மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும்
சிறுமுயற்சி!
''1990களின் வட
மாகாணத்திலிருந்து முஸ்லிம்களை
இனச்சுத்திகரிப்புச் செய்து வெளியேற்றிய அதே காலகட்டத்தில், கிழக்கு
மாகாணம் பூராகவும் வாழும் முஸ்லிம்களை தமது மண்ணிலிருந்து வெளியேற்ற
விடுதலைப் புலிகள் எடுத்த முயற்சியை, முஸ்லிம்கள் துணிந்து நின்று
தமது மண்ணிலேயே காலூண்றி எதிர்த்ததனால்தான் அவர்களால் அங்கு இனச்சுத்திகரிப்புச்
செய்யப்படாத வரலாற்றுடன் இன்னமும் வாழ முடிகிறது. இல்லையேல் 1990களில்
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தில் நிகழ்ந்த துயரமும்
வாழ்வும்தான் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கும் கிடைத்திருக்கும். இதுதான்
யதார்த்தமான நிலவரமுமாகும்''.