இலங்கைத் தமிழர்
போராட்டம் குறித்தும்,
ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர்
வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர்
குழுவுக்கு
இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை
எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல்
முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.
அதற்கு 1985-ஆம்
ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட
பொருத்தமான
ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள்
ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து.