ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு
கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட புலிகள் தலைமை !!
• ‘என்னக்கா
எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது.
இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது’
* இயக்கத்தின் தலைமை எடுத்த
முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.•
* புலிகள் போகச் சொல்கிற
இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்த மக்கள் புலிகள் மீதான வெறுப்பின்
உச்சக்கட்டத்திற்குச் சென்றிருந்தார்கள்.
* காலூன்றி நிற்க ஒரு இடமில்லை, வயிற்றுப் பசியைப் போக்க ஒரு
பிடிஉணவில்லை, எந்தக் கணத்திலும் உயிருக்கு
உத்தரவாதமில்லை என்ற நிலையில் மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை
நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
* மக்களைப் பணயமாக வைத்துத்தான்
மக்களுக்காகப் போராடுவதா, அப்படியானால் இது யாரைப்
பாதுகாப்பதற்கான போர் என்ற கேள்விகளுக்கான பதில் படுபயங்கரமாகக் கண் முன்னால்
எழுந்து நின்றது.
• விடுதலை புலிகள் இயக்கமும் தமிழ் மக்களுக்கான ஆயுதப்
போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு
நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு
ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை
ஏற்படுத்தியிருந்தது?
• “இறுதி
யுத்தக்காலத்தில்,
படையணிகளின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளாமல் பொட்டு
அம்மான் வழங்கும் கட்டளைகள் ஏனைய தளபதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின.
* "ஒரு
அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை" - மார்ச்
மாதம் நடந்த கூட்டத்தில் பொட்டு அம்மான் முன்னறிவிப்பு.