ஈழவிடுதலையின்
முன்னோடிகளில் ஒருவர் சபாலிங்கம். அவர் 1994 மே 1 அன்று பிரான்ஸ் இல்
அவரது வீட்டில் அவர் மனைவி பிள்ளைகள் முன்னிலையில் புலிகளினால் கொல்லப்பட்டார்
ஈழவிடுதலைப்
போராட்ட வரலாற்றின் உண்மை நிலையை தோண்டிப் புதைக்க நடத்தப்பட்ட கொலை
சபாலிங்கத்தின் கொலை. இலங்கை வாழ் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மிதவாதப்
போக்கில் இருந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதப் போராட்டமாக பரிணாமம் பெற்ற கால
கட்டங்களில் இப் போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்ட ஒரு போராளிதான் சபாலிங்கம்.
வரதராஜப்பெருமாள், புஸ்பராஜா, சத்தியசீலன், சபாலிங்கம், மகாஉத்தமன், குமார் போன்றவர்கள்
தமிழ் மாணவர் பேரவை என்ற மாணவர் அமைப்பிற்கூடாக தமிழ் மக்களின் போராட்டங்களை
முன்னெடுத்த போது போராட்டங்களில் நேரடியாக கலந்து கொண்டவர்தான் சபாலிங்கம்.
சர்வ
தேச விடுதலைப் போராட்டங்களின் அனுபவங்களை உள்வாங்கி அதனை இலங்கையில் நிலவும் அகப்
புறச்சூழலுக்கு ஏற்பட இடதுசாரி சிந்தனைகளின் அடித்தளத்தில் இருந்து
புறப்பட்டவர்கள் இவர்கள். இன்னொரு புறம் ஆயுத வன்முறையை மட்டும் கருத்தில் கொண்டு
தங்கத்துரை, குட்டிமணி, நாகராஜ, செட்டி, கண்ணாடிப்பத்தன், பிரபாகரன் போன்றோர்
செயல்படத் தொடங்கினர். ஆரம்ப கால கட்டங்களில் தமிழர் விடுதலை என்ற பொது
வேலைத்திட்டத்தில் இவர்களிடையே ஒரு புரிந்துணர்வு, பரஸ்பரம் உதவுதல் என்பன
நிறையவே காணப்பட்டன.
ஆனால்
இவர்களிடையே இயல்பாக இருந்த வர்க்க முரண்பாடு ஈழவிடுதலை அமைப்புக்களை இரு
முகாங்களாக பிரித்தன என்பதுதான் உண்மை நிலை. இந்த வர்க முரண்பாடானது ஒரு புறத்து
ஏகபோகம் என்றும் மறுபுறத்து ஜனநாயக மத்தியத்துவம் என்றும் இரு பிரிவுகளாக
செயற்படவைத்தன.
தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டின் தீவிரத்தை கேள்விக்
குறியாக்கி புறப்பட்ட உமாமகேஸ்வரன், இலண்டன்
இரத்தினசபாபதியின் இடது சாரிக் கொள்கைகளினால் உருவாக்கப்பட்ட ஈழமாணவர் பொது
மன்றத்தின் வழி வந்த பத்மநாபா, சங்கர் ராஜி, சண்முகதாசனுடன் கொள்ளை
முரண்பட்டு பின் கார்த்திகேசனின் சீனச்சார்பு இடது சாரி சிந்தனைகளினால் வழி
நடத்தப்பட்ட விசுவானந்ததேவன் போன்றோர் தமது வர்க்க குணாம்சங்களுக்கு ஏற்ப பாதைகளை
அமைத்து ஈழவிடுதலை அமைப்புக்களை தலைமை கொடுத்து செயற்பட்டனர் என்பது வரலாறு.
தங்கத்துரை
இடம் நிலவிவந்த இடதுசாரப் போக்கும், தங்கத்துரையினால்
குட்டிமணி மீது ஏற்பட்ட கொள்கை மாற்றமும் (இது அவர்களின் சிறை வாழ்க்ககையிலேயே
பெரிதும் வளர்க்கப்பட்டது) ஜனநாய மத்தியத்துவத்தில் நம்பிக்ககை வைத்து செயற்பட்ட
வரதராஜப்பெருமாள் போன்றவர்களுடன் சற்றே நெருகத்தை ஏற்படுத்தியது என்பது வரலாற்று
உண்மை.
ஆரம்பத்தில்
கருவிகள் இன்றி சிறு குழுக்களாக இயங்கி வந்த இவர்களுக்கு அன்றைய முக்கிய பிரச்சனை
பாதுகாப்பு. இவ்விடயத்தில் ஆரம்ப கால கட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம்
நிறையவே உதவி வந்துள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் தொடர்ச்சியாக
இவர்களின் இரகசியங்கள் செயற்பாடுகள் பரஸ்பரம் இரு குழுக்கழுக்கும் தெரிந்தே
இருந்தன. இதனால் சரி பிழை என்பவற்றிற்கு இடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டன.
இதனால்
ஏற்பட்ட முரண்பாடுகளை வரதராஜப்பெருமாள் உள்ள அணியினர் நட்பு முரண்பாடாகவும்
பிரபாகரன் உள்ளிட்ட குழு பகை முரண்பாடாகவும் பார்க்க முற்பட்டனர். இவற்றின்
தொடர்சியாகத்தான் தங்கத்துரை, குட்டிமணி பாதுகாப்பின்
நிமிர்த்தம் இந்தியா தப்பச் செல்ல முற்படுகையில் இராணுவத்திற்கு காட்டிக்
கொடுக்கப்பட்டதும், நீர்வேலி
வங்கிக் கொள்ளையில் ஏற்பட்ட ஆகத் துரோகங்களும் ஆகும்.
இவ்விரண்டு
விடயங்கள் சம்மந்தமான முழு உண்மை நிலையினை சபாலிங்கம் அறிந்திருந்தார். மேலும்
இதற்கு முந்தைய கால கட்டத் துரோகத்தனங்களையும், சரி பிழை
செயற்பாடுகளையும் அவ் அவ் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டதன் மூலம் நன்கே
அறிந்திருந்தார். இவற்றை ஆவணப்படுத்தியும் வைத்திருந்தார். இவ் வரலாற்று உண்மைகளை
வெளிக் கொணரும் வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.
இதனால் 'மேதகு' விலாசம் உடைய பிரபாகரன்
பெரிதும் தோல் உரித்துக்காட்டும் நிலைக்கு உள்ளாகப்பட வேண்டி சூழலில் புலிகளுக்கு
தெரிந்த பாஷையில் பிரான்ஸ் இல் 1994 மே மாதம் 1ம் நாள் பரிஸ் இல்
அவரது இல்லத்தில் அவர் தம் மனைவி குழந்தைகள் முன் வைத்து புலம்பெயர் புலிகளினால்
சுட்டுக் கொல்ப்பட்டார்.
ஈழவிடுதலைப்
போராட்டத்தின் ஆரம்ப காலகட்ட வரலாற்றை பதிவு செய்ய முற்பட்டதுதான் அவரின்
கொலைக்கான ஓரே காரணம். உண்மைகளைச்
சந்திக்க எப்போதுமே பிரபாகரன் தயார் இல்லை. எனவேதான் பிரபாகரன் ஆயுதத்ததை
கீழேவைக்கவும் தயார் இல்லை. ஆயுதத்தை தூக்கிப்படிக்க கரங்கள் இருக்கும் வரை
பிரபாகரன் ஆயுதத்தை கீழே வைக்கப் போவதில்லை. ஆயுதம் இன்றி பிரபாகரன் இல்லை.
அடுத்தவர்
புஸ்பராஜா. இவர் தமது ஈழவிடுதலை அனுபவங்களை 'ஈழப் போராட்டத்தில்
எனது சாட்சியம்' (முதல் பதிப்பு மார்கழி 2003 வெளியிடப்பட்டது) என்று
தனது அனுபவங்களை பதிவு செய்து விட்டு சென்றுள்ளார். இவரின் புத்தகத்தில் சிலருடன்
சில சமரசம் செய்யும் போக்குக்கள் காணப்பட்டாலும், ஆரம்ப காலகட்டத்தில்
புலிகளுடன் சேர்ந்து இயங்கி தற்போது சற்றே ஒதுங்கி வாழும் இராகவன், நாகராஜா, நித்தியானந்தன்(நிர்மலா), ஐயர் போன்றவர்வர்கள்
இதுவரை வரலாற்றைப்பற்றி வாயே திறக்காத நிலையில் புஸ்பராஜாவின் பங்களிப்பு
மகத்தானது.
இதில்
மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. இவரின் புத்தகம் புலிகள் இயக்கத்தை கேள்விக்
குறியாக்கியுள்ளது என்பதிலும் மாற்றக்கருத்து இல்லை. ஆரம்ப காலத்தில் இளைஞர்
பேரவையின் பாசறையில் வளர்ந்ததினால் அவற்றின் வரலாற்றுத் தாக்கங்களை இவரின்
புத்தகத்தில் அங்கங்கே காண முடிகின்றது.
கூடவே
புத்தகத்தின் மூலப்பிரதிகளை வாசித்து தட்டிக்கொடுத்த நண்பர் சேரனின் 'கருத்துச் செல்வாக்கு' புஷ்பராஜாவின் புத்தகத்தில்
உள்ள சமரசங்களுக்கு காரணமா இருக்கலாம்? எவை எப்படி இருப்பினும்
இதுவரை வந்த ஈழவிடுதலை வரலாற்றுப் பதிவுகளில் முழுமையானதும், உண்மையானதும், தைரியமானதும் இதுவே.
இவரின் இம் முயற்சி வெற்றியளிக்க பக்க பலமாக இருந்தவர் சபாலிங்கம் என்பது யாவரும்
அறிந்ததே. இப்புத்தகத்தன் ஊடாக நாம் சபாலிங்கத்தின் சில பக்கங்களை பார்க்கவும்
முடிகின்றது என்பது இப்புதகத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றும் ஆகும்.