ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 28
• இராணுவத்தினரின்
துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித்
தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்.
இப்போதுதான்
நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை
உணர்ந்தேன். சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக்
கொல்வதா?
* மதியத்திற்குப்
பின்னரான பொழுதில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒருசில போராளிகளையும் தள்ளி
விழுத்திக் கொண்டு, அலைபோல
மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.
• பதினாறாம்
திகதி மாலை நெருங்கத் தொடங்கியது.
* காயமடைந்து
அனாதரவாகக் கிடந்த சில போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு
வெளியேறத் தயாரானார்கள்.
* உயிருடன்
இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே
அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.
• வார்த்தைகளால்
விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு
முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க
முடியாது.
* உயிரற்ற
சடலத்தைப் போல என்னைச் சுமப்பதே எனக்குப் பெரும் பாரமாயிருந்தது.
இராணுவத்தினர்
மைதானத்தைச் சூழ்ந்து நின்றனர். மனதிற்குள் ஆழ்ந்த இருட்டாகத் தென்பட்ட அடுத்த
கட்டத்துக்குள்ளே நானும் பிரவேசித்தேன்.