Tuesday 14 July 2020

1989ல் EPRLF குழுவினரால் காரைதீவில் கொல்லப்பட்ட 43 முஸ்லிம் போலீசார்: தமிழீழம் இதழ்


இலங்கை மாகாணப் போலீஸ் படைக்கு துணையாக செயல்படுவதற்காக அமைக்கப்பட்ட EPRLF குழுவினரின் படை, அம்பாறை மாவட்டத்தை விட்டு இந்தியப்படை விலகியதும், அங்குள்ள சவளக்கடை கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய மாகான போலிஸ் நிலையங்களை சுற்றிவளைத்து தாக்கியது.

தனது மாகாணசபை அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட, தமிழ்பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட போலிஸ் நிலையத்தின் மீது EPRLFயினர் தாக்குதல் நடத்தியதன் மூலம் தமது நடவடிக்கையின் உள்நோக்கத்தை வெளிக்காட்டினர்.

இதில் காரைதீவில் மட்டும் 43 முஸ்லிம் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முஸ்லிம்களை ஆத்திரமூட்டி தூண்டிவிட்டு கலவரத்தை ஏற்படுத்தினால் அதை சாட்டாக வைத்துக் கொண்டு இந்தியப் படையை மேலும் அங்கு நிலை கொல்ல வைக்கலாம் என்பது இந்திய ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவினரின் கூட்டுச் சதித்திட்டம். இந்தச் சதி முயற்சிகளையும் உள்நோக்கங்களையும் முஸ்லிம் மக்கள் நன்கு அறிந்து வைத்திருந்ததனால் அங்கு பெரும் கலவரம் எதுவும் ஏற்படவில்லை.




தமிழீழம்குரல்18 - டிச 89 ஜன 90 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.