Showing posts with label தமிழினி. Show all posts
Showing posts with label தமிழினி. Show all posts

Sunday, 5 July 2020

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு: - முழுத்தொடர்

தமிழினி என்று அறியப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க மகளிரணி அரசியல் பிரிவுத்தலைவியாக இருந்தவர். ஈழப்போரில் தம் ஒட்டுமொத்த வாழ்வையும் தொலைத்த பல்லாயிரம் பெண்களில் ஒருவர் 

இறுதிவரை இயக்கத்தில் இருந்து போராடி முள்ளிவாய்க்காலின் கோரமுடிவுக்குப்பின் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்டு சிறைக்கொடுமை அனுபவித்து விடுதலையானதும் புற்றுநோய்க்கு பலியானவர். போராட்டமே வாழ்வென வாழ்ந்த அவர் மறைவுக்குப்பின் அவரது தன் வரலாற்று நூலை அவர் கணவர் ஒரு கூர்வாளின் நிழலில்  என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறார். அதில் அவர் தன் வாழ்வின் நேரடி அனுபவங்களை அதில் தான் கற்ற பாடங்களை விவரிக்கிறார்.

Wednesday, 17 June 2020

ஒரு கூர்வாளின் நிழலில்:- நூல் விமர்சனம்

தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில்


இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர்.

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 37

நூலின் எண்ணால் குறிக்கப்பட்ட பகுதிகளுக்கு சில விளக்கங்கள்.
அடிக்குறிப்புகள் –

பாதை திறந்தது

1. ஏ9 நெடுச்சாலை- இலங்கை மத்திய மாகாணத் தலைநகர் கண்டியையும் வட மாகாணத் தலைநகர் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325 கிலோமீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலை இது. ஏ9 பாதை புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்குமிடையிலான போரின்போது மூடப்பட்டது.

பின் 2002 சமாதான ஒப்பந்த காலகட்டத்தில் பாதை திறக்கப்பட்டது.
2006இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின்போது பாதை மூடப்பட்டு, போரில் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாதை 2009இல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததன் பிற்பாடு பாதை திறக்கப்பட்டது.

2. சுதா (தங்கன்) - விடுதலைப்புலிகளின் அரசியல்துறையின் துணைப் பொறுப்பாளர். (அரசியல்துறைப் பொறுப்பாளர் என்பது தவறு, நிர்வாகத்துக்குப் பொறுப்பாகச் செயற்பட்டவர்) யுத்த முடிவுக்குப் பிறகு பிரான்ஸிஸ் யோசப் என்ற மதகுருவின் தலைமையில் பல புலிகள் உறுப்பினர்களுடன் படையினரிடம் சரணடைந்தவர். இன்றுவரை முடிவு தெரியாது.

தமிழினியின் திருமணமும் மரணமும்:- 36


நான் சிறையிலும் புனர்வாழ்விலும் இருந்த காலப் பகுதிகளில் எனது தங்கை குடும்பமும் எனக்கு நெருக்கமான சில அன்புள்ளங்களும் எனது தாயாருக்கு அவ்வப்போது சில பொருளாதார உதவிகள் செய்திருந்ததை மறக்க முடியாது.
வவுனியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டும் பரந்தனுக்குச் சென்ற எனது தாயார் குறைந்த செலவில் ஒரு தற்காலிக இருப்பிடத்தை ஏற்படுத்தி வசிக்கத் தொடங்கினார்.
எனது சகோதர சகோதரிகள் திருமணமாகி, குடும்பங்களுடன் வாழ்ந்துவரும் நிலையில் நானும் ஒரு திருமணம் செய்துகொள்ள வேண்டுமென எனது தாயார் வற்புறுத்தத் தொடங்கினார்.

''நூற்றாண்டு கால அரசியல் பகைமைகளை இப்படியான ஓரிரண்டு உறவாடல்களால் சீர்ப்படுத்திவிட முடியாதுதான். ஆனாலும் இனம், மொழி, மதம் கடந்து மனித உணர்வுகளின் நேசங்கள் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்''. - 35

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 35

ஆண்களுக்கான புனர்வாழ்வுப் பயிற்சி நிலையங்கள் வவுனியாவிலும் வெலிக்கந்தையிலும் அமைக்கப்பட்டிருந்தது.
புனர்வாழ்வு பெறுபவர்களின் தொகை குறைந்துசென்ற காரணத்தால் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆண்களும் மாற்றப்பட்டிருந்தனர்.
ஒரு குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமானவர்கள் புனர்வாழ்வு காலத்தை நிறைவுசெய்யும்போது அவர்களைப் பெற்றோரிடம் கையளிக்கும் நிகழ்வு பெரிய வைபவமாக முன்னெடுக்கப்படுவது வழக்கம்.

''ஒரு பலம் பொருந்திய இயக்கத்தின் போராளியாக இருந்த நான் சரணடைந்த காரணத்தால் கைவிடப்பட்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல என் போன்ற பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமையும் அதுவாகத்தான் இருந்தது:- 34

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 34

* எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை.. எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்
* சரணடைந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சமூகத்துடன் இணைந்து வாழச் செய்யும் இலங்கை அரசின் திட்டம் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைப் பாதுகாத்ததுடன், சட்டத்தின் இறுக்கப் பிடியிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது.

'' கைவிடப்பட்ட சிறை மனிதர்களின் கண்களில் தேங்கியிருக்கும் ஏக்கத்தின் வலி மகா கொடுமையானது:- 33


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 33

* எந்த உறவுகளும் சந்திக்கவே வராத நிலையில், ஒரு பிடி வீட்டு உணவுக்காக ஏங்கும் மனித மனங்கள் சிறைச்சாலையில் ஏராளமாக உண்டு.
தன்னைப் பார்ப்பதற்காக எவருமே வரப்போவதில்லை என்பது தெரிந்திருந்தும், காலை முதல் மாலை பார்வையாளர் நேரம் முடியும் வரைக்கும், தினமும் பார்வையாளர் சந்திப்பு இடத்தையே ஏக்கத்துடன் பார்த்தபடியிருக்கும் மனிதர்களின் எதிர்பார்ப்புக்களை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

'' பெண் போராளிகளின் அர்ப்பணிப்பின் நன்மைகளை அனுபவிக்கச் சித்தமாயிருந்த சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தியே பார்க்கிறது: 31


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:

* களமுனையிலே ஒரு பெண் போராளி நிற்கும்போது தன்னுடைய உயிர் மட்டுமல்ல, தன்மானமும் இழக்கப்படலாம் என்கிற ஆபத்து அவளுக்குத் தெரிந்தே உள்ளது.
இருந்தும் இனத்தின் ஒரு பொது இலட்சியத்திற்காக அவள் துணிந்து களத்தில் நின்றிருக்கிறாள்.
அந்த அர்ப்பணிப்பின் நன்மைகளை அனுபவிக்கச் சித்தமாயிருந்த சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வைக் கொச்சைப்படுத்தியே பார்க்கிறது.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்துகிறது.
போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்துபோய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவதும் எத்தனை மோசமான இழிச்செயல்?
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பல தமிழ்ப் பெண்கள் அங்கு விசாரணைக் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

''அடுத்தவரின் இரத்தச் சூட்டில் குளிர்காய்ந்து வாழத் துடிக்கும் ஒருகூட்டம், எப்படியான பட்டத்தை என்னைப்போல உயிர் மீண்டுவந்த போராளிகளுக்குச் சூட்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்''. - 30


 ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 3௦

* நான் போராளியா? பயங்கரவாதியா? என்னைப் போராளியாக்கியதும், பயங்கரவாதியாக்கியதும் அடிப்படையில் அரசியல்தான்.
ஆயுதமே விடுதலையைப் பெற்றுத் தரும் என எமக்குப் பாடம் புகட்டியதும் அரசியல்தான்.
ஆயுதமேந்தியதால் நீ ஒரு பயங்கரவாதி என முத்திரை குத்துவதும் அரசியல்தான்.
எனக்கும் இளவயதில் எத்தனை கனவுகள், கற்பனைகள், ஆசைகள் இருந்தன ?
தொடர்ந்து....
உங்கட தலைவர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?”, “நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது?”, “தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா? நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது?” எனப் பலதரப்பட்ட கேள்விகளை என்னிடம் வினவினார்கள்.
அவர்களுடைய எந்தக் கேள்விக்கும் என்னால் தெளிவான பதில் கூற முடியவில்லை. ஏனென்றால் கடைசி நாட்களில் எவருடைய தொடர்புகளும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. தங்களுக்கிடையே சிங்களத்தில் என்னவோ பேசிக்கொண்டார்கள்.

“இயக்கத்தில் இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில் இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது: 29

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதைப் பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்.
தலைவர் கொல்லப்பட்ட காட்சிகள் அந்தப் புகைப்படங்களில் வெளியிடப்பட்டிருந்தது. உங்கட தலைவர் செத்துப் போனார், அழுங்கோ எல்லாரும்எனக் கூறியதுடன் கேலியாக அழுதும் காட்டினார். மண்டபத்திலிருந்த அனைவரிடமும் சட்டென ஒரு சிறிய ஒலியெழுந்து அக்கணமே அடங்கிப்போனது.

Monday, 15 June 2020

1985.08.18 அன்று திண்டுக்கல் சிறுமலையில் மகளிர் படையணியின் முதலாவது பாசறை: - 16


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 16 

*16 அன்ரன் பாலசிங்கம் புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா?
* பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால் போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை.
தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனேயே முடிந்தும் போனது.

Sunday, 14 June 2020

*இனிமேல் இயக்கம்தான் உங்கட குடும்பம், இங்க இருப்பவர்கள்தான் உங்கட உறவுகள், அம்மா, அப்பா எல்லாமே. எங்களுக்குத் தலைவர்தான்.

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 11

இயக்கப் போராளிக்கு இருக்க வேண்டிய முதலாவது பண்பு கட்டளைக்குக் கீழ்ப்பணிதல்.
* ஆனையிறவுப் போரிலேயே முதன்முதலாகப் பெண் போராளிகள் பெருந்தொகையில் பங்கு பெற்றிருந்தார்கள். ஒரு மாத காலத்திற்கு மேல் நீடித்த அச்சமரில் பெரும் என்ணிக்கையிலான போராளிகள் உயிரிழந்ததுடன் பலர் பலத்த காயமடைந்தும் அங்கங்களை இழந்துமிருந்தனர்.


அங்கவீனப்பட்ட பெண் போராளிகளைச் சந்திப்பதற்காகவே தலைவர் அங்கு வந்திருந்தார்.
அந்தப் போராளிகள் மிகவும் மகிழ்ச்சியாகத் தலைவருடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
தமது பொறுப்பாளர், தளபதிகளிடம் காணப்படும் பயம் தலைவரிடம் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது எனக்கு வியப்பாக இருந்தது.
குடும்பத்தில் உரிமையுடன் அம்மா, அப்பாவுடன் பேசுவதுபோல் அண்ணா அண்ணாஎன அழைத்துத் தமது பிரச்சனைகளை அவாகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இந்திய படைகளுடன் தொடங்கியது போர்! - 10


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 10

எமது மூத்த தலைவர்கள் மேடைகளில் செய்த போர்ப் பிரகடனங்களுக்காக இளைய தலைமுறையின் வாழ்வு, யுத்த வேள்வித் தீயில் ஆகுதியாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்காக இளைய தலைமுறையினர் அந்த நெருப்புக்குள் ஆவேசத்துடன் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியப் படையினருடனான போரைத் தொடங்கிவிட்டதாக மக்கள் பேச்சு. இதனால் இளவயதுப் பெண்களுக்கு அதுவொரு பயங்கரமான காலமாக உருவெடுத்திருந்தது.

இந்திய இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்திவிட்டு ஓடிச்சென்ற விடுதலைப் புலிகள்.

போருக்குள் பிறந்தேன்! - 9


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 9

இப்படியான சந்தர்ப்பத்தில்தான் இந்தியப் படையினரின் வருகை நிகழ்ந்தது.
அப்போது நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.
இனி எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்துவிடுமெனப் பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். எல்லோரையும் போலவே நாங்களும் வீதிக்கரையில் நின்று இந்தியப் படையினரைக் கையசைத்து வரவேற்றோம்.

செப் 1998 ஓயாத அலைகள் 2: கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது - 7

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 7

கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.

இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இயக்கம் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிக் காத்து வந்தது.

மாவோவின் செஞ்சேனை போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம்! - 6


ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 6 

* தாய்நாட்டை விடுவித்து  விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் என்கிற கனவு எங்களுக்குள்ளே ஆழமாக இருந்தது.
அக்கனவே எமது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கான எமது சமாதானமாகவும் அமைந்தது. 
* தங்கச்சி, நான் பிச்சைக்காரன். நாளாந்தம் கிடைக்கிற வேலைகளைச் செய்து பிச்சைக் காசு மாதிரி சேர்த்துத் தான் என்ர மகளைப் படிப்பிச்சனான், மகள் போராடப் போனது எனக்குக் கவலையில்லை.
போகட்டும், ஊரோட ஒத்ததுதான் எனக்கும்.
ஆனால் நாளைக்கு வெளிநாடுகளில இருந்து டொக்டரா எஞ்சினியரா படித்த புத்திசாலிகளாக ஆட்கள் வந்து இறங்கும்போது, நாட்டுக்காகப் போராடின என்ர மகளும் என்ர குடும்பமும் அவையளுக்கு முன்னால படிக்காத பிச்சைக்காரர்களாய்த்தானே நிற்கப் போறம்.

ஜெயசிக்குறு சமரின் காலம் ‘கஞ்சிக் காலம்’ எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது. - 5

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு- 5

ஜெயசிக்குறுமுறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது.  ஜெயந்தன், அன்பரசி படையணிகள்  கிழக்கு  மாகாணத்திலிருந்து  காடுகளுக்கூடாகப் பல நூறு மைல்களைக் கால்நடையாகவே நடந்து வந்து யுத்தத்தில் பங்கெடுத்திருந்தார்கள்.

முள்ளியவளை புதன்வயல் பகுதியில் அமைந்திருந்த அன்பரசி படையணி முகாமுக்கு அரசியல் வகுப்புகளை நடத்துவதற்காகப் பல தடவைகள் போயிருக்கிறேன்.
ஜெயசிக்குறு சமரின் காலம் கஞ்சிக் காலம்எனப் போராளிகளால் அழைக்கப்பட்டது. 
கிழக்கு மாகாணப் போராளிகளின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இல்லாதிருந்திருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கம்    பாரிய வெற்றிகளைப் பெற்றிருக்கவே முடியாது!
பத்துத் தடவைகளாகக் காயமடைந்த ஒரு போராளி மீண்டும் பதினோராவது தடவையாக யுத்த களத்துக்கு அனுப்பப்பட்டுப் போராடிய சம்பவங்களும் இருந்தன.