Showing posts with label சரஸ்வதி மண்டபம். Show all posts
Showing posts with label சரஸ்வதி மண்டபம். Show all posts

Thursday, 11 June 2020

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்; பாகம் 10 to 12

ஈழத் தமிழருக்கு இந்தியர்களும் அடக்குமுறையாளர்கள் (பகுதி - 10)

* பிரேமதாசா, அரசியலில் தன்னை ஒரு சிங்கள கடும்போக்கு இனவாதியாக காட்டிக் கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் எதிரிகளையும், நண்பர்களையும் வியக்க வைத்தார். பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஆலோசகர் ஒரு தமிழர். பிரேமதாச அரசுடன், புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் கொழும்பில் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். முக்கிய அரசியல் தலைவர்களான யோகி, தினேஷ்(தமிழ்ச்செல்வன்),ஆகியோர் கொழும்பு நகரில் தங்கியிருந்தனர். அரச செலவில் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்க வைத்ததை, எதிர்க்கட்சி அடிக்கடி சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத நட்புறவு பல பரிமாணங்களைக் கொண்டிருந்தது.

* "
வட-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் படைகளின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், கொழும்பில் அரசியல் தஞ்சம் கோரலாம்," என்று அரசே அறிவித்தது! அவ்வாறு வரும் அரசியல் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்குவதற்காக, "சரஸ்வதி மண்டபம்" அகதி முகாமாக மாற்றியமைக்கப் பட்டது!! கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் அருகில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், புலிகளும், அவர்களது குடும்பத்தினரும் அகதிகளாக பதிந்து கொண்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது.