Friday 14 August 2020

Oberoi Devan இன் கொலை!! அரசியல் பிண்ணணி!! 14ம் திகதி 1983

1983ம் ஆண்டு July கலவரத்தாலும், இலங்கையின் நடவடிக்கைகளாலும் அதிருப்பியடைந்த இந்திய அரசாங்கத்தின் பார்வை விடுதலைப் போராட்ட இயக்கங்களின் பக்கம் சாய்ந்தது.

 

இலங்கையை கட்டுபடுத்தி, தமக்கு சார்பாக மாற்றும் அதே நேரம் சர்வதேச பார்வையில் ஆக்கிரமிப்பு என்ற பதத்தை தவிர்க்க, அன்றய எமது சிறு எழுச்சி இந்திய அரசாங்கத்திற்கு உதவியது. கலவரத்தின் பின்னர், இந்திய அரசு போராட்ட இயகங்களின் தலைவர்களை சந்திக்க முடிவு செய்து சந்திரகாசனூடாக செய்திகள் அன்றய TELO தலைவர் சிறீ அண்ணாவிடம் அறிவிக்கப்பட்டது. அதேபோல் பிரபாகரன், உமா, பதமநாபா, பாலகுமாருக்கும் அறிவிக்கப்பட்டது.

 

இந்த சமயத்தில் நாட்டில் இருந்த Oberoi Devanஐ தன்னுடன் Delhi வருமாறு சீறி அண்ணா சொல்லி அனுப்பினார். பிரபாகரனுக்கு எல்லா அமைப்புகளையும் இந்திய அரசு சந்திக்க அழைத்து ஒரு பிடிக்காத விடயம்.

 

எனது அண்ணன் இந்தியா போகிறார் என்ற செய்தியை அறிந்த புலிகள், சுதனிடம் பெரிய பறுவா உங்களுடன் இணந்துள்ளாராஎன கேட்டுள்ளார்கள். அதற்கு சுதன் இல்லைஎன்று சொன்னதை வைத்து எனது அண்ணணை கொலை செய்ய தயாராகி விட்டனர். இந்த சம்பவத்தை சுதனும், Oberoi Devan இற்கு சொல்லவில்லை.

 

ரெலோவில் மீண்டும் Oberoi Devan இணைந்துவிட்டால் சிறீ அண்ணாவின் பலம் மேலும் ஓங்கி, ரெலோ இன்னும் பலமான அமைப்பாக மாறும் என்ற சிந்தனை பாலசிங்கதிற்கு ஏற்பட்டது. (1981 இல் பாலசிங்கம் மீண்டும் பிரபாகரனை சந்திக்க இந்தியா வந்திருந்த போது பாலசிங்கத்தை ரெலோவுடன் இணைக்க கூடாது அவர் ஒரு UK/ USA உளவாளீ என தடுத்தவர் Oberoi Devan), பாலசிங்கத்திற்கும் Oberoi Devan இன் புலமை தெரியும். (சுந்தரத்தின் கொலையை தொடர்ந்து 1982 இல் நாகராஜாவை பிரபாகரன் - TELOஇல் இருக்கையில், இந்தியாவில் கடத்தி கொலை செய்ய முயன்றபோது, அதனை தடுத்து போராளிகளை கொல்வது தவறு என்று சீறீ அண்ணாவின் உதவியுடன் விடுவித்தது Oberoi Devan)

 

அன்றய நாட்களில் Oberoi Devan பல வெளிநாட்டு தூதரகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார். பல பத்திரிகைகள் அவரை பேட்டி கண்டிருந்தன. இவை பாலசிங்கத்தின் அரசியல், புலிகளின் தனிமனித பாதைக்கு அச்சுறுத்தலாக இருந்தன.

 

இவை எல்லாம் அவரின் கொலைக்கு காரணகர்த்தாவாக இருந்தது. Oberoi Devan இன் அரசியல் பாணி, அவரின் தொடர்புகள், இந்திய அரசின் நிலைப்பாடு, அவருக்கும் சிறீ அண்ணாவிற்கும் இருந்த மரியதைக்குரிய நட்புணர்வு, பிரபாகரனிற்கு, முக்கியமாக பாலசிங்கத்திற்கு Oberoi Devanனை அழிக்க வேண்டும் என்ற முடிவுக்கு தள்ளியது.

 

14/08/1983 அன்று அதிகாலை Oberoi Devan (அண்ணன்) எமது வீட்டிற்கு வந்து சாப்பிட்டார். அன்று அவரிடம் எந்த ஆயுதமும் இருக்கவில்லை. ஆயுதம் இல்லாமல் அவர் எங்கும் செல்வதில்லை.

 

ஏன் ஆயுதம் இல்லாமல் இருக்கிறீர்கள்எனபதற்கு பதில் கலவரத்தால் இவ்வளவு மக்கள் அழிந்து கொலை செய்யபட்டுள்ளார்கள்.. இந்த சமயத்தில் எமக்கிடையில் கொலை செய்ய யார் சிந்திக்க போகிறார்கள்என்பதே! அன்று ஒரு நாள் அவரின் பிரபாகரனைப் பற்றிய கணக்கு தவறாக போய்விட்டது. அன்று அவர் நீராவியடி கோவிலுக்கு அருகாமையில் வைத்து புலிகளால் கொலை செய்யப்பட்டார்.

 

Oberoi Devan இன் கொலை மற்றய அமைப்புகள் முக்கியமாக வரலாறு தெரிந்த TELOவின் வளர்சியை தடுக்க, இந்திய அரசின் அன்றய அவசர நிலைப்படாட்டை தமக்கு சாதகமாக்க எடுக்கபட்ட அரசியல் முடிவு.

 Courtesy - Kula Dhayaa

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.