Monday 20 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் ( 11- !5)

* மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டா

கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சூழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.

 எஸ்.எம்.எம் பஷீர்

ராஜிவ்காந்திக்கு கிட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்து, 03 .அக்டோபர் 1988  ம் ஆண்டு எழுதிய கடிதத்தில், இந்திய- இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்குவதாக மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். 

புலிகள் வழக்கமாகவே  ஒப்பந்த மீறுதலை எதிர்தரப்பினரிடம் சுமத்தி, தங்களது நிலைப்பாட்டிற்கான நியாயப்படுத்தலை சர்வதேசமயப்படுத்தி  தமது ஆதரவு தளத்தினை தக்கவைப்பதற்குமான காரணங்களை முன்வைத்தே, இந்த ஆதரவு கோரிக்கையும் வழக்கம்போல் மறைமுகமாகவே வழங்கப்பட்டது. 

சமாதானப்படையினை, சண்டைப்படையாக்கிய பின்னர் எவ்வாறு தமது யுத்தநிறுத்த கடமையை தாங்கள் என்றுமே மீறவே இல்லை என காலத்துக்கு காலம் இலங்கை அரசுடன் தமது அழிவின் விளிம்புவரை செய்துவந்ததுபோல் புலிகள் தாங்கள் யுத்த நிறுத்தங்களுக்கு ஆதரவாக பின்னோக்கி கூறுகின்ற வகையில்தான், இவ்வாறு கிட்டுவினாலும் சூசகமாக இந்திய அரசிடம் கடிதத்தில் ஆதரவு வழங்குவதாக கூறப்பட்டு இருந்தது. 

இக்கடிதத்தில் கிட்டு தொடர்ந்து நாம் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டோம். பேச்சுவார்த்தைகளில் எமதுஇயக்கத்தில் பிரதிநிதிப்படுத்திய என்னை கைதுசெய்து, சிறையில் அடைத்ததின் மூலம், சமாதானத்துக்கான பேச்சுவார்த்தையை தொடர்வதற்கான வாய்ப்புக்கள் தடுக்கப்பட்டன. பின்னர், இந்திய அரசு தன்னிச்சையாக, 10 நாள் போர்நிறுத்தம்  அறிவித்தமை மாத்திரம் இணக்கமான தீர்வு ஒன்று உருவாவதற்கு  போதுமானதாகவும் இருக்கவில்லை. இதுவரையில் என்னுடன் சிறையில் இருக்கும் சக தோழர்களையும், விடுதலை செய்ய பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு; எமது தலைவர் வே.பிரபாகரன் அறிவித்திருந்தார் .
இது தொடர்பாக, எவ்வித  நடவடிக்கைகளுக்கும் எடுக்கப்படாமலேயே  போர்நிறுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டது.. நாம் சமாதானத்துக்கு எதிரானவர்கள் அல்ல. நிரந்தர சமாதானம் ஒன்றையே நாம் வேண்டி நிற்கிறோம். சமாதான தூதுவனாக, அழைத்து செல்லப்பட்ட எமது தோழர்  ஜொனி  அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டார். சமாதான தீர்வொன்றை காண பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்த, நானும், எனது தோழர்களும், காரணம் எதுவுமின்றி  கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டோம். எம்மீது ஆதாரமற்ற பொய்யான , கற்பனையான, குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு இருந்தன. மேலும் அக் கடிதத்தில் குறிப்பிடுகையில் நாம் ஒருபோதும் இங்குள்ள எமது அலுவலகத்தை  மூடி விடும்படியோ, அல்லது இங்கு இருந்து வெளி ஏறும்படி , கேட்கப்படவில்லை. மேலும், 1987 ம் ஆண்டு, அக்டோபரில் இந்திய இராணுவத்துடனான தூரதிர்ஷ்ட வசமான மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து நாம் வெளியேற முடியாதவாறு, வீடுகளை சுற்றி பொலிஸ்காவல் போடப்பட்டு இருந்தது.மேலும் குறிப்பிடுகையில், தமது விடுதலைக்காக, சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக தாங்கள் தீர்மானித்து இருப்பதை அறிவித்து; இரண்டு கோரிக்கைகளை இந்திய அரசுக்கு, விட்டிருந்தார்.

1 இந்திய மண்ணில்  நாம் ஏதாவது குற்றம் செய்திருந்தால், அக்குற்றம் என்ன என்பதை வெளிப்படுத்தி  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவேண்டும்..
2 அவ்வாறு வழக்கு தொடர முடியாதாயின் , எம்மை விடுதலைசெய்து தமிழீழத்தின் எமது போராளிகளிடம் ஒப்படைக்க வேண்டும்., என கோரியிருந்தார்.

அந்நிகழ்வு குறித்து  “தினமணிபத்திரிக்கை, இவ்வாறு குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது, விடுதலைப்புலிகளை ஒதுக்கிவிட்டுதேர்தல் நடத்திவிடலாம்  என்று, ராஜிவ்காந்தி கூறுகிறார்.  இலங்கையின் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில், போட்டியிட வேட்புமனுத்தாக்கல், திங்கள் அன்று துவங்கியது.. ஆனால், ஈழ  புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக, எட்டு மாவட்டங்களில் , ஆறு மாவட்ட அதிகாரிகள், தேர்தல் பணியில் பங்கேற்க முன்வரவில்லை. மேலும், அப்பத்திரிகையானது இந்திய- இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் சமீபத்திய பத்துநாள் போர்நிறுத்தம் வரை, இந்தியஅரசு தன்னிச்சையாக எடுத்த  நடவடிக்கைகள் எல்லாம், வெற்றிபெறாமல் போனதற்குரிய காரணம், எதிராளியின் செயலை சரிவர கணிக்க தவறியதாகும்., இந்திய அரசு அறிவிக்கும் சலுகைகள் எல்லாம், , ஈழப்புலிகளை சிறுமைபடுத்துவதாக இருக்கின்றது.மேலும், இப்பத்திரிகை காலவரையறையற்ற போர்நிறுத்தத்தை அறிவித்து, கிட்டு முதலான விடுதலைப்புலிகளை விடுவித்து, நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்.”  இதில் முக்கியஅம்சம் என்னவென்றால், “தினமணித.வி. கூ முன்வைத்துள்ள திட்டத்தை இந்திய அரசு பரிசீலிப்பது உதவியாக இருக்கும் என்பதை கோடிட்டு காட்டி இருந்தது.

தமிழகத்தில் பல்வேறுபட்ட  தொப்புழ்கொடி ஆதரவினைதிரட்டும், நடவடிக்கைகளுக்கும் தமிழீழ ஆதரவாளர்களால் முடுக்கி விடப்பட்டன.. ஆனால், இந்த பின்னணியில் கட்டுரையாளர், புலி அல்லது இந்திய இலங்கை ஒப்பந்த தொடர்பான செயல்பாடுகள் குறித்து, வரலாற்றுரீதியாக, விரிவாக இதை ஆய்வுசெய்கின்ற, நோக்கத்திற்காக  எழுதவில்லை. மாறாக, அன்றைய கால கட்டத்தில் இங்கு நடைபெற்ற சம்பவங்களில்  சிலவிடயங்கள் தவிர்க்க முடியாமல், சொல்லப்படவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டிருப்பது என்பதினாலேயாகும். 

1985  இல் ஒரு பின்னோக்கிய நிகழ்வாக கிட்டுவினுடைய செயல்பாடு ஒன்று பார்க்கப்பட வேண்டியுள்ளது.  சுதுமலையில் இலங்கை ராணுவம் புலிகளுடைய ஆயுதகிடங்கை அழிப்பதற்கு முற்பட்டவேளையில், டெலோ உறுப்பினர்கள் ராணுவத்தோடு போரிட்டு அவைகளை பாதுகாத்து கொடுத்ததாகவும், அவ்வாறு புலிகளின் உயிர்களையும், ஆயுதங்களையும்பாதுகாத்ததாகவும், அவ்வாறு பாதுகாத்ததிற்காக நன்றி தெரிவிக்கும் வகையில், கிட்டு, “எங்கள் உயிரை காக்க தோளோடு  தோள் நின்ற டெலோவை வாழ்நாளில் மறக்கமாட்டோம்என்று  பத்திரிக்கை அறிக்கையில் பல நாட்கள் குறிப்பிட்டதாகவும், யாழ்ப்பாண செய்திஒன்று கூறுகின்றது. இவ்வாறான கிட்டுத்தான் பின் ஈவு, இரக்கமின்றி, டெலோ உறுப்பினர்களையும், அதன் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தையும் சுட்டுக்கொன்றவராகும்.   

கிட்டுவின் நன்றி தெரிவித்தல் டெலோவை அழிப்பதாகவே அமைந்தது.
முக்கியமாக, 1988 ஜனவரியில், பிரபாகரன் இந்திய இலங்கை உடன்பாடு குறித்து; இந்திய அரசுக்கு விடுத்த வேண்டுகோள், இந்த நிலைப்பாட்டினுடைய ஆரம்பகாலம் 1987  அக்டோபர் தொடக்கி, ஒருவருடத்தின் பின்னர் ஏற்பட்ட பல்வேறுபட்ட புலிகளுக்கும், இந்தியப்படைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை, கோடிட்டுகாட்டுகின்ற பலஅம்சங்களை கொண்டிருந்தது.   

ஜனவரி 13 இல் இந்திய அரசுக்கு பிரபாகரன்  விடுத்த மனுவில் எல்லாவித ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, சமாதான பேச்சு வார்த்தையை தொடருமாறு கோரியிருந்தார்.

அம்மனுவில் தாங்கள் ஏற்றுக்கொண்டதுபோல்  இடைக்கால நிர்வாக சபை  (Interim Adminsitrative Council) தமது பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு நிறுவப்பட்டால்  தங்கள் ஆயுதங்களை ஒப்படைப்பதாக கூறியிருந்தார். மேலும் எதிர்கால பேச்சு வார்ததைகளில் தாமே முக்கிய பாத்திரத்தினை வகிக்க வேண்டுமென்றும், ஏனைய தமிழ் குழுக்களின் கட்சிகளின் பிரதிநித்துவத்தினை புறம்தள்ளும் , ஏகபோக உரிமையினை வலியுறுத்தும் கோரிக்கைனை வெளிப்படையகவே முன்வைத்திருந்தார். 

ஆனால் மறுபுறம் இந்திய அரசும் புலிகளும் பேசவேன்றுமென்றும்; அமைக்கப்படும் இடைக்கால நிர்வாக  சபையில் எல்லா தமிழ் குழுக்களும் அங்கத்துவம் வகிக்க வேண்டும் என்றும்  த.வி கூ. தலைவர் . அமிர்தலிங்கம் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இடைக்கால நிர்வாக சபை தொடர்பில் எட்டப்பட்ட .(  28.09.1987)  ஒப்பந்தத்திற்கு ஒருபடி மேலே சென்று தமது கட்சிக்கு வழங்கப்பட்ட இரண்டு இடங்களை விட  ஏனைய தமிழ் குழுக்களை உள்வாங்கியதாக இடைக்கால நிர்வாக  சபையில் சபை அமையவேண்டும் என்பதாகும்.

(தொடரும்)

thenee.com, mahavali.com(27/09/2009) 


பாகம் 12

                                              
1988 சித்திரையில் கிட்டு பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழுவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின.  

1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39ர்காவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள் செய்த படுகொலைகளையும் அவர்கள் மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். 

காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞ்சாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனித்தனியான நிர்வாகத்தின் கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.

இந்தத் தாக்குதலின்பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். 

அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட், ரொலோ  , ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம் மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் பூர்த்திசெய்ய மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். 

மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.
கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. 

இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட்; பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் '' இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினை; முஸ்லிம் மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும்'' குறிப்பிட்டிருந்தார்.

''வடகிழக்கு இணைந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும்'' குறிப்பிட்டிருந்தார். 

சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் '' ஐபிகே னாலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள் மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் மு.ஐ.முயினருடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள); எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே மு.ஐ.வி.முன்னணியினரை மு.காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஐ.பி.கே வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கiறாக இருந்தனர். 13 ந் திகதி ஜனவரி 1988ல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாhத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே த.வி.கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். 

இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்கு இடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது. 1037 பிகே படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. 

இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஐ.பி.கே தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ், சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்hர்.; 1988 சித்திரை முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவார்த்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.—  

தொடரும்
thenee, mahavali.lankamuslims.27/09/2009


பாகம் - 13 
தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை.


சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் ஜனநாயகபோராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  மாறுபடவே இல்லைஎனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்சம்பவமும் அத்தகையதே !

இலங்கையிலுள்ள  முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவங்களுக்கும்  மக்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொடர்பாடல் குறை கண்டு, அதனை  தனது வெளிப்படையான மதிப்பீடாக அவர் இவ்வாறு குறிப்பிட்டார்  “ "தன்னுடைய மதிப்பீடு என்னவென்றால் அதிகாரப்பகிர்வு செயற்பாடு தொடர்பாக நாங்கள் கலந்தாலோசிக்கும்போது முஸ்லிம்களின் அக்கறைகளை தாங்களே பிரதிநித்துவப்படுத்துவதாக  ஆகக்குறைந்தது ஐந்து குழுக்கள் உரிமை    கோருகிறார்கள்   என்னுடனும் ஜனாதிபதி ஜெயவர்தனாவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நான் உண்மையில் எந்த குழுவினர் குறிப்பிட்ட பிரச்சினையில் நிஜமான அக்கறையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதனை தீர்மானிப்பதில் குழப்பமடைந்திருக்கிறேன்.".

இந்த நிலைப்பாடு தோன்ற அன்று தெற்கு முஸ்லிம் தலைமைத்துவங்களின் வடக்கு -கிழக்கு தொடர்பான மாறுபட்ட அக்கறைகளும், மறுபுறம் கிழக்கிலேயும் வடக்கிலேயும் காணப்பட்ட வேறுபட்ட அரசியல் அபிலாசைகளுமாகும். இவ்வாறு மாறுப்பட்ட அரசியல் அக்கறைகளும் அபிலாசைகளும் டிக்ஸ்சிட்டை (Shri Dixit)  குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கவேண்டும்.

ஜனாப் பதியுதீன் மஹ்மூத் அவர்களிடம் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் சக்திகள் முன்வைத்த எதிர் காரணங்களில் ஒன்று கிழக்கிலிருந்து வந்து தெற்கிலே இனவாத அரசியலை அஷ்ரப் ஸதாபிக்க முனைகிறார் என்பதாகும் இன்னுமொரு புறம் மட்டக்களப்பானுக்கு இங்கு என்ன வேலை என்ற பிரதேச வாதக்  கருத்துமாகும். 

கொழும்பு மற்றும் தெற்கின் வேறு சில பிரதேசங்களை சேர்ந்த பிரபல முஸ்லிம்  சட்டத்தரணிகள் சமூகப் பிரமுகர்கள் என ஒரு குழு  ஹோட்டல் ரன்முத்துவில் ஒரு தடவை முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி  பதியுதீன் முஹம்மது  மறைந்த சேர் ஏ. டபிள்யூ எம் அமீர் -ரண்முத்து ஹோட்டல் உரிமையாளர்  – ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பில் அஷ்ரப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தபோது பதியுதீன் அவர்கள் மௌனமாக செவிசாய்த்ததுடன் அஷ்ரப் அவர்களின் தந்தைக்கும் தமக்குமுள்ள தொடர்புகள்பற்றி (?)  குறிப்பிட்டதைத் தவிர வேறொன்றும் பெரிதாகக் கூறவில்லை. எனினும் தீவிர கிழக்கு அரசியல் எதிர்ப்பு கிழக்கிலேருந்து தனி முஸ்லிம் கட்சியின் மூலம் தெற்கில் உருவாக்கப்படும் தேசம் தழுவிய முஸ்லிம் அரசியல்  பிரதிகூலங்கள் குறித்து கருத்தாடல்கள், விமர்சனங்கள் அங்கு காணப்பட்டது.

இந்த சூழலில் நான் ஒருதடவை 1980களின் இறுதிப்பகுதியில்  நான்  அஷ்ரப்பை தற்செயலாக சந்தித்தபோது குறிப்பாக கொழும்பில் ஹுல்ஸ்டொர்ப்  எனப்படும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள பகுதியில் தொழில் புரியும் சட்டத்தரணிகளிடம் பொதுவாக காணப்படும் கிழக்கு எதிர்ப்பு மனநிலையினை கூறியபோது; அவர்கள்  யார் என்று அறிய ஆவல் காட்டினார். நான் அவர்கள் யாரென்று கூறவில்லை, அவரது ஊகங்களுக்கும் நான் பதிலளிக்கவில்லை எனினும் அவர் மீதான அந்த விமர்சனங்கள் என்னையும் பாதித்தன என்பதை சுட்டிக்காட்டினேன்.    

கிழக்கை பொறுத்தவரை அன்று காணப்பட்ட  தமிழ்  ஆயுதம் தாங்கிய போராட்ட குழுக்களின் ஆதிக்க சூழலில் முஸ்லிகளுக்கு மாற்று வழி  இல்லை என்பதில் அவருடன் நான் உடன்பட்டேன். எனினும் பல்வேறு விடயங்களில் அவருடன் எனக்கு சில சில முரண்பாடுகளும் இருந்தன; அவை இங்கு இப்போது எழுதப்பட அவசியமில்லை எனக் கருதுகிறேன்.

எனது வாசிப்புக்களில்அன்று காணப்பட்ட கிழக்கு அரசியல் எதிர்ப்பு என்பது அஷ்ரப  எதிர்ப்பு அரசியலாக வெளிப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணமாக அஸ்ரப் பின் நண்பரான  மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா எழுதிய எனது நினைவுத்திரையில் அஷ்ரப்எனும் நூலில் தான் அவரது நூல் வெளியீட்டு    விழாவுக்கு ஹோட்டல் ரன்முத்துவில் நடத்துவதற்காக அதன் தவிசாளர் A.W.M   அமீர்  அவர்களிடம் விழா பற்றி கதைத்ததாகவும் அப்போது  அவர்  “    யார் யார் அதிதியாக வருகிறார்கள் என்று கேட்டதாகவும் , அவர்  அஷ்ரபின் பெயரை சொன்னதுதான் தாமதம் அஷ்ரப வருவதேன்றால் நான் ஹோட்டலை தரமுடியாது…..” என்று குறிப்பிட்டதாக தனது நூலில் எழுதி உள்ளார்.
இந்நூலசிரியரின் அஷ்ரப் மீது கொண்டிருந்த தனிமனித விசுவாசக் கருத்துக்களில் எனக்கு  உடன்பாடில்லை. அவை இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு ஒத்திசைவாகவும் இல்லை; இவை பற்றி வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுத முனைகிறேன். “     

இன்றைய தமிழ்  .தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற முஸ்லிம் யாழ் மாவட்ட உறுப்பினராக செயற்படும் சட்டத்தரணி இமாம் சட்டக் கல்லூரியில் படித்த காலத்தில் அஷ்ரபுடன் தான் மருதானையில் ஒன்றாக தங்கி இருந்து படித்தார் என்றும் இவர்களுடன் அவ்வப்போது கொழும்பு வந்து தங்கும் இமாமின் யாழ்ப்பாண முஸ்லிம் நண்பர்களில் ஒருவர்தான் மறைந்த மன்னார் அரச அதிபர் மக்பூல். இதில் இருவர் புலிகளின் இரத்த வெறிக்கு பலியானபின்னர் இமாம் புலிகளின் ஜனநாயகபிரதிநிதிகளின் கட்சின் பிரதிநிதிக்கூட்டத்தில் ஒருவராக இணைந்ததுடன் பிரபாகரனை சந்தித்த யாழ்ப்பான முஸ்லிம் அரசியல்வாதியுமாகும்.

இந்த இமாம் குறித்து நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையில் (http://www.srilankaguardian.org/2008/03/will-imam-be-imamto-jaffna.html) குறிப்பிட்டவாறு இவர் நாடாளுமன்ற பதவிக்கு ஈழவேந்தனின் காலியான இடத்திற்கு நியமிக்கப்பட்டபின் விபத்தில் அகால மரணம் அடைந்த த. தே. கூ நாடளுமன்ற உறுப்பினரான சிவநேசனினின் மரணச்சடங்கில் கலந்துகொண்டபோது வன்னியில் பிரபாகரனை சந்தித்தார். அப்போது பிரபாகரன் அவரிடம் அவரின் நாடாளுமன்ற பிரவேசம் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையே உறவினை பலப்படுத்தும்” (“strengthen unity” ) என்று கூறியதாக இக்பால் அத்தாஸ் எனும் எழுத்தாளர் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். 

இச்சம்பவத்தினை நினத்தபோது எனக்கு இந்து புராண கதை ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது. தனது இளம் பிராய தோழனான இந்து மத கடவுளர்களில் ஒருவரான கிருஷ்ணனிடம் வறிய குசேலர் தனது மனைவியின் வற்புறுத்தலின் பெயரில் உதவி கேட்பதற்காக கிருஷ்ணனின் அரண்மனைக்கு சென்றார். கிருஷ்ணனை சந்தித்தவுடன், அவரிடம் தனது மனைவி தயாரித்து தந்த அவல் பொதியை கொடுத்துஅளவளாவிவிட்டு எவ்வித உதவியினையும் வெட்கப்பட்டு கேளாமல்  வீடு திரும்பிவிட்டார், ஆனால் கடவுளான கிருஷ்ணன் இவரின் வறுமை வாழ்வை இவரது விஜயத்தின் நோக்கத்தை தனது ஞானதிருஸ்டியினால் உணர்ந்து அவர் வீடு திரும்பமுன்னரே அவரது வாழ்விடத்தை வளம்படுத்தி வறுமையை ஒழித்ததாக கதை; ஆனால் எமது இமாம் புலிகள் கடத்திய முஸ்லிம்கள் பற்றி கேட்க மறந்து விட்டார் என்றும் அங்கததொனியில் நான் எழுதி இருந்தேன். பிரபாகரனையும் நான் அக்கதை மூலம்  கிருஷணின் இடத்திற்கு உயர்த்தியதாக கொள்ளவேண்டாம் என்றும் குறிப்பிட்டு இருந்தேன்.

1989-1990   காலப்பகுதியில் வட மாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரி யாழ் மாவட்ட பிரமுகர்கள் ஐவர் பகிரங்க அறிக்கை ஒன்றினை ஒட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை”    என  ஜுன் 1996ல்  வெளியிட்டனர்.  பின்னர் கடத்தப்பட்டு தடுத்துவைத்திருப்பவர்கள்  தொடர்பாக ஒரு தீர்மானத்தையும் 1997  ஜூலையில் வெளியிட்டனர்

அவர்களது தீர்மானத்தில் சொல்லப்பட்ட முக்கியமான விடயம் என்னவென்றால்  புலிகளின் தலைவர்களை சந்தித்து புலிகள் கிழக்கு மாகாணத் தலைமைத்துவத்தை யாழ் முஸ்லிகளை ஏற்றுக்கொண்டதாக  பிழையாக நம்பி விட்டதை (அவ்வாறு அல்லவென்று) விளக்குவதற்காகவும் ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டு இருந்தனர். முஸ்லிகளின்  உறுதியற்ற நேர்மையற்ற அரசியலும் இங்கு நோக்கற்பாலது.

சுத்தி சுத்தி சுப்பருடைய கொல்லைக்குள்என்று உங்களுக்குத் தோன்றினாலும் வேறுபட்ட சந்தர்ப்பங்களிலும் வேறுபடாத தமிழ் தேசிய வாதத்தின் ஜனநாயகபோராட்ட அரசியலில் முஸ்லிம்களை நசுக்கும்வதும் நாசூக்காக பாவிப்பதுமான விசச் சக்கரம்  மாறுபடவே இல்லைஎனவேதான் சிலதை மீண்டும் மீண்டுன் நினைக்காமலோ, அதனை எழுதாமலோ இருக்க முடியவில்லை . மக்பூல் பற்றிய இச்ச்சம்பவமும் அத்தகையதே !

ஜனாப். மறைந்த மக்பூல் அவர்கள் 1966/67 அளவில்தான் நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டார். இவர் யாழ்ப்பாணத்தில் நிர்வாக சேவைக்கு தெரிவான இரண்டாவது முஸ்லிம் நபராவார். இவருக்கு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் முதன்முதல் சிவில் சேவைக்கு தெரிவான முஸ்லிம்கலாநிதி ஏ. எம். ஏ அஸிஸ் அவர்களின் பின்னர் இவர் தெரிவாகி இருந்தார் . மக்பூல் நிர்வாக சேவைக்கு தெரிவாகி சம்மாந்துறையில்  பிராந்திய இறைவரி உத்தியோகத்தர் (DRO-–Divisional Revenue Officer) எனும்  பதவி வகித்தபோது, அரசியல் செல்வாக்குமிகு யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரமுகர்களின் முயற்சியால் யாழ்ப்பான நிர்வாகத்தின் கீழிருந்த கிளிநொச்சி மாவட்டத்திற்கு , மாவட்ட காணி உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டார். அப்போது தமிழ பேசும் மக்களின்கட்சியாக தம்பட்டம் அடித்த தமிழ் அரசுக் கட்சியின்  கட்சி பத்திரிகையான சுதந்திரன்தனது முதற்பக்க தலைப்புச் செய்தியாக முழு முஸ்லிம் இனவாதத்தினை கக்கி தமிழரின் பதவி முஸ்லிமுக்கு பறிபோவதா”  என்று கேள்வி எழுப்பி இருந்தது.

இந்த செய்தி சுதந்திரனில் வெளியானபின்னர் நடைபெற்ற தலித் சமூகத்தினரின்  பகிரங்க கூட்டமொன்றில் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட  போது, எனக்கு அறிமுகமான யாழ் முஸ்லிம் பிரமுகர் அக்கூட்டததில் கலந்துகொண்டு பதில் தர வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விட அக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முன்னாள் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரும் பின்னாளில்  இலண்டனிலுள்ள தீபம்தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தி தயாரிப்பாளராகவும்  கடமையாற்றிய வித்தியானந்தன் முஸ்லிம்களின் உள்ளக் குமுறலை கேட்டீர்கள்என்றும் இதற்கான பதிலை  அன்றைய கூட்டணி நாயகன் “”தளபதிஅமிர்தலிங்கம் வழங்குவார்  என்று எதிர்பார்த்து கூற , அமிர்தலிங்கம் அலட்சியம் செய்து இது பற்றி மூச்சு விடாமல் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு சென்று விட்டார் . இதுதான் யாழில் அன்று நிலவிய தமிழர் கூட்டணியின் முஸ்லிம்கள்  மீதான அன்பு”.   

கம்யூனிஸ்ட் கார்த்திகேசு ஆசிரியர் தான் முஸ்லிம் ஒருவர் மேயராக  (சுல்தான்) 1955ல் வருவதற்கும் வழி வகுத்தவர், வரலாறு படைத்தவர். தமிழர் கட்சிகள் வளர்த்ததெல்லாம் இனவாதமே தவிர வேறில்லை. இவர்களது வெளிப்படையான சிங்கள இனவாதத்துள் முஸ்லிம் விரோதமும் கிழக்கு தமிழர் தலைமைகள் மீதான விரோதமும் மறைந்திருந்தது.

இவ்வாறுதான் தமிழரின் பிரதான அரசியல் கட்சியான ஈழத்து காந்திஎன அழைக்கப்பட்ட தந்தை செல்வா என்பவரின் பெயரால் வட்டுக்கோட்டையில்  அறிமுகப்படுத்தப்பட்ட தமிழீழக் கோரிக்கை இன்றைய அழிவுக்கு அன்றே வழிகோலியதுடன் தமிழர்களின் அரசியல் வரலாறும் முழுமையாக சிதைவுற வழிகோலியது.

ஆயுதப்போராட்டத்துக்கு  பிள்ளையார் சுழி போட்ட எஸ் ஜே வி. செல்வநாயகத்தின் சீடர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடுதான் இந்த சுதந்திரனின் தலையங்கம். 

மக்பூல் கிளிநொச்சியில் பணியாற்றிய போதுதான் அவரின் கீழ்     புலிகளின் மறைந்த புலிகளின் ”தலைவரான பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையும் காணி உத்தியோகத்தராக பணியாற்றினார். பின்னர் புலிகள்  இவரை கொல்லுவதற்காக (மக்பூல்)  இவரின் இல்லத்திற்கு (மன்னாரில் இவர் அரச அதிபராக இருந்தபோது) வந்து இவரை இரண்டாவது தடவை விசாரணைக்காக  அழைத்துச்சென்றபோது தடுத்த தனது மனைவியிடம் பொடியன்கள்ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று அசாத்திய நம்பிகையுடன் சென்றவர் மீளவே இல்லை.  கொடிய பகைவர்களையும் நமது பொடியன்கள் என்று பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சேஎன்று செயற்பட்ட மக்பூல் யாழ் முஸ்லிம் கல்வி சமூகத்திற்கு மாபெரும் இழப்பு என்பதை வரலாறு பதிவுசெய்யாமல் விடாது.  .  

இந்த வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை அடுத்து முஸ்லிம் மக்களை உள்வாங்கும் யாழ் மேலாதிக்க தமிழ் இனவாத கைங்கரியத்துள் சிக்கியோர்களில் குறிப்பாக மறைந்த  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும், தலைவருமான அஸ்ரப் அவர்களும்   ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தூதுவராக கடமையாற்றிய  மறைந்த  சட்டத்தரணி சம்சுதீன் ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகும்.

வடகிலே முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் தனித்து போட்டிட முயன்றபோது அதற்கு எதிராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பிரமுகரான முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவருமான யோகேஸ்வரன் எம்.பி.  போட்டியிட முற்பட்ட பொழுது  முஸ்லிம் பிரமுகரை இமாம் மற்றும் சில முஸ்லிம் பிரமுகர்கள் மூலம் அணுகி அவ்வெண்ணத்தினை கைவிடுமாறு கேட்டதும் அதில் இன்றைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். பி யான இமாம் எவ்வாறு செயற்பட்டார் என்பதும் வெளிவராத செய்திகளாகும்.  

யாழ்ப்பாணத்திலே ஒரு முஸ்லிம் வேட்பாளரை  தமது கட்சியில் போட்டியிட வாய்ப்பளிக்காதது  மட்டுமல்ல    மிகவும் முக்கியமாக வடமாகணத்தில் முஸ்லிம்களை  அரசியல் ரீதியாக எவ்வாறு  இரண்டாம் தரப் பிரஜைகளாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நடாத்தினர் என்பதற்கு இவை போன்ற பல சம்பவங்கள் உதாரணங்களாகும்

தொடரும்……
(18/10/2009) .


பாகம் – 14


நான் முன்னர் குறிப்பிட்டதுபோல்  வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டனர்.  

வட்டுக்கோட்டை தீர்மானத்தை உள்வாங்கி அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்ட சம்சுதீன்- அஸ்ரபின் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் முக்கிய பிரச்சாரகரான அஸ்ரப் ஒருபுறம்; தமிழர் கூட்டணியின் மூதூர் சட்டத்தரணி மஹரூப் மறுபுறம் என தனிநாட்டுப் பிரச்சாரங்கள் அன்றைய அரசியலில் முன்னேடுக்கப்பட்டன. 

எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்என்ற முழக்கமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப்பெறவில்லை அதனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மட்டுமல்ல அதற்கு ஒத்தூதிய முஸ்லிம் தலைமைகளையும் கிழக்கு முஸ்லிம்கள் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்தனர்.


இந்தக்கால கட்டத்தில்தான் முக்கியமாக முதன்முதலாக கிழக்கில் வேறு ஒரு அரசியலும் அரங்கேறியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1977 பொதுத் தேர்தலின் போது முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூது அவர்களின் தேர்தல் மேடைகளை அலங்கரித்த அன்றய பிரபல அரசியல் பேச்சாளரான காத்தன்குடியை சேர்ந்த ரசூல் ஆசிரியர் கிழக்கிலே ஒரு புதிய அரசியல் கோசத்தை காரணகாரியமின்றி எதுகை மோனையாய் முஸ்லிம்களை கவருவதற்காக முன்வைத்தார். அதுதான் அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் கபுரிஸ்தான்அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக கிழக்கிஸ்தான்அடையப்பட வேண்டும்; அவ்வாறு அடையாவிட்டால் அடக்கஸ்தலத்தை அடையவேண்டும். ( மரணம் அடையவேண்டும்). இதே காலகட்டத்தில் தான் அஸ்ரப் அவர்களின் தமிழ் ஈழ தனினாட்டுக் கோசமும் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுள்ள மாவட்டத்தில்) எதிர் எதிராக ஒலித்தது.
 
மெதுவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அஸ்ரப்பை ஓரங்கட்டும் தொடர் செயற்பாபாடுகள் காரணமாக அஸ்ரப் தமது கூட்டணியை முறித்துக்கொண்டதுடன் கிழக்கில் முஸ்லிம்களின் முதல் முஸ்லிம் அரசியல்  கட்சியாக பரிணமித்த முஸ்லிம் ஐக்கிய முன்னணி விலாசம் இழ்ந்து போனது. மெதுமெதுவாக கிழக்கின் தமிழ் தலைமைகளும் தமிழர் விடுதலை கூட்டனியிலேருந்து வெளியேறினர். கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள்.

இக்கால கட்டத்தில் யாழ் மேலாதிக்க தமிழர் கூட்டணியின் தேசியவாத அரசியலை எதிர்த்து நின்ற இன்னுமொரு முக்கிய அரசியல்வாதிதான் ராஜன் செல்வநாயகம் இவரின் பூர்வீகம் ராஜதுரையை போலவே யாழ்ப்பாணம்தான். ராஜதுரையின் தந்தை சுருட்டுச் சுத்தும் தொழில் புரிபவராக மட்டக்களப்புக்கு வந்தவர்; பின்னயவரின் தந்தை வியாபாரியாக வந்தவர்) எனினும் தங்களின் இளமைக்காலத்தை கிழக்கிலே கழித்ததால் தங்களை கிழக்கை சேர்ந்தவர்களாகவே நினைத்து செயற்பட்டவர்கள். கிழக்கு மக்களாலும் கிழக்கு  பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள்.

இளமையில் இராஜதுரை பகுத்தறிவு (திராவிட கழக) அமைப்பில் மட்டக்களப்பில் அங்கத்துவம் வகித்து தீவிரமாக செயற்பட்டவர்; பிற்காலத்தில் சாய் பாபாவின் பக்தனாகவும் இந்து கலாச்சார அமைச்சராகவும்  பதவி வகிக்த்தவர் . ராஜன் செல்வநாயகம் அன்று நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த யாழ் அரச அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு எதிராக மட்டக்களப்பில் மக்கள் சார்ந்த பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து யாழ் எதிர்ப்புவாதிய அடையாளம் காணப்பட்டவர். விளிம்புநிலை மக்களின் விருப்பத்திற்குரியவராக விளங்கியவர். மறுபுறத்தில் ராஜதுரையும் சாமான்ய மக்களின் மதிப்பை பெற்றவர்.
தனக்கு தெரிந்தவர்களை என்றுமே இலகுவாக அடையாளம் கண்டு பழகுபவர். இவர்கள் இருவரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் செயற்பாடு குறித்த விமர்சனங்களை இங்கு நான் வைக்கவில்லை; அது எனது கட்டுரையின் நோக்கமுமல்ல. அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிப்பினை மட்டக்களப்பில் ராஜன் செல்வநாயகமும்; கல்குடாவில் முன்னாள் அமைச்சர் தேவனாயகமும் மாறுபட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளாக முன்னெடுத்தவர்கள்.

குறிப்பு 1976ம் ஆண்டு மே மாதம் 14 ந் திகதி தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு திரு அமிர்தலிங்கம் அவர்களின் பிறப்பிடமான பன்னாகத்தில் உருவாக்கப்பட்டது. அவ்வமைப்பின் உருவாக்கத்தின்போது அன்றைய கல்குடா பிரதிநிதியான ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான திரு எஸ்.டபிள்யூ தேவநாயகம் அவர்களும் அக்கருத்தரங்கில் பங்குகொண்டிருந்தார். அன்று உருவாக்கப்பட்ட த.வி.கூட்டணி வடகிழக்கிலும் மலையகத்திலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகளை ஒன்றிணைக்கும் கருத்தரங்காகவே தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவ்வமைப்பு தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்தமையினால் எற்கனவே அவ்வமைப்பில் அங்கம்வகித்த திரு தேவநாயகம் மற்றும் எஸ் தொண்டமான் ஆகியோர் அமைப்பைவிட்டு வெளியேறினர். 

இந்நிலையில் தமிழீழக் கோரிக்கையினை முன்வைத்து த.வி.கூட்டணியினரால் நடாத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

வட மாகாணத்தில் ஆதரவாக  41% மானவர்களும் கிழக்கு மாகாணத்தில் ஆதரவாக 26% மானவர்களும் வாக்களித்திருந்தனர்.
மேலதிக விபரங்கள் அறிவதற்கு (S.J Tambiah அவர்களால் எழுதிய Srilanka Ethinic Fratricide And The Dismantling of Democracy) என்னும் நூலினை வாசிக்கவும்.

(குறிப்பு: இக்கட்டுரைத தொடரினை தொடர்வதற்கு எனக்கு தொலைபேசி ஈ-மெயில் நேரடிச்சந்திப்பின் மூலமும் ஊக்கமளிக்கும் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதுமாறும் முக்கியமான எனது பத்திரிகையாளரான நண்பரின் வேண்டுகோளும் என்னை இக்கட்டுரையினை தொடர தூண்டுதலாக அமைந்தது..இங்கு ஆங்கிலத்தில் நான் முன்னரே எழுதிய கட்டுரைகளிலுள்ள பல சம்பவங்களை -விடயங்கள்- தமிழில் மீண்டும் எழுதப்படவேண்டி நேரிட்டுள்ளது. ஆகவே சொன்னதை மீண்டும் சொல்லலாக அவை (தமிழில் மட்டுமே வாசிக்கும் அல்லது வாசிக்கக்கூடியவர்களுக்கு) அமையாது என்று நம்புகிறேன்.)

தொடரும்


(பாகம் 15)

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை - முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய "கிழக்கிஸ்தான்" கோரிக்கை எவ்வித முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில் தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ் மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன் காத்தான்குடியில் சத்தார் என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.


முஸ்லிம்களுக்கிடையில் இடம்பெற்ற மிக துரதிஷ்டமான அரசியல் வன்முறைகள் ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் இடம்பெற்றன.பதுயுதீன் மஹ்மூத் அவர்கள் "கிழக்கிஸ்தான்" கோஷத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக இந்த மந்திர கோஷம்எந்தவித தாக்கத்தையும் ஏற்பபடுத்தவில்லை என்பதுடன் எதை முன்வைத்தவருக்கோ அல்லது வாக்காளர்களுக்கோ அதன் தாற்பரியம் புரிந்திருக்கவில்லை என்பதுடன் தமிழ் சிங்கள சமூகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. அன்றைய அரசியல் பிரச்சார மேடைகளில் முஸ்லிம்கள் பற்றிய சர்வதேசிய பலம், பாரம்பரியம் அவர்களது உணவு உடை பற்றியெல்லாம் பதியுதீன் அவர்கள் பெருமிதம் கொள்ளச்செய்யும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார்.

இவை முஸ்லிம்களின் வாக்குகளை அவரது நாடளாவிய கல்விச்சேவையின் பின்னணியில் பெற்ற சமூக பலப்படுத்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதற்கமைய முதற்தடவையாக மட்டக்களப்பு தொகுதியில் களமிறங்கிய பதியுதீன் அவர்கள் (21.275)வாக்குகளைப் பெற்றமை ஒரு சாதனை என்பதே பொருத்தமானதாகும். 

அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அரசில் சுழலில் முக்கிய இரு சம்பவங்களை அன்று நிலவிய இன ஐக்கியத்திற்காக சுட்டிக்காட்டப்பட வேண்டும். 

மட்டக்களப்பு காளியன்காடு சாஹிராக் கல்லூரி கட்டட நிர்மாணத்துக்காக அன்று மட்டக்களப்பு ராஜன் செல்வநாயகம் எம்.பி நிதி உதவி வழங்கியமையும் மட்டக்களப்பு அரசடிப்பிள்ளயார் கோவில் வீதியில் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலை கட்டப்பட நிதிஉதவி வழங்கிய ராஜதுரை எம்.பி யும் அன்று செய்த உதவிகள் அம்மக்களால் மறக்கப்படமுடியாதவை.

ஆனால் துரதிஷ்டமுகமாக தமிழரின் ஆயுதப்போரட்டம் தொடங்கி முஸ்லிம் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் யாழ் மையவாத தமிழ் இனவாத அரசியல் ஆயுதப்போராட்டம் முஸ்லிம்களை இன்று சாஹிராக்கல்லூரியை மட்டுமல்ல அரசடிப்பிள்ளயார் கோயில் வீதி பாடசாலையும் இழந்த நிலையை தோற்றுவித்திருக்கிறது. கலாநிதி பதியுதீன் அவர்கள் தன்னை என்றும் ஒரு இலங்கையனாக அடையாளப்படுத்தலில் அவ்வாறு வீரியத்துடன் செயல்படுவதில் என்றுமே உறுதியாகவிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்று நிலவிய அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலை நிலவுடமை சமூக ஆதிக்க வர்க்கங்கள் என்பனவற்றின் செல்வாக்குகள் மிக ஆழமாக பார்க்கப்படவேண்டும்.

பாகிஸ்தான்" என்ற தனித் தேசத்துக்கான கோரிக்கை எவ்வாறு கருக்கொண்டது என்பதை பின்னோக்கிப் பார்த்தால் இங்கு சுவாரஸ்யமாக இருக்கும் 1930 ல் சேர். அல்லாமா இக்பால் ( Sir. Allama Iqbal ) இந்தியாவின் முஸ்லிம்களை அதிகமாகக்கொண்ட எல்லைப்புற மாகாணங்களை உள்ளடக்கி தனி முஸ்லிம் தேசம் (பாகிஸ்தான் ) பற்றி முதன் முதலில் கருத்தியலை முன்வைத்தார். பின்னர் 1933 ல் சௌத்ரி ரஹ்மத் அலி (Chaudhry Rahmat Ali ) ) எனும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக (University of Cambridge) முஸ்லிம் மாணவர்குழுத் தலைவர் இந்திய முஸ்லிகளின் உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வு பாகிஸ்தான் எனும் தந்தையர் நாடு உருவாவதாகும் என்ற பிரேரணையை முன்வைத்தார்.இந்த பாகிஸ்தான் கோரிக்கை உயிர்ப்பு பெற்றபோது ஈ வே. ரா ( ராமசாமி நாயக்கர்) தமிழ் நாட்டில் இதற்கு ஆதரவளித்தார். ஆனால் சுவாரசியமாக பாகிஸ்தான் உருவாக முன்னரே மரணித்துவிட்ட அல்லாமா இக்பால் இஸ்லாமிய மத அடிப்படையிலான தேசிய வாதம் கடந்த இஸ்லாமிய சர்வதேசிய கருத்தினையும் கொண்டிருந்தார். இவ்வாறான கருத்துக்கள் அவர் பல முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னரான கருத்தாகவும் இருக்கல்லாம். எனவேதான் இவர் தனது பார்சிய கவிதையொன்றில்

"ஹார்ஹே முல்க் மில்கே மாஸ்

கே முழ்கி ஹுதாயெ மாஸ்:

" ஒவ்வொரு நாடும் எனது நாடே அந்த நாடும் இறைவனின் நாடே" குறிப்பிட்டிருந்தார்.

1940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற நீதிக்கட்சியின் சார்பில் திராவிடநாடு கோரிக்கையை ஈ .வே.ரா பெரியார் முவைத்தார் . இது "திராவிடஸ்தான்" என்று அழைக்கப்பட்டாலும் இது அடையப்படமுடியாத வெறும் கோரிக்கையாக காலாவதியாகிப்போனது. ஆனால் இந்த "கிழக்கிஸ்தான்" கோரிக்கை வெறும் வெத்துக் கோஷமாக அந்த பொதுத்தேர்தலுடன் மறந்தும் போய்விட்டது. தேசிய அரசியலில் தமது பங்களிப்பை செய்து பயன் பெறுகின்ற முஸ்லிம் அரசியல் சமூகம் அன்று காணப்பட்டது. 

தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சூழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தேசியவாதிகளின் கட்சியான தமிழரசுக் கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.

ஆனால் தமிழர் கூட்டணியினரின் குறுந்தேசிய அரசியல் வஞ்சகத்தனத்தை கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் தெளிவாக அன்று புரிந்துகொண்டனர். அதனால் அவர்களும் யாழ் மையவாத அரசியல தலைமத்துவங்களால் "துரோகிகள் " என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இந்த கூட்டணியினரின் "தமிழ் பேசும் மக்கள்" எனும் பொதுமை படுத்தும் தந்திர அரசியல் அணுகுமுறையை அனுபரீதியாக அஸ்ரப பட்டறிவு மூலம் புரிந்து கொண்டார். பின்னர் ஆயுதப்போராட்டமாக தமிழர் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றினைந்து ( அரசியல் ரீதியில் தமிழர் கூட்டணி ஒன்றினைந்தது போல்) போராட்டம் நடத்தி பின்னரும் கிழக்கு தமிழர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து பிளவுபட்டனர்.

இப்பிளவு கருணா எனும் முரளீதரன் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் போன்ற முக்கிய புலிகளின் உறுப்பினர்களால் ஏட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுபங்கள் ஊடாக வரலாறு வேறுவிதமாக திரும்பி நிகழ்ந்துள்ளது என்றாலும் பொருத்தமாகும். மீண்டும் தமிழ் பேசும் மக்கள் என்ற இனிப்பு கலந்த குளிசையை தமிழர் கூட்டணியின் இன்றைய புதிய முகமான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது திம்புஎன்னும் பழைய கள்ளை புதிய மொந்தையில் அடைத்துக்கொண்டு முஸ்லிகளின் கிழக்கு அரசியலை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் காங்கிரசை அனைத்துக்கொண்டு அல்லது பரஸ்பரம் இருபகுதியினரும் இணைந்துகொண்டு அரசியல் செய்வதென்பது எவ்வாறு அஸ்ரப் தமிழீழக் கோரிக்கைக்கு கூட்டணி அமைத்த அதே தவறாக எதிர்கால அரசியலில் பார்க்கப்படும்.

இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனதும் அவரது சகபாடிகளினதும் சகுனி அரசியல் குறித்து முஸ்லிம்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிரபாகரன் கொல்லபபட்டபின்னர் அடுத்த இரு மாதத்துள் சம்பந்தன் பங்குகொண்டு உரையாற்றிய வவுனியா உள்ளூரரட்சி மன்றத் தேர்தலின் போது "தமிழர் ஆயுதம்போரட்டம் வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை அடைந்து கொள்வதற்கான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியே. ஆனால் தமிழ் மக்களின் ஆரசியல் போராட்டம் தமிழ் மக்களின் சட்ட பூர்வமான அரசியல் அபிலாசைகள் அடையப்படும் வரை முன்னேடுக்கப்படும் " ( Tamil militancy was a part of the political struggle of the Tamil people to achieve the right to self- determination in the traditional homeland of the Tamil people in the northeast. ..But the political struggle of the Tamil people would go on till the legitimate political aspirations of the Tamil people are achieved” ) என்று குறிப்பிட்டு இருந்தார். 

இவர் தான் சமாதான காலத்தின் போது மூதூரில் அங்கு இடம்பெற்ற சிறு சிறு இன முரண்பாட்டு சம்பவங்களுக்கு ஒசாமா படை காரணம் என்று புலிகளின் இணையத்தளம் கற்பிதம் பண்ணி சர்வதேச ரீதில் முஸ்லிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முற்பட்டபோது அதற்கு இலங்கையின் "தமிழ் பேசும் மக்களின்" அரசியல் பேசும் சம்பந்தன் ஒத்து ஊதியவர் என்பதை முஸ்லிம் காங்கிரஸார் மறக்கலாம்.
ஆனால் முஸ்லிம் மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த தமிழ் இனவாத அரசியலுல் முஸ்லிம் மக்களை மீண்டும் இழுக்கும் முயற்சிக்கு துணை போகும் முஸ்லிம் அரசியலை மக்கள் அடையாளம் காண வேண்டும்.