ஜூன்
19ம்
நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம்
இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும்
சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு
மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த
ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.
பத்மநாபாவின்
மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம்
நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே
21 1991ல் கிடைத்தது.
