Saturday 18 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (6 - 10) எஸ்.எம்.எம். பஷீர்

புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம்

இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிப்பதென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது.

எஸ்.எம்.எம். பஷீர்



முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஏகபோகத்தினை நிலைநாட்ட முயற்சித்தாலும் இது அரசியல் சார்ந்த நிறுவனமாக நிலவ வேண்டுமென்பதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சிகளில் தடையேற்பட்டது. ஏனெனில் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் அதிகாரத்தில் இருந்தபடியினாலும், அவர்களையும் பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆரம்பகால தலைவர்களாக செயற்பட்டவர்களான எம்.ஐ.எம் முகைதீன், ஜாவிட் யூசுப் ஆகியோர்  விலகிக் கொள்ள வேண்டிய  சூழ்நிலையும் எற்பட்டது.

அதிலும் ஜாவிட் யூசுப் கட்சி அரசியல் சார்புநிலை அதில் மேலோங்குவதையும், நிர்வாக முறைகேடுகளையும் சகிக்க முடியாமல் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. இவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் சவூதி அரேபியாவின் முன்னாள் தூதுவர் பதவியிலிருந்தும் பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியிலிருந்தும் சுதந்திரமாக தான் செயற்படமுடியாது என்பதால் தன்னிச்சையாக பதவியிலிருந்து விலகிக்கொண்டவர் ஆவார். இவருடன் மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான சட்டத்தரணிகள் (Lawyers for Human Rights and development) ஸ்தாபனத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு.

இன்னுமொருவரான எம்,.ஐ.எம் முகைதீன் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் செயற்பட்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ்; அரசதரப்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.. ஆயினும் இவர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

இறுதியாக சுவிஸில் இடம்பெற்ற அரசு புலி பேச்சவார்த்தையின்போது அவ்வேளை அரச பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரியல் அஸ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வறிக்கைகளை தந்துதவுமாற கேட்டபோது அவற்றிற்கு குறிப்பிட்ட பணம் தருமாறு எம,.ஐ.எம் முகைதீன் கேட்டதாக குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்பட்டது.

இது எவ்வாறாயினும் நோர்வே அரசும் ஒரு எதிரிடையான முஸ்லிம் சமாதானச் செயலகம் ஏற்படாதிருப்பதில் கவனமாக இருந்தனர். ஏனெனில் மறுபுறம் புலிகள் ஏகபோகமான தமிழர் பிரதிநிதிகளாக இருப்பதனை உறுதிசெய்வதிலும் கவனமாக இருந்தனர். தமிழர்களுக்கென புலிகளின் சமாதானச் செயலகம் மாத்திரம் இயங்கியதுடன் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள், கருணா பிளவின் பின்னரான கிழக்கு தமிழர்களை மையப்படுத்தும் சமாதான பிரிவினைக் குரல்களை அலட்சியம் செய்துவந்தனர்.
மறுபுறம் சமாதானம் என்ற போர்வையில் தீவிரமாக புலிகளினுடைய போர்ப்பயிற்சிகளும், சிறுவர்களை படையணியில் சேர்த்தலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இன்று வன்னியில் கைதாகியிருக்கும் தமிழினியின் தலைமையில் நடாத்தப்பட்ட பயிற்சிப் பாசறை ஒன்றின் பிரத்தியேகப் புகைப்படம் ஒன்றினை சான்றாக இங்கு நான் முன்வவைக்கின்றேன்.

சென்ற வருடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, வடகிழக்கு அரசியலை முன்னெடக்க வேண்டுமென்னும் சமிஞ்சை காட்டியதுடன் கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவது கிழக்கை அங்கீகரிக்கும் விடயமாக ஆகிவிடுமெனக் கருதி விலகியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸினருடன் அடிக்கடி கூடிப் பேச்சு நடாத்தி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸினை அவர்கள் ஒரு நேச சக்தியாக பார்க்கின்றார்கள்”. இன்னொரு புறத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற முடிவானது வடக்கிலிருந்து கிழக்கினை பிரிக்கும் அனுமதியாக கருதப்படக்கூடாது ஏன்ற கருத்தினையும் பகிரங்கமாக முன்வைத்து செயற்பட்டதுடன் ஒருபடி மேலேசென்று தமிழ்பேசும் மக்களின உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமமாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்தவத்தைக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பும, முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து தெர்தலில் போட்டியிட வேண்டுமென்னம் அபிப்பிராயம் வலுவடைந்து வருவதாகஆதாரபூர்வமற்ற முஸ்லிம்களின் ஆதரவற்ற ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுவைப்பதில் முரண்பட்ட ரவூப் ஹக்கீமின் தன்னிச்சையான கருத்தும் அவரது வியூகங்களும், உபாயங்களும்புலம்பெயர் பலி சார்பு தளங்களின் கவனத்தினை ஈர்த்தன. 
லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre) ) முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சபை உறுப்பினருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பு தொடர்பில் செயற்பட்டவருமான அமீர் பாயிஸ் என்பவரை அழைத்து அதுகுறித்த கருத்தாடல் ஒன்றினை 07.12.2008  ஆம் ஆண்டு நடாத்தி அம்முயற்சிக்கான ஆதரவு தளத்தினை உருவாக்குவதற்காக முனைப்புடன் புலம்பெயர் தமிழர் தரப்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வேளை புலிகள் தோற்கடிக்கப்படாவிட்டிருந்தால் சுதந்திரமாக செயற்படும் நிலைமை தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்படாதிருந்திருந்தால் இம்முயற்சிகள் வெற்றியளித்திருக்கும். 

இன்று இந்தச் சமாதானச் செயலகம் தன்னுடைய அடிப்படைக் கோட்பாடுகளாக சகல முஸ்லிம் கட்சியினரிடையும, பங்குதாரரிடையும் கருத்தொருமைப்பாட்டினை கட்டியெழுப்புகின்ற ஒரு பிரகடனத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் முஸ்லிம் காங்கிரசும், தேசிய ஐக்கிய முன்னணியுமே இதன் செயற்பாடுகளில் பங்காளிகளாக இருக்கின்றார்கள்.

நோர்வே மட்டுமல்ல பிரித்தானியா போன்ற பல மேற்கத்திய நாடுகள் இச்சமாதானச் செயலகத்திற்கு நிதியுதவி அளிக்கின்றார்கள். நோர்வே அரசு 2003 ம் ஆண்டிலிருந்து புலிகளின் சமாதானச் செயலகத்திறகு வருடம் தோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிவந்தது. அண்மையில் அரசியல் தலையீடும், தவறான முகாமைத்துவமும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் நிலவுவதாக குற்றம்சாட்டி இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள். உதவிகளை நிறுத்திவிட்டனர். 

அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் இதன் இயக்குனர்கள் அதிகளவான பணத்தினை கையாடியுள்ளார்கள் என்றும், சம்பளமாக எடுத்துள்ளார்கள் என்பதுமாகும். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்ற செய்தி வெளியிட்டிருந்தது.

இச்சமாதானச் செயலகத்தின் இயக்குனர்களாக செயற்படுபவர்களில் எம்.எச்.எம் சல்மான் என்பவரும் ஒருவராவார். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்த இன்னுமொரு இயக்குனரான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் கணக்காய்வு செய்யப்படவுள்ளதாக அறிவித்தார். எனக்கு நெருக்கமானவரும் இச்செயகத்தில் செயற்படும் ஒரு சிலரை நெருக்கமாக அறிந்தவருமான கொழும்பிலுள்ள ஒரு சட்டத்தரணியை நானும் இதுகுறித்து விசாரித்த பொழுது அவரும் இந்த ஆங்கிலப் பத்திரிகையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து இயக்குனர்களாக செயற்படுபவர்கள் சுமார் 75 ஆயிரம் ரூபாயினை மாதாந்தச் சம்பளமாக எடுத்துக்கொண்டதாகவும் தனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுவதையும் மறுபுறம் இச்சமாதானச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய உறுப்பினரிடம் ஏன் இதற்கான மறுப்பறிக்கையினை வெளியிடவில்லை எனக்கேட்ட பொழுது தாங்கள் இதுகுறித்து "கிண்ட" விரும்பவில்லை என்றும் இதற்குப்பதில் கொடுத்தால் பிரச்சினையாகிவிடுமெனவும் குறிப்பிட்டார். 

தமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசுக்கு எதிரான அறிக்கைகளை மிகத்தீவிரமாக வெளியிட்ட காலகட்டத்தில சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான தொடர்புகளைப் பேணி தமிழ் தேசியவாத உணர்வுகளுக்கு உரமிட்டும் செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவந்தனர்.

2007 ம் ஆண்டு ஆகஸ்ட: மாதத்தில் புத்தளத்தில் செயற்பட்டுவந்த முஸ்லிம் சமாதானச் செயலக அலுவலகம் பிரதி அமைச்சர் கே.ஏ பாயிஸினால் முற்றுகையிடப்பட்டு அலுவலக உபகரணங்கள் உடைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இதனை பாயிஸ் மறுத்ததுடன் புத்தளத் பிரதேச மக்களை உள்ளடக்காத அவ்வலுவலகம் மூடப்படவேண்டுமென்பது அவரது குறிக்கோள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிரான முறைப்பாட்டினை செய்வதினை ஹக்கீம் தடுத்ததாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகின. வடமாகாண முஸ்லிம்களினுடைய பிரச்சினைகள் குறித்து தனியான முஸ்லிம் சமாதானச் செயலகம் உருவாவதற்கான காரணங்களாக இவையெல்லாம் அமைந்தன.

இம்முஸ்லிம் சமாதானச் செயலகம், அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோ, தேசிய ஐக்கிய முன்னணியோ 18 வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்பற்றி ஒருபோதும் சிலாகித்துப் பேசவில்லை. அவர்களின் விடுதலைக்காக எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. 

13.04.2002 ம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஹக்கீம் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்தபொழுது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்கள் சார்பில் பங்குபற்றியதுடன் வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவினைப்பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதால் முஸ்லிம் காங்கிரஸினருடன் மட்டுமே பேசவேண்டுமென்னும் தீர்மானமும் ஒப்பந்த சரத்துகளாக அமைந்தன. ஆனால் இச்சமாதானச் செயலகத்தினுடைய இணையத் தளத்தில் 18 வருடங்களுக்குப் பின்னர் த.தே..கூ பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இமாம் அவர்கள் பிரபாகரனைச் சந்திக்க நேரிட்ட பொழுது அவர் ஏற்கனவே ஒட்டி வாழ்ந்தோம் வெட்டிவாழவில்லை...

(ஓட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை யாழ் முஸ்லிம் பிரமுகர்களின் கூட்டறிக்கை) இவ்வேளையில் எவ்வித தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால் தங்கள்வசமிருக்கும யாழ் முஸ்லிம் 35 இளைஞர்களையும் விடுதலை செய்யுங்கள். பிள்ளைகளைப் பிரிந்து ஏக்கத்தில் சில பெற்றோர் மரணித்துவிட்டனர். இவர்களைப் பிரிந்து வாழும் பெற்றோர்களும், மனைவியர்களும் பிள்ளைகளும் கொட்டில்களில் துன்பம் நிறைந்த அகதி வாழ்க்கை வாழ்ந்தாலும் இவர்களது வரவால் மகிழ்ச்சியடைவர். யாழ் முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் ஒட்டிவாழ விரும்புகிறார்களேயொழிய வெட்டிவாழ விரும்பவில்லை. எமது தாயகமும் வடக்கே! வீரகேசரி (09-06.96ல்) பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.)

.. என்ற அறிக்கையில் புலிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட சம்பவம் குறித்து முதன் முதலில் இமாம் கேட்கவில்லை என்பது குறித்து இமாம் ஒரு இமாமாக இருப்பாரா” (Will Imam be an Imam?)
  என்ற தலைப்பில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையினை தமிழில் மூலத்திருட்டுச் (Plagiarism) செய்து  (காப்பியடித்து) வெளியிட்டு நீலிக்கண்ணீர் வடித்திருந்தார்கள். அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களிடம் முறையிட்டதுபோல் ஒரு தோற்றப்பாட்டினையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.

இச்சம்பவம் ஒரு பொதுவான அறிவிற்குட்பட்ட விடயமாக இருந்திருப்பினும் இதனில் காட்டப்பட்ட ஆதாரங்கள், வசன ஒழுங்குகள் யாவும் மூலத்தினைக் கோடிட்டுக் காட்டாமல் மொழியாக்கம் செய்யப்பட்டதாகும். இதுபற்றி இணையத்தள ஆசிரியரிடம் நான் செய்த முறைப்பாடு ஆசிரியரிடமிருந்து கவனிப்பதாக கூறியபோதும் எவ்வித பதிலும் பலமாதங்களாகியும் -இதுவரையில்- வரவில்லை. இதபற்றி நான் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருடன் கதைத்தபொழுது அவரும் தனது ஆய்வுகளின் தரவுகள் பல மூலம் கூறப்படாமல் அவ்விணையத்தளத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். போலித்தனமாக தங்களை வளம் படுத்திக்கொள்ளும் சமூக அமைப்புக்களையும், குறுகிய அரசியல் செயற்பாடுகளையும் மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய காலம் இப்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்பார் க்கப்படுகின்றது.
 
தொடரும்.

Thenee, lankamuslims, unmaikal and mahavali (28/07/2009)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்- 7



பிரபாகரன் தலைமையிலான புலிகளுக்கும், ரணில் விக்கிரமசிங்காவிற்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையைத் தொடாந்து (22.02.2002) வன்னியில் சிறுவர்களுக்கான ஆயுதப்பயிற்சியினை மார்ச் மாதம் புலிகள் தீவிரப்படுத்தியமைக்கான ஆதாரங்கள் இவை

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் லண்டனில் 23 மார்ச் 2002ல் மார்லபோண் லண்டன் கில்ரன் ஹொட்டலில் (Marlebone Hilton Hotel , London) இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில ஒப்பந்தத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து எனது அதிருப்தியினை நான் வெளிப்படுத்தியபொழுது ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களை ரணில் விக்கிரமசிங்க கவனிப்பாரென்றும் ஏனைய சமூகங்களுடன் சமமாக நடத்துவதை உறுதிசெய்வாரென்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்தக்கூட்டம் சிறீ.ல.மு.காவினால் ஒழுங்கு செய்யப்பட்டது என்று உண்மைக்கு மாறாக உறுதியாக குறிப்பிட்டார்.
ஏனெனில் ஹொட்டல் நிர்வாகத்தினர் இக்கூட்டத்தினை ஒழுங்கு செய்தவர்கள் ஐக்கிய ராஜ்யத்திலுள்ள இலங்கை தூதவராலயத்தினர் என்று நிரலிட்டிருந்தனர். மேலும் இக்கூட்டத்தில் இரண்டு அரச சிங்கள அவரின் அமைச்சின் உத்தியோகஸ்தர்களும் இச்சமூகக் கலந்துரையாடல்களுக்கு சம்பந்தமில்லாமல் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.


சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயினது சகல செயற்பாடுகளும் தீவிரமாக ஆராயப்படவேண்டும் இதுகுறித்து இலங்கைபற்றிய தனது ஆய்வொன்றில் பேராசிரியர் அலன் கீனன் (Prof. Alan Keenan) என்பவர் ஐ.தே.கட்சி நோர்வேயினது வியூகம் புலிகளுக்கு இராணுவ சுதந்திர ஆதிக்கத்தை வடகிழக்கில் வழங்கியது, ஐ.தே.கட்சி அரசு பகிரங்கமாக ஒருபோதும் யுத்த நிறுத்தம் தொடர்ந்தவுடனே ஆரம்பித்த புலிகளின் அரசியல் படுகொலைகளையோ, தொடர்ந்த சிறுவர் படைச்சேர்ப்பு, ஆயதக் கட்டமைப்பினையோ அல்லது சட்டமீறலான வரிவிதிப்பினையோ விமர்ச்சிக்கவில்லை”. என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இலங்கையின் நேரடியாக விஜயம் மேற்கொண்டு தனது ஆய்வுகளை மேற்கொண்டவராவார். மேலும் இவர் புலிகளின் இடைக்கால தன்னாட்சிச்சபைக்கான நிர்வாக சபை (ISGA) குறித்து பேரில் தவிர இடைக்கால தன்னாட்சிச்சபைக்கான நிர்வாக சபை ஒரு சுதந்திர நாட்டிற்கான திட்டவரைவு என தெளிவாகக் குறிப்பிட்டவர்.

புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமதையாக முஸ்லிம்களின் தேசியத் தலைவரென தம்மை பிரகடனப்படுத்தி ஒப்பந்தத்தில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்ட சரத்தான அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஆரம்பிக்கப்படவுள்ள பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம் மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளும் ஒரு தரப்பாக பங்குபற்றுவதென்றும”;. ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம் புலிகளின் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் இறுதிப் பேச்சுவாhத்தைவரை இடம்பெறவில்லை.

புலிகள் திட்டவட்டமாகவே ஒப்பந்தமீறல்கள் செய்தது மட்டுமல்ல முஸ்லிம்களை மூன்றாம் தரப்பாக எச்சந்தர்ப்பத்திலும் அங்கீகரிக்கவில்லை.

மறுபுறம் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சௌகரியமாக இதனை மறந்துவிட்டு பத்திரிகை அறிக்கைகளில் தமது சவால்களை காட்டிவந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தளமானது ஏகபோக உரிமைக்குரலானது மேலும், மேலும் நெருக்கடிக்குள்ளானபோது நோர்வேயின் செயற்பாடுகளில் முஸ்லிம்கள் தொடர்பான மூன்றாம்தரப்புப் பிரச்சினை அதிலிருந்து வெளியேறிய பிரிவினரால் தீவிரமாக முன்வைக்கப்பட்டபோது; இந்நிலைப்பாட்டினுடைய சிக்கல்களை உணர்ந்துகொண்ட நோர்வே அரச ஒரு அதிரடி நடவடிக்கையினை மேற்கொண்டது. நோர்வேயின் ஏற்பாட்டில் ஹக்கீம் பாலசிங்கத்தை லண்டனில் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஹக்கீம் பாலசிங்கத்தை சந்திக்கமுன்பு அன்றைய தினம் என்னை சந்துத்துவிட்டே சென்றார்.ஆயினும் எங்களது சந்திப்பு தனிப்பட்டதாவே அமைந்தது.அவர் எதிர்கொள்ளப்போகும் பேச்சுவார்த்தை குறித்து எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

ஆனால் பின்னர் முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுவிட்டதென்றும் பாலசிங்கத்துடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததென்றும் ஹக்கீம் எவ்வித ஆதாரமுமற்று வெளிப்படையான எதிர்த்தரப்பு (புலிகள்) உறுதிப்பாடுமின்றி கருத்துக்களை முன்வைத்தார்.

பாலசிங்கம் இறந்தபொழுது பிரபாகரனுக்கு சமமாக அனுதாபச் செய்தியினையும் ஹக்கீம் வெளியிட்டார். அதாவது பாலசிங்கம் சிறந்த புத்திஜீவி, தத்துவ வித்தகர், யாக்கிரதையான பேரம்பேசுபவர், ராஜதந்திரி, தமிழ் தேசியவாதி, புலமையாளர், முஸ்லிம்களின் குரலை ஆர்வத்துடன் செவிமடுத்த தமிழ் தேசத்தின் காதுகள், அரசியல் தத்துவஞானிஎன்று குறிப்பிட்டார். பிரபாகரன் பாலசிங்கத்தினை தமிழ் தேசத்தின் குரல் என்று விதைந்துரைக்க ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் குரலுக்கு செவிமடுத்த காதுகள் என்று வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட பொழுது செவிடாய் இருந்த காதுகள்பற்றி விதைந்துரைத்தார்.மேலும் இவரே தமிழ் செல்வன் இறந்தபோதும் அவர்களுக்கிடையிலான உறவு குறித்து சிலாகித்து பாராளுமன்றத்திலே அனுதாபம் தெரிவித்தவராவார்.

இலங்கை அமைச்சர்களில் இருவரே பிரபாகரனை சந்தித்துள்ளார்கள் இவ்விரண்டு சந்திப்புக்களும் ஐ.தே கட்சி ஆட்சியிலிருந்தபொழுதே நடைபெற்றிருக்கின்றன 18 ஏப்ரல் 1990 ம் ஆண்டு முன்னாள வெளியுறவு அமைச்ர் ஏ.சி.எஸ் ஹமீத் அவர்களுக்கு பின்னர் சந்தித்தவா ரவூப் ஹக்கீமாகும் ஆனால் முன்னையவரின் சந்திப்பு பிரேமதாசாவின் தூதினை எடுத்துச்செல்ல பின்னே வரும் சந்திப்பு தமது சுய அரசியலை ஸ்திரப்படுத்துவதற்கும் நோர்வே அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுவதற்குமாகும்.

(தொடரும்)

July 15, 2009
thenee.com,lankamuslims.com.mahavalai and unmaikal

(பாகம் -8)

ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை ---அற்புதன்)

அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் முன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் --ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும்.

இலங்கை--இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார்.

மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர்.

புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னர் குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறித்து இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது.

இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம  ஒன்றினைச் செய்வதற்கு இந்திய --இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைத்துவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய---இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர்.


முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் கொண்டவர் எம்.ஐ.எம் முகைதீன் . அவர் பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும்  அனுப்பிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகையில்

எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள்.

இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான்.

தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது

வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், தூரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது.

இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது.

எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல் கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியதுஎன்று குறிப்பிடப்பட்டிருந்தது.


கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர்.

இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும்.

இவ்வொப்பந்தம் புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம்.

ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது.
புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.

இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிப்பதென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( வுhநல (ஆரளடiஅள ) யசந ய னளைவinஉவ நவாniஉ பசழரி கயடடiபெ றiவாin வாந வழவயடவைல ழக வுயஅடை யெவழையெடவைல ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.

( தொடரும் )

thenee.com (28.07/2009)

(பாகம்-9)


எம்.ஐ.எம் முகைதீன் குழவினர் இரண்டு தடவைகள் சென்னைக்கு விஜயம் செய்து முதலில் மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களுடனும் செப்டம்பர் 1987 ல் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தனர். எனினும் இரண்டாவது தடவையான   (சித்திரை 1988)  விஜயத்திற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய ஆயதக் குழக்களின் முஸ்லிம்கள் மீதான அடாவடித் தனங்கள் குறித்து மு.ஐ.வி முன்னணி ஹர்த்தால்களை நடாத்தியிருந்தது. குறிப்பாக ஈ.என்.டி.எல்.எப், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவே

இவர்கள் இரண்டாவது விஜயத்தில் 17 முஸ்லிம்களை கல்முனையில் கொல்லப்பட்டமை குறித்து இவ்வாயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் இந்தப்படுகொலைகளுக்கு புலிகள்தான் பொறுப்பு என்று முஸ்லிம் குழுக்களிடம் குற்றம்சாட்டும் முயற்சியில் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்த இவர்கள் தங்கியிருந்த பிரசிடன்ற் ( President)  ஹொட்டலில் முற்பட்டனர். எனினும் மேலும்  அவர்களிடம் ''புலிகளை மட்டும் சந்திப்பதற்கா வந்தீர்கள் புலிகளிடம் மட்டும்தான் ஆயுதங்கள் இருக்கின்றது என்றும் நீங்கள் நினைக்கின்றீர்களா என்றும் கேள்வி எழுப்பி, எங்களிடமும் ஆயுதம் இருக்கின்றதெனச் சொல்லி இவ்விரண்டு ஆயுதக் குழுக்களின் பிரதிநிதிகள் அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொண்டனர். இச்சம்பவம் குறித்து தமிழகத்தில் வெளிவரும் யூனியர் விகடன் (ஜூவி) என்னும் வாராந்த சஞ்சிகை முஸ்லிம் தலைவர்கள் மரியாதையுடனும். சாந்தமாகவும் அச்சுறுத்திய இளைஞர்களை நோக்கி ' இங்கே பாருங்கள் தம்பிமாரே நாங்கள் கிழக்கு மாகாணத்தில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் குறித்து சென்னையிலிருந்து அறிக்கைகளை விடுபவர்கள் அல்ல, நாங்கள் எல்லோரும் அங்கிருந்து வந்தவர்கள்தான். எங்களிடம் நீங்கள் கல்முனையில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு உங்களுடைய இயக்கம்தான் பொறுப்பு என்பதனை நிரூபணம் செய்வதற்கு எங்களிடம் சான்றுகள் இருக்கின்றன. நீங்கள் அவ்வாறு விரும்புவீர்களானால் நாங்கள் அவற்றை பகிரங்கமாகவே வெளியிடத் தயாராக இருக்கின்றோம்.'

என்றும் தங்களிடம் ஆயுதம் இருக்கின்றதென குறிப்பிட்ட இளைஞர்களை நோக்கி 'நாங்கள் ஆயுதங்களுக்குப் பயந்தவர்கள் என்று நினைத்திடவேண்டாம், நாங்கள் ஏன் புலிகளுடன் கதைக்க வந்தோமென்றால் அவர்களிடம் ஆயதம் இருப்பதென்பதற்காக அல்ல, மாறாக அவர்கள் தமிழர்களின் சட்டபூர்வமான பிரதிநிதிகள் என்பதால் நீங்கள் எங்களை ஆயுதத்தினால் அச்சுறுத்த முயற்சித்தால் நாங்களும் ஏராளமான ஆயதங்களை வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல நாங்கள் மூன்றாவது தரப்பினருக்குப் பின்னால் பாதுகாப்புத் தேடி பலத்தைக் காட்ட மாட்டோம்.இது (ஐ.பி.கே.எப் );டன் இவர்கள் சேர்ந்திருப்புது குறித்தே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தது என்னவென்றால் இந்தியப் பத்திரிகையாளரிடம் இம்முஸ்லிம் குழுவினர்; அந்தக்காலகட்டத்தில் கல்முனையில் இடம்பெற்ற முஸ்லிம்கள் 17 பேரின் படுகொலைக்கு புலிகள் காரணமல்ல வேறுஒரு ஆயதக்குழவினர்தான் காரணமென்று வெளியிட்ட அறிக்கைதான் இவ்விரு ஆயுதக்குழுவினரது கோபத்திற்கும் காரணமாயிற்று. முஸ்லிம் குழுவினரின் மூலம் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு மறுபுறத்தில் புலிகளும் உரம் சேர்த்தனர்.

இவ்வொப்பந்தத்தின சில அம்சங்களை இங்கு பார்ப்பதும் ஒருவரலாற்றினைப் பின்னோக்கிப் பார்ப்பதாக அமையும் என்பது மட்டுமல்ல தமிழ் தேசியவாதம் முஸ்லிம் அரசியலை தந்திரோபாயமாக எவ்வாறு முடக்கிவந்திருக்கின்றது என்பதற்கு ஆவணப்பதிவாகவும் அமைகின்றது. இவ்வொப்பந்தத்தின் அம்சங்களாக

•    ,
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழியினை பேச்சு மொழியாகக் கொண்டிருப்பினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்பட்ட ஒரு தனித்துவக்குழு.

•   
முஸ்லிம் மக்கள் தங்களுடைய அக்கறைகள் தங்களின் தாயகத்தில் மாத்திரமே பாதுகாக்கப்படுமென்றும் இது அனைத்து தமிழ் பேசும் மக்களிடையேயான பரந்துபட்ட ஒற்றுமையினூடாகவே அடையப்படக்கூடியது என்றும் நம்புகின்றார்கள்.

•   
முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பகுதி, ஏனைய தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயகம்போல் தமக்கும் தாயகமே என்று புரிந்துள்ளார்கள்.

•   
முஸ்லிம் மக்கள் தமது தாயகத்தில் சிறுபான்மையினராக உள்ளதால் அவர்களது வாழ்க்கை அச்சம், பாதுகாப்பின்மையிலிருந்து சுதந்திரமாக வாழ்வதனை உறுதிசெய்வது முக்கியமானதாகும்.. புலிகள் இதனை உறுதிசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டவாக்கத்தினை உருவாக்குவதில் ஒத்துழைப்பு நல்குவார்கள்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் சனத் தொகையில் 33 வீதமாகவும்; இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களில் 18 வீதமாகவும் உள்ளனர். ஆவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யவும், நீதியான அதிகாரப் பகிர்வினை அனுபவிப்பதனை இயலுமாக்கவும், மாகாண சபையிலும் அதன் மந்திரி சபையிலும் 30 வீதத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு குறைவில்லாத பிரதிநிதித்துவத்திற்கு உரித்துடையவர்களாக இருக்கவேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

•   
மேலும் எதிர்கால நிலப்பங்கீடு எல்லாவற்றிலும் முஸ்லிம் மக்கள் 35 வீதத்திற்குற்கு குறையாத விழுக்காட்டினை கிழக்கு மாகாணத்திலும் 30 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை மன்னார் மாவட்டத்திலும் 5 வீதத்திற்கு குறையாத விழுக்காட்டினை ஏனைய பகுதிகளிலும் பெறுவதற்கு உரித்துடையவர்கள் ஆவார்கள் என்பதனை எற்றுக்கொள்ளள்

•   
முஸ்லிம் ஒருவர் வடக்கு, கிழக்கு மாகாணசபை முதலமைச்சராக தோந்தெடுக்கப்படாதவிடத்து முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராக மேற்படி சபைக்கு நியமிக்கப்படுவதனை உறுதிசெய்யும் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.


ஆகிய விடயங்கள் ஏனைய சில இங்க குறிப்பிடப்படாத அம்சங்களைவிட முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களாகும் இவ்வாறான ஒப்பந்தத்தின்மூலம் முஸ்லிம் குழுவினர் புலிகளின் அரசியல் சாமாத்தியத்திற்குள் சிக்குண்டு வெற்றிப் பெருமிதத்துடன் இலங்கைக்கு திரும்பினா.;---

தொடரும்.......
.

பாகம் 10

1988
சித்திரையில் கிட்டு பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின.


1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39 இளைஞர்கள் ஊர்காவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள் செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர்.

காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞ்சாட்டியது தவிர, தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியான நிர்வாகத்தின்கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதலின்பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட், ரொலோ,, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.

கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை.
இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட்; பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தர்பபத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை; முஸ்லிம்மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வடகிழக்கு இணைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார்.

சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் ''ஐபிகேஎப் னாலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள் மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் மு.ஐ.முயினருடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள); எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே மு.ஐ.வி.முன்னணியினரை மு.காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது'' என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐ.பி.கே வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கiறாக இருந்தனர்.

13 ந் திகதி ஜனவரி 1988ல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே த.வி.கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது.

1037 பிகே படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் ''வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஐ.பி.கே தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ், சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்தார்.; 1988 சித்திரை முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாhத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.—  

தொடரும்
thenee.mahavalai (27/09/2010)