Showing posts with label ஒரு கூர்வாளின் நிழலில். Show all posts
Showing posts with label ஒரு கூர்வாளின் நிழலில். Show all posts

Sunday, 5 July 2020

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு: - முழுத்தொடர்

தமிழினி என்று அறியப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க மகளிரணி அரசியல் பிரிவுத்தலைவியாக இருந்தவர். ஈழப்போரில் தம் ஒட்டுமொத்த வாழ்வையும் தொலைத்த பல்லாயிரம் பெண்களில் ஒருவர் 

இறுதிவரை இயக்கத்தில் இருந்து போராடி முள்ளிவாய்க்காலின் கோரமுடிவுக்குப்பின் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்டு சிறைக்கொடுமை அனுபவித்து விடுதலையானதும் புற்றுநோய்க்கு பலியானவர். போராட்டமே வாழ்வென வாழ்ந்த அவர் மறைவுக்குப்பின் அவரது தன் வரலாற்று நூலை அவர் கணவர் ஒரு கூர்வாளின் நிழலில்  என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறார். அதில் அவர் தன் வாழ்வின் நேரடி அனுபவங்களை அதில் தான் கற்ற பாடங்களை விவரிக்கிறார்.

Wednesday, 17 June 2020

ஒரு கூர்வாளின் நிழலில்:- நூல் விமர்சனம்

தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்


இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர்.

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 37

நூலின் எண்ணால் குறிக்கப்பட்ட பகுதிகளுக்கு சில விளக்கங்கள்.
அடிக்குறிப்புகள் –

பாதை திறந்தது

1. ஏ9 நெடுச்சாலை- இலங்கை மத்திய மாகாணத் தலைநகர் கண்டியையும் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலை இது. ஏ9 பாதை புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையிலான போரின்போது மூடப்பட்டது.

பின் 2002 சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் பாதை திறக்கப்பட்டது.
2006இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின்போது பாதை மூடப்பட்டு, போரில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாதை 2009இல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பிற்பாடு பாதை திறக்கப்பட்டது.

2. சுதா (தங்கன்) - விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் துணைப் பொறுப்பாளர். (அரசியல்துறைப் பொறுப்பாளர் என்பது தவறு, நிர்வாகத்துக்குப் பொறுப்பாகச் செயற்பட்டவர்) யுத்த முடிவுக்குப் பிறகு பிரான்ஸிஸ் யோசப் என்ற மதகுருவின் தலைமையில் பல புலிகள் உறுப்பினர்களுடன் படையினரிடம் சரணடைந்தவர். இன்றுவரை முடிவு தெரியாது.

தமிழினியின் திருமணமும் மரணமும்:- 36


நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.
வவுனியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டும் பரந்தனுக்குச் சென்ற எனது தாயார் குறைந்த செலவில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிக்கத் தொடங்கினார்.
எனது சகோதர சகோதரிகள் திருமணமாகி, குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் நிலையில் நானும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென எனது தாயார் வற்புறுத்தத் தொடங்கினார்.

''நூற்றாண்டு கால அரசியல் பகைமைகளை இப்படியான ஓரிரண்டு உறவாடல்களால் சீர்ப்படுத்திவிட முடியாதுதான். ஆனாலும் இனம், மொழி, மதம் கடந்து மனித உணர்வுகளின் நேசங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்''. - 35

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 35

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது.
புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத்தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.
ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை நிறைவுசெய்யும்போது அவர்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு பெரிய வைபவமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

''ஒரு பலம் பொருந்திய இயக்கத்தின் போராளியாக இருந்த நான் சரணடைந்த காரணத்தால் கைவிடப்பட்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல என் போன்ற பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமையும் அதுவாகத்தான் இருந்தது:- 34

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 34

* எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை.. எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்
* சரணடைந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சமூகத்துடன் இணைந்து வாழச் செய்யும் இலங்கை அரசின் திட்டம் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைப் பாதுகாத்ததுடன், சட்டத்தின் இறுக்கப் பிடியிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது.

'' கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது:- 33


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 33

* எந்த உறவுகளும் சந்திக்கவே வராத நிலையில், ஒரு பிடி வீட்டு உணவுக்காக ஏங்கும் மனித மனங்கள் சிறைச்சாலையில் ஏராளமாக உண்டு.
தன்னைப் பார்ப்பதற்காக எவருமே வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், காலை முதல் மாலை பார்வையாளர் நேரம் முடியும் வரைக்கும், தினமும் பார்வையாளர் சந்திப்பு இடத்தையே ஏக்கத்துடன் பார்த்தபடியிருக்கும் மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

“இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள்: - 32

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 32

* புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல பொதுமக்களுடைய வாழ்க்கை அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது.
தேர்தல் காலங்களில் பேசப்படும் விடயமாக மட்டுமே தமிழ்க் கைதிகளின் விடுதலை ஆகியிருக்கிறது.

'' பெண் போராளிகளின் அர்ப்பணிப்பின் நன்மைகளை அனுபவிக்கச் சித்தமாயிருந்த சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தியே பார்க்கிறது: 31


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:

* களமுனையிலே ஒரு பெண் போராளி நிற்கும்போது தன்னுடைய உயிர் மட்டுமல்ல, தன்மானமும் இழக்கப்படலாம் என்கிற ஆபத்து அவளுக்குத் தெரிந்தே உள்ளது.
இருந்தும் இனத்தின் ஒரு பொது இலட்சியத்திற்காக அவள் துணிந்து களத்தில் நின்றிருக்கிறாள்.
அந்த அர்ப்பணிப்பின் நன்மைகளை அனுபவிக்கச் சித்தமாயிருந்த சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தியே பார்க்கிறது.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகிறது.
போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

''அடுத்தவரின் இரத்தச் சூட்டில் குளிர்காய்ந்து வாழத் துடிக்கும் ஒருகூட்டம், எப்படியான பட்டத்தை என்னைப்போல உயிர் மீண்டுவந்த போராளிகளுக்குச் சூட்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்''. - 30


 ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 3௦

* நான் போராளியா? பயங்கரவாதியா? என்னைப் போராளியாக்கியதும், பயங்கரவாதியாக்கியதும் அடிப்படையில் அரசியல்தான்.
ஆயுதமே விடுதலையைப் பெற்றுத் தரும் என எமக்குப் பாடம் புகட்டியதும் அரசியல்தான்.
ஆயுதமேந்தியதால் நீ ஒரு பயங்கரவாதி என முத்திரை குத்துவதும் அரசியல்தான்.
எனக்கும் இளவயதில் எத்தனை கனவுகள், கற்பனைகள், ஆசைகள் இருந்தன ?
தொடர்ந்து....
உங்கட தலைவர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?”, “நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது?”, “தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா? நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது?” எனப் பலதரப்பட்ட கேள்விகளை என்னிடம் வினவினார்கள்.
அவர்களுடைய எந்தக் கேள்விக்கும் என்னால் தெளிவான பதில் கூற முடியவில்லை. ஏனென்றால் கடைசி நாட்களில் எவருடைய தொடர்புகளும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. தங்களுக்கிடையே சிங்களத்தில் என்னவோ பேசிக்கொண்டார்கள்.

“இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது: 29

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதைப் பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்.
தலைவர் கொல்லப்பட்ட காட்சிகள் அந்தப் புகைப்படங்களில் வெளியிடப்பட்டிருந்தது. உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்எனக் கூறியதுடன் கேலியாக அழுதும் காட்டினார். மண்டபத்திலிருந்த அனைவரிடமும் சட்டென ஒரு சிறிய ஒலியெழுந்து அக்கணமே அடங்கிப்போனது.

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா ? உணர்ச்சிக்கும் புத்திக்குமான போராட்டத்தில் சிக்கித் திணற ஆரம்பித்தேன்:- 28


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 28

இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்.
இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?
* மதியத்திற்குப் பின்னரான பொழுதில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒருசில போராளிகளையும் தள்ளி விழுத்திக் கொண்டு, அலைபோல மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.
பதினாறாம் திகதி மாலை நெருங்கத் தொடங்கியது.
* காயமடைந்து அனாதரவாகக் கிடந்த சில போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத் தயாரானார்கள்.
* உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.
வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.
* உயிரற்ற சடலத்தைப் போல என்னைச் சுமப்பதே எனக்குப் பெரும் பாரமாயிருந்தது.
இராணுவத்தினர் மைதானத்தைச் சூழ்ந்து நின்றனர். மனதிற்குள் ஆழ்ந்த இருட்டாகத் தென்பட்ட அடுத்த கட்டத்துக்குள்ளே நானும் பிரவேசித்தேன்.

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! - 27

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 27

இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.
• “ஆமிக்காரனிட்டதான் போகப் போறம், என்ன செய்யப் போறீயள்? உங்களை நம்பி இவ்வளவு தூரம் வந்திட்டம். இனி எங்கே போகச் சொல்லுறிங்கள், இனியும் என்னவாம் செய்யப் போறார் உங்கட தலைவர்?”
* 2009 மே பதின்மூன்றாம் திகதி முள்ளிவாய்க்காலில் இறுதியாக அரசியல்துறைப் பொறுப்பாளரைச் சந்தித்தேன். அதற்கு முன்னைய சில தினங்கள்வரை அவரிடமிருந்த தமிழ்நாட்டு உதவிகள் பற்றிய நம்பிக்கையான வார்த்தைகள் எவையுமிருக்கவில்லை.
* 2009 மே பதினைந்தாம் திகதி மாலையாகியது ....
இறந்துபோனவர்கள் போக, காயப்பட்டுக் கிடந்த போராளிகளுக்கும் உயிரோடிருந்த போராளிகளுக்கும் முடிவு என்ன என்பது பற்றி எவருக்கும் எந்தத் தகவலும் சொல்லப்பட்டிருக்கவில்லை.
...
போராளிகள் கைவிடப்பட்டு விட்டார்கள் என்பது அக்கணத்தில் தெட்டத்தெளிவாகப் புரிந்தது.
இப்போது இயக்கத் தலைமை காண்பித்த 300 போர்வீரர்கள் படம் நினைவுக்கு வந்தது. எமது போராட்ட வாழ்க்கையின் முடிவை இயக்கத் தலைமை என்றோ தீர்மானித்துவிட்டதாகத்தான் அக்கணத்தில் எண்ணத் தோன்றியது.
* கடற்புலித் தளபதி ஸ்ரீராமிடம் அவரது மனைவியான இசைப்பிரியா எங்கே எனக் கேட்டேன். பக்கத்தில் எங்கேயோ ஒரு இடத்தில் நிற்பதாகவும் விரைவில் வந்துவிடுவாள் என்றும் குறிப்பிட்டார்.

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி உத்தரவிட்ட புலிகள் தலைமை !! - 26

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட புலிகள் தலைமை !!
• ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது.
இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது
* இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.
* புலிகள் போகச் சொல்கிற இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்த மக்கள் புலிகள் மீதான வெறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் சென்றிருந்தார்கள்.
* காலூன்றி நிற்க ஒரு இடமில்லை, வயிற்றுப் பசியைப் போக்க ஒரு பிடிஉணவில்லை, எந்தக் கணத்திலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
* மக்களைப் பணயமாக வைத்துத்தான் மக்களுக்காகப் போராடுவதா, அப்படியானால் இது யாரைப் பாதுகாப்பதற்கான போர் என்ற கேள்விகளுக்கான பதில் படுபயங்கரமாகக் கண் முன்னால் எழுந்து நின்றது.

விடுதலை புலிகள் இயக்கமும் தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது?
• “இறுதி யுத்தக்காலத்தில்,
படையணிகளின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளாமல் பொட்டு அம்மான் வழங்கும் கட்டளைகள் ஏனைய தளபதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின.
* "ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை" - மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் பொட்டு அம்மான் முன்னறிவிப்பு.

Tuesday, 16 June 2020

தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்களை நம்பி ஏமாந்த புலிகள்:- 25

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 25

* கிளிநொச்சி, ஆனையிறவு, பூநகரி வீழ்ந்தது..

நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் !!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய பிரபாகரன் !!
* புலிகளின் முக்கிய இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அடர்ந்த காடுகளுக்குள்ளே உச்சக்கட்ட உருமறைப்புகளுடன் இருக்கும் இரகசிய முகாம்களின் மீதுகூட மேற்கொள்ளப்பட்ட விமான தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிரபாகரனின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி! - 24

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 24

''இறுதிப்போரின் பிரதான இலக்காக பிரபாகரனே குறி வைக்கப்பட்டிருந்தார் என்பது புலிகளால் புரிந்துகொள்ளப்பட்டது''.
* பிரபாகரனின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி கேணல் சங்கரின்வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய இலங்கை ராணுவம்.
• 2007 செப்டம்பரில் இலங்கைப் படையினரால் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை பெரும் நிலப் பிரதேசங்களை ஆக்கிரமித்தபடி வேகமாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.
• 2007ல் விமானத் தாக்குதலில் தமிழ்செல்வன் மரணம்.
* முன்னைய காலங்களைப் போலன்றி, இராணுவத்தினர் தந்திரமான ஊடுருவித் தாக்குதல்கள் மூலமும் எமது கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசங்களை வேகமாகக் கைப்பற்றினார்கள்.
* இராணுவத்தினரின் ஜெயசிக்குறுபடையெடுப்புக் காலப்பகுதியில் புலிகளுக்குச் சாதகமாக இருந்த வன்னிக் காடுகளின் அனைத்துச் சூட்சுமங்களையும் இராணுவத்தினர் இப்போது நன்றாக அறிந்து உள்வாங்கியிருந்தனர்.
* இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினரின் கைகளில் புலிகளின் மிக முக்கியமான இடங்கள் பற்றிய அனைத்துத் தரவுகளும் மிகத் துல்லியமாக இருக்கின்றன என்கிற விடயம் புலிகளுக்கு வெளிப்படத் தொடங்கியது.
* இறுதிப்போரின் கடைசிக் கட்டம்வரை ஆழ ஊடுருவும் அணியினரின் நடவடிக்கைகளைப் புலிகளால் தடுத்துநிறுத்த முடியவில்லை.