11. யாழ்ப்பாணத் தமிழரும்,
மலையகத் தமிழரும்!
இலங்கையின் மக்கள்தொகை சுமார் இரண்டு
கோடியாகும் (2006). சிங்களவர்கள் (74%)
மத்திய மற்றும் தென் பகுதிகளில் பரவலாக
வசிக்கின்றனர்.
மற்றப் பிரிவுகளாக இலங்கைத் தமிழர் 12.6 சதவிகிதமும், மலையகத் தமிழர் அல்லது
இந்திய வம்சாவளியினர் 5.64 சதவிகிதமும், முஸ்லிம்கள் 7.64 சதவிகிதமும், இந்திய முஸ்லிம்கள் 0.2
சதவிகிதமும், மலேசிய நாட்டினர் 0.3 சதவிகிதமும், ஐரோப்பியர் அல்லது கிறிஸ்தவர்
0.3 சதவிகிதமும் இங்கு உள்ளனர்.
மத அடிப்படையில் பார்த்தால் பெüத்தர்கள் 69.3 சதவிகிதமும், இந்துக்கள் 15.5, கிறிஸ்தவர்கள்
7.6, முஸ்லிம்கள் 7.5 சதவிகிதமாகப் பிரிக்கலாம்.
சிங்களவர்கள் பெரும் பகுதியாக வசிக்கும்
மத்திய தென் பகுதி இலங்கையில் தமிழர்கள் மட்டும் 38
சதவிகிதம் என்ற விகிதத்தில்
வாழ்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களை ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என
இருவகையாகப் பிரிக்கலாம். இவர்களின் சமூக வாழ்க்கை நிலைகளைக் கொண்டு பிரிக்கும்போது~
வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர், கிழக்குப் பகுதித்
தமிழர், ஈழத் தமிழர், மலையகத் தமிழர்,
முஸ்லிம் தமிழர் என்றும்
தொழில் அடிப்படையில் 1. விவசாயிகள், 2. மீனவர்
3. தோட்டத் தொழிலாளர்,
4. அரசு அலுவலர், 5. தொழில்துறை
வல்லுநர், 6.வணிக முதலாளிகள் என்றும் பிரிக்கலாம்.
வடக்குப் பகுதி யாழ்ப்பாணத் தமிழர்:
யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையாகவும்
மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் குறைந்த அளவிலும்
வசிக்கிறார்கள்.
யாழ் மக்களைப் பெருவாரியாக இரண்டு
பிரிவுகளில் அடக்க இயலும். சிலர் நிலப்பிரபுக்களாகவும் பலர் உழவர்களாகவும்
இருக்கிறார்கள். நிலப்பிரபுக்களில் பலர் பணப்பயிர்களை பயிரிடுகிறார்கள்.
பெரும்பான்மைச் சமூகமாக உழவர் பிரிவு
விவசாயம் செய்வதில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும்
பின்தங்கிய யாழ்பகுதியினர் என்று கொள்ளலாம். யாழ் மக்களிடையே சாதி முறைகளால்
மிகுந்த ஏற்றத் தாழ்வு தொடர்ந்து நிலவி வருகிறது. மேட்டுக்குடி மக்கள்
கீழ்ப்பிரிவு மக்களை மிகக் கேவலமானவர்களாக வெறுத்து ஒதுக்குகின்றனர். யாழ்
உயர்குடியினர் தங்களைச் சங்கிலி மன்னனின் வாரிசுகளாகக் கருதிக் கொள்கின்றனர்.
இவர்களிடையே சைவம் தீவிரமான மதமாகக் கொள்ளப்படுகிறது.
ஆங்கிலேயே ஆட்சிக் காலத்தில் கல்வி
பெறுவதில் முன்னணியில் நின்றதால் அரசு அலுவலர்களாகவும், நிர்வாக
இயந்திரங்களில் முக்கியப் பங்கு வகிப்பவராகவும் யாழ் மக்களில் பலர் இருந்து
வருகின்றனர்.
கல்வித் துறையில் தரப்படுத்துதலை சிங்கள
ஆட்சியாளர் நுழைத்தபோது இவர்களில் பலர் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாகவே படித்த
இளைஞர்களும் சிங்கள ஆதிக்க எதிர்ப்பு இயக்கங்களில் தீவிர பங்கெடுக்க முடிந்தது.
இவர்கள் சங்கிலி மன்னனின் நினைவுகளைப்
போற்றுவதும், அவன் புகழைப்பாடுதலுமாக இருக்கின்றனர்; இதனாலேயே இவர்கள்
மத-இன வெறி கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட காரணமாகின்றனர்.
* போர்க்கோலம் (செ.கணேசலிங்கம்),
பஞ்சமர் (டேனியல்) போன்ற இலக்கியங்கள் இவர்களின்
வெள்ளாள ஆதிக்க மனப்பான்மைக்கான எதிர்ப்பு இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.
கிழக்குப் பகுதித் தமிழர்:
மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய
பகுதிகளில் இவர்கள் வசிக்கிறார்கள்,
விவசாயப் பொருளாதாரம் இவர்களின்
முதுகெலும்பு. இதனால் இந்தப் பகுதியில் சிங்களவர்களை அரசு அடிக்கடி குடியேற்றம்
செய்து வருகிறது. மத, இனக் கலவரங்கள் என்று வந்தால் உடனடிப் பாதிப்புக்கு இங்குள்ள தமிழர்கள்
ஆளாகின்றனர். ஆங்காங்கே சிங்கள அரசுகள் நிலச்சீர்திருத்தச் சட்டங்கள் கொண்டு
வந்தபோது பாதிக்கப்பட்டவர்களில் இவர்களே முதன்மையானவர்கள். பொருளாதார ரீதியில்
மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.
முதலாளிய வணிகத் தமிழர்:
சிலர் வணிகநிதி ஆதாரத்தைக் கொண்டும்
வேறு சிலர் தோட்ட அதிபர்களாகவும் இருக்கின்றனர். லேவாதேவி கடன் தொழில் செய்யும்
செட்டி நாட்டுக்காரர்கள் கூட இதில் அடங்குவர்.
கொழும்புச் செட்டித் தெருவில் பலகோடி
ரூபாய் மதிப்புள்ள தமிழரின் நகைக்கடைகள் சிங்களவர் பகுதியில் இவர்களுக்குள்ள
ஆதிக்கத்தைக் காட்டும்.
மலையகத் தமிழர்களின் குரலாகக் கருதப்படும்
தொண்டமான் சுமார் 800 ஏக்கருக்குச் சொந்தமான தோட்டத்தைத் தன்னிடத்தே வைத்துக்
கொண்டிருந்தார்.
அமெரிக்க-ஜப்பான் கூட்டுறவு பெற்று உலக
வங்கியிடமிருந்து 28 கோடி ரூபாய் கடனுதவியைப் பெற்ற தொழிலதிபர் ஞானம் இதில்
அடங்குவார். அவருக்கு ஒப்பான குணரத்தினம்,
மகாராஜா,
வி.வி.ஜி., போன்றவர்களும்
தமிழர்களே.
கொழும்பு மாவட்டத்தில் சின்டெக்ஸ் என்ற
தொழில் நிறுவனத்தை ஞானம் நடத்துகிறார். இந்தத் தொழிற்சாலையில் ஒப்புக்குக்கூட ஒரு
தமிழர் இல்லை. (இருப்பினும் இவரது நிறுவனம் 1983-இல் நடந்த கலவரத்தில் தாக்கப்பட்டது). அதுபோலவே இன்னபிறரது
வியாபார நிறுவனங்களும் சிங்களவர்களின் கலவரங்களால் சீர்குலைவதுண்டு.
இவர்கள் தமிழ் ஈழத்துக்கு வெளியே
சிங்களவர் பகுதியில் தொழில் நடத்துவதால் ஒவ்வொரு கலவரத்திலும் தாக்கப்படுவார்கள்.
மீண்டும் அங்கேயே தொழில் தொடங்கி, இழந்த செல்வத்தை மீட்பர்.
மலையகத் தமிழர்:
1815 முதலாக ஆங்கிலேயர்களால் தென்னிந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக
அழைத்து வரப்பட்டவர்கள். மிகக் குறைந்த கூலி வாங்கிக் கொண்டு ரப்பர், தேயிலை, காப்பித்
தோட்டங்களில் வேலை செய்பவர்கள். இவர்களின் பயணக் கதை மிக மோசமானது. ஒப்பந்தக் கூலி
முறையில் தென்தமிழகத்தில் பிடித்து இலங்கை காடுகளில் வழி நடத்தி அழைத்து வரும்போதே
நாலில் ஒரு பகுதியினர் சாவை அணைத்துக் கொண்டனர்.
கால்நடையாக இராமேஸ்வரம் வரையும், அதற்குப் பிறகு
தோணியிலும் மன்னார் கொண்டு செல்லப்பட்டனர். மன்னார் அடைந்ததும் அங்கிருந்தும் பல
மைல்களுக்கு அப்பாலுள்ள மத்திய, தென்பகுதி மலைகளுக்கும் கால்நடையாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்படி இவர்கள் உடல் நலிவுற்று அங்கு
போய்ச் சேரும்போது வழியில் ஏற்படும் மரணங்களுக்குப் பஞ்சமில்லை.
இந்தக் கூலிகளுக்குப் பருவநிலை
பாதித்தால் வேலைவாய்ப்பு உத்தரவாதம் இல்லை. மாதக் கணக்கில் பட்டினிப் போராட்டம், ஆயுள் கைதிகளைப்
போன்று மாதக்கணக்கில் பட்டினிப் போராட்டம். ஆயுள் கைதிகளைப் போல் இவர்களது வாழ்விடங்கள்
சிறு சிறு தடுப்புகளைக் கொண்டிருக்கும் அறைகளைக் கொண்டது.
மகிழ்ச்சி, துன்பம், இறப்பு, பிறப்பு யாவும் இந்த
அடுத்தடுத்து இருக்கும் சிறு சிறுதடுப்புகளில்தான்.
இவர்கள் மலையை விட்டுக் கீழே
இறங்குவதற்கும், சிறிய நிலங்களைக் கூடச் சொந்தமாய் பெறுவதற்கும்
உரிமையற்றவர்கள். இதன்மூலம் கண்டியச் சிங்களப் பகுதிகளில் இவர்கள்
தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகள் போன்று வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்கள்
ஆதியிலிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும்,
சிங்கள ஆட்சியாளர்களாலும் அடக்கி
ஒடுக்கப்பட்டு விட்டன.
அதே சமயம் தமிழ்-சிங்கள பகை மூளுமானால்
முதலில் தாக்குதலுக்கு ஆளாவதும் இவர்களே.
நிலச் சீர்திருத்தத்தால் தங்களது நிலங்களையும்
கூலி வேலை செய்ய முடியாத நிலையை அடைந்த சிங்கள விவசாயிகளின் கொடுஞ்செயலே இதற்கு
காரணமாகிறது. தங்களின் வாழ்க்கை இருண்டு போவதற்கு இந்த மலையகத் தமிழர்களே காரணம்
என்பது கண்டியச் சிங்களவரின் கூற்றாகும்.
ஈழத்தில் இருந்த தமிழர்களுக்கும், குடியேறிய தமிழர்களுக்கும்
இடையிலான உறவு மிகவும் மோசமானது. சமீபகாலக் கணக்கெடுப்பில் இவர்களுக்கு சமூக அங்கீகாரமோ, பொருளாதாரச் சலுகைகளோ
ஏதுமில்லை என்பது தெளிவாகிறது. இவர்களில் படித்தவர் என்பது கிஞ்சித்தும் இல்லை (Report on consumer finance and socio economic survey
1978-1979)
1928 டொனமூர் சீர்திருத்தத்தின்படி அப்போதைய மலையகத் தமிழருக்கு 40 லிருந்து 50 சதவிகிதம் வரை
குடியுரிமை இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தொடர்ந்து ஓராண்டு வசித்த~குடியேறிய தமிழருக்கு
அடையாளச் சீட்டினை வழங்கினர்.
ஆனால் 1948-இல் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது வாக்குரிமை நீக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட
அடையாளச் சீட்டினையும் அரசினர் பறித்து விட்டனர்.
1964 வரை இது நீடித்தது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 9,75,000 பேர்
இலங்கையில் நாடற்ற தமிழர்கள் இருந்தார்கள். சிரிமாவோ~சாஸ்திரி
ஒப்பந்தப்படி 6,00,000 பேரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக் கொள்வதற்காக
கையெழுத்தானது.
மீதமுள்ள 3,75,000 பேருக்கு
இலங்கையில் குடியுரிமை வழங்குவதாகவும் ஒப்பந்தம் கூறியது. 1988 வரை
குடியுரிமை வழங்குவதை இழுத்தடித்த சிங்கள அரசு ஜே.ஆர். ஜெயவர்த்தனா குடியரசுத்
தலைவர் ஆனதும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கியது.
12: முஸ்லிம் தமிழர்கள்
முஸ்லிம்கள் இலங்கை முழுவதும் பரவலாக
வாழ்கிறார்கள். அதாவது கொழும்பு, குருநாகல், களுத்துறை, புத்தளம், கம்பஹா, அநுராதபுரம், காலே, பொலனறுவை, மாத்தளை, அம்பாந்தோட்டை,
மொனறாகலை,
கண்டி,
கேகாலை,
பதுளை,
நுவரெலியா, இரத்தினபுரி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், வவுணியா, முல்லைத்தீவு
பகுதிகளில் 41 சதவிகிதம் முதல் 1
சதவிகிதம் வரை வாழ்கின்றனர்.
கொழும்பு முதல் மொனறாகலை வரையிலுள்ள 11 மாவட்டங்களில் 5 லட்சத்து 14 ஆயிரம் பேரும், கண்டி முதல்
இரத்தினபுரி வரையுள்ள மாவட்டங்களில் 2
லட்சத்து
49 ஆயிரம் பேரும், கிழக்கு மாகாணத்தில்
உள்ள 3 மாவட்டங்களில் 3
லட்சத்து
18 ஆயிரம் பேரும், வடக்கில் உள்ள 6 மாவட்டங்களில் 61 ஆயிரம் பேரும் வசிப்பதாக
1981-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு உறுதி செய்கிறது.
குருநாகல், கண்டி, புத்தளம் பகுதிகளில்
தென்னந்தோப்பு உரிமையாளர்களாக, விவசாயம் சார்ந்த பண்ணை அதிபர்களாக முஸ்லிம்கள் உள்ளனர்.
வடக்கு கிழக்கில் கீழ்த்தட்டு வர்க்கத்தினராகவும்,
தெற்கிலோ நடுத்தர மற்றும் உயர்தர வகுப்பினராகவும்
உள்ளனர்.
வடக்கு,
கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள்
தமிழ் மற்றும் தமிழரோடும், தெற்குப் பகுதி மக்கள் வாழ்நிலை,
வசதி காரணமாக சிங்களவரோடும் தங்களை இணைத்துக்
கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். தென்பகுதி முஸ்லிம்களின் குழந்தைகள்
சிங்களத்தையே கல்வி கற்கும் மொழியாகத் தேர்வு செய்கின்றனர். பெரும்பாலான
முஸ்லிம்களின் தாய்மொழி என்னவோ தமிழ்மொழிதான்.
இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் 7 ஆம் நூற்றாண்டில்
தொடங்கியது என்று சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். அப்போது வெறும் வியாபாரத் தொடர்போடுதான்
அவர்கள் இருந்தனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ்வது 9, 10, 12 ஆம்
நூற்றாண்டுகளில்தான் தொடங்கியது. இதை ** இரண்டாவது நகரமயமாதல் என்று
குறிப்பிடுகிறார்கள். மூன்றாவது நகரமயமாதல் என்பது நவீன மத்தியதர வாழ்க்கை நிலையை
உருவாக்கிய காலனி ஆட்சிக் காலமாகும்.
இவர்களில் பெரும்பான்மையோர்
நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். பாராளுமன்ற,
ஜனநாயகப் பங்களிப்பவர்களில்
முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
அம்பாறை போன்ற பகுதிகளில் வசிக்கும்
மக்களிடையே நல்ல கவித்திறன் உண்டு. இவர்கள் கழனிகளில் வேலை செய்யும்போது பெண் கவி
புனைந்து பாடும்போது, ஆண் எதிர் வரியைப் பாடுவதும் ரொம்ப இனிமையாக இருக்கும். இந்தக்
காட்சியைக் கண்டு புல்லரித்துப் போன உணர்ச்சிக் கவிஞர் காசி. ஆனந்தன் முஸ்லிம் ஆண்-பெண்களின்
கவித்திறமையை சிலாகித்து அழகான கவிதையொன்றை இயற்றியிருக்கிறார்.
முஸ்லிம்களையும், தமிழர்களையும்
தனியாகப் பிரிக்க எண்ணிய சிங்கள அரசு,
வானொலி நிகழ்ச்சியில் கூட இஸ்லாமிய
நிகழ்ச்சிகள் என்ற ஒரு பிரிவையே ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சி
தமிழில்தான் வழங்கப்படுகிறது.
1981 கணக்கெடுப்பின்படி முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மக்கள்தொகை 11,34,556 ஆகும்.
இங்குள்ள முஸ்லிம்களை மூன்று வகையாகப்
பிரிக்கலாம்.
1. இலங்கை வாழ் முஸ்லிம்கள்,
""மூர்கள்''
என்று இவர்களை குறிப்பிடுகிறார்கள். 2. இந்திய அல்லது
பாகிஸ்தானி முஸ்லிம்கள். 3. மலேயா முஸ்லிம்கள்.
(ண்)"மூர்கள்'
இந்தியாவில் இருந்தும், அரேபிய நாட்டில்
இருந்தும் வந்தவர்கள். இவர்கள் வியாபாரிகளாக இலங்கை வந்து பின்னர் இங்குள்ள
மக்களோடு திருமணத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டவர்கள்.
தென்னிந்தியாவில் இருந்து குடியேறிய
(காயல்பட்டணம், கீழக்கரை) முஸ்லிம்கள் விவசாயிகளாகவும், மீனவர்களாகவும்
வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழாகும்.
இவர்கள் பெரும்பாலும் சன்னிப் பிரிவு மற்றும்
சாஃபிப்பிரிவைச் (நன்ய்ய்ஹ் & நஹச்ண்)சார்ந்தவர்கள்.
(ண்ண்)இரண்டாவது பிரிவான இந்திய-பாகிஸ்தானி முஸ்லிம்கள் என்பவர்
பெரும்பாலும், ""மேமோன்'' ""போக்ராஸ்'' மற்றும் தென்னிந்திய முஸ்லிம் சமூகத்தில் இருந்துவந்து
குடியேறிய வியாபாரிகள் ஆவர்.
இவர்கள் பெரும்பான்மையோர்
""சாஃபி'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்களில் மேமோன் முஸ்லிம்கள் மட்டுமே
""ஷியா'' பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் பெரும்பாலும் தமிழ், மலையாளத்தை
தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
மேமோன் மற்றும் போக்ராஸ் பிரிவினர்
உருது மற்றும் குஜராத்தியைப் பேசக் கூடியவர்கள். (சஹற்ண்ர்ய்ஹப் ணன்ங்ள்ற்ண்ர்ய்
ஹய்க் ற்ட்ங் ஙன்ள்ப்ண்ம் டங்ர்ல்ப்ங் ஆஹ் ய.ஐ.ந. ஒஹஹ்ஹக்ஷஹப்ஹய்.)
(ண்ண்ண்)மூன்றாவது பிரிவான மலேயா முஸ்லிம்கள் சமீப காலத்தில்
வந்து குடியேறியவர்கள். இவர்கள் டச்சுக்காரர்கள் காலத்தில் ஜாவாவில் இருந்து வியாபார
நிமித்தமாக குடியேறியவர்கள். தாய்மொழி மலேயா மொழியாக இருந்தபோதிலும் தமிழையே
பேசுகின்றனர். இவர்கள் சன்னிப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மற்ற பிரிவினரைப்போல் அல்லாது
திருமணங்களை சிலோன் மூர்களோடும் கூட நடத்திக் கொள்கின்றனர்.
1. இந்திய, பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 34,195
பேர். 2.
மலேயா முஸ்லிம்கள் 43,378. 3. மூர்கள்
10,56,972.
ஆக்கிரமிப்பாளர்களைப் போலன்றி இம்மூன்று
குழுக்களும் படையெடுப்பால் வந்து குடியேறியவர்கள் அல்ல. இவர்கள் இலங்கையில்
தங்களுக்கெனத் தனியான ஆட்சி முறையையும் நிலைநாட்டிக் கொள்ளவில்லை. அதனால் அவர்களது
மதம் அரசாங்கத்தால் ஒடுக்கக் கூடியதாகவும் இல்லை.
சிலர் விவசாய சமூகத்தில் இருந்தபோதும்
பெரும்பான்மையான சமூகம் வர்த்தகத்தில் ஈடுபட்டு வைர வியாபாரத்தில் மேலாதிக்கம்
செலுத்துகின்றனர்.
நகர முஸ்லிம்களில் பெரும்பான்மையோர்
வர்த்தகர்களாகவும் சிறுபான்மையோர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.
இதில் மேல்தட்டு சக்திகள் கொழும்பில்
தங்கி உள்ளன. மொத்த முஸ்லிம்களின் அரசியல் தன்மை கொழும்பு வாழ் முஸ்லிம்களால்
தீர்மானிக்கப்படுகிறது.
பெரும்பாலான முஸ்லிம்கள்
கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் கணிசமான பகுதியினர் விவசாயிகளாகவும்
மற்றவர் சிறு வியாபாரம், நில உரிமையாளர்,
மீனவர் மற்றும் கூலிகளாகவும் உள்ளனர்.
கிராமப்புற சமூகத்தில் சிங்களவர்களோடு ஒப்பிடும் போது முஸ்லிம்களின் கல்வியறிவு
மிகக் குறைவு. சிங்கள மேலாண்மைக் கலாசாரம்,
இவர்களை "தம்பியா' (பட்ஹம்க்ஷண்ஹ்ஹ)
அதாவது கல்வி அறிவற்ற ""நரித்தனம்''
உள்ள வியாபாரிகள் என்று
குறிப்பிடுகிறது.
இவர்கள் புத்த இனவெறி கலாசாரத்தால், அடிக்கடி இனவெறித்
தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். முதன் முதலில் போர்த்துக்கேயர் உள்
நுழைந்தபோது அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களே.
எல்லாக் காலனிவாதிகளுடனும் கடுமையான
எதிர்ப்பினைக் காட்டியவர்கள். வியாபாரத்தில் போட்டி நிமித்தமாக அந்நிய
ஆட்சியாளர்களும் இவர்களை ஒடுக்கி உள்ளனர். 1613இல் "மதாரா'
என்ற இடத்தில் நடந்த படுகொலைகள்
இதற்குச் சான்றாகும்.
புத்த மேலாண்மைக் கலாசார உணர்வால்
"சிங்கள பெüத்தயா' என்ற பத்திரிகையில் அதன் ஆசிரியரான அநகாரிக தர்மபாலா, ""முஸ்லிம்
கடைகளை பகிஷ்கரிப்பவர்கள் மட்டுமே உண்மை தேச பக்தர்கள்'' என்று எழுதுகிறார்.
அவர் மேலும் கூறுவதாவது~
"பிரித்தானியருக்கு ஜெர்மானியர் எவ்வாறோ, சிங்களவருக்கு
முஸ்லிம்களும் அவ்வாறே. முகமதியர்,
சிங்களவருக்கு சமயத்தாலும், இனத்தாலும் மொழியாலும்
அந்நியர்கள். பௌத்த சமயம் இல்லாவிடின் மரணத்தையே சிங்களவர் வேண்டுவர். பிரித்தானிய
உத்தியோகஸ்தர்கள் சிங்களவரைச் சுடலாம்;
தூக்கிலிடலாம்; சிறைபிடிக்கலாம்.
ஆனால், எப்போதும் சிங்களவருக்கு முஸ்லிம்கள் பகைவர்களே. அந்நியரால்
இழைக்கப்படும் அவமானங்களை இனியும் பொறுக்க முடியாது என்பதை அமைதிமிக்க சிங்களவர்
இறுதியில் உணர்ந்துவிட்டனர். முழு தேசமும் முஸ்லிம்களுக்கு எதிராக
எழுச்சியுற்றுவிட்டது. இதற்கு பொருளாதார ஆன்மீக ரீதியிலான காரணங்கள் இருந்தன' - என்று
முஸ்லிம்கள்மீது வெறுப்பைக் கொட்டுகிறார்.
முஸ்லிம்கள் மீது சிங்களவர்களால்
நடத்தப்பட்ட முதலாவது வகுப்பு மோதல் 1915இல் ஆகும்.
1948க்குப் பின் சிங்கள புத்த அரசு அதிகாரம், இவர்களை வாழ்க்கையில்
சமூகப் பொருளாதார ரீதியில் உயர்த்துவதற்கான எந்த வகையிலும் உதவி செய்யாமல் இருந்ததோடு
1958 தமிழ் எதிர்ப்புக் கலவரத்தில் இவர்களைப் பாதிப்படையவும் செய்தது.
1970இல் ஒரு மிகுந்த அபாயகரமான நிலையை இவர்கள் அடைகிறார்கள்.
ஏழாண்டு காலத்திற்குள் முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள வன்முறை வெறியாட்டம் தீவிரமாகியது.
புத்தளம் படுகொலை மிகப் பெரிய ஒன்றாகும். அது 1976இல் நடந்தது. அப்போது சிங்கள அரசு ராணுவத்தின் உதவிகொண்டு
மசூதியில் தொழுகையில் இருந்த 7 முஸ்லிம்களைப் படுகொலை செய்ததோடு 271 வீடுகளையும், 44 கடைகளையும், இரண்டு
தொழிற்சாலைகளையும் தீக்கிரையாக்கியது.
மேலும் இரு மசூதிகளும் இடித்துத்
தள்ளப்பட்டன.
** Populing of Srilanka: The
national question and some problems of history and ethinicity by Dr. Senake
Bandaranayaka (paper submitted in a seminar conducted by Social Scientists
Association–Colombo on Nationality problems of Srilanka.)
13. இலங்கையின் பொருளாதாரப் பின்னணி
ஆங்கிலேயர் கையிலிருந்து 2 பிப்ரவரி 1948-இல்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய
தேசியக் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.
1977-இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரும் வரையில் ஓரளவு பொருளாதாரம்
நிலைப்படுத்தப்பட்டு, நல்வாழ்வு நடவடிக்கைகளிலும்,
சமூக நலக்கொள்கைகளிலும்
குறிப்பிடத்தகுந்ததொரு நிலைக்கு முன்னேறியது. மக்கள் நல (ரங்ப்ச்ஹழ்ங்
நற்ஹற்ங்) அரசுக்குரிய வடிவத்தில் அது இயங்கியது
ஆங்கிலேயர் வெளியேறியபோது, பெரும்பாலான
தோட்டங்கள் அனைத்தும் கம்பெனிகளிடம் தொடர்ந்து இருந்தன. உள்நாட்டு மூலதனம்கூட
மேலைநாட்டு மூலதனக் கூட்டோடும், தொழில்நுட்ப உதவியோடும் இயங்கி வந்தது.
தனிமனித சராசரி ஆயுள்காலம், இலங்கையுடன் ஒப்பு
நோக்கக் கூடிய நாடுகளிலேயே 50 ஆண்டுகள் என்றிருந்தபோது,
இலங்கையில் மட்டும் 66 ஆண்டுகளாக இருந்தது. இந்தியாவைவிட
இது அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின்
விகிதம் இலங்கையுடன் ஒப்பு நோக்கக் கூடிய நாடுகளில் 45 சதவிகிதமாக இருந்த
வேளையில், இலங்கையில் 85 சதவிகிதம் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சில
இடதுசாரிக் கட்சிகளும் நடத்திய கூட்டாட்சி இதில் தீவிர அக்கறை காட்டியதின் விளைவு
இது. இருந்தபோதிலும், வேலை இல்லாத் திண்டாட்டம்,
குறிப்பாக படித்த இளைஞர் மத்தியில், வேகமாகப் பெருகி
வந்தது முந்தைய பொருளாதாரத் திட்டத்தின் குறைபாடாகும். ஜனதா விமுக்தி பெரமுனை
(ஒ.ய.ட.) தலைமையில் 1977-ஆம் ஆண்டு நடந்த இளைஞர் கிளர்ச்சிக்கான காரணங்களில் இதுவும்
ஒன்று. இன்று தமிழ் இளைஞர்களுக்கு இருக்கக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் இதுவும்
ஒன்று.
பொருளாதாரத் தேக்கம் ஏற்பட்டதற்கு
சுதந்திரக் கட்சி அரசு விதித்த பல கட்டுப்பாடுகளும் அவற்றை ஒட்டிய ஊழலுமே காரணமென
ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
உலகப் பொருளாதார நெருக்கடியும் 1970-ஆம்
ஆண்டுகளில் இலங்கைப் பொருளாதார நிலைமையில் சிக்கல்கள் உருவாகக் காரணமாயின.
அதுமட்டுமல்லாமல், சுதந்திர கட்சி கடைப்பிடித்த சில பொருளாதாரக் கொள்கைகளும்
திட்டங்களும்கூட இது அதிகமாவதற்குக் காரணமாயின.
விஞ்ஞானப்பூர்வமான விவசாயம்
அறிமுகப்படுத்தப்பட்டது. பணப்பயிர்ப் பொருளாதாரம் சமூகத்தில் சில புனரமைப்புகள்
உருவாகக் காரணமாயின. வெங்காயம் போன்ற பணப்பயிர் முறைகளில் புதிய வேகம் உருவானது.
அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பெருந்தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன.
இந்தக் காலத்தில் பொருளாதார நிலையில்
ஒருகட்ட மேம்பாடு அடைந்த சிங்களவர்களின் வளர்ச்சி துரிதமாக்கப்பட்டது. இதை
சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட மாறுதலாகக் கொள்ளலாம்.
சமூகத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால்
புதிய கோஷங்களோடு ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் முன்னுக்கு வரவழைத்தது.
""அனைவருக்கும் வேலை,
குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் தரக்கூடிய சுதந்திரமானதும், நீதியுமான ஒரு
சமுதாயத்தை உருவாக்குவோம்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி அப்போது கூறியது.
சிங்கப்பூர், தைவான், தென்கொரியா, பிலிப்பின்ஸ் ஆகிய
நாடுகளை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கையை ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்ற
முனைந்தது.
இதைத்தான் சர்வதேச மூலதன நிறுவனங்களான
உலக நிதி நிறுவனமும் (ஐ.எம்.எப்.) உலக வங்கியும் ஆதரித்தன.
சுதந்திரமானதொரு சந்தை அமைப்பின் கீழே
(ஊழ்ங்ங் ற்ழ்ஹக்ங் க்ஷ்ர்ய்ங்) இறக்குமதிக்குப் பதிலான உற்பத்தியிலிருந்து
ஏற்றுமதி சார்ந்த உற்பத்திக்கு மாறுவதை இது உள்ளடக்குகிறது.
அந்நிய முதலீட்டையும், அந்நிய உதவியையும்
கடனாகப் பெற்றுச் சர்வதேசச் சந்தைக்கான உற்பத்தியில் ஈடுபடுவதை இது ஆதரிக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு
வந்தபின் இந்தக் கொள்கையைத்தான் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. இறக்குமதிக்
கட்டுப்பாடுகள் பல நீக்கப்பட்டன. பல தொழிற்சாலைகள் பொதுத் துறையில் இருந்து
தனியார் துறைக்கு மாற்றப்பட்டன. அந்நிய மூலதனத்திற்குச் சாதகமான நிலைமைகளை
வழங்கும் சுதந்திரத் தொழில் மண்டலம் ஒன்றும் உருவாக்கப்பட்டது.
நீர்ப்பாசனத்திலும் மின்சாரத்திலும் 39 சதவிகிதத்தைத்
தொடுமாறு திட்டமிடப்பட்ட மிகப் பெரிய மகாவெளி அபிவிருத்தித் திட்டமானது 30 ஆண்டுகளுக்குப் பதில்
6 ஆண்டுகளிலேயே நிறைவு பெற்றுவிடும் என்று அறிவிக்கப்பட்டது.
1978-ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்) மூலதனத்தில் 60 சதவிகிதம் அந்நியக்
கடன்களாகும். இவை எல்லாம் புதியதொரு பொருளாதார உத்வேகத்தை அளித்தன. வளர்ச்சி
விகிதம் 5.6 சதவிகிதமாக உயர்ந்தது. இவை இறக்குமதிப் பொருட்களை வியாபாரம்
செய்யும் வியாபாரிகளை மிகவும் உயர்த்தியது. இந்தக் கொள்கையின் எதிர்மறை விளைவுகள்
மெல்ல மெல்ல உணரப்பட்டன.
அந்நியக் கடன்கள் மிகவும் அதிகமானதொரு
விகிதத்திலேயே உயர்ந்ததும், இலங்கை நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டதும் இதன் எதிர்மறை அம்சங்கள்
ஆகும்.
சுற்றுலா மூலமும், ஏற்றுமதி மூலமும்
கிடைக்கும் அந்நியச் செலாவணி, கடன்களையும், அதற்குரிய வட்டியையும் அடைப்பதற்கே பெரிதும் போய்விடுகிறது. அந்நியச்
செலாவணியில் துண்டு விழுதல் ஒவ்வொரு ஆண்டிலும் மேலும் மேலும் கீழிறக்கமாக
மாறிக்கொண்டு வந்தது. குறைந்த ஏற்றுமதி 4
சதவிகிதமாக உயர்ந்த 1977-81 காலக்
கட்டத்தில், இறக்குமதி 11 சதவிகிதம் கூடியது என உலக வங்கியின் அறிக்கை கூறியது.
அந்நியப் போட்டிக்கு வழிவிட்டதன்
காரணமாக இலங்கையின் சிறுதொழில் அதிபர்களும்,
உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பயிர்களை
உற்பத்தி செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
கைத்தறித் தொழில் வீழ்ச்சி அடைந்தது.
பெரிய தேசியப் பஞ்சாலைகள் எல்லாம் அந்நிய கூட்டாளிகளின் கையில் விடப்பட்டன. 1977-ஆம்
ஆண்டில், தேயிலை, ரப்பர் ஆகியவைகளின் உற்பத்தியில் ஏற்றுமதி என்பது வீழ்ச்சிப்
போக்கில் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தன.
இந்த வீழ்ச்சிப் போக்கானது
இத்துறையின்மீது செலுத்தப்படாத அத்தியாவசிய முதலீட்டின் குறைபாட்டைச்
சுட்டிக்காட்டுகிறது.
""கடந்த இருபது ஆண்டுகளாகக் காப்பி, கொக்கோ, தேயிலை ஆகிய
பயிர்களில் அதன் மதிப்பு எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே உள்ளது. தேயிலையின் உண்மையான
விலை மதிப்புக் குறைந்துகொண்டே வருகிறது''
என்று அப்போது கூறினார் அத்துறை அமைச்சர்.
தேயிலையின் உண்மையான விலை 1960-இல்
இருந்ததை விட 1982-இல் 40 சதவிகிதம் குறைந்தது என்பதுதான் உண்மை.
நாட்டின் மூலதனச் சொத்திற்குப் பெரிய
பங்களிப்பினை அளிக்கக்கூடிய சாலைப் போக்குவரத்து,
பாசன அமைப்பு, பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், மின்சாரம் நீர்வழிப்
போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகிய அனைத்துத் துறைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளது
என்று இலங்கை அமைச்சரே ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள்
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பை அளிக்க முடியாது. வேலை இல்லாத் திண்டாட்டம் 15.6 சதவிகிதத்தில்
இருந்து 1981-இல் 17.9 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை.
இருப்பினும் இத்தொகை கூடுதலாகவே இருக்கும்.
மேற்கண்ட கொள்கைத் திட்டங்களால்
மக்களின் வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்தது. மாதச் சம்பளம் வாங்குவோரும்
நகர்ப்புற, கிராமிய ஏழைமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். கூடுதலாகி
வரும் சமத்துவமின்மையே நல்வாழ்வுத் திட்டங்களில் செய்யப்பட்டு வரும் வெட்டுகளால்
உறுதி செய்யப்பட்டன. அதற்கு மாறாக நாட்டில் பாதுகாப்புச் செலவும், ராணுவத்திற்கான
ஒதுக்கீடும் அதிகமாக்கப்பட்டது. *
1983-இல் பாதுகாப்புத் துறைக்கான மூலதனம் 1982-ஆம்
ஆண்டுடன் ஒப்பிடுகையில் 82.7 சதவிகிதம் உயர்ந்தது. பாதுகாப்பு நடைமுறைச் செலவானது 82-ஆம் ஆண்டுடன்
ஒப்பிடுகையில் 83-ஆம் ஆண்டில் 47.6 அதிகரிக்கப்பட்டது. ஆனால் மொத்த நடைமுறைச் செலவு 19.1 சதவிகிதம்
மாத்திரம் அதிகரித்தது.
இதனைச் சீர்செய்ய பொதுமக்களுக்கான
சலுகைகளில் கைவைக்க வேண்டிய நிலை அரசுக்கு உருவானது. இப்படி மக்கள் நல அரசு என்ற
நிலையில் இருந்து மாறி, யுத்தப் பொருளாதார (War
Economy)சூழலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு
ஏற்பட்டது. அதே நேரத்தில் இக்கொள்கைகளின் மறுபக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகளால்
வியாபார வர்க்கம் மிகவும் பயன் அடைந்தது. குறிப்பாக ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்
சம்பந்தப்பட்டுள்ளவர்கள் ஆதாயம் அடைந்தனர். சர்வதேச ஏகபோக கம்பெனிகளுடன் கூட்டுறவு
கொண்ட சக்திகள் தோன்றின. அதேசமயம்,
மானியத்தில் செய்யப்பட்ட வெட்டுகளால்
கீழ்நிலைச் சமூகப் பிரிவுகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின.
* ஸ்ரீலங்கா: "பாசிசத்தை நோக்கிய போக்கை யார் தடுத்து
நிறுத்துவது?' பாஸ்டியன் ஷலேங்கா-பட்ங் ஏண்ய்க்ன் 10.10.84.
14: அரசியல் கட்சிகளின் தோற்றம்!
கண்டிய சிங்களவர்
இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.
இலங்கையின் முதலாவது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக 1935-இல் லங்கா சமசமாஜக்கட்சி உருவெடுக்கிறது. இந்தக் கட்சியின் தோற்றமானது தொழிலாளர் இயக்கத்திலிருந்து தொடங்குகிறது.
இலங்கையில் 1860-இல்
முதல் தொழிலாளர் போராட்டம் நடந்தபோதிலும் 1899-இல் தொழிலாளர்களின் பொது வேலைநிறுத்தம் உருவாகி அதன் விளைவாகத்
தொழிற்சங்கக் கட்டமைப்பு வெளிப்பட்டபோதிலும் 1920-இன் காலத்தில்தான் இரண்டு விரிவான தொழிலாளர் அமைப்புகளைப்
பார்க்க முடிகிறது.
பிரபல பத்திரிகையாளர் கே. நடேசய்யர்
தலைமையில் உருவான இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனமும் ((Ceylon Indian Workers Federation) ஏ.ஈ. குணசிங்கா தலைமையில் உருவான தொழிலாளர் சங்கமும்தான்
அந்தக் குறிப்பிடத்தக்க அமைப்புகள்.
தோட்ட அதிபர்களிடம் ஓரளவு அங்கீகாரம்
பெற்ற இயக்கமாக அய்யர் இயக்கம் அமைந்திருந்தது. இவர் 1925-இன்
ஆரம்பத்தில் குணசிங்காவின் தொழிற்சங்கத்துடன் தன்னுடைய தொழிற்சங்கத்தை
இணைக்கிறார். ஆனால் 1928-ஆம் ஆண்டுகளில் குணசிங்காவின் இனவாதமும், இந்தியர் எதிர்ப்பும்
மேலோங்கியதால் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார் (இந்தியர் என்பது -மலையகத்தில்
வாழும் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களைக் குறிக்கும்).
கலாநிதி நியூட்டன் குணசிங்கே ஆய்வுப்படி
1930-க்கு முன்னர் சிங்களவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து
இருந்தனர். அவர்கள் கண்டிய சிங்களவர் என்றும் (உயர்வானவர்கள்),
கரையோரச் சிங்களவர் (மீனவர் மற்றும்
இதரத் தொழிலில் ஈடுபடுபவர்) என்றும் பிரிக்கப்பட்டு இருந்தனர். ஆங்கிலேயர்கள் இவர்களிருவரையும்
தனித்தனிப் பிரிவாகக் கருதும் அளவுக்கு இவர்களிடையே கலாசாரப் பழக்க வழக்கங்களில்
வேறுபாடுகள் இருந்தன.
1930-இல் இவர்களிடையே ஓர் இணக்கம் ஏற்பட்டு கலப்பு மணங்கள்
உருவாகின்றன. இதன் பின்னரே சிங்களவர்கள் ஒரே சமூகசக்தியாகவும், ஓர் இனமாகவும் ஒன்றுபட்டனர்.
உதாரணமாக கரையோரச் சிங்களப் பிரிவினரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா கண்டியச்
சிங்களப் பிரிவினரான ஸ்ரீமாவோவை மணந்தார்.
இதுபோன்ற பல்வேறு திருமணங்கள்
இவர்களிடையே நடைபெற்றன.
1933-இல் வெள்ளவத்தைத் தொழிலாளர் போராட்டத்திற்கு குணசிங்கா தலைமையேற்கிறார்.
அதன்பின் அவர் பிரபலமாகிறார். இவரது தொழிற்சங்கத்தில் பரவலாக இடதுசாரிகள் நிறைந்து
இருந்தனர். திடீரெனக் குணசிங்கா முதலாளிகள் சங்கமான எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷனுடன்
சேர்ந்து கொண்டு வேலைநிறுத்தத்துக்கு எதிராக மாறினார்.
வேலைநிறுத்தம் முதலாளிகளுடன்
செய்துகொண்ட கூட்டு ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றார். தொழிலாளர்கள் தொடர்ந்து
போராட்டத்தில் இருந்ததால் அங்கத்துவம் காலாவதியாகி விடுகிறது. தொடர்ந்து குணசிங்கா
சிங்கள இனவாதத்தைக் கடைப்பிடித்ததால் தொழிலாளர்களிடையே அதிருப்தி ஏற்படுகிறது.
அதே ஆண்டு (1933) பிப்ரவரி
23-இல் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து வாலிப முன்னணியின் கூட்டம்
நடக்கிறது. அதில் வெள்ளவத்தைத் தொழிலாளர் சங்கம் உருவாகிறது.
1935-இல் ‘All Ceylon Estate Workers Union’ உருவாகிறது. அவ்வாண்டில் ஏற்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தின்
மூலம் இந்த யூனியன் அங்கீகாரம் பெறுகிறது. குணசிங்கா தொழிற்சங்கத்திலிருந்த
அதிருப்தியாளர் அனைவரும் இதில் இணைகின்றனர். முதன்முதல் இடதுசாரிகள் தலைமையிலான
சங்கமாக இது அமைகிறது.
இதே காலகட்டத்தில்தான் இங்கிலாந்து
சென்று திரும்பிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சார்ந்த அன்றைய தீவிரவாத
இளைஞர்களான டாக்டர் என்.எம். பெரேரா,
டாக்டர் விக்ரமசிங்கா, பிலிப்குணவர்த்தனா, எம்.ஜி. மென்டிஸ், பீட்டர் கெனமன்
போன்றோர் இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியை நிறுவினர்.
நாட்டின் முழுமையான சுதந்திரத்திற்கும், குடியரசு அமைப்பதற்கும், சமதர்ம சமூக
அமைப்பொன்றை நோக்கமாகக் கொண்டு இந்த லங்கா சமசமாஜக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
தொழிலாளர், விவசாயி, அறிவு ஜீவிகளை ஒன்றிணைத்து ஆங்கில ஏகாதிபத்தியப்
பிடியிலிருந்து இலங்கையை விடுவித்து,
ஒரு சமதர்ம சமுதாய அமைப்புக்கு உதவுவதே
இக்கட்சியின் நோக்கம்.
உலக அரங்கில் ட்ராட்ஸ்கிய, ஸ்டாலினிச இயக்கங்கள்
என்ற பிளவு தோன்றவே இக்கட்சியில் சித்தாந்த ரீதியான பாகுபாடு தலையெடுத்தது.
ட்ராட்ஸ்கியத்தை ஆரம்பித்தவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியின் ஆளும் இயக்கத்தின்
அதிகாரத்தைக் கைப்பற்றினர். சோவியத் தலைமையை ஏற்றவர்கள் ஸ்டாலினிஸ்டு என்ற
முத்திரை குத்தப்பட்டு லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இவர்கள் 1940-இல் ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சி (மநட) என்ற பெயருடன் இயங்கத்
தொடங்கினர். 1942-இல் இலங்கை பொதுவுடைமைக் கட்சி என்ற பெயருடன் ஐக்கிய சோஷலிஸ்ட்
கட்சி தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தது.
1942-இல் தனது வேலைத் திட்டத்தை வெளியிட்ட இலங்கைப் பொதுவுடைமைக்
கட்சி ஏகாதிபத்ய எதிர்ப்பு, சமத்துவ சமதர்மக் குடியரசை நிறுவுதல் போன்ற கொள்கைகளை வற்புறுத்தியதுடன், இலங்கைத் தேசிய
இனங்கள் பற்றிய ஜனநாயக நிலைப்பாடும்
1942 "மே'யில் இடம்பெற்ற "மே'தினக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இலங்கை இனப் பிரச்னை
சம்பந்தமான ஒரு மார்க்ஸிய, லெனினிச தீர்வாக இது முதன்முறையாக முன் வைக்கப்பட்டது. இதன்
சாராம்சம் வருமாறு:
தமிழர் தனித்துவம் பெற்ற தேசிய இனம்.
அவர்களின் பாரம்பரிய தாயகம் வடக்கு,
கிழக்குப் பகுதிகள். இதைத் தமிழர் ஆள, ஏற்ற அரசை அமைத்துக்
கொள்ள லெனினிச கோட்பாட்டின்படி, சுய நிர்ணய உரிமையை அனுபவிக்கத் தமிழினம் உரிமையுடையது. அவசியமானால்
அவர்கள் பிரிந்து தமது தனித்துவமான அரசை உருவாக்க உரிமை பெற்றவர்கள். இலங்கைவாழ்
தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் இலங்கைப் பிரஜா உரிமை பெறத் தகுதியுடையவர்கள்~என்றெல்லாம்
தீர்மானத்தில் கூறப்பட்டது.
இந்தத் தீர்மானம், அன்று அனைத்துக்
கட்சிகளும் இணைந்து உருவாக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மையமாகிய இலங்கைத் தேசிய
காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்திற்கு அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த
அமைப்பின் அன்றைய செயலாளர் யார் தெரியுமா?
பின்னர் இலங்கை அதிபராக வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனேதான்!
அப்போது இவர் இடதுசாரி நூல்கள், வெளியீடுகளைத் தருவித்து நூல் நிலையம் அமைத்து~கங்ச்ற் ஆர்ர்ந்
இங்ய்ற்ழ்ங்~ இடதுசாரி நூல் மையம் என்ற நூல் நிலையத்தின் பொறுப்பாளராக
இருந்தார்.
15. இடதுசாரிகளை வீழ்த்திய இனவாதம்
லங்கா சமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போரை உக்கிரப்படுத்தியதன் விளைவாக என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி.
சில்வா, பிலிப் குணவர்த்தனா,
லெஸ்லி குணவர்த்தனா, விக்ரமசிங்க
போன்றவர்கள் ஆங்கிலேயரால் சிறைப்படுத்தப்பட்டனர். அன்றைய நிலையில் சிறையை உடைத்து
வல்வெட்டித்துறை வழியாகத் தோணிகளில் இவர்கள் இந்தியாவுக்கு வந்து தஞ்சம்
அடைந்தனர்.
இவர்கள் இந்தியப் பெயர்களை ஏற்று
கல்கத்தா, பம்பாய், சென்னை நகரங்களில் தலைமறைவாகத் தொழிற்சங்க, அரசியல் வேலைகளில்
ஈடுபட்டனர். இதன் விளைவாக இலங்கை இடதுசாரி,
இந்திய இடதுசாரி இயக்கங்களுக்கிடையில்
நெருங்கிய தொடர்புகள் வளர்ந்தன. பிலிப் குணவர்த்தனா இந்தியப் பற்றின் விளைவாக, தனது இரண்டாவது
மகனுக்கு இண்டிகா குணவர்த்தனா என்று பெயரிட்டு அழைத்தார் என்றால் பார்த்துக்
கொள்ளுங்கள்.
பிலிப் குணவர்த்தனா லங்கா சமசமாஜக்
கட்சியிலிருந்து விலகி, புரட்சிகர சமசமாஜக் கட்சி என்ற பெயருடன் ஒரு கட்சிக்குத்
தலைவரானார் (பின்னர் பொதுவுடைமைக் கட்சியுடன் சேர்ந்து ஐக்கிய முன்னணியை 1951-இல்
அமைத்தார்).
இலங்கைத் தமிழர்கள் பற்றி, அவர்கள் தனி
இனமென்றும் அவர்களுக்கென தாயகம் இலங்கையில் உண்டென்றும், அதில் அவர்கள்
தமக்கென அரசை உருவாக்க உரிமையுடையவர்கள் என்ற நிலைப்பாட்டையும் 1935-இல்
முதன் முறையாக கட்டுரை வடிவில் எழுதியவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா
ஆவார். சமஷ்டி அமைப்பின் கீழ் இலங்கையின் இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பது
சாத்தியம் என்ற கொள்கையை அவர் முன்வைத்தார். அப்போது அவர் எந்தவொரு கட்சியையும் சார்ந்திருக்கவில்லை
(1945-இல் தான் பண்டா சிங்கள மகாசபை இயக்கத்தை, சிங்களவர்
விழிப்புணர்ச்சி நோக்கிற்காக ஆரம்பிப்பதாகக் கூறி,
செயல்பட்டார்).
1944-இல் இலங்கைச் சட்டசபையில் சிங்களம் அரச மொழி என்ற தீர்மானத்தை ஜே.ஆர்.
முதன் முறையாகப் பிரேரித்தார். ஆங்கிலத்தை அகற்றி,
சிங்களம் மட்டுமல்லாது, சிங்களமும் தமிழும்
அரச மொழிகளாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் இடதுசாரிப் பிரதிநிதிகள்
வலியுறுத்தினர். அதனால் சிங்களமும்~தமிழும் ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சிங்களவர் மத்தியில் படித்தவர்
அதிகரிக்கவும் வேலையற்றவர் பிரச்னை சிக்கல் தீர்வு,
சிங்களமும் தமிழும் சம அந்தஸ்துப் பெற்ற
உத்தியோக மொழிகள் என்ற கொள்கையை முன்வைத்தும் இயங்கி வந்த இடதுசாரி இயக்கங்கள், இந்த நிலைப்பாட்டிலிருந்து
தடுமாறி வாக்குகளை மையமாகக் கொண்ட சிங்கள இனவாத எழுச்சிக்குப் படிப்படியாக
அடிபணிந்தன.
யாழ்ப்பாணம்~கொக்குவில் இந்துக்
கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் (1954)
கலந்துகொண்ட பிரதமர் கொத்தலாவலை ஆற்றிய
உரையில், சிங்களத்தையும்,
தமிழையும் சமத்துவம் பெற்ற மொழிகளாக
ஆக்குவதாக உறுதி தந்தார்.
கொழும்பு திரும்புவதற்குள் ஆளும்
கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) க்குள் முரண்பாடுகள் தலையெடுத்தன. மொழியை மையமாகக்
கொண்டு முதலமைச்சராக யார் வரலாம் என்ற நிலையெழுந்தபடியால் கொத்தலாவலையின் வாக்குறுதி
கைவிடப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் களனியா மாநாட்டில் (1955) நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தில் சிங்களமே அரச மொழி என்றானது.
இந்த வேளையில் அந்நியத் தளங்களை
அகற்றுதல், அந்நியக் கொடி இறக்கல்,
இலங்கையின் முழுமையான சுதந்திரத்திற்கு
வழிகோலுதல், சமதர்மச் சமுதாயம் காணல்,
இந்தியாவுடனான நட்பு போன்ற கொள்கைகளை
முன்வைத்த பண்டாரநாயக்கா, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரத்தை விஞ்சும் வகையில்
இருபத்து நான்கு மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக்குவேன்~என்ற மொழிக் கொள்கையை
முன்வைத்தார். இதைப் பிரசாரப்படுத்தப் புத்த குருமார்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், சிங்கள ஆசிரியர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் முன்வந்து
செயல்படவேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.
அப்பொழுது நகரவாசிகளையும், ஆங்கிலம் படித்த
நடுத்தர வர்க்கத்தினரையும் மையமாகக் கொண்டு இடதுசாரி இயக்கங்கள் இயங்கி வந்தன. இடதுசாரி
இயக்கத்தினர் அக்கறை காட்டி வந்த தொழிலாளர் இயக்கங்கள் கூட, நடுத்தர
வர்க்கங்களாலேயே செயல்பட்டன. இதை நன்கு உணர்ந்த பண்டாரநாயக்காவின் இயக்கம்
கிராமப்புற விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தனது அரசியல் இயக்கத்தில் ஒன்றிணைத்துக் கொண்டது.
இதை முற்றுப் பெறச் செய்ய, தனிச் சிங்களமென்ற இனவாத எழுச்சியும் அவரால்
உபயோகப்படுத்தப்பட்டது.
1956-இல் தனிச் சிங்களச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை
இடதுசாரிகள் எதிர்த்துப் பேசி வாக்களித்தனர். சிலர் வாய்விட்டுக் கதறினர். ஒரு
மொழியென்றால் இரு நாடுகள் மலரும்~என்று கொல்வின் ஆர்.டி. சில்வா நாடாளுமன்றத்தில் அழுதபடியே
உரக்கக் கூறினார்.
சட்டம் நிறைவேறிய அந்த வாரத்திலேயே
இடதுசாரித் தலைவர்களின் இல்லங்கள்,
அலுவலகங்கள், வாகனங்கள் அடித்து
நொறுக்கப்பட்டன. அவர்கள் வகித்து வந்த பதவிகள் பறிக்கப்பட்டன.
இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களில்
ஒருவரான என்.எம். பெரேரா என்பவரை, "என்.எம். பெரேரா வன முல்லே வோட் இல்லே' என்று சுவரொட்டிகள்
நகரெங்கும் ஒட்டப்பட்டன.
தேர்தலின் மூலம் சிங்களவரின் வாக்குப்
பெறுவதானால் மொழிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று இடதுசாரிக்
கட்சிகள் உணர்ந்து, தங்கள் கொள்கையிலிருந்து மெல்ல மெல்ல பின்வாங்கின. மொழி சமன்
மட்டுமின்றி சிங்களப் பேரினவாதமும் இடதுசாரிக் கட்சிகளின் உள்ளேயும் தலையெடுத்தது.
இடதுசாரிக் கட்சிகளால் அமைக்கப்பட்ட கூட்டணி பதவிக்கு வந்ததும் தமிழ்மொழியை ஒரு தேசியமொழியாக
ஏற்கும் நிலையைக்கூட அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
மார்க்சிய, லெனினிச கோட்பாடுகள்
கைவிடப்பட்டன. இதன் விளைவாக இடதுசாரிகளும் இனவழிச் சிந்தனைக்கு
உட்படுத்தப்பட்டனர். தமிழ் மக்கள் மத்தியில் இயங்கிய இடதுசாரிக் கிளைகள்
நிலைகுலைந்து பொதுமக்கள் தொடர்பற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டன.
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி
ஆளுகைக்கு வந்தபோது இடதுசாரிக் கட்சிகள் சம்பள உயர்வு கோரி மேற்கொண்ட பெரிய
போராட்டம் 40,000 அரசு ஊழியரின் தொழிலைப் பறித்தது. சர்வாதிகாரப் போக்குடன்
செயல்படும், அரசுக்கெதிராக இடதுசாரிகளால் தம் மத்தியில் ஐக்கியமற்ற
நிலையில் தமிழின விடுதலைப் போராட்டத்திற்குக் குறிக்கோள் கொண்ட ஒரு கோட்பாட்டின்
அடிப்படையில் ஆதரவு தந்து, வென்றெடுக்கப்படாத நிலையில் பலவீனப்பட்டு இடதுசாரிகள் இயக்கம் தற்போது
விளங்குகிறது.
இதன் வரலாற்றில்-ஐக்கிய தேசியக்
கட்சியின் எதிர்ப்புச் சக்திகளிடையே ஐக்கிய முன்னணி உருவாகியபோது, ஐக்கிய தேசியக் கட்சி
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி கண்டுள்ளது. இதற்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு
எதிர்ப்பாளர் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவியதால் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்
கட்சி வெற்றி பெற்றது.
16. சர்வஜன வாக்குரிமைச் சட்டம்
ஆரம்பத்தில் சிங்கள மற்றும் தமிழ்
மேட்டுக்குடியினர் கூட்டாக இருந்தே இந்திய வம்சாவளியினருக்கு எதிர்ப்பை
வெளிப்படுத்தினர். இந்தியர் மூலதன ஆதிக்க எதிர்ப்பிலும், இந்திய நிர்வாகிகளை
வெளியேற்றுவதிலும் அவர்கள் தீவிரம் காட்டினர்.
நகர்ப்புறத்துத் தமிழ்த் தொழிலாளர்களை
நகர்ப்புற நிறுவனங்களில் இருந்து வெளியேற்றுவதில் இவர்கள் ஆர்வம் காட்டினார்களே
தவிரத் தோட்டத் தொழிலாளர்களை அல்ல. காரணம்,
சிங்கள - தமிழ் தோட்ட அதிபர்கள் தோட்டத்
தொழிலாளர் வெளியேற்றத்தை விரும்பவில்லை என்பதுதான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் குறைந்த
கூலிக்குத் தோட்டத் தொழிலாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பதும் காரணம்.
இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெளிவாக
உணரலாம். தொழிலாளர் இறக்குமதிக்கு உரிமம் வழங்குவதை நிறுத்தும் பிரேரணையை பெரேரா (Perera) பாராளுமன்றத்தில்
கொண்டு வந்தபோது அதைத் தோல்வி அடையச் செய்தனர். ஆனால் அதே நேரத்தில் இவர்கள்
தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அரங்கில் நுழைவதற்கும் தடைகளை உருவாக்கினார்கள். 1920-இல்
சட்ட நிறுவன சபைக்கு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் தேர்வு ஆவதை இவர்கள்
எதிர்த்தனர். 1929-இல் சர்வஜன வாக்குரிமை
(டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசு) வழங்க
முன்வந்த ஆணையினையும் எதிர்த்தனர். அதன் உச்சகட்டமாக 1947 பொதுத்
தேர்தலில் ஏழு இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொழிலாளர் மத்தியில் உள்ள செல்வாக்கின்
பலத்தால் 17 இடதுசாரி உறுப்பினர்களும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
பாராளுமன்றத்தில் இடதுசாரிகள் கை
ஓங்குவதும் இந்திய வம்சாவளிப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாவதும் அவர்களுக்கு
அச்சத்தை ஊட்டியது. அரசியல் அரங்கில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்பதை
அவர்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது.
தொடர்ந்து இந்திய வம்சாவளியினரை
வெளியேற்றும் கோஷம் தீவிரமானது என்பது மட்டுமல்ல,
அதனால் அறிவு ஜீவிகளும், மத்தியதர
வகுப்பினரும் பாதிப்பு அடைந்தனர். உதாரணமாக~போக்குவரத்து அமைச்சர் எட்டாயிரம் இந்தியர்களுக்கு வேலைநீக்க
நோட்டீஸ் அனுப்பினார். (ஆதாரம்: இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சரித்திரம்-இந்தியத்
தொழிலாளர் காங்கிரஸ் கருத்தரங்கக் கட்டுரை).
இந்த இனவாதச் செயல்பாட்டின் விளைவாக
முதன் முதலில் 1931-ஆம் ஆண்டு சர்வ ஜன வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதில் சிறுபான்மையினர்
பாதிக்கப்பட்டனர். இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுகையில், யாழ் பகுதியில்
இருக்கும் இடதுசாரி இளைஞர் இயக்கம் முதன் முதலில் ஒரு போராட்டத்தை நடத்தியது.
இதன் தலைமையில் யாழ் பகுதியில் தேர்தல்
நிராகரிப்பு இயக்கம் தீவிரமாக உருவானது.
ஆனால் அதே நேரத்தில் அந்தத் தேர்தலில்
மலையக மக்கள் பங்கேற்றனர். ஏனெனில்,
அதுவரை புறக்கணிக்கப்பட்டிருந்த மலையக
மக்களுக்கு முதன் முதலாக ஓட்டுரிமை வழங்கப்பட்டது.
ஒரு லட்சம் மலையக மக்கள் வாக்குரிமை
பெற்றனர். நடேசய்யர், பெரியசுந்தரம்,
வைத்திலிங்கன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெரியசுந்தரம் தொழில் அமைச்சர் ஆனார்.
இலங்கையின் பிரபலமான அரசியல் கட்சிகளும்
அதன் தலைவர்களும்
1. லங்கா சமசமாஜக் கட்சி (L
S) (S P))–1935 இடதுசாரி - என்.எம். பெரேரா
2. கம்யூனிஸ்ட் பார்ட்டி (CP)~1942
இடதுசாரி - பீட்டர் கெனமன்.
3. ஐக்கிய தேசியக் கட்சி (U
N P) 1947 வலதுசாரி - டி.எஸ். சேனநாயக்கா.
4. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்~1944,
1947 - ஜி.ஜி. பொன்னம்பலம்.
5. மக்கள் ஐக்கிய முன்னணி~1956
- இடதுசாரி -பிலிப் குணவர்த்தனா.
6. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி~(S
L F P)-1951- நடுநிலைக்கட்சி - வலதுசார்பு -
எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டார நாயக்கா.
7. தமிழரசுக் கட்சி~(சமஷ்டிக் கட்சி) (F.P)
- 1953 - சா.ஜே.வே. செல்வநாயகம்.
8. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்~(C
W C)~ 1950 - செü.
தொண்டமான்.
9. நவலங்க சமசமாஜக் கட்சி~(NLSSP)~1968-இடதுசாரி~வாசுதேவ நாணயக்காரா.
10. ஜனதா விமுக்தி பெரமுன (JVP)
(மக்கள் விடுதலை முன்னணி) - 1971-இடதுசாரி~உரோகண விஜய வீரா.
11. தமிழர் விடுதலைக் கூட்டணி~(TULF)~1972-
வலதுசாரி - சா.ஜே.வே. செல்வநாயகம்.
17: முதலாவது சிங்களவர்-தமிழர் கலவரம்!
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போக்குவரத்து
அமைச்சர் நாலாயிரம் தமிழர்களை இந்தியாவிற்கு அனுப்பிய நிகழ்ச்சிக்குப் பிறகு
இந்தியர் பிரச்னையைப் பேசுவதற்காக மகாத்மா காந்தி தனது தூதுவராக ஜவாஹர்லால் நேருவை
இலங்கைக்கு அனுப்புகிறார் (1939).
ஆனால்,
இந்தப் பிரச்னையில் பேச்சுவார்த்தை ஒரு
தீர்வுக்கு வராமல் தோல்வி அடைகிறது. அப்போது நேரு பல்வேறு தொழில் துறைகளில் இருந்த
இந்தியர்களை அழைத்து, இலங்கை இந்தியர்களுக்கான ஒரு காங்கிரûஸ உருவாக்கிக்
கொள்ளும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதையொட்டி உருவானதுதான் இலங்கை இந்திய
காங்கிரஸ். இது கொழும்பில் உருவாகிப் பின்னர் மலையகத்தில் அறிமுகமாகிறது. இது
கட்சியோ, தொழிற்சங்கமோ அல்ல. நேரு வருவதற்கு முன் எஸ். தேசாய் தலைமையில்
இருந்த இலங்கை இந்தியர் சங்கமும் வள்ளியப்பச் செட்டியாரின் தலைமையில் இருந்த
இந்திய சேவா சங்கமும் இணைந்ததொரு அமைப்பாகும்.
ஆரம்பத்தில் சிங்களப் பேரினவாதம் இந்திய
வணிகக் குழுவை வெளியேற்றுவதற்காக மட்டுமே முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது தென்
கிழக்கு ஆசிய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் இந்திய வணிக நிறுவனங்களிலும், நிர்வாகத்திலும் தமிழர்களின்
கை மேலோங்கி இருந்தது. ஆனால் இலங்கை இந்தியக் காங்கிரஸ் உருவானபின் சிங்களவர்
மத்தியில் ஓர் அச்சம் வேரூன்றியது. இதனைத் தொடர்ந்து, இலங்கையை சிங்களவர்
மயமாக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க அவர்கள் ஆரம்பித்துவிட்டனர்.
அப்போதிருந்த இந்திய வம்சாவளியின் சில
பிரிவுகள்:
1. கொழும்பை மையமாகக் கொண்ட,
மலையகத் தொடர்பு அற்ற, இந்தியாவைத்
தாயகமாகக் கொண்ட வியாபாரிகள்.
2. மலையகத்தில் வணிகத் துறையிலும் விவசாயத்திலும் ஈடுபட்டோர்.
இவர்கள் இந்தியாவின் தொடர்பைத் துண்டித்துத் தோட்ட உரிமையாளர்களாக ஒரு சமூகச் சக்தியாக
இருக்கின்றனர். முற்போக்கான தேசிய வாதம் இவர்களிடம் இருந்தது. ஒரு கட்சியாக
உருவாகாமல் தொழிற்சங்கமாகவே இது உருவாகியது. மலையகத் தமிழரின் தேசிய இயக்கமாக இத்தொழிற்சங்கம்
மாறியது.
3. இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள்.
இவ்வகையான கலவையே இலங்கை இந்தியக்
காங்கிரஸôக ஆரம்பத்தில் இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி (மசட)
1944-இல் சோல்பரிக் கமிஷன் ஆட்சியதிகாரத்தை மாற்றுவதற்கான
சிபாரிசினைச் செய்கிறது. அதுவரை சிங்களவர்களுக்கென்று அமைப்பு ஏதுமின்றி இருந்தது.
சோல்பரிக் கமிஷனின் ஆலோசனையின் பேரில் ஓர் அமைப்பாக மாறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டன.
முதலாவது பாராளுமன்றத் தேர்தல் காரணமாக
அவசர அவசரமாக இக்கட்சி பிறப்பெடுத்தது. இலங்கைத் தேசியக் காங்கிரஸ், பண்டாரநாயகாவின்
சிங்கள மகாசபை, முஸ்லிம் லீக் ஆகியவை சேர்ந்து இக்கட்சி உருவாகிறது.
1940-இல் இலங்கை மக்களின் வாழ்விடத் தெரிவுத் தகைமை பதிவு செய்யும்
முறை கண்டிப்பாக அமலாக்கம் நடந்ததாலும்,
1939-இல் இருந்ததைவிட 1943-இல்
தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாலும் சமூகரீதியில் சிங்களவர்கள் வளர்ச்சி
பெற்றார்கள்.
தமிழர்களின் பங்களிப்பைக் குறைக்கும்
வகையில் தமிழர்களுக்கு எதிராக ஓர் அரசியல் கட்சி வடிவத்தில் தங்களை
ஸ்தாபனப்படுத்திக் கொள்கிறார்கள். இக்கட்சிதான் மேற்சொன்ன ஐக்கிய தேசியக் கட்சி.
அரசியலில் தங்களுக்குள்ள உரிமையைத் தக்க
வைத்துக் கொள்வதற்காக உருவானதே இக்கட்சி.
1947-இல் இதையொட்டிய தேர்தல் வருகிறது. தேர்தலில் 7 மலையகப் பிரதிநிதிகள்
வெற்றி பெறுகின்றனர். 20 தொகுதிகளில் மலையகத் தமிழர்கள் கணிசமாக இருக்கின்றனர். இவர்கள்
இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்தனர். இதை முறியடிக்க ஐக்கிய தேசியக் கட்சியானது
கம்யூனிஸத்திலிருந்து புத்தத்தைப் பாதுகாப்பது என்ற புதிய கோஷத்தை முன்வைத்து
இனவாதத்தைத் தூக்கிப் பிடித்தது.
ஆனால்,
அதையும் மீறி மலையகத் தமிழர்களின்
எண்ணிக்கையால் இடதுசாரிக் கட்சிகள் வெற்றி பெறுகின்றன.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப்
பிடித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் டி.எஸ். சேனநாயகா கோபம் அடைகிறார். அதன்
விளைவாக மூன்று சட்டங்களை உடனடியாக இயற்றுகிறார். அவைகள்:
1. குடியுரிமைச் சட்டம்~1948.
2. இந்திய-பாகிஸ்தானிய குடியிருப்புச் சட்டம்~1949.
3. தேர்தல் சட்டத்திருத்தம்~1948.
இவைகள் அனைத்துமே தமிழர்களுக்கு எதிரான
சட்டங்களாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (CWP)
1950-இல் உருளவல்ல என்ற இடத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரை
வெளியேற்றி, அந்த நிலத்தை சிங்களவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கின்றனர்.
அங்கு பாதிக்கப்பட்ட தமிழர்கள் போராடுகின்றனர். இப் போராட்டத்திற்கு ஆதரவாகவும், சிங்களவர்களின்
செயல்களைக் கண்டித்தும் பிற தோட்டங்களின் அனைத்துத் தொழிலாளர்களும் போராட
ஆரம்பிக்கின்றனர்.
சிறு அளவில் ஆரம்பித்த போராட்டம், தோட்டத் தொழிலாளர்கள்
அனைவரும் பங்கேற்கும் அளவில் விரிவடைகிறது. இதற்கு இலங்கை இந்தியக் காங்கிரஸ்
தலைமை ஏற்கிறது. இந்தப் போராட்டத்தின் விளைவாகப் பெயர் மாற்றம் அடையப் பெற்று இலங்கைத்
தொழிலாளர் காங்கிரஸôக மாறியது. மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வை இது
பிரதிபலித்தது.
இடதுசாரிகள், ஒருபக்கம் வளர்ந்து வரும்
சிங்களவர்களின் இன உணர்வைப் பார்க்காது,
அதன் விளைவால் ஏற்பட்ட மலையகத்
தமிழர்களின் தேசிய உணர்வை நிராகரித்ததன் மூலம்,
பெருமளவிலான தொழிலாளர்கள் இடதுசாரி
அணியிலிருந்து விலகி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பின் அணி திரளத் தொடங்கினர்.
அந்தச் சூழ்நிலையில் மலையகத் தமிழர்களின் தேசிய உணர்வினைப் பிரதிபலிக்கக்கூடிய ஒரே
அமைப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இருக்கிறது. அதனாலேயே லட்சக்கணக்கான
தொழிலாளர்கள் இதன் தலைமையின்கீழ் திரண்டனர். இந்தக் காங்கிரஸின் தலைவராக நீண்ட பல
ஆண்டுகளாக செü. தொண்டமான் இருந்து வந்தார்..
இலங்கைத் தொழிலாளர் கழகம்
1962-இல் தமிழரசுக் கட்சியின் அங்கமாக இலங்கைத் தொழிலாளர் கழகம்
தமிழர்கள் மத்தியில் இது உருவாகியது. மறைந்த நாகநாதன் தலைமையில் திவானந்த சுந்தரம்
செயலாளராகப் பொறுப்பு ஏற்றார்.
நிர்வாகத் திறன் படைத்த தொழிற்சங்கம்
என்பது அன்றையக் காலக் கட்டத்தில் மிகத் தேவையான ஒன்றாக இருந்ததால் இது
பெருமளவிற்கு வளர வாய்ப்பு இருந்தது.
1960-இல் தமிழரசுக் கட்சி ஈழத் தமிழர்களின் தேசிய இயக்கமாக
வளர்ந்தது. பலவகையான போராட்டங்களை தமிழர்களுக்கு ஆதரவாக, சிங்கள இன
வாதத்திற்கு எதிராக இது கட்டமைத்தது. சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்த எதிர்ப்பில் இது செல்வாக்கு அடைந்தது. 1965-இல்
சாஸ்திரி~ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தைத் திருத்தத்தோடு ஏற்றுக்கொண்டு டட்லி
சேனநாயகா அரசில் (U.N.P.) பங்கேற்றனர்.
திரும்பவும் ஸ்ரீமாவோ ஆட்சிக்கு
வந்தபின் அவரது சுதந்திரக் கட்சியை எதிர்த்துப் பல போராட்டங்களை நடத்தி இலங்கைத்
தொழிலாளர் கழகம் செல்வாக்கு பெற்றது. 1958-இல் முதலாவது சிங்களவர்~தமிழர் கலவரம் வெடித்தது. 1956-இல் இருந்துவந்த சிங்கள இனவாதத்தின் வெளிப்பாடாகத் தனிச்
சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
பண்டாரநாயக்காவின் தனிச் சிங்கள மொழிச்
சட்டம் அமலாக்கப்படுவதை எதிர்த்துதான் தமிழர்களின் போராட்டம் வெடித்தது.
18: புதிய அரசியல் சட்டம்
இலங்கைத் தமிழர்களின் அமைப்புகளின்
தொடக்கமாக, ஆறுமுக நாவலரால் 1853-இல் ஆரம்பிக்கப்பட்ட "சைவ பிரகாச சபை' என்னும் அமைப்பைச்
சொல்லலாம். இந்த சபை அந்நிய சக்திகளிடமிருந்து சைவத்தைக் காப்பாற்றுவதை நோக்கமாகக்
கொண்டபோதிலும், நிர்பந்தங்கள் காரணமாக தமிழர் உரிமைகளைப் பற்றியும் நாவலர் பேசினார்.
இந்த சபை இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலும் குறிப்பாக கொழும்பிலும் களம்
கண்டது.
வெள்ளையரின் சட்ட நிரூபண சபையில்
இன்னார்தான் தமிழர் பிரதிநிதியாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலைமையையும்
ஆறுமுகநாவலர் எடுத்தார். சட்ட நிரூபண சபைக்கு பொ. இராமநாதன் நியமனத்திற்காக
ஆளுநருக்கு எழுதினார். இதன்மூலம் 50
ஆண்டுகள் தமிழர்களுக்கு சேவை செய்யும்
வாய்ப்பு பொ.இராமநாதனுக்கு கிடைத்தது. ஆனாலும் பொ.இராமநாதன் ஆறுமுகநாவலரின் எதிர்பார்ப்புகளைப்
பிரதிபலிக்கவில்லை என்ற கருத்தும் பரவலாக இருந்தது. மாறாக, இராமநாதன் இலங்கை
தேசிய சங்கத்தை நிறுவி ((Ceylon National Association)) அதன் தலைவராக அரசமைப்பு சீர்திருத்தத்திற்கும் அதன்மூலம் அதிக
உள்ளூர் பிரதிநிதிகளை அரசியல் நிர்ணய சபையில் அங்கத்தினர்களாக்க பெரிதும்
பாடுபட்டார். 13 ஆண்டுகள் பதவி வகித்த பொ.இராமநாதனுக்குப் பிறகு அவரது சகோதரர்
பொ.குமாரசாமி வந்தார். இவரின் பதவிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கு புகைவண்டி
இருப்புப் பாதையை அதிகரிக்கப் பெரிதும் முயன்றார்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் "ஹிந்து ஆர்கன்' மற்றும் அதன் தமிழ் பதிப்பான
"இந்து சாதனம்' மட்டுமே தமிழ்த் தேசியத்தை வளர்த்தெடுக்கும் விதமாகக்
கட்டுரைகள், தலையங்கங்களை எழுதின. உதாரணமாக,
இந்து சாதனம் நாளேட்டில் எழுதப்பட்ட
தலையங்கத்தின் ஒருபகுதி வருமாறு:
""நாம் ஒன்றிணையவில்லை. நாம் பிரிந்து நிற்கிறோம். மறுபடியும்
ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகவும் கடினம். ஒற்றுமையின்மை காரணமாக ஏற்பட்ட அழிவின் பாதிப்புகளினால்
நாம் வருந்துகின்றோம். ஒரு காலம் பெருமையுடன் நாம் ஆண்ட நாட்டை அந்நியருக்கு
விட்டுக்கொடுத்து விட்டோம். எமது நாட்டின் பிரச்னைகளை எமது மக்கள் ஒன்று கூடிக்
கலந்துரையாடுவது கிடையாது. எமது சுதந்திரங்கள் யாவற்றையும் நாம் சரணளித்துவிட்டு, சித்த சுவாதீனம்
இழந்தவராய் நிற்கிறோம்'' இவ்வகை எழுத்துக்கள் மக்களை எழுச்சியுறச் செய்தன.
1905-ஆம் ஆண்டு இறுதியில் "யாழ்ப்பாணச் சங்கம்' என்ற பெயரில் ஓர்
அமைப்பு உருவாக்கப்பட்டது. இதுகுறித்து 1906-இல் வெளியான "ஹிந்து ஆர்கனி'ல், ""தமிழ்
மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அரசின் முன்வைத்து தீர்க்கும் விதமாக
யாழ்ப்பாணச் சங்கம் உருவாகியுள்ளது. இது பூரண ஒற்றுமையுடனும், முழுமனதோடும், சாதி சமய
பாகுபாடுகளின்றிச் செயற்படுமானால்,
அரசியல் அரங்கத்தில் அது பெரும்
மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் மாத்திரமின்றி,
சமூக நிலைகளிலும் பெரும் நன்மைகளைக்
கொண்டு வரும் - ஒற்றுமையே பலம்.'' என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தது.
இதேவேளையில் முத்துக்குமாரசாமியின்
மகனாகிய கலாநிதி ஆனந்த குமாரசாமி 1906-இல் யாழ்ப்பாணம் வந்தார். அவர் தனது ஆங்கிலேய தாயாருடன்
லண்டனில் வளர்ந்தவர். சைவ பரிபால சபை சார்பில் 1906
மே 14-இல் இந்துக் கல்லூரியில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் தனது நன்றியுரையில், ""தமிழ்க் கலாசாரம்,
பாரம்பரியங்கள் என்பனவற்றைப் பாதுகாக்க
வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். மேற்கத்திய கலாசாரத்தை யாரும்
பின்பற்றக்கூடாது. தமிழரின் கலாசார அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும். இதை
தமிழர்களுக்கு எனது வலியுறுத்தலாகக் கூறிக்கொள்கிறேன்'' என்றார்.
* யாழ்ப்பாணத் தமிழர் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில்
குறிப்பிடத் தகுந்தவர் கும்பகோணம் கல்லூரி முன்னாள் ஆசிரியர் ஜேம்ஸ் ஹென்ஸ்மன்.
இவர் தலைவராகவும், வழக்கறிஞர்கள் ஹோமர் வன்னியசிங்கம், எஸ்.காசிப்பிள்ளை உப தலைவர்களாகவும்
இருந்தனர். ஜேம்ஸ் ஹென்ஸ்மன் தலைசிறந்த ஆங்கிலப் பேராசிரியர் ஆவர். பின்னாளில்
"வெள்ளி நாக்குத் தமிழர் ஸ்ரீநிவாசசாஸ்திரி'
என்று போற்றப்பட்ட-‘Silver Tongue Srinivasa Sastry’ வரின் குரு. ஹென்ஸ்மனுக்கு இரு புதல்வர்கள். அவர்கள் இருவரும்
சென்னையிலேயே பணிபுரிந்தனர். அவர்களும் ஹென்ஸ்மன் என்றே அழைக்கப்பட்டனர். அந்த ஹென்ஸ்மனில்
ஒருவர் சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளராக இருந்து அரும்பணியாற்றிய
காரணத்தால், அவரது பெயரில் தியாகராயநகரில் ஹென்ஸ்மன் சாலை என்று ஒரு
சாலைக்குப் பெயரிடப்பட்டது. இன்று அந்த சாலை கண்ணதாசன் சாலை என்று பெயர் மாற்றம்
பெற்றிருக்கிறது.
பின்னர் சமூக சீர்திருத்த சங்கம் (1906), ஐக்கிய
நாணயச்சங்கம் (1913), யாழ்ப்பாண கூட்டுறவுச் சங்கம் (1918),
திருகோணமலை மாதர் ஐக்கிய சங்கம் (1920), மட்டக்களப்பு
சங்கம் (1920). முல்லைத்தீவு மகாஜன சங்கம் (1921)
ஆகியவை உருப்பெற்று யாழ்ப்பாணச்
சங்கத்துக்கு உதவியாகவும், ஆலோசனை கூறுகிற அமைப்புகளாகவும் அமைந்தன.
1921 ஆகஸ்டு 15-ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட தமிழர் மகாஜன சபை, தமிழர்களின் பிற்கால
அரசியல் ஆசைகளை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.
இந்தப் பின்னணியில் தமிழர் அரசியல்
அமைப்புகளைப் பார்ப்போம்:
இலங்கைத் தமிழரசுக் கட்சி:
தமிழர்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன
உணர்வைப் பிரதிபலிக்கக்கூடிய வகையில் 1949-இல் இது உருவாகிறது.
தன்னுடைய தனித் தன்மையையும் பல பிரிவுத்
தமிழ் மக்களின் உணர்வுகளையும் இது பிரதிபலித்துப் பலமுனைச் செயல்பாடுகளால் தங்கள்
நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, தமிழ்த் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஒரு கட்சியாக இது உருவானது.
சிங்கள வெறிக்கும் இனவாதத்திற்கும், பதில் கூறக் கூடிய
வகையில் இது செயல்பட்டது. அதை நேருக்கு நேர் நின்று எதிர்த்தது. பரவலான மக்கள் இயக்கங்கள்
அனைத்தையும் கட்டி எழுப்பியது.
தனிச் சிங்கள மொழிச் சட்டத்திற்கு
எதிராக 1956-இல் உடனுக்குடன் ஒரு மிகப்பெரிய சத்தியாக்கிரக இயக்கத்தை
நடத்தியது.
இந்த எதிர்ப்பின் விளைவாகப் பணிந்த
அரசாங்கம் கடைசியில் இந்தத் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.
செல்வநாயகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. இதுவே சரித்திரப் புகழ்பெற்ற
பண்டாரநாயக்கா~செல்வா ஒப்பந்தமாகும். ஆனால் அந்த ஒப்பந்தத்தை அரசால்
நடைமுறைப்படுத்த முடியவில்லை.
காரணம்,
சிங்களர்களும், புத்த பிக்குகளும்
அணி திரண்டு தீவிரமாக அதை எதிர்த்தனர்.
இதுபற்றி அன்றைய டெய்லி நியூஸ்
கருத்துக் கூறுகையில், 200 அரசியல் பிக்குகள்,
15,000 மக்கள் திரண்ட ஓர் ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கலந்துகொண்டு
இதைக் கண்டித்துப் பேசுகின்றனர். ஜெயவர்த்தன புத்த பிக்குகளின் இந்தக் கண்டனக்
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிக் கண்டியை நோக்கிப் பாத யாத்திரை செல்கிறார். இந்த
ஒப்பந்தத்தைத் தூக்கி எறிய அரசை வலியுறுத்துவதற்காக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
சில மந்திரிகளும் கூட இந்த ஒப்பந்தத்தைக் கண்டிக்கின்றனர்.
மந்திரிகள் கலந்துகொண்ட ஓர் ஊர்வலம்
பிரதம மந்திரியின் வீட்டுக்குச் சென்று ஒரு மனுவை அளிக்கின்றது.
இந்த வகுப்புவாத நாடகத்தின் விளைவாகக்
கடைசியில் இந்த ஒப்பந்தம் தூக்கி எறியப்படுகிறது.
அதிலிருந்து தொடர்ந்து 1958, 1961 வகுப்புக்
கலவரங்களும், மோதல்களும் உருவாகின்றன. இது 1965
வரை தொடர்கிறது.
இதற்கிடையில் தமிழரசுக் கட்சி
தலைமையிலான சிவில் ஒத்துழையாமை இயக்கம் (1961)
மிக முக்கிய அரசியல் நிகழ்ச்சியாகும்.
பின்னர் 1965-இல் ஆட்சி மாற்றம். ஐக்கிய தேசிய முன்னணி U.N.P. அரசு
ஏற்படுகிறது. சிங்களவர்கள் சில சலுகைகளைத் தமிழர்களுக்கு அளித்து ஒரு கூட்டுறவுத்
தந்திரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக மாவட்ட சபைகளை உருவாக்கும் செல்வா-டட்லி
ஒப்பந்தம் உருவாகியது. ஆனால் இந்த அமைதிச் சூழ்நிலை அதிக நாள் நீடிக்கவில்லை.
சிங்கள இனவாதிகள் இதையும் அனுமதிக்கத் தயாராக இல்லை.
இதைத் தொடர்ந்து 1968-இல்
தமிழரசுக் கட்சி அரசோடு ஒத்துழைக்காது வெளியேறியது. பின் 1970-இல்
திரும்பவும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்ரீமாவோ
(சுதந்திரக் கட்சி) ஆட்சிக்கு வந்தன.
ஸ்ரீமாவோவின் ஆட்சிக் காலமான 1970-77-இல்
நாடும் முழுவதும் கொந்தளிப்புகளும்,
குமுறல்களும், அரசு அடக்குமுறைகளும்
மிகுந்த ஒரு காலமாகும்.
அப்போது இடதுசாரிக் கட்சிகளும் அரசில்
பங்கேற்கின்றனர். சிங்கள இனவாதத்தின் முன்னே இடதுசாரிகளின் வேடம் அம்பலப்பட்டு
அவர்களும் இனவாத நீரோட்டத்தில் கலந்து கரைந்து விடுகின்றனர். (லங்கா சமசமாஜக்
கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி முதலியன)
1972-இல் ஸ்ரீமாவோ அரசு,
இலங்கையைக் குடியரசாக அறிவித்தது. சிறுபான்மையருக்குப்
பாதுகாப்பு அளித்த பழைய அரசியல் சட்டத்தின் 29-ஆவது ஷரத்தை நீக்கியது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி
மற்றும் சில கட்சிகள் இந்த அரசியல் சட்ட மோசடியை எதிர்த்தும், தங்களின உரிமைகளைப்
பேணவும், அரசோடு பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்குகின்றன. (1971)
அந்தப் பேச்சுவார்த்தை தோல்வி
அடைகின்றது. கடைசியில் சிங்கள மொழியை ஆட்சி மொழி ஆக்கியும், புத்த மதத்திற்கு
விசேஷ அந்தஸ்து அளித்தும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றப்படுகிறது. (1972).
* Sir, in the volume of ‘‘Connected
Constitutional Papers‘‘ referred to by the Hon.Member for Kandy he would see
that right at the very beginning, as early as 1909 or 1908 when several of us
would not have been able to lisp in the English language, the Jaffna
Association, under the Presidency of Mr.James Hensman, was asking for the
introduction of the elective principle and for a degree of responsible
governement in this country. Here you have the case of a Tamil Association that
admittedly gave a lead to the political movement in this country. Happily Sir,
that revered old man, who has given to India the Right Hon. Srinivasa Sastri,
is yet spared to the Tamils of Ceylon in their day of travail; he is yet alive,
and this is the message Mr.Hensman in the evening of his life, having seen all
the various political facets, all the various political evolutions both in
India and in Ceylon sent from his retirement in Jaffna. -Speech delivered in
the State Council on the Reforms Dispatch by G.G.Ponnambalam M.Sc.
* (கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய "இலங்கையில் தமிழர்')
19: தமிழர் விடுதலைக் கூட்டணி!
அப்பொழுது புதிய புனரமைப்பு, சமூகத்தின் தேவையாக மாறியது.
ஒருபக்கம் அப்பட்டமான சிங்களப் பேரினவாதம் சட்ட வடிவத்தில் வெளிப்பட்டது.
மறுபக்கம் சிங்களக் குண்டர்களின் தலைமையில் சிங்களவர்களை அணி திரட்டி மதச் சிறுபான்மையினரை
ஒடுக்கக் கூடிய வடிவம் ஓர் உச்சகட்ட அந்தஸ்தை அடைந்தது. அதுமட்டுமல்லாது அரசு
இயந்திரமான போலீஸ், ராணுவம் ஆகியவற்றின் மூலமும் இனவாத அடக்குமுறையை
நிகழ்த்தக்கூடிய சூழ்நிலை உருவானது.
ஆக இந்த மூன்று வடிவங்களையும் ஒருங்கே
கையில் எடுத்துக்கொண்டு புத்தமதம்,
அரசு அங்கீகாரத்துடன் களத்தில்
முன்னேறக்கூடிய சூழ்நிலை உருவாகியது.
புறநிலையில் இந்தத் தவிர்க்க முடியாத
விளைவுகள் தமிழ் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கின.
தமிழ் அரசியல் சக்திகள் தங்களை
ஒருங்கிணைந்த நிறுவன வடிவில் நிலைப்படுத்திக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் தேசிய
சுதந்திரத்திற்கான ஓர் ஐக்கியப்பட்ட போராட்டத்தைக் கட்டமைக்க நெருங்கி வந்தன.
இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு முக்கிய
நிகழ்ச்சி நடந்தது:
திருகோணமலையில் 1972-ஆம்
ஆண்டு மே 14-ஆம் நாள் தமிழர்கள் அனைவரும் ஒரு மாநாட்டினை நடத்தினர். இதில்
மிக முக்கியமான மூன்று கட்சிகள் பங்கேற்றன.
ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில
இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தொண்டைமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், செல்வநாயகத்தின்
தலைமையிலான தமிழரசுக் கட்சி ஆகியவை இம்மாநாட்டில் முக்கிய பங்கு வகித்தன.
இந்த மூன்று கட்சிகளும் ஒன்றிணைந்து
தமிழர் கூட்டணியை அன்று உருவாக்கின.
தமிழ் மக்களின் தேசியத் தனித்தன்மையை
நிலைநாட்டவும், அரசியல் சுதந்திரத்திற்காகவும்,
தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்
கொள்வதற்காகவும் போராடுவது என்று முடிவு செய்தனர். ஆரம்பத்தில் இது சுயாட்சியையே முன்வைத்தது.
சத்தியாக்கிரக வடிவில் வன்முறையற்ற போராட்டங்களைக் கட்டமைக்க அது முடிவு செய்தது.
எப்படி இருந்தபோதிலும் தமிழர்களுடைய போராட்ட வரலாற்றில் இந்த ஐக்கியப்பட்ட நிலை
ஒரு முக்கியமான வளர்ச்சிக் கட்டமாகும்.
இதனுடைய அடுத்த கட்டமாக, சுதந்திரக் கட்சி
ஆட்சியின் அடக்குமுறையை ஒருபுறமும்,
இளைஞர்களுடைய அதிருப்தியையும் வேதனையும்
மறுபக்கத்திலும் இந்த அமைப்பு சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இந்தச்
சூழ்நிலைதான் இந்த அமைப்பு வலுவாக வேரூன்றக் காரணமானது. 1976-இல்
தமிழர் கூட்டணி இளைஞர்களின் வேகத்தின் முன் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியாக
(ப.ம.க.ஊ.) தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.
இதன் தலைவர்களாக எஸ்.ஜே.வி. செல்வநாயகம், செü. தொண்டமான், ஜி.ஜி. பொன்னம்பலம்
ஆகியோரை வட்டுக்கோட்டையில் 1976-இல் நடந்த இம் மாநாடு தேர்வு செய்தது.
அம் மாநாட்டில் தொண்டமான் நேரடியாகப்
பங்கேற்கவில்லை. இம் மாநாடு தனி நாட்டுக் கோஷத்தையும் வலியுறுத்தியது. தனி நாடு மலையகத்
தமிழர்களுக்குத் தீர்வாக அமையாது என்று தனது கருத்தை மாநாட்டிற்கு எழுத்துபூர்வமாக
அனுப்பி வைத்தார் தொண்டமான். அதனைத் தமிழர் விடுதலைக் கூட்டணி ஏற்றுக்கொண்டதை அடுத்து, தொண்டமான் தொடர்ந்து
கூட்டுத் தலைவர் பதவியை வகித்தார்.
1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தனிநாடு கோஷத்தை
முன்வைத்துத் தேர்தலில் பங்கேற்றது. தமிழ் ஈழம் அமைக்க தமிழ் மக்கள் ஆணையிட்டனர். தேர்தலின்
முடிவில் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அப்பொழுது தமிழர் விடுதலைக்
கூட்டணியின் தலைவராக தொண்டமான் யாரும் எதிர்பாராத நிலையில் ஆளும் கட்சிக்கு ஆதரவு
நிலை எடுத்து, அமைச்சர் ஆனார்.
தமிழ் இளைஞர் பேரவை:
1973-இல் வடபகுதி (யாழ்) இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட அரசியல் விழிப்புணர்வையும், அவர்கள் மலையக மக்கள்
மீது காட்டிய ஆர்வத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேர்தல் கண்ணோட்டமோ, சுயநல வெறியோ இன்றி
நேர்மையாக இளைஞர் பேரவையைச் சார்ந்த 10
இளைஞர்கள் மலையகத்தின் பல பகுதிகளுக்கு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஒப்புதலுடன் பயணம் மேற்கொண்டனர்.
இவர்களின் ஒரே நோக்கம் மலையக மக்களின்
வாழ்நிலையைப் புரிந்து கொள்வதுதான். இவ்வாறு பயணம் மேற்கொண்ட இளைஞர்களில் ஒருவரே
காலம் சென்ற சிவகுமாரன் ஆவார்.
மலையக மக்கள் பட்ட கஷ்டங்களையும் கலவர
காலத்தில் அவர்கள் அடைந்த பாதிப்புகளையும் அரசின் அடக்குமுறை விளைவுகளையும் நேரில்
பார்த்த சிவகுமாரன் ""தமிழர்களின் பிரச்னைக்குத் தனி நாடு பெறுவதைத்
தவிர வேறு வழியில்லை.
ஆயுதப் போராட்டமே அதற்குத் தீர்வு'' என்ற கருத்தைப்
பெற்றார். அதையே இளைஞர் பேரவைமுன் அவர் வைத்தார். 1973
நவம்பரில் மலையகப் பகுதியில் அம் மக்கள்
வெற்றிகரமாக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் இவர்களும் கலந்துகொண்டார்கள்.
இதை அடுத்து 1976-இல்
மலையக மக்களின் போராட்டத்தில் சிவனு லட்சுமணன் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு
சம்பவத்தைக் கண்டித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் நடத்திய வேலைநிறுத்தம், நிதி சேகரிப்பு
இயக்கம் குறிப்பிட்டாக வேண்டிய இளைஞர் பேரவையின் ஆக்கபூர்வ நடவடிக்கைகள் ஆகும்.
இளைஞர் பேரவையின் இந்த நடவடிக்கைகளுக்கு
அச்சாணியாக இருந்தவர்கள் இந்தப் பத்து இளைஞர்களும்தான்.
இத்தகைய நிகழ்ச்சிகள் யாவும்
மலையகத்திற்கும், வடபகுதிக்கும் இடையில் நல்லுறவுப் பாலம் அமைக்கும் ஆரம்ப
முயற்சிகளாக இருந்தன. இந்தச் சமயத்தில்தான் யாழ் பல்கலைக்கழகத்தில் மலையக
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தது. இதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்கள்
மத்தியில் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்துத் தீவிர வன்முறைத் தாக்குதல்களை
நடத்தும் போக்கு வெளிப்பட்டு வேகமடையத் தொடங்கியது. இந்த வேகம் படிப்படியாக
வளர்ச்சி பெற்று, தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தரித்துத் தனி நாடு கேட்கும் போராட்ட
இயக்கமாக வளர்ச்சி பெற்றது.
20: திட்டமிட்ட புறக்கணிப்பு!
தேயிலைத் தோட்ட தமிழ்ப்பெண்
தொழிலாளிகள். ஆங்கிலேயர்கள் 1948 பிப்ரவரி 4-இல் இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்தனர். அதன்பின் இலங்கை
ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த கொள்கைகளால் மிகவும் பாதிப்புக்குள்ளான சமூகம், தமிழ்ச் சமூகமே.
இவர்களைப் பொருளாதார அடிப்படையில் பிரித்துப் பார்க்கையில்:-
1. இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும் கொண்ட தமிழர்கள்.
2. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் சொத்தும் தொழிலும் கொண்ட
தமிழர்கள்.
3. நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் வளர்ந்து வந்த தொழில்
நிறுவனத்தினைக் கொண்ட தமிழர்கள்.
4. வர்த்தக நிதி நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.
5. மலையகத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவர்களோடு நெருக்கமாக
உறவுகொண்ட தமிழர்கள்.
6. சிறு வியாபார நிறுவனங்களில் பங்காற்றிய தமிழர்கள்.
7. விவசாயத்தைத் தொழிலாகக்கொண்ட தமிழர்கள்.
8. மீன் பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழர்கள்.
இந்த எட்டு வகைத் தமிழர்களும் பொருளாதார
நிலையில் மிகவும் மேலான வசதி கொண்டவர்களே. ஆனால் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய
தமிழர்களை வரிசைப்படுத்தினால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் (குடியுரிமையற்றவர்கள்), விவசாயக் கூலித்
தமிழர்கள், அரசு மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றியவர்கள், நகர்ப்புறங்களில்
பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள் மற்றும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டவர்கள் எனப்
பிரிக்க முடியும்.
பிற இனங்களின் மீது சிங்களவர் எதிர்ப்பு
கொள்ளும் நிலை 1930-இல் தீவிரமடைந்த காலத்தில் வர்த்தகத் துறையின் மீது அவர்கள்
கவனம் திரும்பியது. வெள்ளையர் ஆட்சியில் சிங்களவர்களில் ஒரு குறிப்பிட்ட அளவுதான்
இதில் நிறைவு பெற முடிந்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற உடனே பல பொருளாதாரத் திட்டங்கள்
உருவாயின. இதன் மூலம் கல்வி மற்றும் நிர்வாக அமைப்புகளில் பணியாற்றும் நடுத்தரத்
தமிழ் வர்க்கம் பாதிப்புக்குள்ளானது.
அது மட்டுமல்லாமல் தொழில் மற்றும்
கட்டுமானத் தொழிற்சாலைகள் யாவும் சிங்களவர் பகுதிக்கே சென்றன. உதாரணமாக, குருவில்லாவில்
நிறுவப்பட்ட இரும்புத் தொழிற்சாலை;
களனியில் உள்ள டயர்த் தொழிற்சாலை; கல்ஓயாவில் உள்ள கண்ணாடித்
தொழிற்சாலை; நாத்தாண்டியாவில் உள்ள கண்ணாடித் தொழிற்சாலை; எம்பிலிபிட்டியாவில்
உள்ள காகிதத் தொழிற்சாலை; கண்டி, வியாங்கொடை, துல்கிரியா ஆகிய இடங்களில் அமைந்த பெரிய பஞ்சாலைகள்; சப்புகஸ்கந்தையில் உள்ள
உரத் தொழிற்சாலைகள்; நித்தமடிவை, பிரியந்தலையில் உள்ள பீங்கான் தொழிற்சாலை; களனியில் உள்ள
தொழில்பேட்டை; அனுப்பிட்டியாவில் உள்ள உரத்தொழிற்சாலை; புத்தளம், காலியில் உள்ள
சிமெண்ட் தொழிற்சாலை ஆகிய அனைத்துத் தொழிற்சாலைகளும் சிங்கள மக்கள்
பெரும்பான்மையாக வாழும் பகுதியிலேயே உள்ளன.
பண்டாரநாயக்காவின் ஆட்சியில் இந்திய
நிர்வாகிகளின் ஆதிக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. 1977-லிருந்து
82 வரை 50 மில்லியன் டாலர் நிதி உதவிகள் அந்நிய நாட்டிலிருந்து
பெறப்பட்டபோதிலும், தமிழர் வாழ் மாவட்டங்களுக்கு எந்தப் புதிய தொழிற்சாலையும்
கிடைக்கவில்லை. கடந்த அறுபதாண்டு காலமாக இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்பட்டே
வந்திருக்கின்றன.
குறிப்பாக யாழ் மாவட்டத்தின் தனி நபர்
மூலதனச் செலவீடு ரூ.313. அதே நேரத்தில் தேசிய அளவிலான மூலதனச் செலவீடு 656 ரூபாயாகும்.
யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில்
எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டதும், அவ்விடங்களில் குறிப்பாக மன்னாரில் எண்ணெய்ச் சுத்திகரிப்பு
நிறுவனம் உருவாக்கவும், மேலும் பல எண்ணெய்க் கண்டுபிடிப்புகளை நடத்துவதற்காகவும் ரஷியக்குழு
சிபாரிசு செய்திருந்தபோதிலும் அவை கிடப்பில் போடப்பட்டன.
அதேபோன்று 1960-இல்
உலக வங்கி, தீவு முழுவதும் ஆய்வு செய்து துணுக்காய் பூநகரிப் பகுதிகளில்
மிகப் பெரிய சர்க்கரை ஆலையை நிறுவச் சிபாரிசு செய்ததோடு அதற்கு நிதி உதவி செய்யத்
தயாராக இருந்ததாகக் கூறிய போதிலும் இன்னும் அவை நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.
காங்கேயன்துறை போன்ற இடங்களின்
வளர்ச்சிக்கு அமெரிக்க அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும்
அதைப் பரிசீலிக்கக் கூட இலங்கை அரசு தயாராக இல்லை. அதே போன்று கிழக்குக் கடற்கரைத்
திட்டங்களும் நிறுவப்படவில்லை. காரணம்,
இதுவும் தமிழர் வாழும் பகுதியில்
இருப்பதே.
இதுபோன்ற புறக்கணிப்புக்கு என்ன காரணம்? இவை யாவும் தமிழர் பகுதியில்
அமையப்போகும் திட்டங்கள். இவை நிறைவேற்றப்பட்டால் தமிழர் பகுதியிலுள்ளோர் வேலை
வாய்ப்பினை அதிகம் பெறுவர். ஒரு தொழிலை அடுத்து அதன் உபதொழில்கள் பல தோன்றும்.
இதனால் தமிழரின் வாழ்க்கை வளம் பெறும். அதனாலேயே திட்டங்கள் யாவும் கிடப்பில்
போடப்பட்டன. இதனால் தமிழர் பகுதியில் வேலை வாய்ப்பை இழந்த இளைஞர்களின் எண்ணிக்கை
மேலும் மேலும் உயர்ந்தது.
அடுத்ததாக, தேசிய மயமாக்குதல்
கொள்கை உருவாக்கப்பட்டது. அதற்கான சட்டவரைவும் எழுதப்பட்டுச் சட்டம்
பிறப்பிக்கப்பட்டது. இது சர்வதேச நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் தமிழர் நிறுவனங்களுக்குப்
பாதகமாகவும் அமைந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இந்திய மூலதனத்திற்கு
எதிராக உருவான ஒரு தாக்குதலே இது. இதனால் இந்தியாவில் சொத்தும் இலங்கையில் தொழிலும்
கொண்ட தமிழர்கள் நெருக்கடிக்கு ஆளானார்கள்.
தேசிய மயமாக்குதல் திட்டத்தினால் மலையகத்
தமிழர்களும் பெருத்த பாதிப்புக்குள்ளாயினர். எப்படியெனில், மலையகத் தமிழரின்
நகரப் பகுதிகளில் சிங்களவர்களைக் குடிபுகச் செய்தனர். நகர விரிவாக்கம் என்பதே
திட்டமிட்டுச் செய்த சதி என்றுதான் சொல்ல வேண்டும்.
80,000 ஏக்கர் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள்
பயந்து நடுங்கினார்கள். இருப்பினும் இவர்களுக்கெனச் சில சலுகைகள் கிடைத்தன.
ஏற்கெனவே தோட்டத்துறையில் இருந்த அத்துமீறல் சட்டம் நீக்கப்பட்டது. சேமலாப
வைப்புத் திட்டம் (உ.ட.ட.) உருவாக்கப்படுதலும் நடைபெற்றன. (இவை நடைமுறைக்கு
வந்ததற்கான சான்று எதுவும் இதுவரை தெரியவில்லை).
இந்தத் தேசியமயமாக்கும் திட்டத்தால்
மலையகத்தில் இருந்த இந்திய வம்சாவளி வர்த்தகர்கள் மலையகத்தை விட்டு வெளியேறினர்.
தோட்ட நகர்ப்புற பகுதி வர்த்தகர்கள் வட பிராந்தியப் (யாழ்) பகுதியிலிருந்து
வந்தவர்கள். மலையகத்தில் வாழும் பிரஜா உரிமை பெற்ற ஒரு சில வர்த்தகர்கள் புதிய வர்த்தகக்
குழாமில் சேர்ந்து கொண்டனர்.
இந்த வர்த்தகக் குழாம் சிங்களக் கூலிகளை
மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தியது. இதனால் குடியுரிமையற்ற தமிழ்த் தோட்டத்
தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்தனர். அதனால் அவர்கள் அடைந்த இன்னல்கள்
கணக்கிடலங்காது.
புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால் ரப்பர், தேயிலை ஏற்றுமதி 1968-இல்
1976 மில்லியன் ரூபாய் என்று இருந்த நிலைமை மாறி, 1978-இல்
13,176 மில்லியன் ரூபாயுமாக வருவாய் உயர்ந்துள்ளது. இப்படிப் பத்து
மடங்கு வருவாய் உயரக் காரணமான தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையோ நிச்சயமற்ற
தன்மையாய் மாறியது.
நீர்ப்பாசன விவசாயத்துக்கும் எந்தத்
திட்டமும் தமிழர் பகுதியில் நிறைவேற்றப்படவில்லை. 1977-இல் இருந்து அந்நிய நாடுகளின் உதவியோடு அணை கட்டவும், விவசாய நில
வளர்ச்சித் துறைக்கும், விவசாயிகளின் மறுவாழ்வுக்கெனவும் பல மில்லியன் ரூபாய்
செலவிடப்பட்டது.
இத்தொகையில் 0.001 சதவிகிதம்
கூடத் தமிழ் பேசும் பகுதிகளுக்காகச் செலவழிக்கப்படவில்லை (கமிட்டி ஆஃப் நேஷனல்
டெவலப்மெண்ட்-லங்கா கார்டியன் கொழும்பு
- 1 நவம்பர் 1983-இல் வெளியிட்ட அறிக்கை).
சிங்கள வணிக வியாபாரத் தொழில் நிறுவனக்
குழுக்கள் தங்களுக்குச் சாதகமாக இதை மாற்றி அமைத்துக்கொண்டு தமிழர்களையும் மற்றும்
மதச் சிறுபான்மையினரையும் பொருளாதார ரீதியாக ஒடுக்க முற்பட்டன.
மூலம்: தினமணி - ஆனி 1-2, 2009
பிரசுரித்த நாள்: May 31, 2009 21:58:18 GMT
பிரசுரித்த நாள்: May 31, 2009 21:58:18 GMT
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.