அன்றொருகாலம்
தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற
ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.
இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த
சவால்களும், நெருக்கடிகளும்
எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள
நேர்ந்த “கிழக்கு
பிளவு”அவர்களுக்கு
மாபெரும் சவாலொன்றை விடுத்தது.