Wednesday 10 June 2020

The LTTE were not destroyed in may 2009, they were destroyed in 1986; கந்தன் கருணை படுகொலை

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில் போல்தான் இந்த கந்தன் கருணையும், பெயரோ கந்தன் கருணை இல்லம், ஆனால் அங்கு நடந்தது ஒரு துளி கூட கருணை இல்லாத ஒட்டுமொத்தக் கொலை .
கந்தன் கருணை - March 30, 1987.
புலிகள் 2009 இல் அழிக்கப்படவில்லை ,
சகோதர இயக்க கொலை ஆரம்பிக்கப்பட்ட 1986 ஆம் ஆண்டிலே அழிக்கப்பட்டுவிட்டார்கள்

1986, ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஓர் கரிய ஆண்டு. ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு விடுதலை அமைப்புகளும் புலிகளால் தடை செய்யப்பட்டு வேட்டையாடப்பட்ட ஆண்டு.

சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம்,
புலிகள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் , யாரை வேணும் என்றாலும் கொல்வார்கள். கேட்டால், அதன் பெயர் மக்களுக்கான போராட்டம் என்பார்கள், 

அவர்களும் தமிழர்கள், அதே மக்களுக்காக போராட வந்தவர்கள்,  ஆனால் புலிகள்முன் அவர்கள் துரோகிகள்.

இந்த மக்களுக்கான போராட்டத்தில் அடவாடியாக யாழ்பாணத்தில் இருந்த ஒரு செல்வந்தரிடம் இருந்து பறிக்கபட்டது "கந்தன் கருணை" என பெயரிடபட்ட பெரும் வீடு, அந்த வீட்டு சொந்தக்காரனை விரட்டிவிட்டு புலிகள் அபகரித்துகொண்டார்கள், 
அது புலிகுகை ஆயிற்று. புலிகளுக்கு கப்பம் மறுத்தவர்கள், எதிர்த்தவர்கள், ஆலோசனை சொன்னவர்கள், சாபமிட்டவர்கள் எல்லாம் ஆங்காங்கு அடைத்துவைக்கபட்டனர்.

தமிழீழ விடுதலையை இலட்சியமாக கொண்ட போராளிகள் படுத்த படுக்கையில் படுகொலை செய்யப்பட்டார்கள். நடு வீதியில் போட்டு எரிக்கப்பட்டார்கள்.

வெளி நாடுகளில் விசேட பயிற்சி பெற்ற போராளிகள் தரம் பிரிக்கப்பட்டு இரகசியமாக படுகொலை செய்யப்பட்டார்கள்.

ஏனைய போராளிகள் தரம் பிரிப்புக்கென பல்வேறு வீடுகளில் சிறை வைக்கப்பட்டார்கள். அப்படி சிறை வைக்கப்பட்ட ஒரு வீட்டின் பெயர் "கந்தன் கருணை" - இது யாழ்ப்பாண நகரின் மத்தியில் அமைந்திருந்தது.

இந்த வீட்டில் 70போராளிகள் சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் அதிகமானவர்கள் EPRLF போராளிகள். காரணம் இவர்கள் தான் புலிகளால் இறுதியாக தடை செய்யப்பட்ட போராட்ட அமைப்பு.

March 30, 1987 புலிகளின் உள்முரண்பாட்டின் உச்ச கட்டம், புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக இருந்த கிட்டு என்பர் மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது. இதற்கான பழியை EPRLFஅமைப்பின் மீது போட்டு புலிகளின் முக்கிய உறுப்பினரான அருணா என்பவனால் இந்த 70 போராளிகளும் கோரமாக கொலை செய்யப்பட்டார்கள்.

ஆங்கில படங்களில் வரும் ஹீரோ போல (புலிகளுக்கு அடிக்கடி ஆங்கில யுத்தபடம் காட்டபடுவதுண்டு) இரு மெஷின்களை கையில் எடுத்து கந்தன் கருணை இல்லம் புகுந்தான் அருணா.


அங்கு இருந்த கைதிகள் மீது சுட தொடங்கினான், அவர்கள் அலறினார்கள், கதறினார்கள், காலில் விழுந்து கெஞ்சினார்கள்..
சிலருக்கு வாயிலே சுட்டான் அந்த அருணா என்ற மிருகம்.
மாடிக்கும் தளத்திற்க்கும் ஓடி ஓடி சுட்டான், அவன் களைத்ததும் அடுத்தவனை அழைத்டு சுட சொன்னான், சிலர் உயிர்தப்ப சமையலறை போன்ற இடங்களில் பதுங்கிகிடந்தனர்
எண்ணி எண்ணி தேடினார்கள் தப்பியவர்களை கண்டனர், அழைத்து வைத்து சுட்டனர்.. ஒரு வெடியில் எப்படி 7 பேரை சுட முடியும் என்று அவர்களை நிக்க விட்டு சுட்டு பயிற்சி எடுத்து அதில் வெற்றியும் கண்டனர்.

அவர்கள் நிலை எப்படி இருக்கும் என எண்ணிபாருங்கள்?, யார் இந்த அநியாயத்தை கேட்க, தடுக்க முடியும்? ஒருவரும் இல்லை

ஏராளமான அப்பாவி போராளிகள் காரணமின்றி உயிர்விட்டனர், அவர்கள் செய்த தவறென்ன? போராட வந்தது, தமிழீழம் அமைய சிங்களவனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தியது

இன்னும் கொடூரமாக அரைகுறை உயிரோடு இருந்தவர்களை தலையிலே சுட்டு கொன்றார்கள், ஒருவர் மட்டும் தப்பினவர்.
அவர் சொன்ன சொல்தான் மானிட அவலத்தின் உச்சம்.
எல்லோரும் சாகும் பொழுது ஆடு அறுக்கும்பொழுது வரும் சத்தம் போலவே முனகி செத்தார்கள், என்னால் அதிலிருந்து மீளமுடியவில்லை என்கிறார் .

இவ்வளவு கொடூரம் நடந்தபின் , அவர்களை சாவாகசமாக கொண்டு எரித்துவிட்டு வந்தனர் புலிகள்
விஷயம் லேசாக கசிந்தபொழுது புலிகள் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்கள் "அவர்கள் தப்ப முயன்றதால் நடவடிக்கை எடுக்கபட்டது, இருவர் மட்டும் பலி"

எப்படி இருக்கின்றது? இதுதான் புலிகள் நடத்திய போர், சொந்த மக்களையே கொன்று குவித்த சாகசம், தியாகம்.. வீரம்..

இன்று இராணுவத்திடம் சரண்டைந்த புலிகளை காணவில்லை என்கிறார்கள்,
அன்று புலிகளிடம் சரணடைந்த தமிழர்களும் இப்படித்தான் காணாமல் போனார்கள், 
மாற்று கருத்து உள்ளவர்களை புலிகள் ஒரு டீயும் பிஸ்கேட்டும் கொடுத்து விட்டு
சுட்டும் ,உயிருடன் டயர் போட்டு
எரித்தும் கொன்றார்கள்.அதே டீயையும் பிஸ்கெட்டையும் தான் புலிகளுக்கு இராணுவமும் திருப்பி கொடுத்தது . இதை தான் சொல்வார்கள் தெய்வம் நின்று கொல்லும் என்று.

இந்த கந்தன் கருணை இல்லம், சொந்த மக்களின் மேலே புலிகள் நிகழ்த்திய கொடூரத்திற்கு சுவடாய் இன்னும் அங்கே நிற்கின்றது , நிச்சயமாக அது ஒரு நினைவிடம், பெரும் அடையாளம், புலிகளின் காட்டுமிராண்டி தனத்தின் ஆறா தழும்பு.

கந்தன் கருணை மாதிரியான‌ ஏராள சம்பவங்கள் உண்டு, கொஞ்சம் ஆழமாக பார்த்த்தால் சிங்களவனை விட அதிகமான தமிழர்கள் புலிகளால் பாதிக்கபட்டிருக்க்கின்றார்கள்

தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் நாமே என அடம் பிடித்து அதை தட்டி பறித்து கொண்டவர்களும், அவர்களின் ஆதரவு அமைப்புகளும், இப்படுகொலை நடந்து 30 ஆண்டுகள் கழிந்தும் இதுவரை இதற்கு எந்தவிதமான மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.

குறைந்தது அந்த போராளிகளை பெற்றெடுத்த பெற்றோர்களிடமாவது இவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் இவை எதுவுமே இன்றுவரை நடக்கவில்லை.

'' நாங்கள் யாரையும் கொல்வோம்...
அல்பிரெட் துரையப்பா முதற்கொண்டு மகேஸ்வரி வேலாயுதம்வரை துரோகிகள் என்று நூற்றுக் கணக்கானோரைக் கொன்றோம். 
பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்களைக் கொன்றோம். 
அரச ஆதரவாளர்கள், இலங்கை இராணுவம் இந்திய இராணுவம், பொலிசாருடன் உறவுகளைப் பேணியவர்களைக் கொன்றோம். 
அயல்நாட்டில் தலைவரைக் கொன்றோம், அவருடன் அப்பாவிகளைக் கொன்றோம். சரணடைந்த படையினர் பொலிசாரைக் கொன்றோம். 
அரசியல்வாதிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், ஏன் சொந்த இயக்க உறுப்பினர்களையும் கொன்றோம். 
எங்கள் சிறைப்பிடிக்கப்பட்டு எங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் நாம் கொன்றோம். 
எங்களைக் கேள்வி கேட்டவர்களையும் கொன்றோம். 
வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொன்றோம். 
எங்களுடமிருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொன்றோம். சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொன்றோம், 
எங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொன்றோம். விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள், பஸ்கள், மதவழிபாட்டு ஸ்தலங்கள், சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளைக் கொன்றோம். 
குழந்தைகளைக் கொன்றோம், பெண்களைக் கொன்றோம், கர்ப்பிணிகளையும் கொன்றோம். முதியவர்களைக் கொன்றோம். 
எல்லைக் கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொன்றோம்.. 
மகிந்தாவுக்கு மாலை போட்ட குருக்களையும் கொன்றோம். 
காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். 
கொலைதான் எங்கள் போராட்டம்....

இந்த கொலைகளில் ஏதாவது ஒன்றை தாம் செய்யவில்லை என்று மறுக்க முடியுமா? அல்லது செய்த ஏதாவது ஒரு கொலைக்கு இன்றுவரை ஒருத்தனாவது மன்னிப்பு கேட்டானா ?

ஆனால் நாங்கள் தோல்வியடையும்போது வெள்ளைக் கொடியுடன் சரணடைவோம். எங்களை யாரும் கொன்றால் அது போர்க்குற்றம், மனித உரிமை மீறல். 
புலிகள் பல நூறு பேரை isis பாணியில் வெட்டிக் கொன்றார்கள் இதில் பலர் குழந்தைகள். கொல்லப்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பாலச்சந்திரனை விட வயது குறைந்தவர்கள்.
புலிகள் செய்த மனித குல விரோதச் செயல்களை உலகம் அறிந்துள்ளவரை இவர்கள் மேல் எந்தவித அனுதாபத்தையும் பெற்றுக் கொடுக்காது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.