Showing posts with label 1990. Show all posts
Showing posts with label 1990. Show all posts

Thursday, 16 July 2020

The forced evacuation of Muslims in 1989: Some Reflections: - Nadesan Satyendra, 1996

The first matter is the whole question of the Muslim identity. In the 1880s, for instance, attempts were made by Tamil politicians, such as Sir Ponnambalam Ramanathan to show that Muslims were Tamils whose religion was Islam in the same way as other Tamils were Hindus or Christians.

In a paper entitled "The ethnology of the 'Moors' of Ceylon", read before the prestigious Ceylon Branch of the Royal Asiatic Society, Ramanathan contended, advancing physical, social and cultural evidence in his support, that the Muslims originated from South India and were of the same race as the one to which he belonged: in short, the Muslims were really a group of Tamils who had embraced a new religion, Islam. (Collective Identities, Nationalisms and Protest in modern Sri Lanka, edited Michael Roberts).

Thursday, 18 June 2020

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களும், படுகொலைகளும்:- ஜான்ஸன்

முஸ்லிம் மக்கள் ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில்தமிழ் குறுநல தேசியவாதமும்  இனவாத அரசியலும்  அவர்களை படுகொலை செய்தது முதல் வெளியேற்றியது வரையான காரியங்களைச் செய்தது. எல்லா குறுந்தேசிய இனவாதிகளும் முஸ்லிம்களை மதம் என்ற அடிப்படையில் தான் அடையாளப்படுத்திவன்முறையை கட்டமைத்தனர். முஸ்லிம் என்ற பதம் எப்படி வரலாற்று ரீதியாக கட்டமைக்கப்பட்டது என்ற ஆய்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பாரம்பரியமாக வாழ்ந்து வந்த நாகத் தமிழ் மக்கள் மத்தியில் இஸ்லாம் ஒரு மதத் தத்துவவியலாக வந்த போதுஅதை உள்வாங்கிக் கொள்வது இயற்கையாக இருந்தது. ஆனால் இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பல் தெய்வ வணக்க வழிபாடுகளைக் கொண்ட இந்துக்களால் ஏகதெய்வ கொள்கையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

Friday, 12 June 2020

வரலாற்றில் ஜுன்_11

அரச ஆதரவுடன் கிழக்கில் மறைக்கப்பட்ட 600 முஸ்லிம் போலீசாரின் படுகொலை:
1990.06.11 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்கள் விடுதலைப்புலிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது மேலிடத்து அரச உத்தரவின் பெயரில் ஆயுதங்கள் தம்வசம் இருந்தும் விடுதலைபுலிகளுக்கு தாக்குதல் நடத்தாமல் தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் விடுதலைப்புளிகளிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்த 800 பொலிஸ் அதிகாரிகளில் 600 பேர் தமிழ்பேசும் சமுகத்தை சார்ந்த முஸ்லிம்கள் ஆவார்கள்.

Monday, 8 June 2020

தமிழகத்தில் புலிகளால் கொல்லப்பட்ட பத்மநாபா - கலைக்கப்பட்ட திமுக ஆட்சி

ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் பெரும் சிந்தனை செல்வம் அழிக்கபட்டுவிட்டது, இனி ஈழதமிழருக்கு மிஞ்சுவது கண்ணீரும்,ரத்த ஆறும் என்பது அன்றே குறிக்கபட்டது.
பத்மநாபாவின் மரணம் தமிழகத்தை பெரும் சுடுகாடாக்கும் திட்டத்தின் முதல்புள்ளி, இனி என்னவெல்லாம் நடக்குமோ என மனிதநேயம் கொண்டோர்கள் எல்லாம் அஞ்சி புலம்ப அதற்கு விடை மறுவருடம் மே 21 1991ல் கிடைத்தது.

Sunday, 7 June 2020

அரந்தலாவை - வீரமுனைப் படுகொலை!

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனைக் கிராமம் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்ட கிராமங்களில் ஒன்றாகும். அம்பாறை மாவட்டத்தில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீரமுனை மற்றும் அதன் அயல்கிராமங்களைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதன் காரணமாக இந்தக் கிராம மக்களுக்கு புலிகளின் பாரிய பின்புலம் மற்றும் உடனடி உதவிகள் என்பன தாராளமாக கிடைத்து வந்தது.

காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்

அப்துல்லாஹ்-
 August 04, 2011

1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது. 

Saturday, 6 June 2020

ஈழத்தமிழர் = (இந்துக்கள் + கிறிஸ்தவர்கள்) - (முஸ்லிம்கள்)


 Kalaiyarasan

முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.

Friday, 5 June 2020

“முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தடையாக நிற்கும் தமிழ்-முஸ்லிம் மீளொருங்கிணைப்பு”


கலாநிதி எம். எஸ். அனீஸ்சிரேஷ்ட விரிவுரையாளர்:
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின் மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது.

எல்.ரீ.ரீ.ஈ யினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் -டி.பி.எஸ்.ஜெயராஜ்

வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பதுதமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள்''.

வந்தாறுமூலை அகதிகளும் வந்தாறாத மன வடுக்களும் ! - எஸ்.எம்.எம்.பஷீர்

உலகத்தில் நாட்டில் சமூகத்தில் மனிதர்கள் படும் துயரை நினைத்து இரங்கி ஒரு துளி கண்ணீர் உன்னிடம் வராவிடின்;; எதற்காக நான் பாடிகொண்டிருக்கிறேன்.
என் பாடல் உன்துயரை துடைக்காது மேலும் மூட்டி விடுமாயின் நான் பாடாமல் ஊமையாக இருந்து விடுகிறேன்” 
குணதாச கபுகே (மறைந்த பிரபல சிங்கள பாடகர்)
1990 ஆம் ஆண்டு போர்ச் சூழலின் காரணமாக பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் குடும்பங்களின் 174 இளைஞர்கள் அவ்வாண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதியும் 23ம் திகதியும் சீருடை அணிந்தவர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இன்றுவரை விடுதலை செய்யப்படவில்லை.

Thursday, 4 June 2020

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்- 4 to 6


கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத திருப்பம் புலிகளின் தமிழீழக் கனவை சிதைத்திருந்தது. இந்த நிலமையை மாற்ற  மாற்றுத் திட்டமொன்று வகுக்கப்பட்டது. அதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை பல்வேறு இடங்களில் வைத்து படுகொலை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்த தாக்குதல்களின் மூலம் முஸ்லிம்களை பயமுறுத்தி கிழக்கிலிருந்து வெளியேற்றலாம் என கருதப்பட்டது.

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்-1 to 3


தமிழர்கள்  தனிநாடு போராட்டங்களை ஆரம்பித்த காலத்திலிருந்து முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். சொத்து இழப்புகள் தொழில் இழப்புகள் என்று ஆரம்பித்து உயிரிழப்புகள் வரை தொடர்ந்தது. 1990இல்  இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் புலிகள் மீண்டும் ஊர்களுக்குள் வந்தனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் பாரிய இனப்படுகொலைகளினால் ஆயிரக்கணக்கான உயிர்களையும் இனச்சுத்திகரிப்பினூடாக கிழக்கில் சிறிய பெரிய ஊர்களையும் வடக்கில் மாவட்ட மட்டத்தில் பெரும் பிரதேசங்களையும் இழந்தனர். 

டி.பி.எஸ். ஜெயராஜின் முஸ்லிம் ஊர்காவல் படை பற்றிய புரிதல்கள் தவறானது.


தமிழ் ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்களாலேயே முஸ்லிம் ஊர்காவல் படைகள் தோற்றம் பெற்றன

வடக்கிலிருந்து முஸ்லிம்கள்  எல்.ரீ.ரீ.ஈ. ஆல் வெளியேற்றப்பட்டு 22வது ஆண்டு நிறைவு என்ற பெயரில் ஒரு கட்டுரையை டி.பி.எஸ்.ஜெயராஜ் என்பவர் அண்மையில் தனது இணையத்தளத்திலும் வேறு இணையத்தளங்களிலும் வெளியிட்டிருந்தார்.  இக்கட்டுரையில் நல்ல பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் சில தவறான தகவல்களும் முஸ்லிம்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.

குரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்!! - எஸ்.எம்.எம்.பஷீர்

"காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்களின் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
மனிதமும்
அன்றுடன் தொலைந்து போனது

கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்து முன் தோன்றியதால்த்தான்
பின்னர் தோன்றிய
"கல்" எங்கள் இதயத்திலும்
"மண்" எங்கள் தலைக்குள்ளும்
புகுந்து கொண்டதோ " 
                                         (கவிஞர் அருந்ததி - பிரான்ஸ்)

Wednesday, 3 June 2020

ஒக்டோபர் 30; யாழ். முஸ்லிம்களின் நினைவலைகளும் மீள் குடியேற்றமும்


 ''ஏறத்தாழ ஒரு மணித்தியாலம் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் கூட்டம் முஸ்லிம்கள் 2 மணித்தியாலத்தில் யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்ல வேண்டுமென முரசறைந்தது. உடுத்திய உடையுடன் நாங்கள் துரத்தப்பட்டபோது எங்கள் பாதம் பட்ட எங்கள் வீதிகள் மக்களின் கண்ணீரால் நிறைந்தது. யாழ். முஸ்லிம் பகுதிகளில் அழுகைச் சத்தம் ஆக்ரோஷமாக வெடித்தது. அக்கணங்களை நானும் சந்தித்தவளென்பதால் அக்கொடுமையான நிகழ்வின் தாக்கம் இன்னும் வலியோடு எனக்குள் அதிர்கின்றது''.