Sunday, 7 June 2020

காத்தான்குடி படுகொலைகளும், படிப்பினைகளும்

அப்துல்லாஹ்-
 August 04, 2011

1990 ஆகஸ்ட் 3ஆம் திகதி இன்றைக்கு 21 வருடங்களுக்கு முன்பு வழமை போல காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இஷா தொழுகையை பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்தனர். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாமல் மீரா ஜூம்ஆ பள்ளி மற்றும் ஹூசைனியா பள்ளிவாசல்களிலும் நூற்றுக்கணக்கானோர் தொழுது கொண்டிருந்தனர். மறுபுறம் தமிழ்ப்புலிகளில் ஆயுததாரிகள் முப்பதுக்கும் மேற்பட்டோர் காத்தான்குடிக்குள் ஊடுறுவி அங்கு இரண்டாக பிரிந்து ஒரு குழு மீராப்பள்ளி நோக்கியும் மற்றது ஹூசைனியாப் பள்ளி நோக்கியும் சென்றது. 



தொழுகையின் சில ரக்கத்துகள் தொழுது முடிக்கப்பட்ட போது பள்ளிவாசல்கள் சுற்றிவளைக்கப்பட்டன. தொழுகையாளிகள் கிப்லாவை முன்னோக்கி அமைதியுடன் தொழுதுகொண்டிருந்த போது வீரப்பெண்மணிகள் பெற்றெடுத்த தமிழீழ மறவர்களின் துப்பாக்கிகள் சீறின. கைக்குண்டுகள் வீசப்பட்டன. தொழுகையாளிகள் பின்வரிசையிலிருந்து ஒவ்வொருவராக கீழே விழுந்தனர். இறுதியாக முன்னால் நின்ற இமாம்களும் குண்டடிபட்டு விழும்வரை மாவீரர்களின் துப்பாக்கிகள் சீறிக்கொண்டேயிருந்தன...

பின்னால் நின்று தாக்கியதால் என்ன நடக்கிறதென திரும்பிப்பார்க்காமல் தொழுதுகொண்டிருந்தனர் அவர்கள். இதனால் பள்ளிகளில் தொழுதுகொண்டிருந்த அத்தனை பேரும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கபட்டனர். ஒவ்வொருவரும் தமது உடலில் குண்டடி படும் போது தாக்குதல் தம் மீது மேற்கொள்ளப்படுவதையுணர்ந்தனர். இந்த படுபாதக தாக்குதல்களினால் 104 முஸ்லிம்கள் வயோதிபர் சிறுவர் வாலிபர் என்ற பாகுபாடில்லாமல்  கொல்லப்பட்டனர். உலக வரலாற்றில் கோழைத்தனமான முதலாவது படுகொலை நிகழ்வின் வடுக்கல் இன்றும் அப்பள்ளிவாசல்களில் காணப்படகின்றன. இலங்கை முஸ்லிம்களின் மனதிலும் நீங்காத வடுவாக அது காணப்படுகின்றது.

https://youtu.be/aXH7XUKTqR0

முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு பிரேரிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து  வெளியேற்றும்  புலிகளின்  திட்டத்தின் ஓரங்கமாகவே இப்படுகொலை இடம்பெற்றது. ஆனால் காத்தான்குடி (கஹ்தான் குடி) ஈழப்போராட்டம் ஆயுத வடிவம் பெற்ற காலத்திலிருந்தே பல இழப்புகளை சந்தித்துள்ளது. 

1985 ஆம் ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் பல்வேறு ஆயுதக்குழுக்களாலும் வேட்டையாடப்பட்டுள்ளனர். தாம் கேற்கும் அதே உரிமையை தமது சிறுபாண்மைக்கு வழங்க மறுத்த மமதையின் வெளிப்பாடுகளே  வடக்கு கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகளாகும். 1985-19 பேர் 1986- 7 பேர் 1987 – 84 பேர் 1990- 160 பேர் 1991- 32 பேருமாக மொத்தமாக 302 இக்கு மேற்பட்ட முஸ்லிம்களை காத்தான்குடியில் மட்டும் ஈழப்போராட்டம் வேட்டையாடியுள்ளது. இது அல்லாமல் ஏராவூரில் 122 முஸ்லிம்கள் 1990 ஆகஸ்ட் 11 அன்று கொல்லப்பட்டனர்.


முஸ்லிம்களை இவ்வாறு கொன்றொழித்ததன் பின்னால் பல திட்டங்கள் இருந்த போதிலும் யூதர்களை ஒத்த கொள்கையை புலிகளியக்கம் கொண்டிருந்தது பிரதான காரணம் வகிக்கின்றது. அப்பாவிகளை சிறுவர் பாலகர் பெண்கள் வயோதிபர் என்ற பாகுபாடில்லாமல்  வெட்டியும் சுட்டும் வெளியேற்றியும் சித்திரவதை செய்யும் தன்மை யூதர்களுக்கு மட்டுமே உரித்தானது. 

கொழும்பு தமிழர்களை பலிகொடுத்தாவது வடக்கு கிழக்கில் தமிழீழத்தை கட்டியெழுப்ப புலிகள் எண்ணம் கொண்டனர். சில முஸ்லிம்களை கொன்று எதுவும் நடக்கவில்லையாததால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலை செய்தனர். 1990 ஆகஸ்ட் 3ல் இரவு இஷா தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களின் மீரா ஜூம்ஆ மஸ்ஜித் மற்றும் ஹூஸைனியா மஸ்ஜித் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 104 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்திருந்தனர்.

தமது திட்டம் நிறைவேறாததால் ஏமாற்றமடைந்த புலிகள் 1990 ஆகஸ்ட் 11ம் நாளன்று ஏராவூரில் தாக்குதல் நடத்தி 122 முஸ்லிம் ஆண்பெண்வயோதிபர்சிறுவர்கள்கருவிலுள்ள சிசுக்களையும் கொன்றிருந்தனர்.

புலிகளாலும் ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்களாலும் காலத்துக்கு காலம் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கைகளை இனிப்பார்ப்போம்.
 
1986 ஆரம்பத்தில் ஈரோஸ் இயக்கம் மன்னார் பள்ளிவாசலில் வைத்து  முஸ்லிம் மக்கள் சிலரை கொன்றனர்.
 
1987 இல் மார்கழி 30ம் திகதி காத்தான்குடியில் 28 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

6.1.88 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடி எல்லையில் 60 குடியிருப்புகள் எரிக்கப்பட்டன.
 
19.3.88 வீரகேசரி செய்திப்படி நிந்தவூரில் பேரை கடத்திச் சென்றனர்.

1988 பங்குனியில் கல்முனையில் 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1988 கார்த்திகை மாதம் ரெலோஈ.பி.ஆர்.எல்.எப்ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறைநிந்தவூர்சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை செய்தனர். தமிழ் பொலிசார் விடுவிக்கப்பட்டனர்.

2.2.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய கிரனைட் குண்டு வெடித்ததில்இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர்.

7.3.89 வீரகேசரி செய்திப்படி கல்முனையைச் சேர்ந்த 600 தமிழர்கள்தமிழ் முஸ்லிம் மக்களுக்கு தனித்தனியான உதவி அரசாங்கப்பிரிவுகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

4.12.89 வீரகேசரி செய்திப்படி காத்தான்குடியில் மூன்று  முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

10.12.89 வீரகேசரி செய்திப்படி 12 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1.2.90 வீரகேசரி செய்திப்படி புலிகள் காத்தான்குடியில் ஊரடங்குச் சட்டத்தை பிரகடனம் செய்துவீடுவீடாக சோதனை செய்தனர். 30 பேரை கைது செய்தனர். அத்துடன் சம்மாந்துறையில் மாகாணசபை உறுப்பினர் மன்சூர் சுட்டுக் கொல்லப்பட்டார். கல்முனையைச் சுற்றி வளைத்து 40 பேரை கைது செய்து கொண்டு சென்றனர். இதை அடுத்து காத்தான்குடியிலும்கல்முனையிலும் கடைகள் மூடப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் குழு உறுப்பினர் மருதூர் கனி கடத்தப்பட்டார். இவர்களை விடுவிக்கக் கோரி கல்முனையில் புலிகளின் அலுவலகத்தின் முன் போராட்டம் நடத்திய மக்கள் மேல்புலிகள் சுட்டதில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களை வைத்தியசாலை கொண்டு சென்ற நிலையில்அங்கு வந்த புலிகள் வைத்தியசாலையை சுற்றி வளைத்தபின்ஐவரை சுட்டுக் கொன்றதுடன்வைத்தியர் உட்பட 10 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.

7.2.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் கனிபா என்பவரிடம் பணம் தரும்படி கோரி மறுத்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

10.7.90 வீரகேசரி செய்திப்படி ஏறாவூரில் இரண்டு முஸ்லிம் மக்களை கடத்தி சென்றனர்.

1990 யூன் 11 க்கு பின்பாக வடக்கு கிழக்கில் யுத்தம் தொடங்கிய முதல் இரண்டு மாதத்தில் 300 பேர் அளவில் புலிகளால் கொல்லப்பட்டனர். அத்துடன் கிழக்கில் மட்டும் 1500 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தமிழ் தேசிய போராட்டம் தொடங்கிய பின் புலிகள்  மற்றும்  ஏனைய இயக்கங்களால்  கொல்லப்பட்டனர்.

1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 68 முஸ்லிம் ஹஜ் பயணிகளை கடத்திக் கொன்றனர். மொத்தமாக அங்கு 150 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஏறாவூரில் 62 பேரை கடத்தினர்.

31.7.1990 வீரகேசரி செய்திப்படி அனுராதபுர மாவட்ட உடுப்பலாவ சின்னசிப்பிக்குளத்தில் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட பின் கிணற்றில் போடப்பட்டனர்

1.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்று வயல்களில் வேலை செய்து விட்டு வந்த 17 முஸ்லிம்கள் கடத்தப்பட்ட பின் கொல்லப்பட்டனர்.

1.8.90 வீரகேசரி செய்திப்படி கந்தாளாயில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

3.8.1990 திகதி  காத்தான்குடி பள்ளிவாசலில் 104 முஸ்லிம்கள் தொழுதுகொண்டிருக்கும் போது பின்னாலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 86 முஸ்லிம்கள் காயமடைந்திருந்தனர். தமிழர்களை தலைகுனிய வைத்த  இந்த தாக்குதலை புலிகள் அமைப்பின் கரிகாலன்நியுட்டன்அலெக்ஸ்ரஞ்சித் அப்பா ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.

3.8.1990 வீரகேசரி செய்திப்படி மஜீத்புரம் பகுதி வயலில் இருந்து திரும்பிய முஸ்லீம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அத்துடன் சம்மாந்துறையில் முஸ்லிம் தந்தையும் மகனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

7.8.90 வீரகேசரி செய்திப்படி அம்பாறையில் 18 முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.  அக்கரைப்பற்றில் பேர் கொல்லப்பட்டதுடன், 10ம் திகதிக்கு முன்னர் அம்பறையை விட்டு முஸ்லிம்;கள் வெளியேறிவிட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் போடப்பட்டது.

11.8.90 ஏறவூரில் 120  பேர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கோளைத் தாக்குதலையும் புலிகள் இயக்க உறுப்பினர்களான கரிகாலன்நியூட்டன்ரஞ்சித் ஆகியோர் முன்னின்று செய்தனர்.

13.8.90 வீரகேசரி செய்திப்படி செங்கலடியில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி கடந்த 24 மணித்தியாலத்தில் 200 தமிழர் மற்றும் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

13.8.90 ஐலண்ட் பத்திரிகை செய்திப்படி ஏறாவூரில் முஸ்லிம் கிராமங்கள் மேல் நடத்திய தாக்குதலில், 119 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 60 பேர் காயம் அடைந்தனர்.

13.8.90 ஐலண்ட் செய்திப்படி சம்மாந்துறையில் முஸ்லிம் விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

15.8.90 வீரகேசரி செய்திப்படி அக்கரைப்பற்றில் முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

1.9.1990 காத்தான்குடியில் மூன்று கிராமத்தில் பள்ளிவாசல் மற்றும் 55 வீடுகள் எரிக்கப்பட்டன.

16.9.90 புனாவை என்ற கிராமத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

25.9.90 வீரகேசரி செய்திப்படி கல்முனை கடலில் வைத்து மூன்று முஸ்லிம் மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

3.10.90 வீரகேசரி செய்திப்படி மருதமுனையில் இரண்டு முஸ்லிங்கள் கடத்தப்பட்டனர்.

1990 ஐப்பசி மாதம் 18 முதல் 30 ம் திகதி வரையான காலப்பகுதியில்   யாழ்ப்பாணம்மன்னார்முல்லைத்தீவுகிளிநொச்சிவவுனியா மாவட்டங்களில் வாழ்ந்து வந்த  85 000 ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் பகல்கொள்ளையிட்ட  பின்பு புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

15.11.90 வீரகேசரி செய்திப்படி மன்னாரில் இருந்து புலிகளால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் தமது இருப்பிடத்துக்கு திரும்பிய போதுபுலிகள் சுட்டதில் ஒருவர் மரணம். ஆறு பேர் காயம் அடைந்தனர்.

1992.4.29  இல் அழிஞ்சிப் பொத்தனையில்  57  முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர். 

1992.10.15 பொலநறுவ பள்ளியகொடல்ல அஹமட்புரம் பொலநறுவ பிரதேசங்களில் மொத்தம் 171 முஸ்லிம்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.  

-அப்துல்லாஹ்-
 August 04, 2011

Courtesy - AL-IHZAN