கிழக்கின் விடுவிப்பின்போது
அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக்
காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான்
அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும்
மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும்
அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.
அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர
மக்கள்வரை அனைவர் மீதும் புலிகள் தொடர்ந்து
தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல
என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.