Thursday, 21 May 2020

பிரபாகரன் கொள்ளைக்காரனா ? கொலைகாரனா ? சர்வாதிகாரியா ? (பாகம் -1)

பிரபாகரன் செய்த கொள்ளைகள் மற்றும் ஈழத் தமிழர்கள் மீதான கொலைகள் பற்றிய தொடர் கட்டுரை!!

உலகிலேயே விடுதலை போராட்டம் என்ற பெயரில் சக இன மக்களை கொன்று குவித்த ஒரே தீவிரவாத இயக்கம் விடுதலை புலிகள் இயக்கம் தான்.

1. புத்தூர் வங்கி கொள்ளை.

2. பிரபாகரன் குட்டிமணி குழுவுடன் இணைந்து 5.12.1978 இல் திருநெல்வேலி மக்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டனர். இதில் பிரபாகரன் பங்கு பற்றியதுடன் 12 லட்சம் கொள்ளையிடப்பட்டது.

3. 1981ஆம் ஆண்டு ஜனவரி மாதம், குரும்பசிட்டி என்ற ஊரில் இருந்த வன்னிய சிங்கம் என்பவரது அடைவுக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது. அதில் இரு தமிழர்களைச் சுட்டுக் கொன்றனர். பின் இந்தப் பணத்தைப் பயன்படுத்தி 1981 மார்ச்சு 25ஆம் தேதி யாழ்ப்பாணம் நீர்வேலி என்னும் இடத்தில் வைத்து 'மக்கள் வங்கி'யின் பணம் வழிமறித்துக் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் கொள்ளையிடப்பட்ட பணம் 40,00,000 (நாற்பது இலட்சங்கள்). இந்த இரு கொள்ளைகளிலும் பிரபாகரன் நேரிடையாகக் கலந்து கொண்டார்.

4. 1981 இல் நீர்வேலி வங்கிக் கொள்ளை இவர்களால் நடத்தபப்பட்டது. இதில் பிரபாகரன், ஒப்பெரே தேவன், குட்டிமணி, தங்கதுரை, சிறிசபரத்தினம் போன்ற சிலர் பங்கு கொண்டனர். ரெலோவால் நடத்தப்பட்ட இந்த கொள்ளை பணமான 82 லட்சம் ரூபாவை பிரபாகரன் எடுத்துக் கொண்டு, புலிக்கு மீண்டும் ஒடிச் சென்றார். குட்டிமணி தங்கத்துரை பற்றி தகவல், இரகசியமாக மர்மமாகவும் பொலிசருக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் கைதானர்கள். ஒப்பேரே தேவனை பின்னால் புலிகள் சுட்டுக் கொன்றனர். சிறிசபரத்தினத்தை புலிகள் பின்னால் கொன்றனர்.

5. யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா ஜூலை 27, 1975 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரபாகரனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

6. யாழ் மேயர் அல்பிரேட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்யும்போது உதவிய பற்குணராசா என்னும் சரவணனை பின்னால் சுட்டுக் கொன்றான்.

7. மட்டுநகர் மைக்கல் என்னும் மற்றொரு உறுப்பினரையும், 1976 இல் பிரபாகரன் சுட்டுக் கொன்றான்.

8. தமிழ் புதிய புலிகள் இயக்கத்தின் முன்னைய தலைவரான செட்டியை, இயக்கத்ததை விட்டு ஒடிச்சென்ற பிரபாகரன் குட்டிமணியின் துணையுடன் 1981 இல் சுட்டுக் கொன்றான்.

9. 2.1.1982 இல் புதியபாதை இயக்கத்தை சேர்ந்த சுந்தரத்தை சுட்டுக் கொன்றான் பிரபாகரன்.

10. 29.5.1982 சென்னையில் உள்ள பாண்டிபசாரில் உமாமகேஸ்வரனை பிரபாகரன் சுட்டான்.

11. டெலோ, பிளாட், ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப் போன்ற சுமார் 36 இயக்கங்கள் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தமிழீழம் வேண்டி உருவானது. இதன் இயக்கத்தலைவர்கள் அனைவரும் பிரபாகரனால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரை பற்றிய தகவல்கள் இனிவரும் தொடரில் நாம் பார்க்கலாம். சீறிசபாரத்தனிம், பத்மநாபா,அமிர்தலிங்கம், யோகேஸ்வரன்...போன்ற நானூறுக்கும் மேற்பட்ட இலங்கைத்தமிழ் தலைவர்களைக் கொன்றனர்.

12. 1983 ஜீலை 23ல் பலாலி- யாழ்பாணசாலையில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் புலிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதன் எதிர்வினையாக வெடிதத பெரிய கலவரத்தில் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000 தமிழர்கள் வீடுகளை இழந்தனர், 1, 50,000 தமிழர்கள் அகதிகளாயினர்.

13. 26.06.1985-ல் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சென்.ஜான்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா விடுதலைபுலிகளால் கொல்லப்பட்டார்.

14. 06.05.1986 - ல் தமிழீழ விடுதலை இயக்கத்தலைவர் திரு. சுந்தரம் சிறிசபாரத்தினம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

15. 12.09.1987-ல் செட்டிக்குளத்தில் 12 அப்பாவி ஈழத்தமிழர்களும், 13 ப்ளோட் உறுப்பினர்களும் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

16. 13.07.1989-ல் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

17. 13.07.1989-ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த வெற்றிவேல் யோகேஸ்வரன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

18. 07.05.1990-ல் மட்டக்களப்பை சேர்ந்த திரு.சாம் தம்பிமுத்து விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

19. 07.05.1990-ல் மட்டக்களப்பை சேர்ந்த திருமதி .கலா தம்பிமுத்து விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

20. 19.06.1990 - ல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இயக்கத்தலைவர் திரு. கந்தசாமி பத்மநாபா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

21. 09.06.1990-ல் அச்சுவேலி யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. கணேச சங்கரி யோகசங்கரி விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

22. 1990 - 78ஆயிரம் ஈழத்தமிழ் முஸ்லிம்களை துரத்திய, இரக்கமற்ற விடுதலைபுலிகள் இலங்கை, ஏறாவூரில் ஆகஸ்ட் 11ம் தேதி 1990-ல் 116பேர்கள் மற்றும், ஆகஸ்ட் 4-ம் தேதி 1990-ல் காத்தான்குடியில் 147சக தமிழ் முஸ்லிம்களை கொன்று குவித்தனர் .விடுதலைப்புலிகள்.

23. ஜூலை - 23 - 1990-ல் அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் 7பேரை வீரச்சோலை என்ற இடத்தில் தூக்கில் இட்டனர் விடுதலைப்புலிகள்.

24. 24.03.1991-ல் அக்கரைப்பட்டு மீன் சந்தையில் 11 அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

25. 05.08.1990-ல் முளியங்காட்டில் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த 17 அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

26. 06.08.1990-ல் அம்பாறையில் வயலில் வேலை செய்துக்கொண்டிருந்த 33 அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

27. 21 மே 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புத்தூரில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி உட்பட 15 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

28. ‘தோழி’ இதழின் ஆசிரியரும், கவிஞரும், பெண்ணிலைவாதியும், எழுத்தாளருமான செல்வி என்று அழைக்கப்பட்ட சேமமடுவைச் சேர்ந்த செல்வநிதி தியாகராசா யாழ்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் இறுதியாண்டு ஆண்டு மாணவியாகஇருந்தவேளையில் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

29. ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.

30. 27.10.1990-ல் பெரியநீலாவணை, கல்முனையை சேர்ந்த திரு. ரத்தினம் பாலிப்போடி விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் கிராம சேவை உத்தியோகஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

31. 1992-ல் விடுதலைபுலிகளின் பிரதி தலைவர் திரு.மாத்தையா (கோபாலசாமி மகேந்திரராஜா) விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

32. ஜூலை 21 - 1992-ல் கொழும்பு - பட்டிகோலா ரயிலில் பயணம் செய்த 7 ஈழத் தமிழ் முஸ்லிம்களை சுட்டுக்கொன்றனர் பரங்கியமடு என்ற இடத்தில்.

33. இந்திய ராணுவத்தை எதிர்க்க துணைபுரிந்த பிரேமதாசாவையும் 1993-ல் கொன்றுவிட்டனர்.

34. ஈழவிடுதலையின் முன்னோடிகளில் ஒருவர் சபாலிங்கம். அவர் 1994 மே 1 அன்று பிரான்ஸ் இல் அவரது வீட்டில் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் புலிகளினால் கொல்லப்பட்டார்.

35. 03.12.1994-ல் இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் அறிவிப்பாளர் திரு.கே.எஸ்.ராஜா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

36. 02.07.1997-ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த திரு.அருணாச்சலம் தங்கத்துரை விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

37. 17.05.1998 - ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த யாழ் மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

38. 15.07.1998-ல் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த திரு. சண்முகநாதன் வசந்தன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர்வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

39. 11.09.1998 - ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த யாழ் மாநகர முதல்வர் பொன்னுதுரை சிவபாலன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

40. 06.10.1998-ல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு. கனகசபை ராஜதுரை விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் வடமராட்சி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

41. 11.01.1999-ல் தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த திரு. யேக்கப் அந்தோனி பீட்டர் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

42. 24.01.1999-ல் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த திரு. தில்லைநாதன் சந்திரமோகன்(சதீஸ்) விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

43. 02.02.1999-ல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு. நடராசா சிவராசா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் உப தவிசாளர் வலிக்காமம் கிழக்கு பிரேதேச சபை என்பது குறிப்பிடத்தக்கது.

44. 14.02.1999-ல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு. பண்டாரி கந்தசாமி விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் வலிக்காமம் கிழக்கு பிரேதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

45. 13.05.1999-ல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு. முருகன் பூபாலசிங்கம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் வலிக்காமம் கிழக்கு பிரேதேச சபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

46. 29.07.1999 - ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த கலாநிதி நீலன் திருச்செல்வம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

47. 02.09.1999-ல் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் பிரதி தலைவர் திரு. நாகலிங்கம் மாணிக்கதாசன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

48. 14.01.2000-ல் தமிழீழ மக்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்த திரு. வடிவேலு விஜயரட்ணம்(செல்லக்கிளி மாஸ்டர்) விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் பருத்தித்துறை நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

49. 01.03.2000-ல் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த திரு. வைரமுத்து அன்ரன் சிவலிங்கம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் யாழ் மாநகரசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

50. 15.05.2000-ல் யாழ்பாணத்தை சேர்ந்த திரு. சந்தானம் காண்டீபன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.
இவர் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

51. 10.09.2000-ல் தமிழீழ விடுதலை இயக்கத்தை சேர்ந்த திரு. செழியன் பேரின்பநாயகம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

52. 07.11.2000-ல் தமிழர் விடுதலைக்கூட்டணியை சேர்ந்த திரு. நிமலன் சௌந்தரநாயகம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

53. சாவகச்சேரி நுணாவில் என்னும் இடத்தை பிறப்பிடமாக கொண்ட தோழர் றொபேட் அவரது 45 ஆவது வயதில் 14.06.2003 அன்று விடுதலை புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

54. மகேஸ்வரன் எம்பியைக் கொலை செய்த புலிப் பயங்கரவாதி வசந்தன்.

55. 03.03.2004-ல் தமிழர் விடுதலை கூட்டணியை சேர்ந்த திரு.ராஜன் சத்தியமூர்த்தி விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் சமூக சேவகர் என்பது குறிப்பிடத்தக்கது.

56. 25.02.2005-ல் பருத்தித்துறையை சேர்ந்த திரு.சூரிய மூர்த்தி விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் திருமலை மாநகர சபை முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

57. 07.03.2005-ல் வெலிகந்த கிராமத்தை சேர்ந்த 5 அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

58. 12.08.2005-ல் சிறிலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த திரு. லக்ஷ்மன் கதிர்காமர் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

59. 12.08.2005-ல் இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனம் அறிவிப்பாளர் திருமதி.ரேலங்கி செல்வராசா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

60. 12.08.2005-ல் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தை சேர்ந்த திரு. செல்வராசா விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

61. 10.10.2005-ல் யாழ் மத்திய கல்லூரி அதிபர் திரு. கணபதி ராஜதுரை விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

62. 11.10.2005-ல் கோப்பாய் கிறிஸ்துவ கல்லூரி அதிபர் திரு. நடராசா சிவகடாட்சம் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார்.

63. 12.08.2006-ல் பருத்தித்துறை யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. கேதீஸ் லோகநாதன் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டார். இவர் இலங்கை சமாதான செயலக பிரதி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

64. 17.09.2006-ல் பொட்டுவில் கிராமத்தை சேர்ந்த 11 அப்பாவி ஈழத்தமிழ் முஸ்லிம்கள் விடுதலைபுலிகளால் கொலைசெய்யப்பட்டனர்.

65. 2009 - -ல் 50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர் விடுதலைபுலிகள்!!!

66. 2009 –ல் பாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற விடுதலை புலிகள் – விக்கிலீக்ஸ்.

இலங்கையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் அடைந்து கொண்டிருக்கும் அளவற்ற இழப்புகளுக்கும், பெரும் துன்பங்களுக்கும் பிரபாகரனும் பயங்கரவாத இயக்கத்தினருமே காரணமாவர்.

உலக வரலாற்றில் பயங்கரவாதத்தை கையிலெடுத்த சர்வாதிகாரிகளான இட்லர், இடிஅமீன், போல்பார்ட் போன்றவர்கள் தங்கள் இனத்தின் காவலர்களாகவே தங்களை அடையாளப்படுத்தினர். ஆயினும் அவர்கள் தான் தங்கள், தங்களது இனங்களின் பேரழிவுகளுக்கே காரணகர்தாக்களாகினர். பிரபாகரனும் இநத வரலாற்று உண்மைக்கு வழுவாத சாட்சியமாகத் திகழ்கிறார்.

ஈழ தமிழ் மக்களின் மீதான பிரபாகரனின் கொலைப்பட்டியல் தொடரும்.....

 https://www.facebook.com/groups/599853110055198/permalink/707403415966833/

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.