Showing posts with label புலிகள். Show all posts
Showing posts with label புலிகள். Show all posts

Thursday, 13 August 2020

Smuggling, Shipping and the Narcotics Trade in the History of the LTTE, 1970s-2015: - Gerald H. Peiris

 According to a report published in the 10 June 2015 issue of The Island, the Hon. C. V. Wigneswaran, Chief Minister (CM) of the Northern Province, has asserted that the presence of Sri Lanka’s army in Jaffna (peninsula) has contributed to a rapid spread of narcotics in the area, and that narcotics was never a problem during the war when the LTTE was around.

Thursday, 4 June 2020

தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம் –நிராஜ் டேவிட்

இந்தியப்படை காலத்தில் கிழக்கில் இடம்பெற்ற மிக முக்கியமான ஒரு சம்பவம்.. 
விடுதலைப் புலிகளுடன் இனிப் பேசுவதில்லை என்கின்ற முடிவை உறுதியாக எடுப்பதற்கு இந்தியாவையும் சிறிலங்காவையும் நிர்பந்தித்த சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலையை ஜே.ஆர் அறிவிப்பதற்குக் காரணமாக அமைந்த சம்பவம் என்றும் இதனைக் குறிப்பிடலாம்.

புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்வதற்குக் காரணமாக அமைந்த விடயம் என்றும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள மக்கள் கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட அந்த மோசமான சம்பவம், இலங்கையில் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படவும், அவலங்களின் அத்தியாயங்கள் பல தமிழர்களின் வாழ்வில் இடம்பெறவும் காரணமாக அமைந்தது.

கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு - பாகம்-1 to 3


தமிழர்கள்  தனிநாடு போராட்டங்களை ஆரம்பித்த காலத்திலிருந்து முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். சொத்து இழப்புகள் தொழில் இழப்புகள் என்று ஆரம்பித்து உயிரிழப்புகள் வரை தொடர்ந்தது. 1990இல்  இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் புலிகள் மீண்டும் ஊர்களுக்குள் வந்தனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் பாரிய இனப்படுகொலைகளினால் ஆயிரக்கணக்கான உயிர்களையும் இனச்சுத்திகரிப்பினூடாக கிழக்கில் சிறிய பெரிய ஊர்களையும் வடக்கில் மாவட்ட மட்டத்தில் பெரும் பிரதேசங்களையும் இழந்தனர். 

Friday, 22 May 2020

விடுதலைப்புலிகள் நடத்திய விடுதலை போராட்டம் ஏன் தோற்றது ?


கடந்த 50 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிவாகை சூடியிருக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம், உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை, 20 ஆண்டுகளில் தோற்கடித்தது. அதேபோல வெள்ளை நிறவெறிக்கெதிரான தென் ஆபிரிக்க, சிம்பாப்வே, அங்கோலா, மொசாம்பிக் மக்களின் ஆயதம் தாங்கிய போராட்ங்களும் வெற்றி பெற்றன.