Sunday, 7 June 2020

அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிராக புலிகள் துண்டுப்பிரசுரம்


அம்பாறையில் வாழுகின்ற முஸ்லீம்களை வெளியேறச்சொல்லி புலிகள் துண்டுப்பிரசும் மூலம் அறிவித்துள்ளனர். இப்பிரசுரம் அம்பாறையில் உள்ள முஸ்லீம்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இவ்வருட ஆரம்பத்தில் மூதூரில் இதுபோன்ற துண்டுப்பிரசுரம் வெளியிட்டபின் முஸ்லீம்கள் வெளியேறாததைத்தொடர்ந்து மூதூரில் இராணுவத்தாக்குதல்களை பலவந்தமாக மேற்கொண்ட புலிகள் அங்கு வாழ்ந்த மக்களை அகதிகளாக இடம்பெயர வைத்தனர்.

வடக்கு கிழக்கில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே பொருளாதார, அரசியல் விடயங்களில் முரண்பாடுகள் இருப்பினும் கூட, புலிகளின் 1990; பின்னான முஸ்லிம்கள் மீதான செயற்பாடுகளினால்தான் தீவிர முரண்பாடுகள் ஏற்பட்டன. வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தம்மை ஒரு தனித்த தேசமாகவும் நிலைநிறுத்த முற்பட்டனர். இந்த யதார்த்தத்தை தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் மூடி மறைத்துவரும் புலிகள் தமது இராணுவவாத படுகொலைகளை திட்டமிட்டு தொடர்ந்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடுவதே தமிழ் முஸ்லிம் மக்களிடையே பெரும் மோதலுக்கு தீ மூட்டத்தான். என்பதை என்பதை வடக்கு கிழக்கு வாழ் மக்களின் ஜனநாயகப் பேரவை. பிரசுரம் மூலம் வெளிப்படுத்தியிருந்தது. புலிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு முஸ்லிம் சமூகம் இலக்காகக்கொள்வது அப்பாவித் தமிழ் மக்களைத்தான். (இந்த உண்மை பல்வேறு கலவரங்களிலும் காணப்பட்டது) இந்த வாய்ப்பை பயன்படுத்தும் புலிகள் தாம்தான் தமிழ் மக்களின் இரட்சகர்கள் என்றும்@ முஸ்லிம்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றால் அது புலிகளால் மட்டுமே நடைபெற முடியும் என்ற தோற்றப்பாட்டையும் மிக மோசமான இனவாதத்துடன் கலந்து தமிழ் மக்கள் மத்தியில் பரப்பியுமுள்ளனர், பரப்பியும் வருகின்றனர். முஸ்லிம்களை விரோதிகளாகவும், தாக்குதல் தாரிகளாகவும் தமிழ் மக்கள் முன் காட்டும் புலிகள், முஸ்லிம்களின் உணர்வெழுச்சிக்கு தமது படுகொலைகளும் அடக்குமுறைகளும் காரணமாகவிருந்ததை திட்டமிட்டு மூடிமறைத்தே வந்துள்ளனர்.

யுதார்த்தத்தில் வடகிழக்கில் நிலவி வரும் புலிகள், முஸ்லிம்களுக்கிடையிலான முரண்பாட்டை தமிழர், முஸ்லிம் முரண்பாடாக மாற்றும் புலிகளின் குய யுக்தியை தகர்த்தெறிவதற்கு தமிழ், முஸ்லிம் முற்போக்கு சக்திகள் முன்வர வேண்டும்! (இதனூடாக நாம் புலிகளின் கபடத்தனமான அரசியலை மிகத் தெளிவாக மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த முடியும்)


இந்த வருட ஆரம்பத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக புலிகளால் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை என்கிற பெயரில் வெளியிடப்பட்ட பிரசுரம்

வட-கிழக்கு முஸ்லிம்களை அழிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை

வட-கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை தெரிவிப்பு

வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்கள் அனைவரையும் அழிக்கும் நிலை ஏற்படும். அதற்கான காலம் வெகுதூரத்தில் இல்லை என்று வடகிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு படை அறிவித்துள்ளது.

குறித்த படையின் பெயரில் திருகோண மலை, மூதூர் பகுதிகளில் ஒரு நோட்டீஸ் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளது. 'முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் ஒரு முதல் எச்சரிக்கை" என்ற தலைப்பிலான அந்த நோட்டீஸில் பின்வருமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழன் தனது உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடிக்கொண்டிருக்கிறான். அவனின் இந்த போராட்டத்திற்கு எதிராக பேரினவாதத்துடன் இணைந்து செயற்படுவதும், காட்டிக் கொடுப்பதும் நீங்கள் காலம் காலமாக செய்து வருகின்ற விடயங்களாகும். யுத்த காலங்களின் போது கொழும்பு மற்றும் பல இடங்களில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படு வதற்கும், காணாமல் போவதற்கும், சுற்றி வளைப்புகளின் போதும் தமிழ் பெண்கள் கைது செய்யப்பட்டு கற்பழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்றீர்கள். இப்படியான விடயங்கள் எனது சிறுவயது முதல் நேரிடை யாகவே பார்த்து அனுபவித்திருக்கின்றேன். இப்படியான நாசகார செயல்கள் மட்டுமல்ல பேரினவாதத்தால் உங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு பதிலாக அப்பாவி தமிழ் மக்களை தாக்குவதும் உடைமைகளை சேதப்படுத்துவதும் என்னால் தொடர்ந்தும் அவதானித்து வரும் விடயங் களாகும். தமிழனின் உரிமைப்போராட்ட வரலாற்றில் மூன்று பேரிடம் அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். ஒன்று பேரின வாதத்திடம், இரண்டு பேரினவாத அரசால் சாப்பிட்டுவிட்டு வீசி எறியப்படும் எலும்புத் துண்டுகளுக்கு அடிவருடிகளாக செயற்படும் தமிழ் குழுக்களிடம், மூன்று முஸ்லிம்களாகிய உங்களிடம் தமிழ் அரசியல்வாதிகளின் மேடைப்பேச்சுக்ககளின் போது முஸ்லிம்கள் எங்கள் உறவுகள், தமிழ் முஸ்லிம் உறவுகள் கட்டியெழுப்பப்பட வேண்டும். உங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்று அடிக்கடி பேசுகின்றார்கள். உங்களுக்கு இவ்வாறான எண்ணங்கள் மனதில் இருக்குமா?

நீங்கள் யார்......?

வியாபாரத்திற்காக இலங்கை வந்தவர் கள்தானே நீங்கள். உங்களின் நோக்கங்கள் முடிந்தளவுக்கு இனத்தை பெருக்குவது இதன் மூலம் தமிழனின் நிலங்களை அபகரிப்பது, வியாபாரத்தை பெருக்குவது. இதற்காக எத்தகைய சுயநலப்போக்கான விடயங்களிலும் ஈடுபட தயங்காதவர்கள் நீங்கள். உங்களுக்கு சொந்தமென வடக்கு, கிழக்கு மட்டுமல்ல நாட்டின் எந்தவொரு பிரதேசமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். உங்களுடைய சுயநலத்திற்காக தமிழனையும் அவனது உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுப்பதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

உங்களின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் தகுந்த சந்தர்ப்பம் வரும்போது உங்கள் அனை வரையும் வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக அழிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதை தங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றேன். இது உங்களுக்கான முதல் எச்சரிக்கை.

உங்களின் இந்த விரும்பத்தகாத துரோகத் தனங்களால் உங்களுக்கெதிராக என்னால் விசேடமாக உருவாக்கப்பட்டிருக்கும் படை ''வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை""
தலைவர்
வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு எதிரான படை

Courtesy -அகரன் akaraa
ஞாயிறுநவம்பர் 19, 2006

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.