Tuesday 21 July 2020

புகலிடத் தமிழர்களின் வாய்க்கொழுப்பு புலிகளின் சீலையால் வடிகிறது. - கலைச்செல்வி

யுத்தம், அழிவு, மானிட அவலங்கள், மனிதாபிமான பார்வைகள் என்கின்ற பிரக்ஞைகள் மயிரளவுகூட இவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் பொங்குதமிழ் நடத்தி தலைவருக்கு ஆணை கொடுத்தபோது அந்த ஞானம் எங்கே போயிற்று? அனுராதபுரத்திற்கு தலைவர் எல்லாளனை அனுப்பினார் என்று ஆரவாரம் பண்ணியபோது எங்கே போனது புத்தி? போதாக்குறைக்கு இறுதி யுத்தத்திற்கு பங்களிப்பு செய்து எக்காளம் உரைத்தபோது யுத்தமென்றால் என்ன செய்யும் என்று இவர்களுக்கு தெரியாது போனதேன்

- கலைச்செல்வி

ஆயுதக் கிடங்குகள், தொலைத் தொடர்பு மையங்கள், நிலக்கீழ் மாளிகைகள், நீர்த்தடாகங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக புலிகள் எல்லாவற்றையும் கைவிட்டு புறமுதுகு காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். கஞ்சா தோட்டங்கள் மட்டுமே இன்னும் எங்காவது எஞ்சியிருக்கலாம்.

அம்பாறை கஞ்சுகுடி ஆற்றிலும் தொப்பிகலையிலும் இருந்து புலிகள் இப்படித்தான் புறமுதுகு காட்டி ஓடிய போது புலிகளின் முதலாவதும் இறுதியுமான இராணுவப் பேச்சாளர் இராசையா மார்சல் இளந்திரையன் புலிகள் நகரும் முகாம்களைக் கொண்டு இயங்கத் தொடங்கியுள்ளனர் என சொன்னார். நகரும் முகாம்கள், ஓடும் முகாம்களாக மாறி இப்போது மிதக்கும் முகாம்களாக செயற்படுவதாகக் கேள்வி.

சர்வதேச கடல்பிராந்தியங்களில் நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களில் நின்றுகொண்டு எஞ்சிய தளபதிகள் புகுக்குடியிருப்பில் எஞ்சியிருக்கும்; அடிமட்டத்தொண்டர்களை இன்னும் சில வாரங்களுக்கு மட்டுமே வழிநடத்தலாம். படை வலுச்சமநிலை பற்றி உலகத் தமிழர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த தமிழ் செல்வன் தற்போது இருந்தால் சிரித்துக்கொண்டே என்னதான் சொல்லியிருப்பார்? யார் செய்த புண்ணியமோ தமிழ்செல்வன், பால்ராஜ், பாலசிங்கம் வகையறாக்கள் மரியாதையுடன் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

வான் கரும்புலி ரூபன் ''தலைவரின் கரங்களை பலப்படுத்துங்கள்'' என்று கடிதம் எழுதி வைக்கும் அளவிற்கு தலைவர் பலவீனமாகி விட்டார் என்பது வெட்டவெளிச்சம். ஆனால் இதை புகலிட சமூகம் மட்டுமே இதை ஒத்துக்கொள்ள தயார் இல்லை.

இந்தநிலையிலும் கூட எங்கள் தலைவர் பிரபாகரனே, எமக்குத் தேவை தமிழீழமே என்ற பதாதைகளை தூக்கிக்கொண்டுதான் முல்லைத்தீவு மக்களுக்காக குரல்கொடுப்பதாக புகலிட சமூகம் அழுது வடிகிறது. கவன ஈர்ப்பு போராட்டங்களிலும் ஒன்று கூடல்களிலும் இளையோர்களின் உண்ணா நோன்புகளிலும் புலிகளுக்காக ஓலமிடும் இந்தத் தமிழர்களை என்ன சொல்வது? இவர்களின் நோக்கமெல்லாம் யுத்தத்தை நிறுத்துவதில்லை. இப்போது யுத்த நிறுத்தததை கோகுவதன் ஊடாக தலைவரைக் காப்பாற்றி இலங்கையில் மீண்டும் யுத்தததை தொடர்வதே இந்த உலகத் தமிழர்களின் உள் நோக்கமாகும்.

யுத்தம், அழிவு, மானிட அவலங்கள், மனிதாபிமான பார்வைகள் என்கின்ற பிரக்ஞைகள் மயிரளவுகூட இவர்களிடம் இல்லை. அப்படி இருந்திருந்தால் பொங்குதமிழ் நடத்தி தலைவருக்கு ஆணை கொடுத்தபோது அந்த ஞானம் எங்கே போயிற்று? அனுராதபுரத்திற்கு தலைவர் எல்லாளனை அனுப்பினார் என்று ஆரவாரம் பண்ணியபோது எங்கே போனது புத்தி? போதாக்குறைக்கு இறுதி யுத்தத்திற்கு பங்களிப்பு செய்து எக்காளம் உரைத்தபோது யுத்தமென்றால் என்ன செய்யும் என்று இவர்களுக்கு தெரியாது போனதேன்?

இந்த யுத்தம் மறுகேள்வியின்றி நிறுத்தப்பட வேண்டியதென்று 25 வருடகாலமாக சொல்லிவந்தவர்களை யெல்லாம் துரோகிகள் என்று சுட்டுவிரல் நீட்டியது இந்தக் கூட்டம்தான். நாட்டில் வாழும் மக்களைப் பற்றி கடுகளவும் கருசனையில்லாத புகலிடத் தமிழர் கூட்டம், புலிகளை முறுக்கேற்றிவிட்டு இப்போது யுத்தத்தை நிறுத்தச் சொல்லி பினாத்துகிறது. யாரிடம் கேட்பது யுத்தத்தை நிறுத்தச் சொல்லி?

இப்பொழுது இன்னும் ஒரு செய்தி பரவுகின்றது. விடிய எழும்பியவுடன் இன்றைக்கு எத்தனை பேர் செத்திருக்கினம் என்று பலபேர் ஆவலுடன் பார்கத்தொடங்கியிருக்கிறார்களாம். ஒரு ஐநூறு ஆயிரம் என்று செத்தால்தானே உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பலாம் என்று வாய்விட்டு மற்றயவர்களிடம் சொல்லுமளவிற்கு குரூரமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது இந்தக் கூட்டம்.

மக்களின் வாழ்வு குறித்து அக்கறைப்படும் எவனுக்காவது இப்படி சிந்திக்கத் தோன்றுமா?

இதிலிருந்து இந்த மனநோய் பிடித்த புகலிட தமிழர் கூட்டத்தின் உண்மையான அக்கறை வன்னி மக்களின் வாழ்வு பற்றியதல்ல என்பது புலனாகின்றது.

வெளிநாடுகளில் குடிகொண்டுள்ள தத்தமது விசாவும் நசனலிட்டியுமே அவர்களது அக்கறைகளின் அடிப்படையாகும்.

அப்படி இல்லையென்று சொன்னால் வன்னி மக்களை காப்பாற்ற ஒரே வழிதான் உண்டு. யுத்தத்தை நிறுத்தச் சொல்லி அரசைக் கோருவதற்கு மோட்டுச் சிங்களவன், சிங்களம் என்று தினாவெட்டுப் பேசிய  யாருக்கும் அருகதை இல்லை. ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையச் சொல்லி உங்கள் தேசியத் தலைவரிடம் சொல்லுங்கள். அதுவரை உங்கள் வாய்க்கொழுப்புகள் புலிகளது சீலையால் வடிந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் பாவம் வன்னி மக்கள்தான்.

Courtesy - unmaikal

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.