விடுதலைப்புலிகளின் கொலைகளை பற்றிய உண்மைகளை தைரியமாக
விமர்சித்ததால் பிரபாகரனால், ரேலங்கி மற்றும்
அவரது கணவர் சின்னத்துரை செல்வராசாவுக்கும் மரண தண்டனையை பரிசாக அளித்தான்.
இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி
அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரை ப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது
கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகளால் சுட்டுக்
கொல்லப்பட்டார் இவர்களின் கொலையின்போது ஒரு வயதுக்கூட நிரம்பாத குழந்தை
அவர்களுக்கு இருந்தது..
லேரங்கி சிறிலங்கா ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்திலும் ரூபவாகினி எனப்படும் சிறிலங்கா சிங்கள தேசிய
தொலைக்காட்சியிலும் தமிழ் செய்தி வாசிப்பவராகவும்... சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து
வழங்குபவராகவும்.1978 இல் இலங்கையில்
தயாரிக்கப்பட்ட்ட தெய்வம் தந்த வீடு என்ற திரைப்படத்தில் இவர் முதன்மை வேடம் ஏற்று
நடித்தார். இதற்காக இவர் சிறந்த நடிகை விருதுக்கு முன்மொழியப்பட்டார்.
ராஜினி திரணகம, கவிஞை செல்வி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம், சிவரமணி, கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண்
ஆளுமைகள், இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற
முத்திரை குத்தப்பட்டு விடுதலைப்புலிகளால் கொன்று வீசப்பட்டனர். போர் தின்ற
மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த தினபொழுதுகளில் நினைவுகூருவோம்.