்த முருகன் சாந்தன் தனு சுபா உள்ளிட்ட
புலிக்கும்பல் 1991 மே 21ம் நாள்
திருப்பெரும்பூரில் வைத்து ராஜீவ் காந்தி அவர்களை தற்கொலை குண்டுதாரி மூலம் கொலை
செய்தது. இதில் வெடிக்குண்டுதாரியாக செயல்பட்ட தனு என்ற தேன்மொழி ராஜரத்தினத்தின்
தந்தையான ராஜரத்தினம்
The history of Thamiraparani இலங்கை தமிழர் வரலாற்றை
கூறும் நூலை எழுதியவர். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இந்தியாவின் ஆதரவை திரட்டுவதற்காக
தமிழர் கூட்டணியால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இறுதியில்
நோய்வாய்ப்பட்டு சென்னை GH மருத்துவமனையில்
( தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனை ) 1975 ஆகஸ்ட் 19ல் மரணமடைந்தார்.
அவரின்
மகள் தனுவை தற்கொலை குண்டுதாரி யாக்கி ராஜீவ் காந்தி அவர்களை படுகொலை செய்ததன்
மூலம் தமிழக மக்களின் ஆதரவையும் இந்தியாவின் ஆதரவையும் முற்றாக இழந்து போனார்கள்
விடுதலைப் புலிகள்.
1. INDIA AIRLIFTS AID TO TAMIL REBELS
2. Operation Liberation
3. MASSACRES IN THE POLONNARUWA DISTRICT
4. 'தரப்படுத்தல்
5. ‘ஒப்பரேசன் லிபரேசன்’ இராணுவ நடவடிக்கையிலிருந்து புலிகளை காப்பாறிய ராஜீவ் காந்தி
6. 15 ஆயிரம் படையினருடன் தந்திரமாக விரிக்கப்பட்ட ‘ஒபரேசன் லிபரேசன்’ இராணுவ வலை
7. வல்வெட்டித்துறையில் பிரபாகரனை சுற்றி வளைத்த இராணுவம்
8, Operation Poomalai - The Jaffna Food drop
9, Vadamarachchi Operation
10. Aluth Oya massacre
11, LTTE ‘TAMIL HEROES’
12. Anton Balasingham (Aired: July 2006)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.